சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Capitalism and the police-military mobilization in Ferguson, Missouri

முதலாளித்துவமும், மிசூரி ஃபேர்க்குஷனில் பொலிஸ்-இராணுவத்தை அணிதிரட்டலும்

Joseph Kishore
19 August 2014

Use this version to printSend feedback

கடந்த பத்து நாட்களாக மிசூரியின் ஃபேர்க்குஷன் நகர சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டிலும் ஓர் அரசியல் திருப்புமுனையைக் குறிக்கின்றன. மிகப்பெரியளவிலான சமூக சமத்துவமின்மை, நிதியியல் பிரபுத்துவத்தின் இரக்கமற்றத்தன்மை, அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவு ஆகிய அனைத்தும் நிராயுதபாணியாக நின்ற பதினெட்டு வயது நிரம்பிய மைக்கேல் பிரௌனை பொலிஸ் மரணதண்டனை-வழங்கும் வகையில் கொன்றதிலும் மற்றும் அதற்கு பிரதிபலிப்பாக எழுந்த போராட்டங்களின் மீது வக்கிரமான ஒடுக்குமுறை நடத்தியதிலும் அம்பலமாகி உள்ளன.

ஃபேர்க்குஷனில் எழுந்துள்ள சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகளின் மத்தியில் இருப்பது முதலாளித்துவ அமைப்புமுறையின் உள்ளார்ந்த தன்மையாகும். அமெரிக்காவில் சமத்துவமின்மை மற்றும் பொலிஸ் அரசு எந்திரத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டமும் அது ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் என்பதை புரிந்துகொள்வதை அடிப்படையாக கொள்ளாமல்  வெற்றிபெற முடியாது.

சமீபத்திய நாட்களில் என்ன நடந்துள்ளதோ அது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரசியல் ஆளும்தட்டின் அனைத்து பிரிவுகளும் அரசியல்ரீதியாக அணிதிரண்டுள்ளன என்பதை அம்பலப்படுத்துகிறது. ஃபேர்க்குஷன் வீதிகளில் போராட்டக்காரர்களை ஒடுக்க தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தி, கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்திய, இராணுவ உடைதரித்த கலகம்-ஒடுக்கும் பொலிஸின் மற்றும் டாங்கிகளின் படங்களைப் பார்த்து, கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் அதிர்ந்து போயிருந்தார்கள். ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ஜே நிக்சனும் கூடுதல் அவகாசத்தைப் பெறுவதற்காக மற்றும் மக்களின் எதிர்ப்பைத் தணிக்கும் நோக்கங்கொண்ட ஒரு உபாயத்தோடு தலையீடு செய்தார்கள்.

நிக்சன், நகர கண்காணிப்பை மிசூரி நெடுஞ்சாலை ரோந்துபணிப்பிரிவின் கரங்களில் ஒப்படைத்தார். அல் ஷார்ப்டன் போன்ற ஜனநாயகக் கட்சியின் கையாட்கள், ஞாயிறன்று ஒரு பிரார்த்தனை கூட்டத்தைத் தொடர்ந்து பொலிஸூடன் "ஒன்றிணைந்திருக்க" அழைப்பு விடுத்தார்கள்.

இத்தகைய ஆத்திரமூட்டும் சைகைகள், ஆளுநரின் "அவசரகால நிலை" பிரகடனம் மற்றும் தேசிய பாதுகாப்புப்படையை நிறுத்தியமை உட்பட இன்னும் மேலதிகமான ஆக்ரோஷ ஒடுக்குமுறைக்கான நிலைமைகளை உருவாக்க நோக்கம் கொண்டிருந்தன. இதுவரையிலேயே மிகப் பெரிய பொலிஸ் நடவடிக்கையாக, ஞாயிறன்று மற்றும் திங்களன்று இரவு நடந்த அமைதியான போராட்டங்களில் காவற்படையினர் கண்ணீர் புகைகுண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசினார்கள்.

நகரெங்கிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதன் வழியே கடந்து செல்வோரிடம்  அடையாள ஆவணங்களைக் பொலிஸ் கோரி வருகிறது. பொலிஸ், செய்தியாளர்களை கைது செய்துள்ளதோடு, அச்சுறுத்தியும் உள்ளது மற்றும் நகரவாசிகள் "ஒன்றுகூடிவதை" குற்றமாக கருதி ஏதேச்சதிகாரமாக அவர்களைக் கைது செய்தது.

