தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் German news site Spiegel Online interviews Ukrainian fascist Yarosh ஜேர்மன் செய்தித்தளமான Spiegel Online உக்ரைன் பாசிசவாதி யாரோஷைப் பேட்டி காண்கிறது
By Peter
Schwarz Use this version to print| Send feedback ஏப்ரல் 22ம் திகதி Spiegel Online உக்ரேனிய பாசிச துணை இராணுவ அமைப்பான Right Sector இன் தலைவருடனான பேட்டி ஒன்றை வெளியிட்டது. இந்த பாசிசவாதிகள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பெப்ருவரி 22 அன்று அகற்றுவதில் ஒரு தீர்மானகரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது மட்டும் இல்லாமல், ஆர்செனி யாட்சென்யுக்கின் தலைமையில் உள்ள தற்போதைய இடைக்கால அரசாங்கத்திலும் முக்கியமான பங்கை வகிக்கின்றனர் என்பதை இப்பேட்டி உறுதிப்படுத்துகிறது. தன்னுடைய அமைப்பின் ஆயுதப்பிரிவு கலைக்கப்படவில்லை என்றும் சட்டப்பூர்வமாக்கப்படுகிறது என்றும் யாரோஷ் விளக்கினார். “எங்கள் படைப் பிரிவுகள் புதிய பிராந்திய பாதுகாப்பின் ஒரு பகுதியாகும். நாங்கள் உளவுத்துறைப் பிரிவுடனும் படைத் தளபதிகளுடனும் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளோம். உண்மையில் நாங்கள் பொலிஸை தவிர ஏனைய அனைவருடனும் நல்ல உறவுகளைத்தான் கொண்டிருக்கிறோம்.” என்று அவர் Spiegel Online இடம் தெரிவித்தார். சுதந்திர சதுக்கத்தில் (மைதான்) நடந்த எதிர்ப்புக்களில் சுய பாதுகாப்புப் படைகளை கட்டுப்பாட்டில் கொண்டிருந்த ஆண்ட்ரி பருபியுடனும் யாரோஷ் நெருக்கமாக பிணைப்பு கொண்டுள்ளார். பருபி ஸ்வோபோடாவின் முன்னோடி அமைப்பான உக்ரேனிய பாசிச தேசியக் கட்சியின் இணை நிறுவனர் ஆவார். அவர் இப்பொழுது பிரதம மந்திரி யாட்சென்யுக்கின் தந்தை நாட்டு கட்சியின் முக்கிய உறுப்பினராக,உக்ரேனின் பாதுகாப்புக் குழுவின் தலைவராக உள்ளார். யாரோஷ் முதலில் யாட்சென்யுக்கின் பிரதி தலைவராக இருப்பார் எனக் கருதப்பட்டது, ஆனால் அரசாங்கத்திற்கு எதிரான தந்திர உத்தியை செய்வதற்கான சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் அதை நிராகரித்து விட்டார். இந்த பேட்டியில், Right Sector தற்போதைய அரசாங்கத்தின் ஆளுமையையும் மற்றும் எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர் தெளிவாக்கியுள்ளார். “எமது அரசை முற்றாக புதுப்பித்தால் மட்டுமே எமது புரட்சி பூர்த்திசெய்யப்படும்” என அவர் கூறினார். அவருடைய இலக்குகள் தெளிவாக பாசிசத் தன்மை கொண்டவை. அவர் தேர்ந்தெடுக்கும் சொற்களும் நாசிகளுடையதை போன்றே உள்ளன. அந்த பயங்கர ஆட்சியை அவர் “தேசியப் புரட்சியின் அரசாங்கம்” என்று விவரித்தார். Spiegel Online இனால் அவருடைய நோக்கங்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு யாரோஷ் விடையிறுத்த்தார்: நான் ஒரு உக்ரேனிய தேசியவாதி. என் இலக்கு ஒரு வலிமையான நாடு”. தாராளவாதத்தை “ஒருவகை சர்வாதிபத்தியம்” என்று அவர் விவரித்தார். ஐரோப்பிய ஒன்றியம் “கிறிஸ்துவ எதிர்ப்பு நிலைநோக்கை” கொண்டுள்ளது என விமர்சித்தார். “மரபார்ந்த குடும்பமுறை அழிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம், ஓரினத் திருமணத்தையும் எதிர்க்கிறோம்.” ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கு எதிர்மாறாக மத்தியதர வகுப்புக்கள், வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆதரவு கொடுக்க வரிவெட்டுக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். Spiegel Online கூறுவதுபோல், அவருடைய இராணுவ நூலான “தேசமும் புரட்சியும்” என்பதில் யாரோஷ் இன்னும் வெளிப்படையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அதில் அவர் வெளிப்படையாக பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்த்து, இனவழி அடிப்படை கொண்ட தேசியவாதத்தினை பாதுகாக்கின்றார். “தேசியவாத சிந்தனைப்போக்கு எமது அரசின் முழுப் பகுதியிலும்” பரவ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிழக்கு உக்ரேன், “ரஷ்யர்கள் அற்றதாக்கப்பட்டு” சொந்த