சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP and IYSSE demonstrate against Israeli assault on Gaza

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐவைஎஸ்எஸ்இ காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது

By our correspondents
8 August 2014

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் காசா மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு எதிராக ஆகஸ்ட் 5 அன்று மத்திய கொழும்பில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

சுமார் 50 கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் பங்கேற்றனர். தொழிலாளர்கள் வீடு திரும்பும் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சுலோக அட்டைகளை ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்: "காசா மீது கை வைக்காதே!", "காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்போம்!", "அரபு மற்றும் யூத தொழிலாளர்களை ஐக்கியப்படுத்து!", "மத்திய கிழக்கில் ஒரு ஐக்கிய சோசலிச குடியரசுக்காக!", "ஏகாதிபத்திய உலகப் போர் திட்டங்களை எதிர்த்திடு!"



W.A. சுனில் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகிறார்

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சோசக அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில், காசா மீதான இஸ்ரேல் இராணுவத் தாக்குதலின் இலக்கு, 60 ஆண்டுகளுக்கும் மேலான பாலஸ்தீன எதிர்ப்பை தகர்ப்பதாகும் எனக் கூறினார். அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை கொண்ட இஸ்ரேலிய தாக்குதல்களின் கொடூரமான பண்பை சுட்டிக்காட்டிய சுனில், "சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு இந்த ஏகாதிபத்திய சக்திகள் களஞ்சியத்தில் வைத்திருப்பவை என்ன என்பது பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும்," என்றார்.

ஜூலை 15 இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை சுனில் சுட்டிக் காட்டினார். "‘சம்பந்தப்பட்ட தரப்பினர் வன்முறையை நிறுத்துவதற்கு கூடுமானவரை சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்', என்று அழைப்புவிடுக்கும் அந்த அந்த அறிக்கை, இஸ்ரேலையும் ஹமாஸையும் ஒரே நிலையில் வைப்பதன் மூலம் இஸ்ரேலை குற்றத்தில் இருந்து காக்கின்றது," என்று அவர் விளக்கினார்.

நவ சம சமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சியும் கொழும்பில் ஜூலை 31 ஏற்பாடு செய்து, "பாலஸ்தீனியர்கள் வாழ விடு" என்ற தொனிப்பொருளில் அழைக்கப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்த்தின் ஏகாதிபத்திய சார்பு அரசியலை பேச்சாளர் அம்பலப்படுத்தினார். அந்த தொனிப்பொருள் இஸ்ரேல், அதன் அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு சமமானதாகும், என்று பேச்சாளர் கூறினார். "மாறாக, சோசக/ஐவைஎஸ்எஸ்இ பிரச்சாரத்தின் நோக்கம், ஏகாதிபத்தியம் மற்றும் அவர்களின் சர்வதேச கூட்டாளிகளுக்கு எதிராக, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதாகும்."

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சோசக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொரளை மற்றும் புறக்கோட்டையில் இருந்து பல முக்கிய வீதிகள் ஊடாக அணிவகுத்து சென்று லிப்டன் சுற்றுவட்டத்தில் கூடினர். இந்த அணிவகுப்பு புஞ்சி பொரளை, மருதானை, கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ் போன்ற கூட்டம் நிறைந்த பிரதேசங்களை கடந்து சென்றது.


சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர் முஸ்லீம் குடும்பத்துடன் பேசுகிறார

"காசா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்திடு" என்ற WSWS அறிக்கையின் சுமார் 3,000 பிரதிகள் சிங்களம் மற்றும் தமிழில் விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டுப்பிரசுரமானது எதிர்வரும் ஆகஸ்ட் 18 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள, உலக போர் ஆபத்துக்களை பற்றி சோசக/ஐவைஎஸ்எஸ்இ ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தின் விளம்பரமும் அடங்கியிருந்தது.

அணிவகுப்பில் சென்றவர்களுக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களிடமிருந்து சிறந்த பிரதிபலிப்பு கிடைத்தது. சாரதிகள் வாகனத்தை நிறுத்தி துண்டு பிரசுரங்களை கேட்டனர். அதேபோல் பஸ் பயணிகளும் கேட்டனர். வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆர்வத்துடன் சோசக பிரச்சாரகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். முஸ்லீம் பகுதிகளில் சிறந்த ஆதரவு கிடைத்தது.

