World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா Signs of serious problems in Chinese and Japanese economies சீன மற்றும் ஜப்பானிய பொருளாதாரங்களில் தீவிர பிரச்சினைகளுக்கான அறிகுறிகள்
By Nick
Beams ஜூலை மாதத்திற்கான சீன கடன்-வழங்கும் வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்ட வெறும் ஒரு அதிர்வோ அல்லது கடுமையான சுருக்கமோ இன்னும் மேலதிகமான ஏதோவொரு தீவிர பிரச்சினையின் தொடக்கத்திற்கு சமிக்ஞை காட்டுகிறதா? இந்தக் கேள்விதான் புதனன்று அந்த புள்ளிவிபரங்கள் வெளியானதற்கு பின்னர், உலகளாவிய நிதியியல் வட்டாரங்களுக்குள் கேட்கப்பட்டு வரும் கேள்வியாக இருக்கிறது. 2008 அக்டோபரில் உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்ததற்குப் பின்னர், புதிய கடன்வழங்கும் வளர்ச்சி அதன் மிகக் குறைந்த விகிதத்தை எட்டியிருந்ததை அந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. உலகின் மிகப்பெரிய அந்த இரண்டாவது பொருளாதாரத்தில் கடன் விரிவாக்க விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகளாவிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014இன் இரண்டாவது காலாண்டில் 6.8 சதவீத வருடாந்த விகிதத்திற்கு சுருங்கியது என்ற செய்திகளும் புதனன்று வெளியாயின. கடன்வழங்கும் வளர்ச்சியை பரந்தளவில் அளவிட உதவும் சீனாவின் மொத்தநிதி, 1.5 ட்ரில்லியன் ரென்மின்பிக்கு உயரும் என்ற எதிர்ப்பார்ப்போடு ஒப்பிடுகையில் ஜூலையில் அது 273 பில்லியன் ரென்மின்பி (44 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கே விரிவடைந்தது, அதாவது கடன்வழங்கும் வளர்ச்சி அனுமானிக்கப்பட்டதில் வெறும் 18 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்தது என்பதே அதன் அர்த்தமாகும். அந்நாட்டின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி (People’s Bank of China) நிதியியல் சந்தைகளுக்கு மறுஉத்தரவாதம் வழங்கும் நோக்கில் ஓர் அறிக்கையைப் பிரசுரித்து அசாதாரணமான நடவடிக்கையை எடுத்தது. ஜூலையில் இருந்த மந்தமான கடன்வழங்கும் வளர்ச்சி இன்னமும் "ஒரு நியாயமான வரம்பிற்குள்" இருப்பதாகவும், வரவிருக்கும் மாதங்களில் அது சீரான கடன்வழங்கும் வளர்ச்சியை தக்கவைக்குமென்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. பண வினியோகம் மற்றும் கடன்வழங்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஸ்திரமான வளர்ச்சியை தக்கவைக்குமென்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அவ்வங்கி, ஆனால் பொருளாதாரமோ "இறங்குமுகமான அழுத்தத்தையும்" மற்றும் "சொத்து சந்தையில் திருத்தல்களையும்" முகங்கொடுத்து வருகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டது. எவ்வாறிருந்தபோதினும், கடன் வழங்குவது திடீரென எதிர்பாராமல் சுருங்கியதன் தாக்கங்கள் மீது வெளிப்பட்ட கவலைகளின் வெளிப்பாடுகளைத் தடுக்க, அவ்வங்கியின் மறுஉத்திரவாதங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவை மையமாக கொண்ட ANZ வங்கியின் பகுப்பாய்வாளர்கள் கூறுகையில், அந்த புள்ளிவிபரத்தை "மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தனர். “நிதியியல் அமைப்புமுறை வேகமாக ஒரு பலவீனமான நிகழ்வுபோக்கிற்குள் சென்று கொண்டிருக்கிறது, அது உண்மையான பொருளாதாரத்தின் மீது கணிசமான எதிர்விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும்," என்றது குறிப்பிட்டது. ANZ தொடர்ந்து கூறுகையில், “அத்தகையவொரு கூர்மையான வீழ்ச்சி உண்மையில் பணப்புழக்கத்தை இறுக்கி வருகிறது, அது உயர்ந்த