World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Workers and students in Australia discuss SEP’s antiwar program ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் SEP-யின் போருக்கு எதிரான திட்டத்தை விவாதிக்கிறார்கள்
By our reporters கடந்த பத்து நாட்களாக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான வெற்றிகரமான கூட்டங்கள் ஒரு மூன்றாம் உலகப்போரின் வளரும் அபாயத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஆரம்பத்தில், ஈராக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க சீர்குலைவுக்கு விடையிறுப்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டன. அத்துடன் அவை காசா மீதான இஸ்ரேலிய இராணுவ வான்தாக்குதல் குறித்த பகுப்பாய்வு மற்றும் விவாதம், ரஷ்யாவிற்கு எதிராக ஏகாதிபத்திய வல்லரசுகளின் தீவிரப்பட்டுக்கொண்டிருக்கும் முனைப்பான நடவடிக்கைகள் மற்றும் உக்ரேன் நெருக்கடியின் மூலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள விரிவுப்படுத்தப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் ஜூலை 13 அன்று மெல்போர்னில் பேசினார். ஒரு வாரம் கழித்து சோசலிச சமத்துவக் கட்சி துணை தேசிய செயலாளர் ஜேம்ஸ் கோகன் சிட்னியில் பேசினார். அதேநேரம், மைக் ஹெட் பிரிஸ்போனில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். கலந்துரையாடலின் இதயத்தானமாக ஜூனில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் இருந்தது, சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அறிக்கை, ஏகாதிபத்திய போரின் ஆபத்தையும் மற்றும் நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தையும் மையமாக கொண்டுள்ளது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள், மிகச் சமீபத்திய உலகளாவிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, தீர்மானத்தில் அடங்கியிருந்த வரலாற்று முன்னோக்குகளின் மைய பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்தார்கள். புவிசார் அரசியல் உறவுகளில் அதிகரிக்கும் நெருக்கடி குறித்து பார்வையாளராக இருந்த உறுப்பினர்கள் கூட்டங்களின் முடிவில் உலக சோசலிச வலைத் தளத்தினால் நடத்தப்பட்ட பேட்டிகளில் தீவிர கவலைகளை வெளிப்படுத்தினார்கள். மெல்போர்னில், லா ட்ரோப் பல்கலைக்கழக 20 வயது உளவியல் மாணவர் எட்கார் கூறியதாவது: “போரின் அபாயம் எங்கிருந்து வருகிறது, முக்கிய பிரச்சனை என்ன, ஏன் முதலாளித்துவம் இயங்க முடியவில்லை என்று நிக் பீம்ஸ் விரிவாக விளக்கிய விதம் எனக்கு பிடித்திருந்தது. முதலாளித்துவத்திற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நல்ல தீர்வு என்பது தெளிவாக இருக்கிறது.” “அவர் முதல் உலகப் போரில் இருந்த நிகழ்வுகள், இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது என்று காண்பித்தார். முன்பு இருந்ததைவிட மேலும் முன்னேறியதாக அது இன்னும் அதிகமாக தீவிரப்பட்டதாக இருக்கிறது. 'சமூகத்தில் பிரச்சனைகள் இருக்கின்றன மேலும் அரசாங்கம் பொய் சொல்லுகிறது,' என்று பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள் ஆனால் அவர்களால் ஏன் என்று சொல்ல முடியவில்லை. இந்த பொய்களுக்கு பின்னால் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாது. இங்கு வந்ததால் இந்த கூட்டம் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறது. அதைப்பற்றி அதிகமாக ஆய்வு செய்ய என்னை தூண்டுகிறது.... “புரட்சியின் வரலாற்று விளக்கமும் எனக்கு பிடித்திருந்தது, குறிப்பாக ரஷ்ய புரட்சி மற்றும் அதை ஸ்ராலினிசம் எப்படி காட்டிக்கொடுத்தது, நான் இதற்குமுன் அதைப்பற்றி கேள்விப்பட்டதில்லை; எனக்கு உயர்நிலைப்பள்ளியில் அதைப்பற்றி அவர்கள் எப்பொழுதும் கற்பித்ததில்லை. பள்ளியில், 'சோசலிசம் வேலை செய்யவில்லை,' என்று கூறினார்கள், ஆனால் ரஷ்யாவில் என்ன நடந்தது அது சோசலிசம் இல்லை என்று அவர்கள் எப்பொழுதும் விளக்கியதில்லை. உண்மையில் மக்கள் ஸ்ராலினிசத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.” ஒரு வரவு செலவு திட்டத்திற்கு எதிரான பேரணியில் ஒரு சோசலிச சமத்துவக் கட்சி துண்டுப்பிரசுரத்தை பெற்ற பிறகு ஃபாரௌச் அவருடைய இரண்டு இளம் குழந்தைகளுடன் மெல்போர்ன் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடிவு