சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: August 4-10

வரலாற்றில் இந்த வாரம்: ஆகஸ்ட் 4-10

4 August 2014

Use this version to printSend feedback

25 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்காவும் மெக்ஸிகோவும் கடன்-குறைப்பு திட்டத்திற்கு உடன்பட்டன


கார்லோஸ் சாலினாஸ் டு கோர்டாரி

1980 ஆகஸ்ட் 7 அன்று, அமெரிக்க மற்றும் மெக்சிகன் அதிகாரிகளுக்கு இடையிலான உயர் மட்ட கூட்டமொன்று மெக்சிகோ நகரில் நடந்தது. அபிவிருத்தியடைந்து வரும் உலகில், லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஏனைய கடன்கார நாடுகளும் தொடர்ச்சியாக தவணை தவறியதன் காரணமாக, பிரமாண்டமான இழப்புக்களை சந்திக்கும் ஆபத்தில் இருந்த, மிகவும் பலம்வாய்ந்த அமெரிக்க வங்கிகளின் நலன்களை பாதுகாப்பதன் பேரில் திட்டமிடப்பட்ட கடன்-குறைப்பு உடன்படிக்கையை இந்த கூட்டம் அடைந்தது.

1982ல், மெக்சிகோ சர்வதேச நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டிய தவணையை செலுத்தத் தவறியதால், அமெரிக்க-மெக்சிகோ உறவில் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது. இது ஜனாதிபதி மிகேய்ல் டு லா மட்ரிட் உடைய ஆறு ஆண்டு ஆட்சிக் காலம் பூராவும் தொடர்ந்தது. 1988ல் மெக்சிகோவின் ஜனாதிபதியாக கார்லோஸ் சாலினாஸ் டு கோர்டாரி தேர்வு செய்யப்பட்டமை ஒரு மாற்றத்தின் தொடக்கத்தை குறித்தது. 1988ல் ஹாவர்ட்டில் கல்வி கற்ற, பெரும் வர்த்தகர்கள் சார்பு பிஆர்ஐ வேட்பாளர் பதவியில் அமர்த்தப்பட்டமை, அமெரிக்க இழிவு தந்திர நடவடிக்கையின் பலத்தைக் கொண்டிருந்தது. எதிர்க் கட்சி வேட்பாளர் கௌத்தமொக் கார்டெனாஸ், சாலினாசின் வெற்றியை உறுதிப்படுத்த வாக்குச் சீட்டுக்களை நிரப்பியதாக தேர்தல் அலுவலர்கள் மீது குற்றஞ்சாட்டினார். இது, 2004ல் வெளியான டு லா மட்ரிட்டின் சுயசரிதையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரே அடுத்த ஆட்சியாளனாக சாலினாஸை பொறுக்கி எடுத்திருந்தார்.

மெக்சிகோவின் கடன்களை மறுசீரமைப்பதற்கு அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த ஜோர்ஜ் H. W. புஷ் நிர்வாகத்தின் அலுவலர்களுடன் சாலினாஸ் செயற்பட்டிருந்தார். இதனால் (அமெரிக்க திறைசேரியின் செயலாளர் நிக்கலஸ் பிரடி வகுத்த பிரடி பொன்ட்ஸ் என்றழைக்கப்படும்) அமெரிக்க திறைசேரியின் ஆதரவில் விநியோகிக்கப்பட்டு வந்த முறிகளுக்கான அதே நிதிய இடைக்கழிவில், மெக்சிகோ மற்றும் ஏனைய நாடுகளிடம் இருந்து தமது கிடைக்கப்பெறாத தவணைகளை வோல் ஸ்ரீட்டின் பெரிய வங்கிகள் பறிமாறிக்கொள்ள முடியும். விற்பனை செய்யக்கூடிய இந்த முறிகள், தமது ஐந்தொகையில் இருந்து திருப்பிக் கிடைக்கப்பெறாத கடன்களை அகற்றுவதற்கு வங்கிகளை அனுமதிக்கின்றது.