மக்கள் அரசில் முக்கிய பங்கை கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்பொழுதெல்லாம் யாரோஷ் இராணுவ சீருடையில் தோன்றுவதில்லை. அவர் எதிர்வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக உள்ளதுடன், இப்பொழுது நேர்த்தியான உடைகளையும் கழுத்துப்பட்டியும் அணிகிறார். Spiegel Online க்குக் கொடுத்த பேட்டியில் அவர் தன் யூதஎதிர்ப்பு நம்பிக்கைகளை குறைமதிப்பு செய்தார். அவ்வாறான நிலைப்பாடு கியேவில் புதிய ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் மேற்குசக்திகளுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். யாரோஷுடனான பேட்டியும் Spiegel Online இனால் அவருக்கு கொடுத்த அரசியல் அரங்கும், மேற்குசக்திகள் கியேவில் ஆட்சி கவிழ்ப்பை கட்டாயப்படுத்த நம்பயிருந்த சக்திகளின் முற்றிலும் பிற்போக்குத்தன தன்மையைக் காட்டுவதுடன், ரஷ்யாவுடன் ஒரு மோதலையும் தூண்டுகின்றது. பெப்ருவரி மாதம் Right Sector இன் ஆயுதமேந்திய பிரிவினர், பாதுகாப்புப் படைகளுடன் மோதலை விரிவாக்குவதில் முக்கிய பங்கைக் கொண்ருந்தனர். இது நூற்றுக்கணக்கான உயிர்கள் இழப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் வீழ்த்தப்படுவதற்கும் வகை செய்தது. இதற்கிடையில் Right Sector உடன் மேற்கின் ஒத்துழைப்பு சில காலத்திற்கு முன்னரே இருந்துள்ளது எற்பதை காட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. போலந்து நாட்டு வாராந்திர ஏடான Nie (“No”) ஒரு 80 வயது செய்தியாளரான ஜேர்சி அர்பன் உடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் போலந்தின் வெளியுறவு மந்திரி ராடோசிலாவ் சிகோர்ஸ்கி Right Sector இன் 86 உறுப்பினர்களை வரவழைத்து கடந்த செப்டம்பர் மாதம் வார்சோவிற்கு அருகே லெஜியனோவோவில் உள்ள பொலிஸ் பயிற்சி மையத்தில் ஒரு தீவிர, நான்கு வார பயிற்சி வகுப்பை கொடுத்தார் எனக் குறிப்பிடுகின்றது. இந்த பாசிசவாதிகள், கூட்டத்தை கட்டுப்படுத்துவது, நபர்களை அடையாளம் காண்பது, மோதல் தந்திரோபாயங்கள், நெருக்கடி காலத்தில் கையாளும் திறன்கள் பொலிஸ் பயன்படுத்தும் வாயுக்களுக்கு எதிரான பாதுகாப்பு, தடைகள் நிறுவுதல், குறிப்பாக சுடுதல், ஸ்னைப்பர் துப்பாக்கிகளை கையாள்வது உட்பட பயிற்சி கொடுக்கப்பட்டனர். உத்தியோகபூர்வமாக இப்பயிற்சி, “மாணவர் பரிமாற்றம்” என விளக்கப்பட்டது. இப்பயணம் 21 நவம்பரில் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததற்கு இரண்டு மாதங்கள் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வு மைதான் எதிர்ப்புக்களைத் தூண்டியது. Nie இல் வந்துள்ள தகவல் உண்மையானால், அது கியேவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு முன் நடந்த நிகழ்வுகள் ஒரு கவனத்துடன் திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டல் என்பதை காட்டுகின்றன. போலந்தின் வெளியுறவு மந்திரி சிகோர்ஸ்கி அமெரிக்காவில் ஆளும் வட்டங்களுடன் நெருக்கான பிணைப்புக்களைக் கொண்டுள்ளார். அவர் 2002ல் வாஷிங்டனில் ஆரம்பித்த American Enterprise Institute ல் உள்ள Atlantic Initiative இற்கான இயக்குனராக இருந்த வலதுசாரி அமெரிக்க எழுத்தாளர் ஆன் அப்பிள்பவுமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பெப்ருவரி 21ம் தேதி சிகோர்ஸ்கியும் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரும் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரோன் ஃபாபியுஸும் ஜனாதிபதி யானுகோவிச்சிற்கும் உக்ரேன் எதிர்த்தரப்பிற்கும் இடையேயான உடன்பாட்டைப் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இது ஒரு சில மணிநேரத்திற்கும் Right Sector மற்றும் பிற ஆயுதமேந்திய குழுக்களால் குழப்பப்பட்டது. சிகோர்ஸ்கி Right Sector உடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டிருந்தால் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது அவர் பாசிசவாதிகளுடன் இணைந்து ஆத்திரமூட்டலை திட்டமிட்டிருக்க வேண்டும். |
|
|