தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Oppose the Israeli assault on Gaza! காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்ப்போம்!
Statement of the Socialist Equality Party Use this version to print| Send feedback அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்றாவது தேசிய காங்கிரஸ் ஆகஸ்ட் 6 இல் இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. *** சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த மாநாடு, காசாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய போரை, நிராதரவான 1.8 மில்லியன் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஒரு யுத்த குற்றமாக கண்டிக்கிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2009இல் Operation Cast Lead நடவடிக்கையில் அந்த வறிய நிலப்பகுதி மீதான இஸ்ரேலின் முந்தைய கொலைகார தாக்குதலையும் இப்போது தாண்டிவிட்டது. வெறும் ஒரு மாதத்தில், பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் காயமடைந்திருக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். வீடுகளும் அடிப்படை உள்கட்டமைப்பும் வெறும் இடிபாடுகளாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் குடிநீர், மின்சாரம் மற்றும் உணவும் பறிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள எல்லா தொழிலாளர்களுக்கு காசா ஒரு எச்சரிக்கையாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் உடைவால் உருவாக்கப்பட்டிருக்கும் ஆழ்ந்த பதட்டங்கள், கொடூரமான இஸ்ரேலிய தாக்குதலில் பிரதிபலிக்கிறது. மேலும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரக்கூடிய எந்தவொரு தீவிர சவாலுக்கு எதிராகவும் இதேபோன்ற கொலைகார வன்முறையைப் பயன்படுத்த அவை தயாராக இருப்பதையே, இஸ்ரேல் நடவடிக்கைகளுக்கான வாஷிங்டன் மற்றும் ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவு வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாராளமான ஆதரவில்லாமல் காசா மீதான போரை இஸ்ரேலினால் நடத்த முடியாது. ஒபாமா நிர்வாகம் இஸ்ரேலிய இராணுவ எந்திரத்தை மேற்கொண்டும் படுகொலைகளைச் செய்வதற்கேற்ப மீள்ஆயுதமயப்படுத்தி வருகின்ற நிலையில், பாலஸ்தீனியர்களின் நிலைமையக் குறித்த ஒபாமா நிர்வாகத்திடமிருந்து வரும் வெற்று அனுதாப வார்த்தைகள், சில சமாந்தரங்களோடு இரட்டைவேஷ போலித்தனத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. காசா படுகொலையானது, அதன் கட்டுப்படுத்தவியலா உள்முரண்பாடுகளைக் கடந்து செல்வதற்கான ஒரு யூத-பாதுகாப்புவாத திட்டத்தின் வரலாற்றுரீதியிலான தோல்வியினது மற்றும், இத்திட்டம் எதன் பாகமாக இருக்கிறதோ, மத்திய கிழக்கின் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட அந்த அரச அமைப்புமுறையின் உடைவினது ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. காசாவில் மட்டும் யுத்தம் நடந்து வரவில்லை, மாறாக முதலாம் உலக யுத்தத்தில் சைக்ஸ்-பீக்கோட் இரகசிய உடன்படிக்கையால் (Sykes Picot agreement) செயற்கையாக வரையப்பட்ட எல்லைக்கோடுகள் எங்கிலும் மற்றும், சிரியாவையும் ஈராக்கையும் சுற்றி வளைத்தும், லெபனான் மற்றும் ஜோர்டானை உள்ளே இழுக்கவும் அதிகளவில் அச்சுறுத்தி வருகிறது. முடிவாக, இந்த அரபு அரசுகளின் எந்தவொன்றையும் விட இஸ்ரேல் நிலைத்திருக்கக்கூடியதல்ல என்பதையும் நிரூபிக்கும். மத்தியகிழக்கு எங்கிலுமான நெருக்கடியானது, குறிப்பாக, முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியால் அளப்பரியளவில் ஆழமடைந்துள்ள ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்திற்கும் மற்றும் முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான ஒர் கூர்மையான வெளிப்பாடாகும். பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதன் மூலமாக இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டு அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும், ஜூன் 1967இன் ஆறு நாள் யுத்தம் மற்றும் மேற்கு கரை, காசா, கிழக்கு ஜெருசலேம், கோலன் குன்றுகளின் ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்புக்கு 47 ஆண்டுகளுக்குப் பின்னரும், இஸ்ரேல் இன்னமும் யுத்தம் மற்றும் ஒடுக்குமுறையின் ஒரு முடிவில்லா சுழற்சியில் அகப்பட்டுள்ளது. ஒரு துன்பியலான எதிர்ப்பொருளில், அதன் ஜீவியத்திற்கான நியாயப்பாடாக ஹிட்லரின் குற்றங்களிலிருந்து யூதர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு புகலிடமாக கூறப்பட்ட ஓர் அரசு, காசாவில் கூட்டாக மக்களைத் தண்டிக்கும் முறைகளை பயன்படுத்தி வருகிறது, அந்த நடவடிக்கைகள் வார்சோவின் சேரி பிரதேசங்களில் நாஜிக்களின் நடவடிக்கைகளை ஒத்திருக்கும் அளவிற்கு வேறெதையும் ஒத்திருக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், காசாவில் நடக்கும் அப்பாவி மக்கள் மீதான அடாவடித்தனமான படுகொலையால் அதிர்ந்து போய், ஆத்திரமடைந்திருக்கிறார்கள். தற்போதைய தேசிய அரசு அமைப்புமுறையின் அடிப்படையில் முற்றிலுமாக தீர்க்க முடியாதவையாக உள்ள முரண்பாடுகளைத் தீர்க்க யூத-பாதுகாப்புவாத அரசினது பிற்போக்குத்தனமான முயற்சியிலிருந்து இந்த வன்முறையின் பைத்தியக்காரத்தனம் எழுகிறது. அந்த விடயத்தைப் பொறுத்த வரையில், “இரு-அரசு தீர்வு" என்றழைக்கப்பட்டதில் பார்க்கப்பட்ட ஒரு புதிய பாலஸ்தீனிய குட்டி-அரசை உருவாக்குவதன் மூலமாக கூட அவர்களால் அதை கடந்து வர முடியாது. இஸ்ரேல் மற்றும் அரபு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கு வெளியே இந்த இரத்தந்தோய்ந்த புதைக்குழியிலிருந்து வெளியே வருவதற்கு அங்கே வேறெந்த வழியும் இல்லை. வரலாற்றுரீதியில், ஜேர்மனியில் ஹிட்லரிச பாசிசவாதத்தின் வெற்றி மற்றும் நாஜி ஆட்சியின் அடுத்தடுத்த இனப்படுகொலை குற்றங்களோடு தொழிலாள வர்க்கம் அனுபவித்த பேரழிவுகரமான தோல்வியின் ஒரு விளைவைத் தொடர்ந்து யூத-பாதுகாப்புவாதத்தால் ஒரு பெருந்திரளான மக்களை வென்றெடுக்க முடிந்திருந்தது. இது, ஸ்ராலினிசத்தின் கரங்களில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் காட்டிக்கொடுப்புகளோடு சேர்ந்து, பாலஸ்தீனத்தில் ஒரு பிரிவினைவாத யூத அரசின் ஸ்தாபிப்பை யூத மக்களின் பாதுகாப்புக்கான ஒரே வழியாக காட்டுவதற்கு யூத-பாதுகாப்புவாதிகளுக்கு உதவி இருந்தது. அது எப்போதும் அவநம்பிக்கைவாதம் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு ஊட்டம் அளிக்கும் இயக்கமாக இருந்து வந்திருக்கிறது. நெத்தானியாஹூ ஆட்சியினது குற்றங்களுக்கு மக்களின் ஆதரவை திரட்ட அவ் ஆட்சியை அனுமதிக்கின்ற தற்போதைய இஸ்ரேலிய அரசியல் சூழல், சர்வதேச அளவிலும் அத்தோடு இஸ்ரேலுக்குள்ளேயே கூட ஏற்பட்ட அபிவிருத்திகளோடு பின்னிபிணைந்துள்ள ஒரு பரந்த அரசியல் நிலைநோக்கு பிறழ்ச்சியின் ஒரு வெளிப்பாடாகும். ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள போலி-இடது அடுக்குகளின் அதே போக்கை பின்தொடர்ந்து வரும், இஸ்ரேலிலுள்ள பெயரளவிலான "இடது", காசாவிற்கு எதிரான தாக்குதலுக்கு அவற்றின் வெளிப்படையான அல்லது மறைமுகமான ஆதரவை வழங்கி, யூத-பாதுகாப்புவாத அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருக்கும் ஏனையவைகளோடு சேர்ந்து வலதிற்குள் நகர்ந்துள்ளன. தற்போதைய சம்பவங்களில் உள்ள ஒரு முக்கிய காரணி, எகிப்திய புரட்சியின் தற்காலிக பிழற்வாகும். அது காசாவில் பாலஸ்தீனியர்களை மேற்கொண்டும் தனிமைப்படுத்த