சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Kiev regime’s assault on east Ukraine blocks access to MH17 crash site

கிழக்கு உக்ரேன் மீதான கியேவ் ஆட்சியின் தாக்குதல் MH17 வெடித்த இடத்தை அணுக முடியாமல் தடுக்கிறது

By Chris Marsden
31 July 2014

Use this version to printSend feedback

கியேவில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவிலான தீவிர வலது ஆட்சியால் இலக்கில் வைக்கப்பட்ட கிழக்கு உக்ரேனிய நகரங்களில் நடந்துவரும் கடுமையான சண்டைக்கு இடையே, அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய அரசாங்கமும் அதன் ஆயுதமேந்திய சக்திகளும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 வெடித்த இடத்தை அணுக முடியாதபடிக்கு முடக்கிவிட்டன.

கிழக்கு உக்ரேனில் பல நகரங்கள் இராணுவ நடவடிக்கையில் தாக்கப்பட்டிருப்பதோடு, ஹோர்லிவ்கா மீது ஒரு பீரங்கி குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டு இருந்தது, அதில் குறைந்தபட்சம் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பீரங்கி குண்டுவீச்சில் டொனெட்ஸ்கில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள், லுஹான்ஸ்கிலும் மக்கள் காயமடைந்திருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

போயிங் 777 வெடித்த இடத்தின் 10 மைல்களுக்கு மேற்கே உள்ள ஷாக்டார்ஸ்க் நகருக்குள் உக்ரேனிய துருப்புகளும் டாங்கிகளும் நுழைந்தன, விமானம் வெடித்த இடத்திற்கு அருகே மத்திய தர நகரங்களான ஸ்னிஜ்னி மற்றும் டோரெஜ் நகரங்களிலும் சண்டை நடந்து வருவதாக செய்திகள் குறிப்பிட்டன.

டொனெட்ஸ்கிலிருந்து பாரியளவில் மக்கள் வெளியேறி வருவதைக் குறித்தும், அத்தோடு ஞாயிறன்று ரஷ்யாவின் தற்காலிக முகாம்களுக்கு கூடுதலாக 4,600 மக்கள் நகர்ந்து வருவதாகவும் அங்கே செய்திகள் இருந்தன, இது 11,000 குழந்தைகள் உட்பட அத்தகைய முகாம்களில் இருந்த அகதிகளின் மொத்த எண்ணிக்கையை 31,000மேல் உயர்த்தியதோடு, ரஷ்யாவில் மொத்த அகதிகளின் எண்ணிக்கையை 142,000க்கும் அதிகமாக கொண்டு சென்றது.

இராணுவ செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லெசென்கோ கூறுகையில், அப்பகுதியிலிருந்து ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களை உக்ரேனிய இராணுவம் "விரைவிலேயே" வெளியேற்றிவிடும் என்றாலும் கூட, (அவருடைய வாதத்தின்படி) கிளர்ச்சியாளர்களால் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் நீக்கப்படும் வரையில் புலனாய்வாளர்களால் அங்கே சென்று பார்வையிட முடியாது என்று தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும், அந்த தளத்தைச் சுற்றி என்ன தான் எந்தவொரு கண்ணிவெடிகளும் இருந்தாலும் அதற்கான ஆதாரம் அங்கே இல்லை.

ஆதாரங்களை அழிப்பதிலிருந்து ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளைத் தடுக்க, விமானம் வெடித்த இடத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டி இருப்பதாக உக்ரேனிய பாதுகாப்பு அதிகாரிகள் வாதிட்டதோடு, புலனாய்வாளர்கள் அங்கே செல்லாதபடிக்கு அந்த பகுதியைச் சுற்றி ஒரு இராணுவ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. பிரேதங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும், மாகாண தலைநகர் டொனெட்ஸ்க்கில் இருந்து, ஷாக்ட்யோர்ஸ்க்கின் வடகிழக்கே விமானம் வெடித்த இடத்திற்கு செல்லும் சாலை ஆயுதமேந்திய இராணுவ வாகனங்களால் மறிக்கப்பட்டது.

செவ்வாயன்று, டச்சு நீதித்துறை அமைச்சகம், மூன்றாவது நாளாக, டச்சு மற்றும் ஆஸ்திரேலிய வல்லுனர்கள் குழு கிழக்கு உக்ரேனில் விமானம் வெடித்த இடத்திற்கு செல்வதற்காக டொனெட்ஸ்க்கை விட்டு வெளியேற மாட்டார்கள். அங்கே விமானம் வெடித்த இடத்திற்கு செல்லும் சாலை எங்கிலும் தற்போது நிறைய சண்டைகள் நடந்து வருகின்றன," என்று குறை கூறியது.

