சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Kerry’s statement on Ukraine: A lying brief for war

உக்ரேன் பற்றிய கெர்ரியின் அறிக்கை: போருக்கான சுருக்கமான பொய்

By Alex Lantier 
26 April 2014

Use this version to printSend feedback

வியாழன் அன்று அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு எதிர்ப்புக்களுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவு கியேவ் ஆட்சி நடத்தும் வன்முறை மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையையும் நியாயப்படுத்த ஒரு சுருக்கமான பொய்யுரையை வழங்கினார். ரஷ்யாவுடனான மோதல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது என்று அறிவித்த அவர், ரஷ்யாதான் நெருக்கடிக்கு முற்றிலும் காரணம் என்றும் கியேவிற்கு ஒரு பொறுப்பும் இல்லை என்றும் கூறி உண்மையை தலைகீழாக வைத்தார்.

“சாதாரண உண்மை என்னவெனில், ஒரு நெருக்கடியில் ஒரு பக்கம்தான் மோதலைத் தவிர்க்க தேவையானதை செய்ய விரும்பம் கொண்டிருக்கையில் நீங்கள் ஒரு நெருக்கடியை தீர்க்க முடியாது” என்றார் கெர்ரி. கியேவ் ஆட்சியின் முதலில் தாக்கவேண்டும் என்ற முயற்சியை நிறுத்திய ஜெனீவாவில் நடைபெற்ற ஏப்ரல் 17 சமாதானப் பேச்சுக்களை மேற்கோளிட்டு, அவர் கூறினார்: ஒரு வாரத்திற்குப் பின்னரும், ஒரு பக்கம், ஒரு நாடுதான் சொல்லைக் காப்பாற்றியுள்ளது என்பது தெளிவு. கறுப்பு பகுதியில் சாம்பல் பகுதிகளை தோற்றுவிக்க விரும்பும் எவரும் அல்லது சிறிய எழுத்தில் நயமற்ற வழிகளைக் காண விரும்புவர்கள், நயமற்ற நடவடிக்கைகளை நியாயப்படுத்த, நாம் உண்மையைக் காண்போம்: ஜெனீவா உடன்பாடுகள் விளக்கங்களுக்கு உட்பட்டது அல்ல.”

அவர் தொடர்ந்தார்: “உலகம் சரியாகவே, பிரதம மந்திரி யாட்சென்யுக் மற்றும் உக்ரேன் அரசாங்கம் இரண்டும் நல்லெண்ணத்துடன் நடக்கின்றன என்றுதான் தீர்ப்பை அளித்துள்ளது. வருத்தம் தரும் வகையில் உலகம், ரஷ்யா அதன் நம்பிக்கையை திசைதிருப்புதல், ஏமாற்றுதல், உறுதியைக் கலைத்தல் இவற்றில் கொண்டுள்ளது எனத் தீர்மானித்துள்ளது.

திரு கெர்ரி அவர்களே, நாம் உண்மையில் உண்மையை பேசுவோம். இந்த வாதங்களில் கடுகளவு நம்பகத்தன்மை கூட இல்லை; அது உங்களிடத்திலும் இல்லை.

கெர்ரி, 2003ல் அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஒப்புதல் கொடுத்து வாக்களித்தபின், 2004 தேர்தல்களில் ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளை விமர்சிப்பவர் எனக் காட்டிக் கொண்டு, ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். ஒபாமாவின் கீழ் வெளிவிவகாரச் செயலர் பதவியை எடுத்துக் கொண்டபின், அவர் அமெரிக்கப் போர்களை நியாயப்படுத்த பொய்களைக் கூறும் முக்கிய நபராகிவிட்டார். சிரியப் போரை நியாயப்படுத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ம் தேதி தனது உரையில், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி கூத்தாவில் நச்சுவாயுத் தாக்குதலை நடத்தியதற்கு மறுக்க முடியாத ஆதாரத்தை வாஷிங்டன் கொண்டுள்ளது என்ற கூற்றைத் தளமாகக் கொண்டிருந்தது.