புறக்கோட்டை சில்லறை வியாபாரிகள் குழுவினர் WSWSக்கு கருத்து தெரிவித்தனர். அதில் பின்வருவனவும் அடங்கும்:

அமெரிக்கா இஸ்ரேலுக்கு 250 மில்லியன் டொலர் கொடுத்ததாக நேற்று பத்திரிகைகளில் பார்த்தோம். எனவே அமெரிக்கா குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும். நேற்று அவர்கள் [இஸ்ரேல்] ஒரு பாடசாலையை தாக்கியுள்ளனர். நாம் இந்த தாக்குதல்களை கண்டிக்கிறோம்.

 "அமெரிக்கா எந்த ஆதாரமும் இல்லாமல் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவை குற்றம் சாட்டியது. ஆனால் ரஷ்யா, அதை உக்ரேன் செய்தமைக்கான சான்றுகளை வழங்கியது. அமெரிக்கா மேலும் அழிவுகரமான யுத்தங்களைத் தொடங்கப் போகிறது.
"
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், முஸ்லீம் மக்களுக்கு எதிராக சில அரசாங்க ஆதரவு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அரசாங்கம் மக்களை பிரிக்க விரும்புகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் இதே முறையையே பயன்படுத்துகின்றன. ஈராக்கில் இப்போது என்ன நடக்கிறது பாருங்கள். மக்கள் சுன்னி, ஷியா மற்றும் குர்திஷ் என மூன்று குழுக்களா
பிரிக்கப்பட்டுள்ளனர்."


கட்சியின் பகுப்பாய்வை விளக்குகிறார்

சிவில் உடையில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், "நாம் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு நடத்திய யுத்தத்தை ஆதரித்தது என்று சுட்டிக்காட்டிய போது, ஏன் வாஷிங்டன் போர் குற்றங்கள் தொடர்பாக இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது என அவர் கேட்டார். இலங்கை அரசாங்கத்தை விட அதிக குற்றங்களை அமெரிக்கா செய்கையில், அதற்கு [இலங்கையில்] போர் குற்றங்களை விசாரிக்க உரிமை இல்லை, என அவர் கூறினார்.

புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தால் கொல்லப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து அமெரிக்கவுக்கு எந்த கவலையும் இல்லை என்று சோசக ஆதரவாளர்கள் விளக்கினார். இரத்தக்களரி மோதலுக்கு முழுமையாக ஆதரவளித்த நிலையில், அமெரிக்கா, இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவில் இருந்து ஒதுங்குவதற்கும் வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமாக இணைவதற்கும் அழுத்தம் கொடுக்கவே போர்க்குற்றங்களை பயன்படுத்தி வருகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஒரு பெண் தொழிலாளி தெரிவித்ததாவது: "தொழிலாளர்கள் காசா மீதான தாக்குதல்களை எதிர்க்க வேண்டும். இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படுகின்றது என்பது தெளிவாக இருக்கிறது. சிலர் 'இலங்கைக்கும் இதற்கும் என்ன தொடர்பு?' என்று கேட்கின்றனர். அது போன்ற கேள்விகள் அவசியமான கேள்விகளை தவிர்க்கின்றன என நான் நினைக்கின்றேன். இது ஒரு பரந்த உலக போர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நான் உங்கள் துண்டுப்பிரசுரத்தை படித்து உங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்."


ஒரு தொழிலாளி சோசலிச சமத்துவக் கட்சி
துண்டுப்பிரசுரத்தை படிக்கிறார்

ஒரு முஸ்லீம் இளைஞர் தெரிவித்ததாவது: "காசா பற்றி பேசுவது மிகவும் முக்கியம். எனக்கு உங்கள் கட்சி பற்றி அதிகம் தெரியாது ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் சில எங்களை சமாதானப்படுத்தக் கூறுவது போல் இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு போர் அல்ல. இஸ்ரேலினால் மொத்த பாலஸ்தீனியர்களும் கொல்லப்படுகின்றனர்."

ஒரு தொலைத்தொடர்பு தொழிலாளி தெரிவித்ததாவது: "நான் பாலஸ்தீனம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்க்கிறேன். எல்லோரும் அதை எதிர்க்க வேண்டும், ஆனால் உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்று முழுமையான தகவல்களை இங்கு பெற முடியாது. மக்களுக்கு புரியவைக்க முயற்சிக்கும் உங்கள் பிரச்சாரத்திற்கு நான் ஆதரவு தருகிறேன்...

"உங்கள் செயல்கள் என்ன நடக்கிறது என்று மக்கள் புரிந்துகொள்ள உதவும். காசா பகுதியில் உள்ள ஏழை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நான் உங்கள் துண்டுப்பிரசுரத்தை படிக்கிறேன், மற்றும் ஒரு உலக யுத்தத்தை நோக்கிய நகர்வு பற்றிய உங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புகிறேன்."