அந்த நடவடிக்கையின் நோக்கம் விமானம் வெடித்த இடத்தை "சுதந்திரப்படுத்துவது" அல்ல என்பதை அடிக்கோடிடும் வகையில், திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், ஞாயிறன்று அதிகாலை [அந்த விமானம் வெடித்த இடத்தை] பார்வையிட்ட செய்தியாளர்கள், அங்கே கிளர்ச்சியாளர் யாரும் தென்படவில்லை என்று கூறினார்கள்," என்றது. அது "விமானம் வெடித்த இடத்திலிருந்து சுமார் 10 மைல் தூரத்தில் உள்ள ஷாக்ட்யோர்ஸ்க்கிற்கு வெளியே உள்ள ஒரு சோதனைச்சாவடியில் ஒரு பிரிவினைவாத தளபதி" கூறியதை மேற்கோளிட்டுக் காட்டியது, அவர் கூறுகையில், விமானம் வெடித்த இடத்திலிருந்து போராளிகள் குழுவை வெளியேற்றுவதற்கான முயற்சி, கியேவ் ஆதாரங்களை அழிக்க முயன்று வருகிறது என்பதை மறுக்க முடியாதபடிக்கு எடுத்துக்காட்டுகிறது," என்று கூறினார்.

MH17 வெடித்த இடம் மூடிமுத்திரை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், திங்களன்று ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட், "தாறுமாறான நிலைமைக்கு" ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைக் குற்றஞ்சாட்டினார். யதார்த்தத்தைத் தலைகீழாக மாற்றி, அவர் வலியுறுத்துகையில், அந்த இடம் இந்த கணத்தில் ரஷ்ய-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, மற்றும் அந்த விமானத்தைச் சுட்டுவீழ்த்துவதில் ஏறத்தாழ ரஷ்ய-ஆதரவிலான கிளர்ச்சியாளர்களின் குற்றத்தன்மை நிச்சயமாக இருக்கின்ற நிலையில் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே அந்த இடத்தை விட்டு வைப்பதென்பது ஒரு குற்றம் நடந்த இடத்தின் கட்டுப்பாட்டை குற்றவாளிகளிடமே ஒப்படைப்பது போன்றதாகும்," என்றார்.

அபோட்டின் வாய்ஜம்பத்திற்கு துல்லியமாக எதிர்விதத்தில், அதே நாளில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலியா பிஷாப் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் குறிப்பிடுகையில், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பு உக்ரேனிய தாக்குதலுக்கு முன்னதாகவே ரஷ்ய-சார்பிலான கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி சிதைவு பொருட்கள் கிடந்த அந்த இடத்தை அணுகுவதற்கு அனுமதி வாங்கி இருந்தது என்பதைக் குறிப்பிட்டார்.

அந்த விமான வெடிப்பின் மீது ஒரு புலனாய்வை மேற்கொள்ள, கியேவ் ஆட்சியின் இரந்தக்களரியான தாக்குதல் தான் உக்ரேனுக்குள் முக்கிய முட்டுக்கட்டையாக எழுந்துள்ளது, ரஷ்யாவை ஆதரிக்கும் போராளிகள் குழுக்களின் இயக்கம் அல்ல.

அந்த விமானம் வெடித்த இடத்திற்கு அருகாமையில் உக்ரேனிய படைகள் சண்டையிடுவதை நிறுத்துமாறு கோரி டச்சு பிரதம மந்திரி மார்க் ருஸ்டே பொறோஷென்கோவை அழைத்திருந்தார். ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், இன்று மீண்டும் புலனாய்வாளர்களால் ஒருவேளை அந்த இடத்தை நெருங்க முடியாமல் போகலாம் என்று தெரிகிறது என்ற உண்மையைக் குறித்த அவரது கவலைகளை ரூட்டே வெளிப்படுத்தினார். இது மிகவும் முக்கியமாகும் ஏனென்றால் பலியானவர்களை உள்நாட்டிற்கு எடுத்து வருவதற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விமானம் வெடித்த அந்த இடத்தை நாங்கள் சென்றடைய விரும்புகிறோம்," என்றார்.

அந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆகிறார்கள். ஏறக்குறைய அதிகபட்சமாக இன்னும் 71 உடல்கள் வரை மீட்கப்படாமல் இருக்கின்றன.

ரஷ்யா மீதான வழக்கமான கட்டாய விமர்சனங்களுக்கு இடையே, நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாயன்று, ரஷ்யா-ஆதரவிலான பிரிவினைவாதிகள் உண்மையில், வெறும் ஆற்றல் இழந்து போன அரை டஜன் துப்பாக்கிதாரிகள் மேற்கத்திய மலைஉச்சிகளில் உள்ள பதுங்கு குழிகளில் குத்த வைத்து அமைதியாய் உட்கார்ந்திருப்பதோடு" "அந்த இடத்தை விட்டு முற்றிலுமாக அல்ல, பகுதியாக தான் விரட்டப்பட்டிருக்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தியது.

