World Socialist Web Site www.wsws.org |
World capitalism in 2014 2014 ல் உலக முதலாளித்துவம் ஏழைகள் 2 பில்லியன், பசியில் ஒரு பில்லியன்.
By Patrick Martin 2.2 பில்லியனுக்கும் அதிகமானோர் “வறுமையில் அல்லது வறுமை கோட்டிற்கு அருகில் வாழ்வதாக ஜூலை 24 அன்று வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அறிக்கை தெரிவிக்கிறது. 1.2 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 1.25 டாலர் அல்லது அதற்கு குறைவான தொகையில் உயிர்வாழ்கின்றனர், அதே நேரத்தில் உலக மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் (842 மில்லியன் பேர்) நிலையான பசியில் வாடுகின்றனர். உலக அளவில் இத்தகைய துயரமும் குறைபாடும் காணப்படுவதற்கு வளங்களின் குறைபாடு காரணமல்ல. ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைக்கும் கண்ணியமான வாழ்க்கைத்தரத்தை வழங்குவதற்கு போதுமானதை உலகப் பொருளாதாரம் உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறது. செல்வத்தின் பகிர்வே இதனை சாத்தியமில்லாததாக ஆக்கிவிடுகிறது: உலகின் 85 மிகப் பெரிய செல்வந்தர்கள், உலக மக்கள் தொகையில் அடியிலுள்ள ஐம்பது சதவீத மக்களுடைய (அதாவது 3.5 பில்லியன் மக்கள்!) செல்வ வளத்திற்கு இணையான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். மனித முன்னேற்றத்தைத் தக்கவைத்தல்: பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் நெகிழ்வுத்தன்மைகளை ஏற்படுத்துதல்” எனும் தலைப்பின் கீழ் வெளியான இந்த அறிக்கை பாதிப்புக்களை குறைக்கும் நோக்கத்துடன் கூடிய ஒரு வெற்று அறிக்கை என கருதப்படுகிறது. இதற்கு முற்றிலும் மாறாக: புள்ளியியல் வார்த்தைகளும் அதிகாரத்துவ குறியீட்டு வார்த்தைகளும் கலந்த ஒரு கலவையாக, வறட்சியான வார்த்தைகளால் அது எழுதப்பட்டிருக்கிறது முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நிலைமைகளான பரந்த அளவிலான வறுமை, பற்றாக்குறை, சமுதாய அநீதி, சமத்துவமின்மை ஒடுக்குமுறை போன்றவற்றை அவ்வறிக்கை விளக்குகிறது— ஆனால் முதலாளித்துவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எளிதாக சொல்வதென்றால், உலகமக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு பொருளாதார அமைப்பு குறித்து எதுவும் சொல்லப்படவில்லை, அதேபோல எந்த ஒரு மாற்று குறித்து விவாதிக்கப்படவும் இல்லை. ஆனால் சில உண்மைகள் இருக்கின்றன; அவற்றுள் பின்வருபவை மிக முக்கியமானவை: Ø கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மக்கள், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரங்களில் பல்வேறு பரிமாணங்களில் ஏழைகளாவர். Ø வறுமையின் விளிம்பில் வசிக்கும் மற்றொரு 800 மில்லியன் மக்கள் பின்னடைவுகள் ஏற்படும்போது “வறுமை நிலைக்குள் தள்ளப்படும் வகையில் பாதிக்கப்படத்தக்கவர்களாக” வாழ்கின்றனர். Ø தெற்கு ஆசியாவில், முழுமையான வறுமை ஒன்று சேர்ந்து காணப்படுகிறது, அங்கு 800 மில்லியனுக்கும் மேற்பட்ட ஏழைகளும், வறுமை நிலைக்கு அருகில் 270 மில்லியன் பேரும் வசிக்கின்றனர். இது அதன் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் 71 சதவீத்தை விட அதிகமாகும். Ø வளரும் நாடுகளில் வருமான சமத்துவமின்மை 1990 க்கும் 2010 க்கும் இடையே 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. Ø மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா மற்றும் சிரியாவில் 2013 காலகட்டத்தில் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக சரிந்துள்ளது – இந்த மூன்று நாடுகளும் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் இராணுவத் தலையீடு மற்றும் அரசியல் நாசவேலைக்காக குறிவைக்கப்பட்டுள்ளன. Ø 2012 இன் இறுதிக் காலகட்டத்தில், ஏறக்குறைய 45 மில்லியன் பேர் இடம் பெயர்வு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் —இது 18 வருடங்களில் மிக அதிகமாகும். அவர்களில் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாவர். Ø உலக மக்கள்தொகையில் பழங்குடியினர் 5 சதவீதம், ஆனால் உலக மக்கள் தொகையில் 15 சதவீத்ததினரை எடுத்துக் கொண்டால், அதிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தீவிர கிராமப்புற வறுமையில் உள்ளனர். Ø அனைத்து முதியவர்களில் கிட்டத்தட்ட சரி பாதிப்பேர் – அதாவது 60 அல்லது அதற்கும் அதிகமான வயதுடையவர்களில் 46 சதவீதத்தினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் அல்லது புத்திஜீவித இயலாமைகளால் பாதிக்கப்படுகின்றனர். அறிக்கை, குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த (மூன்றாம் உலகம் என்று அழைக்கப்பட்டது) குழந்தைகளை நோக்கி கவனம் செலுத்துகிறது. “இந்த குழந்தைகளில், 100 இல் 7 பேர் 5 வயதைத் தாண்டி வாழ்வதில்லை, 50 பேருடைய பிறப்பு பதிவு செய்யப்படுவதில்லை, 68 பேருக்கு குழந்தைப் பருவ கல்வி கிடைப்பதில்லை; 17 பேர் ஆரம்ப பள்ளியில் சேர்வதில்லை; 30 பேர் வளர்ச்சி குன்றியும், 25 பேர் வறுமையிலும் வாழ்கின்றனர்.” ஒட்டுமொத்த மனித அபிவிருத்தி சுட்டெண் (Human Development Index—HDI) எண்கள் உயர்ந்து வருவதால், இவ்வறிக்கை அனுகூலமான குறிப்பினை வெளிப்படுத்த முயற்சிக்கிறது, பெரும்பாலும் இது ஒரு புள்ளிவிவர மாயையாகும். விஞ்ஞான முன்னேற்றங்களாலும் அவை ஏழை நாடுகளில் பரவி வருவதாலும் குறிப்பிடுமளவுக்கு சுகாதார வளர்ச்சிகள் உயர்ந்துள்ளன. HDI யின் கணக்கீட்டில், இது வருமானத்தில் குறிப்பிடுமளவுக்கான இழப்பீடுகள், பொருளாதார சமநிலையின்மையை மோசமாக்குவதுடன், கல்வி மற்றும் பிற சமூக சேவைகளில் தேக்கத்தையும் ஏற்படுத்துகிறது. போக்கு, முற்றிலும் எதிரான திசையில்தான் இருந்து வருகிறது என்பதை அறிக்கை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், இவ்வறிக்கை உலக அளவிலான சமூக சீர்திருத்தத்திற்கான இன்னும் வலுவான கொள்கைக்கு முறையிடுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் மேல்தட்டு பெருமளவிலான மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு அடிப்படையான பொதுச் செலவினங்களை வெட்டுவதுடன், நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட திட்டங்களையும் தகர்த்து வருகிறது, இவ்வறிக்கை, “அடிப்படை சமூக சேவைகளுக்கு... குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி; வேலைவாய்ப்பின்மை காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள்; மற்றும் முழுமையான வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதம் உள்ளிட்ட வலுவான சமூக பாதுகாப்பு போன்றவற்றுக்கான உலகளாவிய அணுகலுக்கு அழைப்பு விடுக்கிறது. ஆனால் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு விரிவான சமூக பாதுகாப்பு இல்லை, இதனால் அவர்கள் எந்தவிதமான பொருளாதார சீர்குலைவு, இயற்கை பேரழிவு அல்லது அரசியல் வன்முறை வெடிப்பு போன்றவற்றால் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர் என்பதையும் அது ஒப்புக்கொள்கிறது. " ஒரு கட்டத்தில் அறிக்கை பின்வருமாறு பிரகடனம் செய்கிறது: “அனைத்து மக்களும் அவர்கள் மதிக்கும்படியாக