ஃபேர்க்குஷன் பெயர் குறிப்பிடப்படாமல் எல்லா விதத்திலும் இராணுவ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், ஜனாதிபதி ஒபாமா மீண்டுமொருமுறை திங்களன்று மதியம் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவரது கருத்துக்களோடு உள்ளே நுழைந்திருந்தார். ஃபேர்க்குஷன் வன்முறைக்கு முக்கிய பொறுப்பை போராட்டக்காரர்கள் மீது சுமத்தியதுடன், அவர் தன்னை பக்கச்சார்பற்றவராகவும், பாரபட்சமற்றவராகவும் சித்தரிக்க முயன்றார். பொலிஸ்-அரசு முறைமைகளை அவர் நியாயப்படுத்த முயன்றதோடு, "துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பது அல்லது துப்பாக்கிகளைக் கொண்டு வருவது மற்றும் பொலிஸைத் தாக்குவதன்" மூலமாகவும் கூட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு சாக்குப்போக்காக அந்த துயரகரமான மரணத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

இவை பொய்களாகும். மைக்கேல் பிரௌன் கொல்லப்பட்டதே பிரதான "குற்ற நடவடிக்கையாகும்" மற்றும் அதைத் தொடர்ந்த பொலிஸின் நடவடிக்கை சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு விரோதமானதும் ஆகும். திங்களன்று, பிரௌன் மீதான மரணத்தை ஏற்படுத்திய துப்பாக்கிசூட்டில் அவரது தலையில் சுடப்பட்டிருந்ததை ஒரு சுயாதீனமான பிரேதபரிசோதனை அறிக்கை எடுத்துக்காட்டியது, பொலிஸ் அதிகாரி டார்ரென் வில்சனால் அவர் கொல்லப்பட்டபோது அந்த இளைஞர் தரையில் நின்றிருந்ததையும் சரணடைய முயன்றதையும், அதை நேரில் பார்த்தவர்களின் வாதங்களோடு, அந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டியிருந்தது. ஒரு நிராயுதபாணியான இளைஞரின் அந்த படுகொலைக்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்ற போதினும், வில்சன் சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறார்.

ஒபாமா பின்னர், சிறிது விருப்பமற்ற விதத்தில், "சுதந்திரமாக பேசுவதற்கான உரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் பத்திரிக்கையில் கருத்துரைப்பதற்கான உரிமை" உட்பட, மக்களுக்கு குறிப்பிட்ட அரசியலமைப்பு உரிமைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டார். இத்தகைய உரிமைகள் "கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். “நம்முடைய தேசம், சட்டங்களின் கீழ் வாழும் குடிமக்களுக்கான மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் குடிமக்களுக்கான, சட்டஉரிமைகளுள்ள ஒரு தேசமாகும்," என்றார்.

என்னவொரு ஏமாற்று! ஒபாமாவின் ஆதரவோடு, அரசியலமைப்பு உரிமைகள் ஃபேர்க்குஷன் நகர வீதிகளில் ஒரு எவ்வித அர்த்தமுமற்ற ஆவணமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒபாமா உரையாற்றுவதற்கு சற்று முன்னதாக, அப்பகுதியில் ஒன்றுகூடுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்காமல் ஆளுநர் நிக்சனின் உத்தரவுகளைத் தொடர்ந்து, பொலிஸ் அந்நகரின் மையப்பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றத் தொடங்கியது. இதுவே முதலாவது அரசியலமைப்பு உபபிரிவில் உறுதிசெய்துள்ள சுதந்திரமாக ஒன்றுகூடுதவற்கான உரிமையை  மீறுகிறது.

ஒபாமாவின் இப்போதைய சம்பிரதாயமாக மாறியுள்ள கருத்துக்கள், திங்களன்று மீண்டும் கூறப்பட்டது. பொதுவான மனிததன்மையோடு" “ஒரே அமெரிக்க கூட்டு குடும்பமாக" என்ற அவரின் கருத்துக்கள் அமெரிக்காவின் வாழ்க்கை யதார்த்தத்தை மறைத்துவிட முடியாது. வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு கீழே இருந்து மேலே செல்வ வளத்தை மறுவினியோகம் செய்ததன் மூலமாக பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தை இன்னும் மேலதிகமாக செல்வ செழிப்பாக்க தனது பணியை செய்திருந்த ஒரு ஜனாதிபதியால் இத்தகைய வெற்றுரைகள் கூறப்படுகின்றன. அவரின் மனிததன்மையைப்" பொறுத்த வரையில், அந்த சித்திரவதைக்கு உத்தரவிட்டவர்களையோ அல்லது அதை நடத்தியவர்களையோ பொறுப்பாக்க ஒன்றுமே செய்ய முடியாதென்பதைத் தெளிவுபடுத்திய அதேவேளையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் "நாம் சிலரை சித்திரவதை செய்திருக்கிறோம்" என்ற அழியா வாசகங்களை ஒபாமா தான் கூறியிருந்தார்.

ஒபாமாவின் வாய்வீச்சுக்கள் மற்றும் பொய்களுக்கு அப்பாற்பட்டு, சமூக மற்றும் அரசியல் யதார்த்தமோ மக்கள் நனவில் பிரதிபலிப்பை காண்கிறது. ஃபேர்க்குஷன் வீதிகளில் இருந்த கோபம் அந்நாடு முழுவதிலும் ஆழமாக உணரப்பட்ட உணர்வுகளின் ஒரு வெளிப்பாடாகும். அது பொலிஸ் வன்முறை மீதிருந்த கோபம் மட்டுமல்ல, மாறாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீதான இரக்கமற்ற தாக்குதல் மீதான கோபமாகும்.

உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அமைப்புமுறையின் பிரச்சனைகள் என்ற புரிதல் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வருகிறது. WSWSஇல் பிரசுரிக்கப்பட்ட ஒளிப்பதிவு நேர்காணல்களில், ஃபேர்க்குஷன் தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவத்தின் தன்மை குறித்து பேசுகிறார்கள், அத்தோடு கல்விக்கோ அல்லது வேலைகளுக்கோ பணமில்லை என்று ஆளும் வர்க்கம் கூறுகின்ற அதேவேளையில் இராணுவ மற்றும் பொலிஸூக்கு பரந்த வளங்களை அர்ப்பணித்துள்ளதையும் குறிப்பிட்டுக்காட்டுகிறார்கள். உள்நாட்டில் அமெரிக்க நகரங்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் டாங்கிகளை அனுப்புவதோடு, வெளிநாடுகளில் "ஜனநாயகத்திற்கான" யுத்தங்களை நடத்துகிறோம் என்ற அதன் பாசாங்குத்தனத்தையும் அவர்கள் கண்டுகொள்கின்றார்கள்.

தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி அடைந்துவரும் இந்த நனவு, எந்த அடிப்படையில் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த முடியுமோ அந்த ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தின் மீது நங்கூரமிடப்பட வேண்டும். அதுபோன்றவொரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க அவசியப்படும் புரட்சிகர தலைமையை செயிண்ட் லூயிஸிலும், அந்நாடு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் கட்டியமைப்பதே அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் சகோதர கட்சிகளின் மத்திய நோக்கமாகும்.

மிசோரி ஃபேர்குகுஷனின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் ஒன்றுதிரள வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுக்கிறது. மைக்கேல் பிரௌனைக் கொன்றவரை கைது செய்து விசாரணை நடத்த, தேசிய பாதுகாப்பு படையைத் திரும்ப பெற மற்றும் பொலிஸைக் கலைக்க, மற்றும் நெருக்கடிகால நிலையை நீக்க கோரிக்கை விடுக்கும் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நாடெங்கிலும் நடத்தப்பட வேண்டும். இந்த ஜனநாயகக் கோரிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளான கண்ணியமான சம்பளத்துடனான வேலைகள், கல்வி, மருத்துவ பராமரிப்பு மற்றும் அனைவருக்கும் வீட்டுவசதியை வழங்க நூறு பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவற்றை பாதுகாப்பதோடு இணைக்கப்பட வேண்டும்.

ஃபேர்க்குஷனில் என்ன நடந்து வருகிறதோ அது அனைத்து தொழிலாளர்கள் மீதான ஒரு தாக்குதலின் பாகமாக உள்ளது. பரந்த உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தோடு சேர்ந்து, அந்நகர வீதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ்-அரச நடவடிக்கைகள், பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளுக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டுள்ளன.

அமெரிக்க மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் பாதுகாப்பு, ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டுமென SEP வலியுறுத்துகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்க அனுப்பப்பட்டிருந்த அதே படைகள் தான், ஃபேர்க்குஷனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புப்படை துருப்புகளாகும். அமெரிக்க யுத்த எந்திரத்தை இல்லாதொழிப்பதற்கான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் விருப்பங்கள், உலகை ஒரு புதிய உலக யுத்தத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தி வருகின்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தந்திரங்களுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்துடன் பிரிக்கவியலாதபடி இணைந்துள்ளது.

அதன் ஆட்சியை பாதுகாக்க எதற்கும் அது தயங்காது என்பதை எடுத்துக்காட்டியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கம், சமூகத்தின் மீது கொண்டுள்ள ஆதிக்கத்தின் மீது ஒரு நேரடித் தாக்குல் இல்லாமல் எதுவும் அடையப்பட முடியாது.

யார் ஆட்சி செய்வது? மனிதகுலத்தை பேரழிவுகளுக்குள் இட்டுச் செல்கின்ற அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இன்னும் மேலதிகமாக கொடூர தாக்குதல்களை ஆளும் வர்க்கமும் அதன் ஒடுக்குமுறை கருவிகளும் தொடர்ந்து திணிக்குமா? அல்லது மக்கள்தொகையின் பாரிய பெரும்பான்மையாக உள்ள தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கையிலெடுத்து சமத்துவத்தின் அடித்தளத்தில் சமூகத்தை ஒழுங்கமைக்குமா, செல்வ வளத்தை ஒரு தீவிரத்தன்மையோடு மறுபகிர்வு செய்யுமா, மற்றும் மனிதகுலத்தின் மாபெரும் உற்பத்தி சக்திகளின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஏற்குமா? என்பதே முன்வைக்கப்பட்டிருக்கும் அடிப்படை கேள்விகளாகும். இந்த மாற்றீடு முன்னொருபோதையும்விட உடனடியாகவும், அவசரமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்டவிழும் சம்பவங்களை அவதானித்துக் கொண்டிருப்பது மட்டும் போதாது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவதன் மூலமாக மற்றும் கட்டியெழுப்புவதன் மூலமாக சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க நமது அனைத்து வாசகர்களும் முடிவெடுக்க வேண்டுமென நாம் அழைப்புவிடுக்கிறோம். SEPஇல் இணைவது தொடர்பான மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்.