செய்தார். கூட்டத்திற்கு "நேட்டோ விரிவாக்கம் வேண்டாம்” என்ற கையினால் செய்யப்பட்ட பதாகையை கொண்டு சென்றார். சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்திற்குப் பின் அவர் கூறியதாவது, "என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று செய்திகளில் இருந்து தெரிந்துகொள்ள நான் முயற்சி செய்துகொண்டிருந்தேன் உண்மையில் இணையம் பிரதானமான செய்தி தளம் அல்ல. உக்ரேனில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது பற்றி நான் கவலை கொண்டிருந்தேன். ஆனால் எதையும் புரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது, ஏனென்றால் எப்பொழுதும் திரும்பவும் ஒரே கதை மற்றும் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலுடன் இருக்கிறது.” கூட்டம் "மிகவும் அரிய தகவல் அளிக்கக்கூடியதாக இருந்தது" மேலும் சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்கால நிகழ்வுகள் குறித்து தொடர்பு கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஒரு இளம் களஞ்சியசாலை தொழிலாளியான பிர்வான், “இந்த சமூகத்தில் பேராசையின் மீது குறைந்த முக்கியத்துவம் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். ஜீனா ரைன்ஹார்ட் போன்ற (சுரங்க முதலாளிகள்) மிகப்பெரிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஆபிரிக்காவில் செய்வதைப் போல ஒரு நாளைக்கு 2 டாலர்களுக்கு ஒவ்வொருவரும் வேலை செய்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தேவையான செல்வம் இருக்கிறது ஆனால் நேப்பாள் போன்ற ஏழை நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிடும் போது 'நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பாருங்கள்' மேலும் அதனாலேயே உங்கள் வாழ்க்கை இருக்கும் நிலையை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்" என்று மேற்கத்திய ஜனநாயகங்கள் தொழிலாளர்களிடம் கூறுகின்றன என்றார். பிரிஸ்பேனில், எரின் என்பவர் சுமார் ஆறு வருடங்கள் உலக சோசலிச வலைத் தளத்தை படித்த பின்னர், சோசலிச சமத்துவக் கட்சியின் அவருடைய முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். நீங்கள் மிகைப்படுத்தி எல்லாம் கூறவில்லை. போருக்கு எதிரான ஒரு இயக்கம் மற்றும் அதை அடைவதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு புது தலைமையின் தேவைக்குறித்து நீங்கள் கூறிய அனைத்தும் மிகச் சரியாகும். உக்ரேனில் நடந்துவரும் மாற்றங்கள் குறித்து அவர் கூறியதாவது, "ஆற்றல்வாய்ந்த சந்தைகள் மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் எரிவாயு இணைப்புகளுக்காகவும் ரஷ்யாவை துண்டாடி விட இது நடவடிக்கையாக இருக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அதன் மீது கண் வைத்திருக்கிறார்கள் அதேபோல் ஜேர்மானியர்களும் கூட. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு திறந்துவிடவும் ரஷ்யா மற்றும் சோவியத் யூனியனின் முந்தைய பிரதேசங்களையும் உடைப்பதற்கு நேட்டோவினால் இந்த நெருக்கடி தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.” பல்வேறு "இடது சாரி" வலைத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களுக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆய்வுகளுக்கும் உள்ள வேறுபாட்டை எரின் காட்டினார். “உலக சோசலிச வலைத் தளம் தெள்ளத்தெளிவான ஒரு ஆய்வுடன் மிகவும் தகவல் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. வெளிப்படையாக, ஒரு சோசலிச சார்பானதாக இருக்கிறது, கடுமையான ஆய்வின் அடிப்படையில் நன்றாக சிந்திக்கப்பட்டதாக வெளிப்படையாக தெரிகிறது. நான் ஏனைய செய்தி ஆதாரங்களைப் பார்த்தேன், ஆனால் உண்மைகள் இல்லாமல் அதற்கு மாறாக, ஏராளமான கொந்தளிப்புகளுடன் மற்றும் பகுப்பாய்வுகள் அல்ல, தவறான தகவல்களுடன் இருக்கும், அவை பிரதானமான செய்தி தளங்களில் மட்டுமல்ல, இடதுசாரி சார்பானவற்றிலும் இருக்கின்றன. உலக சோசலிச வலைத் தளம் சுருக்கமானது, ஆழ்ந்து ஆராயப்பட்டது மற்றும் ஆழமானது, நன்றாக எழுதப்பட்டது. உண்மையில் ஏன் எதற்காக என்ற வரலாற்று யதார்த்தங்களுக்குள் சென்று இந்த பகுப்பாய்வை நடைமுறைக்கு கொண்டு வருகிறீர்கள்.” அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் இராணுவ தலையீடுகளுக்கு போலி இடது குழுக்களின் ஆதரவினால் தான் வெறுப்பு அடைந்ததாக எரின் கூறினார். "உதாரணத்திற்கு கூறுவதானால், எகிப்திய மற்றும் சிரிய சூழ்நிலைகள்.... ஏகாதிபத்திய சக்திகள் மூலமான இராணுவ படைக்கான அவர்களின் ஆதரவு - அது எப்படி சோசலிசமாகும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை - மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆயுத விற்பனைக்கான அவர்களின் ஆதரவு ஆகியவை எனக்கு ஏன் என்று புரியவில்லை. எப்படி அது ஒரு மார்க்சிச முன்னோக்காக இருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை." சிட்னியில், ஃபேர்பீல்ட் பகுதியைச் சேர்ந்த செயான் என்ற 15 வயது ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனும் தன்னுடைய முதல் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டார். "போர் குறித்த எண்ணமே என்னை கோபம் கொள்ள வைக்கிறது, ஆனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்களின் செயல்பாடு குறித்து நான் அதிருப்தி அடைந்திருக்கிறேன். இளைஞர்களிடையே இராணுவாத ஊக்குவிப்பு எனக்கு "வெறுப்பை ஏற்படுத்துகிறது மேலும் நான் அது போன்ற அனைத்தையும் வெறுக்கிறேன். "அவர்கள் குழந்தைகளை தாங்களே சிந்திக்க விட வேண்டும் ஆனால் அவர்கள் மனதில் யோசனைகளை திணிக்க மட்டுமே செய்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை ... "பொதுவாக சோசலிசம் மற்றும் கம்யூனிசம் மூலமாக எல்லாவற்றையும் செய்வது கெடுதலானது என்பதை பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் உங்களுக்கு சொல்ல முயற்சிக்கும் போது அது உதவி செய்யாது. அது எப்பொழுதும் வேலை செய்யாது என்பது அவர்களின் அறிவில் அது எரிந்து கொண்டிருக்கிறது." சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில் ஏன் செயான் கலந்து கொண்டார் என்று கேட்டப்போது: "நான் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்து, 'சோசலிசத்தை ஆதரிக்கிறேன்' என்று கூற விரும்பவில்லை. நான் ஏதாவது செய்யவேண்டும் என விரும்புகிறேன்." பெலின்டா என்ற ஒரு வரவேற்பாளர், “போர் ஒரு நல்ல சாதனமாக இருக்கிறது என்று 2014-ல் ஏன் தங்கள் மூளையில் நினைக்கிறார்கள்" என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை என கூறினார். “ஈராக் போரில் ஆஸ்திரேலியாவின் ஈடுபாடு அனைத்தும் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்கானதுதான். ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் ஒரே கட்டிலில் இருக்கிறது, ஆனால் நாம் உண்மையிலேயே என்ன நடந்து கொண்டிருக்கிறது என மேலும் விழிப்புடன் இருந்திருந்தால், நாம் அதனுடன் இணைந்து செல்லமாட்டோம். போர்கள் குறித்து யாரேனும் விவாதிக்க கூட்டங்கள் நடத்துவதாக நான் கேள்விப்பட வில்லை.” உண்மையிலேயே என்ன நடந்துகொண்டிருக்கிறது மற்றும் உலகளவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வை அதிகரிக்க ஒரு பரந்த வெகுஜன கட்சியை கட்ட, மதம் அல்லது வேறு எவற்றுக்கும் மாறாக நிதியியல், எண்ணெய் மற்றும் பண்டங்கள் குறித்து அதன் அடிப்படையானவற்றை விளக்க சோசலிச சமத்துவக் கட்சி மக்களின் கண்களை திறக்க விரும்புகிறது." மிஷேல் என்ற 31 வயது ஊனமுற்றோர் உதவி பணியாளர் ஒருவர் கூறியதாவது, "சோசலிச சமத்துவக் கட்சி கூட்டம் மிகவும் அறிவுறுத்தலாக, சுதந்திரமானதாக இருந்தது. வலது சாரி குறித்து மட்டுமல்ல போலி இடதுகள் குறித்தும் விமர்சனங்கள் இருந்தன மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டங்களுக்கு யார் வேண்டுமாயினும் வர நான் ஊக்கப்படுத்துவேன்." போர் உந்துதலுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று கேட்கப்பட்ட போது, மிஷேல் கூறியதாவது: "இலாபங்கள், மக்கள் மீது இலாபம். ஒரு நாட்டுக்குள்ளேயே மட்டுமல்ல நாடுகளுக்கிடையேயும் ஏழை மற்றும் பணக்காரர்களை பிரிப்பார்கள், அவற்றின் வளங்களுக்காக நாடுகளை கட்டுப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். நீண்ட காலத்திற்கு நசுக்கப்பட்ட மக்கள் இதைப்போன்றுதான் விஷயங்கள் இருக்கின்றன என அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆனால் இப்போது, அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு வழி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். |
|