மட்டுமே சேவை செய்யவில்லை, மாறாக அது இஸ்ரேலில் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான சாத்தியக்கூறை முன்னிறுத்தி, இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் அதன் வாசற்படி வரைக்கும் வந்துவிட்ட ஒரு வெற்றிகரமான சமூக புரட்சியின் தாக்கத்தைப் பெறுவதிலிருந்தும் வாய்ப்புகளை வெட்டிவிடுகிறது. இருந்த போதினும், ஒவ்வொரு நாட்டையும் குணாம்சப்படுத்தும் அதே புறநிலை வர்க்க மோதல்களால் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கமும் சூழப்பட்டுள்ளது. யூத-பாதுகாப்புவாத அரசை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இராணுவ சூழ்ச்சிக் குழுக்கள், அரபு மக்களுக்கு எதிரான யுத்தம் மற்றும் ஒடுக்குமுறையை ஆழ்ந்த உள்நாட்டு பதட்டங்களை வெளிநோக்கி திருப்பிவிடுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. மெக்சிக்கோவில் இருப்பதை விடவும் உயர்ந்த வறுமை விகிதத்தைக் கொண்டிருக்கும் இஸ்ரேல், சமூகரீதியில் மிகவும் துருவமுனைப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது, அதேநேரத்தில் உலகில் மிக அதிகளவிலான தனிநபர் வருவாய் திரட்சி கொண்ட பில்லியனர்களைக் கொண்ட ஒரு நாடாகவும் இருக்கிறது. 2011இல், எகிப்தில் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதை அடுத்து, சமூக சமத்துவமின்மை மற்றும் அரசாங்க தனியார் திட்டங்களைக் கண்டித்து அந்நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் நூறு ஆயிரக் கணக்கான இஸ்ரேலியர்கள் பங்கெடுத்தனர். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் மற்றும் காசா மீதான தாக்குதலில் சேர்ந்துள்ள அதி தீவிர வலதுசாரி சக்திகளை ஒன்றுதிரட்டுவதும், இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தினது கொள்கைகள் மீதான அனைத்து எதிர்ப்புகளுக்கும் எதிராக திருப்பிவிடப்படும். இஸ்ரேலிய மக்களை, வெளிநாட்டவர்களுக்கு-விரோதமாகவும் மற்றும் அரபு மக்களுக்கு விரோதமாகவும் ஐக்கியப்பட்டவர்களாக சித்தரிக்க முயலும் யூத-பாதுகாப்புவாத மற்றும் அரபு முதலாளித்துவம் இரண்டினது, அத்தோடு போலி-இடது உட்கூறுகளினது முயற்சிகளை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே முன்னிறுத்தப்பட்டிருக்கின்ற மையக் கேள்வியாகும். இஸ்ரேலிய தொழிலாளர்களை விலக்கி வைப்பவர்கள், எங்கேனும் அத்தகையவொரு இயக்கம் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியக்கூறையும் நிராகரிக்கிறார்கள். பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அளப்பரிய பாதிப்பு, முதலாளித்துவ தேசியவாதத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட வரலாற்று காட்டிக்கொடுப்புகளோடு பின்னிப் பிணைந்துள்ளது. முந்தைய சகாப்தத்தில் பாலஸ்தீன விடுதலையின் பாதுகாவலர்களாக கூறிக் கொண்டு—பொய்யாக—வாதிட்டு வந்த அரபு அரசுகள், இன்றோ பகிரங்கமாக இஸ்ரேலின் குற்றங்களுக்கு உடந்தையாளர்களாக செயல்படுகின்றன. அவற்றில் பிரதானமானது எகிப்தில் உள்ளது. இராணுவ இரும்புமனிதர் ஜெனரல் அப்தெல்-பதாஹ் அல்-சிசியின் ஆட்சியானது, பெப்ரவரி 2011இல் வெடித்த புரட்சிகர போராட்டங்களை நசுக்குவதற்கான எகிப்திய முதலாளித்துவத்தின் நீண்டகால முயற்சியின் இறுதி விளைபொருளாகும். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் மஹ்மொத் அப்பாசின் பாலஸ்தீன ஆணையமும் இதேமாதிரியான பாத்திரத்தை வகித்துள்ளன. இரு-அரசு தீர்வு என்ற ஒரு மதிப்பிழந்த பதாகையின் கீழ் மற்றும் அதற்கு பிரதியுபகாரமாக உயர்மட்ட அதிகாரிகளின் ஒரு அடுக்கினது செல்வசெழிப்புக்காக, அவை குடியமர்வுகள், பந்தோபஸ்து செய்யப்பட்ட சாலைகள் மற்றும் பாதுகாப்பு சுவர்கள் என இவற்றால் பிளவுபட்ட மேற்கு கரையில் பொலிஸ்காரர்களின் வேலையை அவை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. காசாவிலும் அதேமாதிரியான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியுமென்ற நம்பிக்கையில், அவர்கள் நடப்பு போரிலும் இஸ்ரேலின் விருப்பத்திற்குரிய பங்காளிகளாக சேவை செய்திருக்கிறார்கள். அதேவேளையில் இரக்கமற்ற படுகொலைகள் மற்றும் தாக்குதல்களால் தாக்கப்பட்டிருக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்திடமோ, யூத-பாதுகாப்புவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அவற்றின் அரபு பங்காளிகளைத் தோற்கடிப்பதற்குரிய எந்தவொரு முன்னோக்கும் இல்லை. அதன் இஸ்லாமியவாத சித்தாந்தம் பாலஸ்தீன முதலாளித்துவத்தைச் சேர்ந்த ஒரு பிரிவின் நலன்களைப் பிரதிநிதிதுவம் செய்கிறது. பெரும்பாலான குட்டி முதலாளித்துவ போலி-இடதுகளால் ஆதரிக்கப்படும் புறக்கணிப்பு, மூலதன குறைப்பு மற்றும் தடைகள் (Boycott, Divestment and Sanctions - BDS) பிரச்சாரத்தை அரசியல்ரீதியாக திவாலானதொன்று என்றரீதியில் நாம் அதை நிராகரிக்கிறோம். இந்த இயக்கம், ஏன் இஸ்ரேலோடு நிறுத்திக் கொள்கிறது? காசா படுகொலைகளுக்கு பின்னால் மட்டுமல்லாமல், மாறாக உலகம் முழுவதிலுமான குற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் அமெரிக்காவை ஏன் எதிர்க்கவில்லை? இந்த இயக்கத்தின் நோக்கம், மீண்டும் இரு-அரசு தீர்வு என்பதாகும், அதாவது பாலஸ்தீனியர்களுக்கு ஒரு சிறைச்சாலையாக மட்டுமே சேவை செய்யக்கூடிய, நீடித்து நிற்க முடியாத ஒரு குட்டி-அரசை உருவாக்குவதாகும். பாலஸ்தீன போராட்டத்தின் தலைவிதியும், மற்றும் அதில் ஒட்டுமொத்தமாக பெருந்திரளான அரபு மக்களின் தலைவிதியும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கால் முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் எழுச்சியோடு பிணைந்திருந்த ஒடுக்கப்பட்ட நாடுகளின் அடிப்படை ஜனநாயக மற்றும் தேசிய கடமைகளை ஏகாதிபத்திய சகாப்தத்தில் நிறைவேற்றுவதென்பது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஐக்கியம் மூலமாக மட்டுமே எட்டப்பட முடியும் என்பதை அது ஸ்தாபித்துக் காட்டியது. காசாவில் நடக்கும் கொடூரமான சம்பவங்கள், உலகளவில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தின் பாகமாக, ஏகாதிபத்தியம், யூத-பாதுகாப்புவாதம் மற்றும் அரபு முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் மத்தியகிழக்கின் ஒரு சோசலிச கூட்டரசுக்கான போராட்டத்தில், அனைத்து தேசிய மற்றும் குறுங்குழுவாத தடைகளைக் கடந்து, ஒரேமாதிரியான அரபு மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் அதி-அவசரமான போராட்டத்தை முன்னிறுத்துகிறது. இந்த முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு மத்தியகிழக்கு எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியமைப்பது அவசியமாகும். காசாவிலிருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை உடனடியாக திரும்பப் பெறுவது, எல்லாவித குண்டுவீச்சுகள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நிறுத்துவது, மற்றும் கடந்த ஏழு ஆண்டுகளாக காசா மக்களை சிறைப்படுத்தி இருக்கும் மற்றும் பட்டினிக்கு கொண்டு வந்திருக்கும் இஸ்ரேலிய-எகிப்திய தடைகள் நீக்குவதை இந்த மாநாடு கோருகிறது. இது இஸ்ரேலிய அரசுக்கான அனைத்து அமெரிக்க உதவிகளையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து அமெரிக்க இராணுவப் படைகளையும் திரும்ப பெறுமாறும் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவியின் ஒரு பாரிய அவசரகால திட்டத்திற்கு கோரிக்கை விடுக்குமாறும் இந்த மாநாடு அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுக்கிறது. |
|
|