உளவுத்துறை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட செய்தியாளர் சேமுர் ஹெர்ஷ் கொடுத்துள்ள கருத்து, அந்த நேரத்தில் இருந்த பல அறிக்கைகளில் அமெரிக்கா சிரியா மீது தூண்டுதலை நடத்த, அமெரிக்க ஆதரவு கொண்ட எதிர்த்தரப்புக்கள்தான் கூத்தாவில் நச்சுவாயுத் தாக்குதல்களை நடத்தியது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஹெர்ஷ், சிரியாவில் உள்ள அதன் இஸ்லாமியவாத “கிளர்ச்சியாளர்கள் முன்னரே இரசாயன ஆயுதங்களை உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர் என்பதும் ஒபாமா நிர்வாகத்திற்கு தெரியும் என ஆவணப்படுத்தியுள்ளார்.

வியாழன் அன்று கெர்ரி, கீவீன் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி தீய ரஷ்ய சதியால் பாதிக்கப்பட்டுள்ளது என்னும் பெரிய பொய் தந்திர உத்தியின் தளத்தைக் கொண்டிருந்தது—பொய்கள் பெரிதாக இருந்தால், அவற்றை மறுப்பது மிக கடினம் என்னும் கணக்கீட்டில அவர் கூறினார்: “முதல் நாளில் இருந்து பிரதம மந்திரி யாட்சென்யுக் அவர் சொல்லைக் காப்பாற்றியுள்ளார். கட்டிடங்களை காலி செய்ய அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். உக்ரேனின் நிலப்பகுதி, மற்றும் அதன் மக்களை காக்கும் அடிப்படை உரிமை, நெறியாக இருந்தாலும்கூட உக்ரேனின் ஈஸ்டர் காலப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு துவக்கத்தை நிறுத்தி வைத்தால், விரிவாக்கத்தை குறைப்பதை விரும்பினார்.”

யாட்சென்யுக்கையும் அவருடைய மேற்கத்திய ஆதரவாளர்களையும் உக்ரேனின் இறையாண்மையை காப்பவர்கள் என்று காட்டுவது ஒரு வெறுப்பூட்டும் பொய்யாகும். யான்சென்யுக் ஆட்சி, ரஷ்ய விரோத உக்ரேனிய வலது பிரிவு போராளிகள் மற்றும் ஸ்வோபோடோ கட்சி தலைமை தாங்கி, வாஷிங்டன் மற்றும் பேர்லினால் வழிநடத்தப்பட்டு, நிதியளிக்கப்பட்டு 22 பெப்ருவரி உச்சக்கட்டத்தை அடைந்த ஆட்சி மாற்றம் ஏகாதிபத்திய ஆட்சி-மாற்றச் செயலை ஒட்டி இருத்தப்பட்டது.

இந்த ஆட்சி கவிழ்ப்பு கிழக்கு உக்ரேனை வாக்குகள் இன்றி செய்துவிட்டது; அதுதான் ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் அதிகாரத் தளம் மற்றும் உக்ரேனின் முக்கிய தொழில்துறைப் பகுதியும், ரஷ்ய இன மக்களின் தாயகமும் ஆகும். யாட்சென்யுக் ஆட்சியின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று ரஷ்யாவை ஒரு உத்தியோகபூர்வ மொழி என்னும் அந்தஸ்த்தில் இருந்து அகற்றுவேன் என்ற அச்சறுத்தல் ஆகும். ஆட்சிமாற்றத்திற்கு சில வாரங்களுக்குப் பின்னர், கியேவ் ஆட்சியின் பாதுகாப்பு அதிகாரிகளும், யாட்சென்யுக்கின் பாதர்லாந்து கட்சியின் தலைவருமான யூலியா திமோஷெங்கும் நடத்திய தொலைபேசி உரையாடலில் இருந்து கசிவு வெளியிடப்பட்டது; இதில் திமோஷெங்கோ உக்ரேனின் 8 மில்லியன் ரஷ்யர்களை “அணுவாயுதங்களால்” கொல்ல வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