இதன் விளைவாக, அமெரிக்க திறைசேரியானது, 2008ல் வோல் ஸ்ரீட் பொறிவின் பின்னர் உபயோகிக்கப்படுவது போன்ற நிதிய செப்படி வித்தைகளைப் பயன்படுத்தி, மெக்சிகோ மற்றும் ஏனைய வறிய நாடுகளுக்கு உச்ச ஆபத்து நிறைந்த கடன்களைக் கொடுத்து பணத்தை இழந்த வங்கிகளை பிணை எடுத்தது.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்க காங்கிரஸ் டொன்கின் வளைகுடா தீர்மானத்தை நிறைவேற்றியது

1964 ஆகஸ்ட் 7, டொன்கின் வளைகுடாவில் இரு அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீதான ஒரு தாக்குதல் பற்றிய போலிக் கதைகளின் மூன்று நாட்களின் பின்னர், ஜோன்சன் நிர்வாகத்தினால் வரையப்பட்ட ஒரு தீர்மானத்தை செனட்டும் பிரதிநிதிகள் சபையும் நிறைவேற்றின. இதன் மூலம் தென் வியட்னாமில் வியட்னாம் புரட்சிக்கு எதிரான அமெரிக்கப் போரை துரிதப்படுத்தவும் மற்றும் அதை வடக்கு வியட்னாமுக்கும் விரிவுபடுத்தவும் ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டது.

டொன்கின் தீர்மானமானது ஜோன்சன் நிர்வாக்தில் இரட்டை பாத்திரம் வகித்தது. அது காங்கிரசால் ஒரு யுத்தப் பிரகடனம் செய்வதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சூழ்நிலையை உருவாக்கிய அதேவேளை, வட வியட்னாமுக்கு எதிரான ஆக்கிமிப்பை ஒரு சுய-பாதுகாப்பு நடவடிக்கையாக சித்தரிக்க அனுமதித்தது.

ஆக்கிரமிப்புக்கானஒரு அவசர பிரதிபலிப்பாக செனட் வெளியுறவு கமிட்டி தலைவர் ஜே. வில்லியம் புஃல்பிரைட் முன்வைத்த இந்த திட்டம், சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு செனட்டில் இருவர் மட்டுமே எதிர்த்தனர். தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க தலையீட்டுக்கான உத்தியோகபூர்வ பச்சைக் கொடியான டொன்கின் வளைகுடா தீர்மானம், பிற்காலத்தில் வியட்னாம் போரை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட மொத்தத்தில் எல்லா ஜனநயாகக் கட்சி தாரான்மைவாதிகளின் உத்வேகமான ஆதரவைப் பெற்றது. யூஜென் மெக்கார்த்தி, எட்வார்ட் கென்னடி, ஜோர்ஜ் மெக்கொவர்ன் மற்றும் பிராங்க் சேர்ச்சும் இவர்களில் அடங்குவர்.

வியட்னாமில் தனது தலையீட்டை முன்னெடுக்க அமெரிக்க ஆளும் வர்க்கம் எடுத்த முடிவு, நீண்டகாலத்துக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்ததோடு அதன் கைக்கூலியான தென் வியட்னாம் அரசாங்கம் ஏறத்தாழ பிளவடைந்ததால் ஊக்குவிக்கப்பட்டது. அமெரிக்கத் துருப்புக்களின் பிரமாண்டமான தலையீட்டுக்கான தயாரிப்பில், ஆயிரக்கணக்கான இராணுவஆலோசகர்கள்படையெடுத்திருந்த நிலையில், தென் வியட்னாம் ஏறத்தாழ அமெரிக்காவின் ஒரு காலனியாகவே மாறியிருந்தது.

அரிஸோனாவில் குடியரசுக் கட்சி செனட்டர் பெரி கோல்ட்வோட்டருடன் வரவிருந்த தேர்தலில் போட்டியிட்டதனால், ஜோன்சன் உடனடியாக துருப்புக்களை அனுப்புவதை தவிர்த்துக்கொண்டார். ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ஏஎஃப்எல்-சிஐஓ அதிகாரத்துவத்தினதும் ஆதரவைப் பெற்றிருந்த ஜோன்சன், சில வாரங்களுக்கு முன்னர் வியட்னாம் மீது அனுவாயுதத்தை பயன்படுத்துவதை பற்றி பகிரங்கமாக யோசனை தெரிவித்த கோல்வோட்டருக்கு எதிராக,சமாதானத்துக்கானவேட்பாளராக தன்னை வஞ்சத்தனமாக காட்டிக்கொண்டார்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: அமெரிக்கா போர் வளங்கள் சபையை ஸ்தாபித்தது