வட்டிவிகிதங்களுக்கு இட்டு செல்லும் என்பதோடு சீனாவின் பரந்த-பொருளாதாரத்தின் (macroeconomy) இலக்குகளையும் ஆபத்திற்குட்படுத்தும்," என்று குறிப்பிட்டது. ANZஇன் சீனப் பொருளியல்வாதி லியு லி-கேங் கூறுகையில், சீன வங்கிகள் "திடீரென கடன் வழங்குவதை நிறுத்தியுள்ள நிலையில் அவை ஆபத்தினை தவிர்க்க விரும்புகின்றன" என்பதையே இந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்றார். ஆண்டுக்கு 7.5 சதவீத மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தைத் தக்க வைப்பதே சீன அரசாங்க மற்றும் நிதியியல் ஆணையங்களின் உத்தியோகப்பூர்வ கொள்கை நோக்கமாகும். கடன்-வழங்கு விரிவாக்க விகிதம் வீழ்ச்சி அடைந்தால் வளர்ச்சியும் அதன் இலக்கில் இருந்து வீழ்ச்சி அடையக்கூடும் என்பது, சீனப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வரும் கட்டுமானம் மற்றும் வீடு-கட்டிட திட்டங்களுக்கு வழங்க வேண்டிய புதிய கடன் வினியோகங்களிலிருந்து வங்கிகளும் மற்றும் ஏனைய கடன் வழங்குநர்களும் பின்வாங்கி வருகிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. Credit Suisse நிறுவனத்தின் சீன பொருளியல்வாதி டாங் தாவோ கடன்-வழங்கு புள்ளிவிபரங்களை "படுபயங்கரமாக" இருப்பதாக வர்ணித்ததாக Australian Financial Review குறிப்பிட்டது. அவர் கூறுகையில், “பொருளாதாரம் பலவீனமாக இருப்பதோடு வீட்டுத்துறையும் நொடிந்துள்ள நிலையில் வங்கிகள் கடன்வழங்க முன்வருவதில்லை," என்றார். வழக்கமாக ஜூலை மாதம் கடன்-வழங்குவது குறைவாக இருக்கும் மாதமென்றும், வளர்ச்சி இலக்கை எட்டும் நோக்கில் அரசாங்கத்தால் தொடங்கப்படும் நிதியளிப்பு முறைமைகளுக்கு வங்கிகள் விடையிறுப்பு காட்டும் மாதமான குறிப்பாக ஜூனில் அது பலமாக இருக்குமென்று குறிப்பிட்டு பெரிதும் காலகட்ட காரணிகளால் கடன்-வழங்கு புள்ளிவிபரங்கள் உந்தப்பட்டிருந்ததாக சீன மத்திய வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் நிதியியல் அமைப்புமுறையின் ஸ்திரப்பாடு மீதான கவலைகள் அந்த அம்சத்தையும் விஞ்சி நிற்கிறது, ஏனென்றால் உலகளாவிய நிதியியல் நெருக்கடியின் தாக்கங்களை எதிர்கொள்ள அரசாங்கமும் நிதியியல் ஆணையங்களும் நிதியியல் அடைப்புகளைத் திறந்துவிட்டதற்குப் பின்னர் கடன்வழங்குவது வேகமாக விரிவடைந்திருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்திற்கு சமமாக வளர்ந்துள்ளதோடு, தற்போது அது மொத்தமாக சுமார் 250 சதவீதம் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள BNP Paribas இன் மூத்த சீன பொருளியல்வாதி சென் ஜின்ங்டாங், அந்த ஜூலை புள்ளிவிபரங்களை ஒரு "எச்சரிக்கை சைகையாக" குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், வளர்ச்சி குறித்து ஓர் எதிர்மறைக் கண்ணோட்டத்தை ஏற்பதென்பது அவசரமான முடிவாக இருக்கும் என்றாலும் கூட, “நிலைமை இன்னும் இரண்டோ அல்லது மூன்று மாதங்களுக்கோ தொடர்ந்தால், அங்கே தீவிரமான பணப்புழக்க பிரச்சினைகள் உருவாகலாம்," என்றார். சாத்தியமான ஒருமுறை மட்டும் நிகழும் காரணிகளாக இரண்டாவது காலாண்டில் ஜப்பானிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சியை சூழ்ந்த விளக்கங்களில் காட்டப்படுகின்றன. 6.1 சதவீத ஆண்டு வளர்ச்சியை உருவாக்குவதற்காக முதல் காலாண்டுக்குள் சீரற்றமுறையில் செலவுகள் செய்யப்பட்டிருந்தன என்பதையே ஏப்ரல் மாதம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அந்நாட்டின் நுகர்வு வரியில் 3 சதவீத உயர்வு அர்த்தப்படுத்தியது. அதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு சுருக்கம் ஜூன் மாத