வாழ்வதற்கு ஆற்றல் உள்ளவர்களாக்கப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையானதும் முக்கியமானதுமாக இருக்க வேண்டும், அதன் காரணமாக கண்ணியமான வாழ்க்கைக்கான சில அடிப்படையான விஷயங்களுக்கான அணுகல் மக்களது பணம் செலுத்தும் திறனிலிருந்து பிரிக்கப்பட வேண்டும். இத்தகைய சேவைகளை வழங்கும் வழிமுறைகள் ஒவ்வொரு நாட்டிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப வேறுபடும் வேளையில், அனைத்து வெற்றிகரமான அனுபவங்களுக்கும் ஒரே ஒரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது: குடிமக்களுக்கும் அரசுக்குமான அடிப்படையான சமூக ஒப்பந்தம் ஒன்றில், ஒட்டுமொத்த மக்களுக்குமான சமூக சேவைகளை நீடிக்கும் முதன்மைப் பொறுப்பு அந்த அரசுக்கு உண்டு”. இந்த அறிக்கையானது, அதில் பணியாற்றியவர்களது நல்லெண்ணத்தையே சுட்டிக் காட்டுகிறது, ஆனால் அரசு, ஆளும் மேல்தட்டின் “முதன்மைப் பொறுப்பினை” மட்டுமே ஏற்றுக்கொள்கிறது என்ற உலக முதலாளித்துவத்தின் அரசியல் இயக்கவியல் குறித்த எந்த ஒரு புரிதலும் இல்லை; உலகின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான போர் மற்றும் சர்வாதிகாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நிதிய பிரபுத்துவத்தின் நலன்களை பாதுகாப்பது என்பதே அதன் அடிப்படையாகும். இவ்வறிக்கை, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பெரும்பான்மையான மக்களது வாழ்க்கை நிலைமைகளையே எடுத்துக் கொள்கின்றபோது, அதில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் குறித்த புள்ளியியல் வரைபடங்களுக்கு உதவும்படியான சில முக்கிய விவரங்களும் உள்ளன. மனித முன்னேற்ற குறியீட்டில் அமெரிக்கா ஐந்தாமிடம் வகிக்கிறது, ஆனால் சமத்துவமின்மையை கணக்கில் எடுத்துக் கொண்டால் 23 ஆம் இடத்தில் உள்ளது. வருமான பகிர்வு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகல் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால், வளர்ச்சியடைந்த 50 நாடுகளில், ஒட்டுமொத்த சமத்துவமின்மையில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக சிலியும் தென்கொரியாவும் இருக்கின்றன. மேற்சொன்ன இரு நாடுகளும் பல தசாப்தங்களாக மிருகத்தனமான இராணுவ சர்வாதிகார ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் சமத்துவமின்மையை எடுத்துக் கொண்டால், காணப்படும் முதல் 50 நாடுகளில் அமெரிக்கா 43 வது இடத்திலும், வருமான அடிப்படையிலான சமத்துவமின்மையில் மீண்டும் சிலியை விஞ்சுமளவிற்கு குறைவாக உள்ள முதல் 30 நாடுகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. முன்னேறிய 50 நாடுகளில், கல்வியில் மட்டுமே அமெரிக்கா நடுத்தரமான அதாவது 25 வது இடத்தை பெறுகிறது. கிட்டத்தட்ட மனித வளர்ச்சியின் அனைத்து அளவீடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஜேர்மனியும் ஸ்காண்டிநேவியாவும் முன்னணியில் உள்ளன. ஆனால் இந்த அறிக்கை 2008 நிதி நெருக்கடியில் இருந்து, கடந்த ஆறு வருடங்களில் மோசமான போக்குகளை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டது. பெருமளவிலான தனியார் துறை கடன்களுக்காக, குறிப்பாக பிரச்சனையில் சிக்கிய வங்கிகளின் பொறுப்பினை அரசாங்கம் எடுத்துக்கொண்டது, ”வரி வருவாய்கள் மெதுவாக குறையத் தொடங்கியதால்” பல நாடுகள் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன, மேலும் ”விரைவாக அவர்களது கொள்கைகளும் சிக்கன நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்தன.” அறிக்கை