"தனது புனைப்பெயரை மட்டுமே அளித்த ரோட்டோர பதுங்குகுழியில் இருந்த போராளிகளில் ஒருவரான டிரோஜன், தரையிறங்கும் பிரதான கியர், இறக்கைகள் மற்றும் போயிங் 777-200இன் உடல்பகுதியின் பின்புற கூம்பு ஆகியவை எந்த இடத்தில் வந்து மோதியதோ அந்த கிரபோவோ கிராமத்தை உக்ரேனிய படைகள் இப்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தார். அவருக்குப் பின்னால் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட சரக்கு கையாளும் கருவி ஒன்று கிடந்தது. 'அந்த விமானத்தோடு இப்போது எந்த சம்பந்தமும் இல்லை'. ஆனால் 'நாங்கள் தாக்கப்பட்டு வருகிறோம்' என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கூடுதலாக, அந்த கட்டுரை, பெட்ரோபாவ்லோவ்காவில் "அந்த விமானத்தின் வணிக-பிரிவில் (business-class) இருந்த மேலே சாமான்கள் வைக்கும் வைப்பறை ஏனைய உடைந்த பொருட்களோடு சேர்ந்து ஒரு மரத்தின் மீது கிடந்தது..." என்று குறிப்பிட்டது.

உள்ளூர்வாசியான மரியா நிகோலாயெவா, இந்த உடைந்த பொருட்களை எடுத்துச் செல்ல ஏன் யாருமே வருவதில்லை?" என்று வினவினார்.

கிழக்கு உக்ரேனில் நடக்கும் அரசியல்ரீதியிலான குற்ற நடவடிக்கையில், வாஷிங்டன், லண்டன், பேர்லின் மற்றும் பாரீஸ் ஆகியவற்றோடு சேர்ந்து கொண்டு, நிச்சயமாக, ஊடகங்களும் பெரிதும் மவுனமாக இருக்கின்றன.

ஜூலை 20இல் போராளிகளால் ஒப்படைக்கப்பட்டு ஜூலை 22இல் புலனாய்வு செய்வதற்காக இங்கிலாந்தில் உள்ள ஒரு சர்வதேச வல்லுனர்கள் குழுவிடம் அனுப்பப்பட்ட கருப்புப்பெட்டியிலிருந்து எந்தவித கண்டுபிடிப்புகளையும் வழங்குவதில் நிலவும் அசாதாரணமான தாமதமும் அதேபோல உண்மையாக இருக்கிறது. சேதத்தின் அளவைப் பொறுத்து, அவர்களால் 24 மணி நேரத்திற்குள் அந்த பெட்டிகளில் இருந்து தகவல்களை எடுக்க முடியுமென" இங்கிலாந்து விமான விபத்துக்கள் புலனாய்வு பிரிவின் புலனாய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக பிபிசி செய்தி அறிவித்திருந்தது.

அப்போதிருந்து அங்கே எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் இல்லைஅதை ஒப்படைப்பதற்கு முன்னதாக அந்த சூழ்நிலை அனைத்தையும் விடவும் மிகவும் மிகவும் அசாதாரணமானதாக செய்யப்பட்டு இருந்தது, முக்கிய தகவல்" அழிக்கப்பட்டு வருகிறது அல்லது ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது என்று ஊகித்து கூச்சலிட்ட தலைப்புகளோடு ஊடகங்களில் செய்திகள் நிரம்பி வழிந்தன.

அதற்கு மாறாக, திங்களன்று உக்ரேனிய அதிகாரிகள் அவர்களின் கருத்துக்களை அறிவிக்கையில், அந்த கருப்புபெட்டிகளில் இருந்த தரவுகள் ஏவுகணை உலோகத்துண்டுகளில் இருந்து "பாரிய வெடிமருந்துகள் பிரிந்து சென்றதைக்" காட்டுவதாக அறிவித்தனர். அந்த விமானத்திலிருந்த ஒலிப்பதிவு கருவிகளை ஆராய்ந்த வல்லுனர்களிடம் இருந்து தகவல்கள் வந்திருப்பதாக உக்ரேனிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லெசென்கோ கியேவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

லெசென்கோ அளித்த தகவல் புலனாய்வாளர்களிடமிருந்து வந்தவை அல்ல, துண்டுதுண்டாக தகவல்களை வெளியிடுவது புலனாய்வின் சார்பில் வெளியிடப்படுவதில்லை," அது ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் அதன் ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகளை வெளியிடாது என்று The Independent இதழுக்கு டச்சு பாதுகாப்பு ஆணையத்தின் (DSB) செய்தி தொடர்பாளர் சாரா வெர்னோஜ் தெரிவித்தார், இது வேறெந்த பத்திரிகையிலும் குறிப்பிடப்படவில்லை.