World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan workers and youth express support for online May Day Rally

இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணையவழி மே தின கூட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்

By our reporters
26 April 2014

Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவ கட்சி (சோசக) உறுப்பினர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எதிர்வரும் மே 4 அன்று ஏற்பாடு செய்துள்ள இணையவழி மேதின கூட்டத்துக்காக கொழும்பில் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. பிரச்சாரகர்கள், உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட - ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்ப்போம்! மே தினத்தின் புரட்சிகர பாரம்பரியங்களை மீட்டெடுப்போம்!- முன்னோக்கு கட்டுரையின் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதை WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரான டேவிட் நோர்த் எழுதியிருந்தார்.

சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைத்து, இராஜதந்திரமாக தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, வாஷிங்டனின் "ஆசியாவில் முன்னிலை" என்ற ஆக்கிரமிப்பு கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கை மேலும் மேலும் ஒரு ஆபத்தான பூவி-சார் மூலோபாய போட்டிக்குள் இழுபட்டு வருகின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சீனாவிற்கு எதிராக மேற்கொள்ளும் போர் தயாரிப்புகளின் வரிசையில், கொழும்பு மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு வழிமுறையாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களை பயன்படுத்தி, பெய்ஜிங்கில் இருந்து இலங்கை அரசாங்கத்தை தூர விலகிக்கொள்ளக் கோருகிறது.

பங்கஜ, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவராவார். அரசாங்கம் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு எதிரான மாணவர்களின் பிரச்சாரத்துக்கு பதிலடியாக, இந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் டஜன் கணக்கான மாணவர்களை இடைநிறுத்தியுள்ளது.

 பங்கஜ, அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரமைப்பை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்நோவ்டெனை பாதுகாக்க உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுத்த பிரச்சாரத்தில் முதலில் தானும் மேலும் பல மாணவர்களும் ஈர்க்கப்பட்டதாக சோசக பிரச்சாரகர்களிடம் தெரிவித்தார். "நீங்கள் உலக போர் பற்றி பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். து மக்கள் முன்னுள்ள மிக அவசரமான பிரச்சினை என்றாலும், ஊடகங்கள் தைப் பற்றி கிட்டத்தட்ட எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. உங்கள் வேலை மிகவும் முக்கியம். நாம் சர்வதேச மே தினத்துக்கு பதிவு செய்வதோடு மற்றவர்களையும் பதிவுசெய்ய வைக்க முயற்சி செய்வோம், " என்று அவர் கூறினார்.

"பல தத்துவாசிரியர்களின் படி, சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்கு பின்னர், மார்க்சிசம் காலாவதியாகிவிட்டது, எனவே நாம் புதிய மோஸ்தரிலான தத்துவங்ளுக்கு செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வது போல், இந்த தத்துவவியலாளர்கள் சமீபத்திய உலக அபிவிருத்திகளை விளக்குவது எப்படி? உலக போருக்கான உந்துதல் தெளிவுபடுத்தப்பட்டு போராட வேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்ட வரலாற்று அறிவியல் அனுபவங்களை கொண்டுவருவது அவசியம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்."

அதே பீடத்தை சேர்ந்த மற்றொரு மாணவரான பிரகீத், "நான் பங்கஜ உடன் உடன்படுகின்றேன். நாம் சர்வதேசியம் பற்றி பேசும் பலரை கண்டுள்ளோம், ஆனால் இங்கே உறுதியான மற்றும் நடைமுறையை காண்கின்றோம். உங்கள் கட்சி ஒரு உண்மையான சர்வதேச மே தின கூட்டத்தை நடத்தப் போகிறது. ஒரு மூன்றாம் உலக போர் அனைத்து மனிதர்கள் முன்னும் வாழ்வா சாவா பிரச்சினையை இன்று எழுப்பியுள்ளது என்று நான் உணர்கிறேன். சர்வதேச தொழிலாள வர்க்கமே இன்னொரு உலகப் போரை முன்கூட்டியே தடுக்கும் திறன்கொண்ட சக்தி என்று நீங்கள் சுட்டிக்காட்டுகின்றீர்கள். இது என்னை போன்ற இளைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கம் ஆகிறது."

சோச உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்திற்கும் சென்று தொழிலாளர்களின் பல்வேறு தட்டினருடன் பேசினார். ஒரு சிவில் பொறியியலாளரான வில்சன் கூறியதாவது: "நீங்கள் எழுப்பிய பிரச்சினை, அதாவது மற்றொரு உலகப் போரை நிறுத்த வேண்டும் என்பது, என்னை சிந்திக்கத் தூண்டியுள்ளது. நீங்கள் என்னை இந்த அவசரத்தை உணரச் செய்துள்ளீர்கள்... உங்கள் சிங்கள, தமிழ்  துண்டு பிரசுரங்களில் சில எனக்கும் கொடுங்கள். நான் என் வேலைத் தளத்தில் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்க வேண்டும். நான் இணையத்தில் உங்கள் சர்வதேச மே தின கூட்டத்திற்கு பதிவு செய்வேன்."

ஒரு துறைமுகத் தொழிலாளி கூறியதாவது: "அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஒரு மூன்றாம் உலகப் போருக்குத் தயார் செய்கின்றனர் என்று நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவந்தது. நீங்கள் நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில் அணு குண்டுகள் வீசப்பட்ட அழிவுகரமான தாக்கத்தை பற்றி என்னிடம் கூறினீர்கள். ஏற்கனவே அவர்கள் போரில் வெற்றி பெற்றிருந்தால் ஏன் அமெரிக்கர்கள் இந்த குண்டுகளை வீசவேண்டும்? அவர்கள் இன்னும் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் ஒரு புதிய போருக்குத் தயார் செய்தால், து போரில் பங்குபற்றாத நாடுகளில் உள்ள மக்களையும் மிகவும் பாதிக்கும். நம் குழந்தைகள் மற்றும் மனித கலாச்சாரத்துக்கு என்ன நடக்கும்? நான் இந்த கேள்விகளை பற்றி முதல் முறையாக சிந்திக்கின்றேன். நன்றி. நான் கொழும்பில் மே 1ம் திகதி உங்கள் கூட்டத்துக்கு வருவேன்."

மாலைதீவுகளில் இருந்து வந்த இரண்டு இளம் தொழிலாளர்களும் சோச பிரச்சார குழுவுடன் பேசினார். முகமது தாரிக் என்ற ஒரு தொழிலாளி, கலந்துரையாடலை கேட்டுக்கொண்டிருந்த பின்னர் கூறியதாவது: "ஒரு மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் பிரச்சாரத்தில் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரதான குற்றவாளி என நீங்கள் சுட்டிக் காட்டியது இன்னும் முக்கியமானது. நம்முடைய நாடு சிறியது, ஆனால் அவர்கள் தங்கள் போர் திட்டங்களுக்கு ஒரு இராணுவ தளமாக அதையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்... நீங்கள் உக்ரேன் மற்றும் சிரியா பற்றிக் குறிப்பிட்டீர்கள். அமெரிக்கா ஆயிரக்கணக்கான கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெரிய மற்றும் சிறிய தொலைதூர நாடுகளில் என்ன நியாயமான அக்கறை இருக்க முடியும்? அவர்கள் ஆத்திரமூட்டுகின்றனர். அவர்கள் உலகை ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர். அமெரிக்க போர் உந்துதலை எதிர்த்துப் போராடக் கூடிய ஒரு சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் உள்ளது என்று நீங்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. போர் உந்துதலுக்கு எதிரான ஒரு சர்வதேச மே தினத்தை உங்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. "