எட்வார்ட் ஸ்ரெட்டினியுஸ்

அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒட்டு மொத்த யுத்தத்துக்கு தயாரான நிலையில், 1939 ஆகஸ்ட் 9 அன்று போர் வளங்கள் சபையை ஸ்தாபிப்பது பற்றி இராணுவம் மற்றும் கடற்படை கட்டளைத் தளங்கள் அறிவித்தன; அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீது எதேச்சதிகார கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்ட தொழில்துறைமயமாக்கல் அணிதிரட்டல் திட்டத்தை (ஐஎம்பீ) அமுல்படுத்துவதை இணைக்கும் ஆறு உறுப்பினர்கள் கொண்ட சபை இதுவாகும்.

அமெரிக்க மூலதனத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளே இந்த சபையின் உறுப்பினர்களாக இருந்தனர். அமெரிக்க உறுக்கு கம்பனியின் தலைவரான எட்வார்ட் ஸ்ரெட்டினியுஸ் இந்தக் கமிட்டிக்கு தலைமை வகித்தார். பாகங்கள், தளபாடங்கள், வாகனங்கள், படகுகள் போன்ற மேலும் பல யுத்த கால உருக்கு உற்பத்திகளின் அதிகரிப்பால் அவரது கம்பனியின் களஞ்சியம் அளவின்றி வீங்கியிருக்கும்.

ஐஎம்பீயை முன்னுக்கு கொண்டுவந்து, இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்து துருப்புக்களை போருக்க அனுப்பி வைப்பதற்கு தீர்க்கமாகத் தேவைப்பட்ட சுமார் 10,000 வகையறாக்களை உடனடியாக உற்பத்தி செய்வதை நோக்கிய மூலப் பொருள் வழங்கள் மற்றும் நேரடி தொழிற்துறை உற்பத்தியை ஒழுங்கு செய்வதே போர் வளங்கள் சபையின் உடனடி பணியாகும்.

தொழிற்துறை உற்பத்தி அமைப்புடன் இரகசியமாக அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் எந்தவொரு வெளிப்பாட்டையும் மற்றும் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தையும் நசுக்குவதற்கு போர் வளங்கள் சபையின் மூலம் திட்டமிடப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டங்களை பிளவுபடுத்தவும், அரசாங்க அல்லது தனியார் துறையில் அனைத்து வேலைநிறுத்தங்களுக்கும் முடிவுகட்டவும், ஊடகங்களை கடுமையாக தணிக்கை செய்யவும், பெண்கள் மற்றும் சிறுவர்களை போர்க்கால உற்பத்திகளில் சேர்த்துக்கொள்ளவும் மற்றும் 18-45 வயதான ஆண்களை இராணுவத்தில் சேர்க்கவும் போர் வளங்கள் சபை ஜனநாயக-விரோத மற்றும் தொழிலாள வர்க்க-விரோத திட்டங்களை வகுத்தது.

அமெரிக்க சமுதாயத்தை இராணுவமயப்படுத்துவதற்குப் பின்னால் இருந்த பிரதான புள்ளிகளில் ஒருவரான போர் திணைக்களத்தின் ஜெனரல் ஹுக் ஜோன்சன், போர் வளங்கள் சபையின் திட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதை ஏற்றுக்கொண்டார். உண்மையில், செனட் ஆயுத விசாரணைக் கமிட்டியின் அறிக்கையானது போர் வளங்கள் சபை மற்றும் ஐஎம்பீயையும்உண்மையாக இயங்கும் சர்வாதிகாரத்தைவழங்கியதாக விவரித்துள்ளது.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: ஜேர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது


1914 ஆகஸ்ட் 7 இல், போர்க்களத்தில் ஜேர்மன் தரைப்படை

முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில், ஜேர்மனியில் இருந்து பாரிஸ் வரையான இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லை ஊடாக பிரெஞ்சுப் படைகள் நிலை கொண்டிருந்ததற்கு எதிரான, ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையின் பாகமாக, 1914 ஆகஸ்ட் 4 அன்று ஜேர்மனிய இராணுவப் படைகள் பெஸ்ஜியத்துக்குள் எல்லையைக் கடந்தன. ஷிலிபெஃன் திட்டத்தில் 1905 ஆரம்பத்திலேயே கட்டமைக்கப்பட்டவாறு ஜேர்மன் சூழ்ச்சியானது பெல்ஜியத்துக்குள் பிரமாண்டமானளவு ஜேர்மன் படைகள் நுழைவதற்கும், ஆங்கிலக் கால்வாய் ஊடாக முன்னகர்வதற்கும், மற்றும் பின்னர் இடது பக்கம் திரும்பி பிரெஞ்சு தலைநகர் வரை வடக்கு பிரான்ஸ் பூராவும் சிதைப்பதற்கும் அழைப்பு விடுத்தது.

பிராங்கோ-ஜேர்மன் எல்லை ஊடாக ஆயுதமயப்படுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு நிலைகள் மீது நேரடியான தாக்குதல்களை தவிர்த்த நிலையில், இந்த திட்டம் பல தந்திரோபயாய முன்னேற்றங்களைக் கொண்டிருந்தபோதிலும், உலக யுத்தத்துக்குள் பிரிட்டிஷ் தலையீட்டை கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக்கியமை அதன் மூலோபாய ஆபத்தாக இருந்தது. இதற்கான காரணம், (பெல்ஜியம், நெதர்லாந்து, லுக்ஸம்பேர்க் போன்ற) கீழ் நிலை நாடுகளில் வெளிச் சக்திகள், குறிப்பாக பிரான்சோ அல்லது ஜேர்மனியோ செல்வாக்குச் செலுத்துவதை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பொறுத்துக்கொண்டிருந்ததில்லை. பெல்ஜியத்தின் மீது ஜேர்மன் போரைத் தொடங்கிய அதே தினம், பிரிட்டன் ஜேர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தது.

ஜேர்மன், அதிசிறந்த ரயில் போக்குவரத்து முறையையும் அமைப்பையும் கொண்ட, குறிப்பிடத்தக்க எதிர்த்தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்கும் ஒரு வல்லமை கொண்ட முதலாவது வல்லரசாக இருந்த நிலையில், பெல்ஜியம் ஊடான ஜேர்மனின் நகர்வு, போரின் முதலாவது பிரதான இராணுவ நடவடிக்கையாக இருந்தது. ஜூலை 28, ஆஸ்திரியாவானது சேர்பியா மீது யுத்தப் பிரகடனம் செய்தது, ஆகஸ்ட் 1 ரஷ்யா மீது ஜேர்மனி போர்ப் பிரகடனம் செய்தது மற்றும் ஆகஸ்ட் 3 பிரான்சும் ஜேர்மனியும் ஒன்றுக்கொன்று போர்ப் பிரகடனம் செய்துகொண்டன. ஆனால், இந்த சக்திகளில் எதுவும் இன்னமும் ஒரு பிரதான இராணுவ முன்னேற்றத்தை உண்மையில் அடைந்திருக்கவில்லை.

பிரிட்டன், பிரான்ஸ் நேசநாடுகளின் போர் பிரச்சாரத்தினால் பெருமளவில் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், கணிசமானளவு கொடூரத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஜேர்மனியின் முன்னேற்றத்தின் எதிரில் பெல்ஜியம் படைகள் தகர்த்தெறியப்பட்டன. ஆகஸ்ட் 7, தென் கிழக்கு பெல்ஜியத்தின் மிகப் பிரமாண்டமான நகரனா லியேஜை ஜேர்மன் துருப்புக்கள் அடைந்தன. அதே சமயம் பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் பெல்ஜியத்துக்குள் நுழைந்ததோடு, கிட்டத்தட்ட முழு நாட்டையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஜேர்மன் படைகளிடமிருந்து ஆங்கிலக் கால்வாயில் உள்ள பிரெஞ்சு துறைமுகங்களை காத்துக்கொள்வதற்கு, பெல்ஜியத்தின் மேற்கு எல்லையில் இப்ரெஸ் நகரில் மையங்கொண்டிருந்த வடக்கு-தெற்கு நேர்கோடு முழுவதும் மோதல்கள் விரிவடைந்திருந்தன.