தொடர்கிறது: “2008-20012 காலகட்டத்தில், அயர்லாந்தில் பொதுத்துறைக்கான மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 65 சதவீதமும், கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் 60 சதவீதமும், போர்த்துக்கலில் 40 சதவீதமும் இத்தாலியில் 24 சதவீதமும் சரிந்துள்ளது. ஒட்டுமொத்த, யூரோ பகுதியில் (17 நாடுகளில்) பொதுத்துறை முதலீடு 2012ல் 251 பில்லியன் டாலர்களில் இருந்து 201 பில்லியன் டாலர்களாக குறைந்தது- இது பெயரளவிலான 20 சதவீத சரிவாகும். 1970 களில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) முதலீடுகளில் நிலையான குறைவுப் போக்கினை அடுத்து, வரவு- செலவுத் திட்ட வெட்டுக்களும் பொதுத்துறை சேவைகள் வழங்கலை பாதிக்கின்றன. 2009 – 2011 காலகட்டத்தில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு சுகாதார செலவினங்கள் குறைந்துள்ளன”. பொருளாதார உற்பத்திகளை கீழறுப்பதன் மூலமாகவும் வேலை வாய்ப்பின்மையை அதிகப்படுத்துவதன் மூலமாகவும், பொருளாதார சமத்துவமின்மையை அதிகரிப்பதன் மூலமாகவும், உண்மையில் இந்த கொள்கைகள் யாவும் மோசமான பற்றாக்குறையையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வறிக்கை மேலும்: “பாதிக்கும் அதிகமான ஐரோப்பிய நாடுகளில் சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் வறுமையை அதிகப்படுத்தியிருக்கிறது மேலும் இதில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்றால் அது குழந்தைகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கான பின்புலமுடைய மக்கள், இன அடிப்படையில் இன சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்” ஆகியோர்தான் என்று தெரிவிக்கிறது. ஆனால், உழைக்கும் மக்கள் மீது இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தும் வர்க்க நலன்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல், இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதுடன் இன்னும் அதிக அளவில் மனிதாபிமானமுடைய மாற்றீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதைத்தவிர இவ்வறிக்கை எதையும் வலியுறுத்தவில்லை. ஐ.நா. அபிவிருத்தி திட்டம் மற்றும் அதன் தலைமை நிர்வாகி ஹெலன் க்ளார்க்கின் பொதுவான மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டது என்ற அடிப்படையில், இந்த முன்னோக்கின் முட்டுச்சந்து தவிர்க்க முடியாதது. நியூசிலாந்தின் முன்னாள் வலது சாரி சமூக ஜனநாயக பிரதம மந்திரியான அவர், 2016ல் பாங்கி மூன் தனது பணி காலத்தினை நிறைவு செய்யும்போது, ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வறிக்கையின் முகவுரையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரை டஜன் “சிறப்பு பங்களிப்புகளுக்கு” மத்தியில், மைக்ரோசாஃப்டின் நிறுவனரும் பில்லியனருமான பில் கேட்ஸ், அமெரிக்க ஆதரவிலான லைபீரிய பிரதம மந்திரி எலென் சர் லீஃப் ஜோன்சன், சிக்காகோ பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் ஹெக்மேன் மற்றும் உலக வங்கியின் முன்னாள் முதன்மை பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் ஆகியோர் உள்ளனர். (பார்க்கவும்: “Joseph Stiglitz in Australia: A desperate attempt to promote the illusion of reform”). 239 பக்க ஆவணத்தில் “முதலாளித்துவம்” மற்றும் “ஏகாதிபத்தியம்” போன்ற வார்த்தைகள் இல்லை என்றாலும், அபிவிருத்தி அறிக்கை இலாப அமைப்பினை குற்றம்சாட்டுவதற்கு போதிய அடிப்படை விஷயங்களை வழங்குகிறது. |
|