பெருகும் மக்கள் எதிர்ப்பு மற்றும் கிழக்கில் ரஷ்ய சார்பு எதிர்ப்புக்கள் அதிகரித்தல் இவற்றிற்கு இடையே இம்மாதம் முன்னதாக யாட்சென்யுக் உக்ரேனிய இராணுவத்தை எதிர்ப்புக்களை குருதியல் மூழ்கடிக்கும்படி “பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலை” நடத்துமாறு உத்தரவிட்டார். இந்த வன்முறைத் தாக்குதல் சிதறிப்போய் விட்டது – காரணம், இராணுவத்தின் பெரும் பிரிவுகள் சுட மறுத்து எதிர்ப்பாளர்கள் பக்கம் போய்விட்டனர்.

ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னே இருந்த அரசியல் மோசடி அத்தகையதாகும்; இதில் யாட்சென்யுக்கும் அவருடைய மேற்கத்திய ஆதரவாளர்களும் தோற்றுக் கொண்டிருந்த வன்முறைத் தாக்குதலை ஆர்வத்துடன் “நிறுத்திவிடுவதாகவும்” ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்கள் கட்டிட ஆக்கிரமிப்பை செய்ய உதவுவதாகவும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மேற்கத்திய சக்திகளை பொறுத்தவரை ஜெனீவா பேச்சுக்கள், அடுத்த வன்முறைக்குத் தயாரிக்க தாமதப்படுத்தும் தந்திர உத்திதான். நேரடியாக இதுதான்  உக்ரேனிய பாசிச ஆயுதக்குழுக்களை நம்பி இந்த வாரம் தொடங்கியுள்ளது. வலது பிரிவுத் தலைவர டிமிட்ரோ யாரோஷும் வணிகத் தன்னக்குழுவின் ஐகோர் கோலோமோய்ஸ்கியும் கியேவில் உள்ள அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் இப்பொழுது அவர்களுடைய சொந்தப் படைப்பிரிவுகளை கிழக்கில் நிலைநிறுத்துகின்றனர்.

ஆனால் கெர்ரி, அனைத்து வன்முறைக்கும் ரஷ்யா மீது குற்றம் சாட்டினார். “ரஷ்யா விரிவாக்கம் செய்வதற்கு முன் அங்கு வன்முறை இல்லை”, “ஒரு பரந்த தாக்குதல் கிழக்கே உள்ள மக்களின் உரிமை மீது நடத்தப்படவில்லை” என்றார்.

அவர் தொடர்ந்தார்: “ஒரு நெறியான அரசியல் வழிவகையை நிறுத்துவதில் தோல்வியுற்ற, உக்ரேனின் தேர்தல்களை ஒத்திப் போட முடியாத நிலையில், வேறு எந்த வகையிலும் சாதிக்கப்பட முடியாததை ரஷ்யா நெறியற்ற போக்கான ஆயுத வன்முறையை தேர்ந்தெடுத்து நிச்சயமாக துப்பாக்கி முனையில் சாதிக்கலாம் எனக் கருதுகிறது.”

வெட்கம் கெட்ட பாசாங்குத்தனமும் பொய்களும்! கியேவ் ஆட்சிதான் நெறியற்ற, கட்டாயமாக சுமத்தப்பட்ட, வலதுசாரி ஆட்சியின் செயல்; மேலும் CIA  தலைவர் ஜோன் பிரென்னன் மற்றும் துணை ஜனாதிபதி ஜோசப் பைடென் கியேவிற்கு வந்து சென்றபின், துருப்புக்களையும் கவச வாகனங்களையும் நிலைப்படுத்தி கிழக்கே எதிர்ப்பாளர்களை சுட்டுத் தள்ளுவதற்கு நிறுத்தப்பட்டுள்ளன. (இரண்டு மாதங்களுக்கு முன்பு கெர்ரி, யானுகோவிச் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு, கியேவின் சுதந்திர சதுக்கத்தில் அரசாங்க எதிர்ப்பு எதிர்பாளர்களை அக்க பொலிஸுக்கு உத்திரவிட்டதுதான் காரணம் என்றார்.)

