தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Imperialist war in search of a pretext ஏகாதிபத்தியம் யுத்தம் ஒரு போலிக்காரணத்தை தேடுகின்றது
Patrick
Martin Use this version to print| Send feedback ஒபாமா நிர்வாகம், எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ தலையீட்டை பாரியளவில் அதிகரிப்பதில், ISISக்கு (ஈராக்-சிரிய இஸ்லாமிய அரசுக்கு) எதிராக ஈராக்-சிரியா எல்லைகளின் இருதரப்பிலும் வான் தாக்குதல்களைத் தொடங்குவதை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அத்தகைய தாக்குதல்களின் ஆரம்ப வடிவத்தில் அபு பக்ர் அல்-பஹ்தாதி மற்றும் இதர ISIS தலைவர்களைக் குறி வைத்து, அநேகமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமென் மற்றும் சோமாலியாவில் ஏற்கனவே நடத்தப்பட்ட அதே வகையிலான, ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படலாமென செய்திகள் குறிப்பிடுகின்றன. “மத்திய கிழக்கு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம், ஈராக்கில் அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ள இஸ்லாமிக் அரசு (IS) தளபதிகளையும், தளவாடங்களையும் மற்றும் இராணுவ நிலைகளையும் குறி வைத்து, இன்னும் விரிவாக்கப்பட்ட அண்மைக்கால வான்வழி நடவடிக்கைக்கு, பல வாரங்களாக, பரிந்துரைத்துள்ளதாக," வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வியாழனன்று அறிவித்ததோடு, “வேட்டையாடுவது சரியென்றால் வேட்டையாடு" என்ற ஓர் உயர்மட்ட அதிகாரியின் மந்திரத்தையும் மேற்கோளிட்டுக் காட்டியது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரத்தியேக தனித்தன்மையான அடாவடித்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் கலவையாக குணாம்சப்படுத்தப்பட்ட ஒரு கால் நூற்றாண்டு தீவிர தலையீட்டிற்குப் பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சந்தித்து வரும் நெருக்கடியின் அளவே இந்த யுத்தத்துக்கு உந்துதலாக இருக்கிறது. நிர்வாகத்தின் அதிகளவில் வெறித்தனமான கருத்துக்களும் மற்றும் ஊடக தலைப்புகளும், அமெரிக்காவிற்கு ISIS ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலாகும் என அறிவிக்கின்ற நிலையில், மத்திய கிழக்கின் நெருக்கடி தொடர்ச்சியான அமெரிக்க தலையீடுகளின் நேரடி விளைபொருளாகும் என்பது பற்றி அங்கே உண்மையில் எவ்விதமான ஏற்றுக்கொள்ளலும் இல்லை. யுத்தம், ஆக்கிரமிப்பு, மற்றும் சிஐஏ ஆதரவுடனான ஆட்சி-மாற்ற நடவடிக்கைகள் மூலமாக அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு சமூக மற்றும் அரசியல் பேரழிவை உருவாக்கி உள்ளதுடன், அதேவேளையில் அது குறுங்குழுவாத மோதலையும் மற்றும் உள்நாட்டு யுத்தத்தையும் தூண்டிவிட்டு வருகிறது. சமீபத்தில் தான், அமெரிக்கா சிரியாவில் உள்ள அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்காக சிரியாவின் "கிளர்ச்சி" போராளிகளைப் பயன்படுத்த முனைந்து, அவர்களுக்கு நேரடியாக நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கியது. அவர்கள் தான் இப்போது ISISஇன் முக்கிய பிரிவை கட்டமைக்க சென்றனர். எந்தளவிற்கான அரசாங்க-ஊடக பிரச்சாரத்தாலும் அநேகமாக அமெரிக்க மக்களது கருத்தை மாற்ற முடியவில்லை என்பதே ஈராக் மற்றும் சிரியாவில் ஒபாமா நிர்வாகம் முகங்கொடுத்து வரும் அரசியல் நெருக்கடியின் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. அமெரிக்க மக்கள், மத்திய