இறுதி வரையில் மூன்று மாதங்களுக்கு இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6.8 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டியிருக்கும் வீழ்ச்சி ஆரம்ப மதிப்பீடுகளை விட மிகவும் குறைவானது என்பதோடு முந்தைய உயர்வையும் ஒன்றுமில்லாததாக்கிவிட்டது. இது பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் பொருளாதார திட்டமான "அபேனோமிக்ஸ்" என்று கூறப்பட்டதன் மீது கேள்விக்குறியை எழுப்புகிறது. அவரது அரசாங்கம் அரசசெலவினங்களை அதிகரித்துள்ளது, பேங்க் ஆப் ஜப்பானோ அரசாங்க கடனை அதிகரித்து பொருளாதாரத்திற்குள் பணத்தைப் பாய்ச்சியுள்ளது—அதாவது அமெரிக்க பெடரல் ரிசர்வின் "பணத்தைப் புழக்கத்தில்விடும்" நடைமுறையின் ஜப்பானிய பதிப்பைச் செயல்படுத்தியது. அந்த கொள்கை பணவீக்க விகிதத்தை 1.3 சதவீதத்திற்கு உயர்த்திவிட்டிருந்த போதினும் —பணவீக்கத்தை 2 சதவீதமாக வைப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்தது— அது ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை ஊக்குவிக்க நடைமுறையில் ஒன்றுமே செய்திருக்கவில்லை. யென்னின் மதிப்பு வீழ்ச்சியின் முன்னால் ஏற்றுமதிகளோ அனுமானிக்கப்பட்ட அளவிற்கு வேகமாக விரிவடையவில்லை. ஊதிய உயர்வுகளோ பணவீக்கத்தின் வேகத்திற்கு இணையாக வைக்கப்படவில்லை என்பதால், நுகர்வோர் தேவை வீழ்ச்சியை எடுத்துக்காட்டின, நிறுவனங்களோ பணத்தைப் புதிய முதலீடுகளுக்குள் செலுத்துவதற்கு பதிலாக அதை அவை பதுக்கி வருகின்றன. பைனாசியல் டைம்ஸில் நேற்று வெளியான ஒரு தலையங்கத்தில், டிசம்பர் 2012இல் அறிமுகப்படுத்தப்பட்ட "அபேனோமிக்ஸ்" சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் "சிக்கலில் சிக்கி" இருப்பதாக குறிப்பிட்டது. “கட்டமைப்பு சீர்திருத்தங்களை" முன்னெடுக்க அழுத்தம் அளித்தன் மூலமாக —நிதியியல் ஊக்கப்பொதி மற்றும் பணவினியோக விரிவாக்கத்தைத் தொடர்ந்து— பொருளாதார திட்டத்தின் அவரது "மூன்றாவது அம்பை" தொடுக்க அந்த பத்திரிகை அபேவிற்கு அழைப்புவிடுத்தது. “திரு அபே அவரது அரசியல் பலத்தை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு தொழிலாளர் சந்தைக்குள் இருக்கும் இறுக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் கொள்கைகளுக்குப் பின்னால் செலுத்த வேண்டி இருப்பதாக" அந்த தலையங்கம் வலியுறுத்தியது. ஜப்பானை "உலகின் மிகவும் வியாபாரத்திற்கு நேசமான இடங்களில் ஒன்றாக" ஆக்குவதாக 2014இன் தொடக்கத்தில் அபே சூளுரைத்திருந்தார். அவர் பெருநிறுவன வரிவிகிதங்களில் வெட்டுக்கள், ஜப்பானிய நிறுவனங்களில் எஞ்சியிருந்த "ஆயுள்கால வேலைவாய்ப்புக்கு" மேற்கொண்டு குழிபறிப்பது மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் பெருநிறுவன நெறிமுறைகளுக்கு உட்படாத சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஸ்தாபிப்பதற்கும் வாக்குறுதி அளித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஊக்கப்பொதி முறைமைகள் என்றழைக்கப்பட்டவை ஜப்பானிய அரசாங்கத்திற்கு மிகச் சிறியளவே பலனைக் கொண்டு வந்தன அல்லது எந்தவொரு பலனையும் கொண்டு வரவில்லை, பைனான்சியல் டைம்ஸின் செய்தியின்படி, ஜப்பானிய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளின் மீதான அதன் திட்டமிட்ட தாக்குதலுக்குள் இறங்கியே ஆக வேண்டும். கடன்வழங்குவது மூலமாக தூண்டிவிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வருகிறது என்பதற்கு சமீபத்திய நிதியியல் புள்ளிவிபரங்கள் ஓர் அறிகுறி என்றால், சீன அரசாங்கத்தின் கொள்கையும் அதுவாகவே இருக்கும். |
|