ஆனால், மேற்கத்திய அதிகாரிகள் இப்பொழுது அவர்களுடைய ஒற்றர்கள் உக்ரேன் முழுவதும் உள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த உண்மைகள் இருக்கையில், ரஷ்ய ஒற்றர்கள் கிழக்கு உக்ரேனில் ஈடுபட்டுள்ளனரா அல்லது இல்லையா என ஆராய்வது அனாவசியமானதாகும். மேற்கத்திய சக்திகளை பொறுத்தவரை, இனவழி ரஷ்யர்களை கியேவ் கைப்பாவை ஆட்சி கொடுக்கும் மிக உண்மையான ஆபத்துக்களில் இருந்து காப்பது குறித்த சீற்றத்திற்கு கிரெம்ளினுக்கு எந்த அடித்தளமும் இல்லை. மக்களை சர்வாதிகார ஆட்சியில் இருந்து  பாதுகாக்கிறோம் என்னும் போலிக் காரணத்தைக் காட்டி ஈராக், லிபியா உட்பட, அவர்களே எண்ணற்ற நாடுகள்மீது படையெடுத்துள்ளனர்.

அமெரிக்க மற்றும் ரஷ்ய பாத்திரங்கள் எதிர்மறையாக இருந்தால், வாஷிங்டனின் அருகில் ரஷ்ய சார்பு ஆட்சி மாற்றம் நிலைநிறுத்தப்பட்டால் வாஷிங்டன் தலையிடும் என அச்சுறுத்தும் என்பதில் கேள்விக்கே இடமில்லை. அண்டை கியூபாவில் 1959 புரட்சிக்குப்பின் அமெரிக்கா பலமுறை தனது இராணுவத்தை சோவியத் சார்பு ஆட்சிக்கு எதிராகத் திரட்டியது: 1961ல் பே ஆப் பிக்ஸ் (Bay of Pigs) க்கு ஆதரவு கொடுத்து, ஒரு ஆண்டிற்குப் பின் கியூபா ஏவுகணை நெருக்கடியை ஒட்டி போரையும் அச்சுறுத்தியது.

ரஷ்யா எப்படியோ ஒரு ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு கொடுத்து வாடிக்கையாளர் ஆட்சியை மெக்சிகோ நகரத்தில் நிறுவி, எதிர்ப்பாளர்களை நசுக்க இராணுவத்தை அமெரிக்க மெக்சிகோ எல்லைக்கு அனுப்பி அமெரிக்க மக்களை அணுவாயுதங்களால் அழிப்பேன் என்று அச்சுறுத்தினால், வாஷிங்டன் தலையிடும் என்பதில் சந்தேகம் ஏதேனும் உண்டா?

எப்படி பார்த்தாலும், ரஷ்ய ஒற்றர்கள் உக்ரேனில் உள்ளனர் என்னும் அவருடைய கூற்றை நியாயப்படுத்த, இன்னும் அதிக பொய்களைத்தவிர கெர்ரி எந்தச் சான்றையும் அளிக்கவில்லை. வியாழன் அன்று அவருடைய அறிக்கையில் “எவரும் ரஷ்யாவின் கரங்கள் இதில் உள்ளன என்பதைச் சந்தேகிக்க வேண்டாம்” என வலியுறுத்தினார். சில தனிப்பட்ட சிறப்புப்படை நபர்கள், ஷேஷேன்யா, ஜோர்ஜியா மற்றும் கிரிமியாவில் ரஷ்ய சார்பில் தீவிரமாக இருந்தவர்கள் ஸ்லோவ்யான்ஸ்க், டோடேன்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகியவற்றில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளனர். சிலர் அதைப்பற்றித் தங்கள் ரஷ்ய சமூக செய்தி ஊடகத் தளங்களில் பெருமை பேசிக் கொண்டுள்ளனர். நாம் ஆயுதங்களையும் அடையாளங்களையும் பிரிவினைவாதிகளிடம் பார்த்துள்ளோம், இவை ரஷ்யச் சிறப்புப் படையினர் அணிந்து, பயன்படுத்துவதுடன் ஒப்பிடப்படும்படிதான் உள்ளன.”