கிழக்கில் நடத்தப்படும் புதிய இராணுவ வீரசாகசங்களை பிடிவாதமாக எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பு உணர்வானது வாஷிங்டனில் உள்ள போர்வெறியர்களின் மீதான முற்றிலுமாக நியாயப்படுத்தப்பட்ட அவநம்பிக்கை மற்றும் அமெரிக்காவிற்கு உள்ளேயே அதிகரித்துவரும் சமூக நெருக்கடி இரண்டினூடாகவும் பிரதிபலிக்கிறது. இந்த ஆழ்ந்து-வேரூன்றிய சமூக எதிர்ப்பு, சிரியா மற்றும் ஈராக் மீதான ஒபாமா நிர்வாகத்தினது திட்டங்கள் யுத்தத்திற்கு ஒரு போலிக்காரணத்தைத் தேடி வருகிறது என்பதையே அர்த்தப்படுத்துகிறது. கடந்த மாத வாக்கில், மத்திய கிழக்கில் பரந்த இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவைத் தோற்றுவிக்க ஒரு அதிகளவிலான பெரும் பிரயத்தன முயற்சியில், பல தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. யுத்த அறிவிப்பிற்கான முதல் காரணம் வடக்கு ஈராக்கில் உள்ள ஒரு சிறிய மத சிறுபான்மையினரான யாஜிதிகளின் தலைவிதியைக் குறித்ததாக இருந்தது. இதனோடு சேர்ந்து அமெரிக்க குடிமக்களையும் மற்றும் ஈராக்கிய இராணுவ நிலைகளையும் பாதுகாப்பதற்கு இராணுவ நடவடிக்கை அவசியமென்ற ஒபாமா நிர்வாகத்திடமிருந்து வந்த வாதங்களும் அதில் உள்ளடங்கி இருந்தன. சிரியாவில் இரண்டு ஆண்டுகள் கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க புகைப்பட இதழாளர் ஜேம்ஸ் ஃபோலேயை அது காட்டுமிராண்டித்தனமாக கொன்றதைக் காட்டும் ISISயினாலேயே வெளியிடப்பட்ட ஒரு காணொளி, செவ்வாயன்று ஆகஸ்ட் 19இல், ஒரு புதிய போலிக்காரணமாக கைப்பற்றப்பட்டது. அந்த கொடூரமான காட்சிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது பரந்த அருவருப்பையும், ஆத்திரத்தையும் உருவாக்கி இருந்தது. அந்த இதழாளர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்திருப்பதாக கூறப்படும் நிர்வாகத்தின் சொந்த வாதங்களே தர்க்கத்திற்கு உதவுவதாக இல்லை. அரபு அரசுகளிலேயே அதன் மிக நெருக்கமான கூட்டாளியான சவுதி அரேபியா, அடிமை-போன்ற நிலைமைகளில் இருந்து தப்பிக்க முயலும் குடியேறிய தாதிகள் மற்றும் இஸ்லாமின் வஹாபி மாதிரிக்கு எதிராக மதக்குற்றங்களுக்கு ஆளான சவுதி குடிமக்களின் "குற்றங்களுக்காகவும்" பெரும் ஒழுங்குமுறையோடு அத்தகையவர்களின் தலையைத் துண்டிக்கிறது. ஆகஸ்டில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரியாத்தில் ஆட்சி-மாற்றத்தைக் கோரும் கோரிக்கை ஒருபுறம் இருக்கட்டும், வாஷிங்டனிடமிருந்து சவுதியின் அந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எந்தவொரு கண்டனமும் கூட அங்கே இல்லை. அமெரிக்க மூலோபாயவாதிகளின் எரிச்சலூட்டும் கணிப்பீடுகளில், ஜேம்ஸ் ஃபோலே ஒரு மனித உயிராக கூட கணக்கெடுக்கப்படுவதில்லை. மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஒரு உயர்மட்ட பென்டகன் ஆலோசகர் ஆண்டனி கோர்டெஸ்மன் கூறியபடி, “ஒரு அமெரிக்கரின் படுகொலை மூலோபாயரீதியில் ஒரு விடயமே அல்ல. மூலோபாய முக்கியத்துவத்தை ஒரு நபரைக் கொண்டு அளவிட முடியாது. வெளிப்படையாக கூறுவதானால், ஒரேயொரு படுகொலைக்கு எதிர்வினையாற்றுவது ஒரு ஜனாதிபதியின் பொறுப்பற்றதன்மையாக இருக்கும்," என்றார். எவ்வாறிருந்த போதினும், ஒபாமா நிர்வாகமோ தற்போதைய வான் தாக்குதலை சிரியாவில் உள்ள ISIS இலக்குகளின் மீது விரிவாக்குவதை நியாயப்படுத்துவதற்கு ஃபோலே படுகொலையை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. “நீங்கள் அமெரிக்கர்களை பின்தொடர்ந்தால், நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்," என்று வெள்ளியன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்த துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ், “நாங்கள் எல்லைகளால் கட்டுப்படுத்தப்பட்டு விடமாட்டோம்," என்றார். ஒட்டுமொத்த மத்திய கிழக்கிற்கே ISIS ஒரு அச்சுறுத்தலாகும் அளவுக்கு அது மிக பலமான இராணுவமாக வளர்ந்துள்ளது என்ற ஒரு புதிய கருத்துரு ஞாயிறன்று வெளியானது. ISIS “ஒரு பிராந்திய சக்தியாக அசாதாரணமான வேகத்தோடு தன்னைத்தானே ஸ்தாபித்து வருகிறது" என்று பிரிட்டிஷ் கார்டியன் எழுதியது, “இஸ்லாமிய அரசு இஸ்ரேலுக்கு அப்பாற்பட்டு மத்திய கிழக்கில் உள்ள மிக சக்திவாய்ந்த இராணுவ பலமாக இருக்கிறது," என்ற ஒரு இராஜாங்க அதிகாரியின் வாதத்தையும் அப்பத்திரிகை மேற்கோளிட்டது. ஈராக்கிய இராணுவத்தின் எச்சசொச்சங்களால் பாக்தாத்திற்கு வெளியே கட்டிவளர்க்கப்பட்ட ISIS, வெகு சாதாரண ஆயுதமேந்திய குர்திஷ் பெஷ்மெர்கா படைகளால் தற்போது விரட்டப்பட்டு வருகின்ற நிலையில், இந்த விசித்திரமான மிகைப்படுத்தலின் நோக்கம் யுத்தத்திற்கு மற்றொரு போலிக்காரணத்தை வழங்குவதற்காகும். இந்த கணக்கின்படி, படைகளைக் கொண்டு பாதுகாக்கும் வாஷிங்டன்-உடன்படிக்கையோடு பிணைந்திருக்கும் ஜோர்டன் போன்ற அமெரிக்க கூட்டாளிகளுக்கும், துருக்கி போன்ற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும், ISIS ஒரு அச்சுறுத்தலாக இப்போது மாறிவிட்டிருக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நோக்கம், ISISஐ, அனைத்திற்கும் மேலாக, இது அதன் சொந்த உருவாக்கமே ஆகும் என்ற நிலையில், அதை தோற்கடிப்பதல்ல, மாறாக ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மீதும் அதன் கட்டுப்பாட்டை மீண்டும் பலப்படுத்திக் கொள்வதற்காகும் என்ற அடிப்படை உண்மையை இந்த செய்திகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. வெறும் ஓராண்டிற்கு முன்னர் தான், சிரிய அரசாங்கத்தின் மீது குண்டுவீசுவதற்கான அதன் திட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டன; ஆனால் அந்த திட்டங்கள் முற்றிலுமாக கைவிடப்படவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையின் பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே, ஒபாமா நிர்வாகம், பெண்டகன், மற்றும் அவற்றின் ஊடக ஒத்துழைப்பாளர்களால் முன்வைக்கப்படும் ஒவ்வொரு வாதமும் பொய்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதே ஒரு நிலையான அச்சறுத்தலாக இருக்கிறது. அப்பிராந்தியம் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிஜமான நோக்கங்கள் ஒருபோதும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் அத்தகைய நோக்கங்களுக்கும் பல்வேறு மனிதாபிமான போலிக்காரணங்களுக்கும் இடையே அங்கே எந்தவொரு சம்பந்தமும் இல்லை. உலகளாவிய புவிசார்-அரசியலில் மிகவும் மதிப்பார்ந்த வெகுமதிகளில் ஒன்றான அந்த எண்ணெய்-வளம் மிக்க பிராந்தியத்தின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தை தக்க வைக்க முயல்கிறது. அதற்காக தான் புஷ் ஈராக் மீது படையெடுத்தார்; அதற்காக தான் ஒபாமா லிபியாவின் மீது படையெடுத்தார் மற்றும் சிரியாவை சீரழித்தார்; அதற்காக தான் வாஷிங்டன் இஸ்ரேலுக்கு நிதியுதவியும் ஆயுத உதவிகளும் வழங்குகிறது; அதற்காக தான் உலகம் மீண்டுமொரு முறை மத்திய கிழக்கில் ஒரு ஏகாதிபத்திய யுத்தத்தின் விளிம்பில் வந்துள்ளது. |
|
|