இது அமெரிக்க வெளிவிவகாரத்துறை மூலம் உருவாக்கப்பட்டு பின்னர் நியூ யோர்க் டைம்ஸால் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட பொய் புகைப்பட அறிக்கையைக் குறிக்கிறது. அது மிக விரைவில் ஒரு இட்டுக் கட்டப்பட்ட செயல் என அம்பலமாயிற்று, டைம்ஸ் கூட அதைப் பின்வாங்கி இரு கட்டுரைகள் எழுத வேண்டியதாயிற்று.

ஆயினும் கூட திமிர்த்தனமாக கெர்ரி இந்த மதிப்பற்ற குற்றச்சாட்டுக்களை மீண்டும் கூறி பின் ரஷ்ய செய்தி ஊடகத்தை “அரசாங்கத்தின் பிரச்சார ஒலிபெருக்கி” என்றும் கண்டித்தார். ஏதோ நியூ யோர்க் டைம்ஸ் அப்படி இல்லை என்பது போல்? உண்மையில் கெர்ரிதான் உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய பிரச்சாரக் கருவியான அமெரிக்க செய்தி ஊடகத்தின் ஆதரவை அனுபவிக்கிறார்.

தன்னுடைய உரையில் கெர்ரி, மேற்கு வங்கிமுறையை நடத்தும் நிதியக் கொள்ளையர், ரஷ்யாவின் நாணயமான ரூபிளுக்கு எதிராக ஊகம் செய்வர், மூலதன வெளியேற்றத்திற்கு ஏற்பாடு செய்வர், இதையொட்டி ரஷ்யாவின் நிதிய முறை, பொருளாதாரம் அழிக்கப்படும் என அச்சுறுத்தினார்.

அவர் கூறினார்: “2014ன் முதல் காலாண்டில் ஏறத்தாழ 70 பில்லியன் டாலர்கள் ரஷ்ய நிதிய முறையில் இருந்து வெளியேறிவிட்டது, இது கடந்த ஆண்டு முழுவதும் வெளியேறியதைவிட அதிகமாகும். ... இதற்கிடையில் ரஷ்ய மத்திய வங்கி ரூபிளைக் காக்க 20 பில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவழிக்க வேண்டியதாயிற்று. இது வெளி அதிர்ச்சிகளிடம் இருந்து காக்கும் ரஷ்யாவின் இருப்பு நிதியை அரித்துள்ளது. மேலும் வருந்தத்க்க வகையில் ரஷ்யா விரிவாக்கத்தை தொடர்ந்தால் சுதந்திர உலகத்தில் இருந்து எதை எதிர்கொள்ளநேரிடும் என்பதற்கு, நான் விளக்கியிருப்பது ஒரு சிறு குறிப்பு மட்டும்தான்.

பொய்கள் மற்றும் வாய்மொழி தூண்டுதல்களுடன் இணைந்து கிரெம்ளினை அரக்கத்தனமாகச் சித்தரித்து, மாஸ்கோவுடனான மோதல் தீர்க்க முடியாது என்னும் கெர்ரியின் கருத்து, அமெரிக்க அரசாங்கம் தான் தோற்றுவித்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண முற்படவில்லை என்று ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்ளப்பட வேண்டும். அது ஆக்கிரோஷமாக முன்னேறுகிறது. ஒரு தீவிர வலது தன்னலக்குழுக்கள் மற்றும் பாசிஸ்ட்டுக்களின் ஆட்சியை கியேவில் இருத்தியபின், மாஸ்கோவை உக்ரேனில் இராணுவத் தலையீட்டிற்கு தூண்டுகிறது, அது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.