சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama affirms US backing for Japan in any conflict with China

ஒபாமா சீனாவுடனான எந்த மோதலுக்கும் அமெரிக்காவின் ஆதரவினை ஜப்பானுக்கு உறுதியளிக்கிறார்

By Peter Symonds 
24 April 2014

Use this version to printSend feedback

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இன்று ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயுடன் சம்பிரதாயபூர்வமான பேச்சுக்களுக்கு அரங்கம் அமைக்கும் வகையில், Yomuiri Shimbun பத்திரிகையிடம் ஆத்திரமூட்டும்வகையில் கிழக்கு சீனக் கடலில் இருக்கும் சென்காகு/டயோயு தீவுக்கூட்டங்கள் பற்றிய இராணுவமோதலில் அமெரிக்கா ஜப்பானை முற்றாக ஆதரிக்கும் என்று கூறினார். நேற்று ஒபாமா அவருடைய ஆசியப் பயணத்தின் முதல் பகுதியாக டோக்கியோவில் வந்து இறங்கினார். இப்பயணத்தில் தென்கொரியா, மலேசியா மற்றும பிலிப்பைன்ஸும் அடங்கும்.

ஜப்பானிய செய்தித்தாளுக்கு கொடுத்த எழுத்துமூல விடைகளில், ஒபாமா பின்வருமாறு அறிவித்தார்: அமெரிக்காவின் கொள்கை மிகத் தெளிவு சென்காகு தீவுகள் ஜப்பானால் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே இது அமெரிக்க ஜப்பானிய பரஸ்பர ஒத்துழைப்புக்கும் பாதுகாப்புக்குமான உடன்படிக்கையின் 5ம் விதியின் கீழ் வருகிறது. ஜப்பான் இத்தீவுகளை நிர்வகிப்பதை இல்லாதுசெய்ய எத்தகைய ஒருதலைப்பட்ச முயற்சிகள் வந்தாலும் அவற்றை நாங்கள் எதிர்ப்போம்.

முன்பும் இதேபோன்ற அறிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டாலும், சீனாவிற்கு எதிரான ஜப்பானின் எத்தகைய போரிலும் ஒபாமாவின் உறுதியான ஆதரவு என்பது தீவுகளைச் சுற்றியுள்ள பதட்டநிலைக்கு இன்னும் எரியூட்டுவதுடன், ஒரு நிலப்பகுதி மோதல் உள்ளது என்பதை அபே இணங்கமறுப்பதையும் கடினமாக்கும். அதே நேரத்தில் அவர் உக்ரேன் குறித்து ரஷ்யாவுடனான மோதலையும் தூண்டிவிட்டுள்ளார். ஜப்பானில் உள்ள வலதுசாரி அபே அரசாங்கம் சீனாவிற்கு எதிரான இன்னும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டை எடுக்க ஒபாமா பச்சைவிளக்கு காட்டியுள்ளார்.

Yomuiri Shimbun க்கு ஒபாமா கொடுத்துள்ள கருத்துக்கள் அவருடைய ஆசியாவில் முன்னிலை என்பது சீனாவிற்கு எதிராக பரந்தளவில் இலக்கு கொள்ளப்பட்டுள்ளது எனபதைத் தெளிவாக்குகிறது. சீனாவுடனான ஈடுபாட்டிற்கு உதட்டளவு மரியாதை கொடுத்தபின் அவர் நம் இரு நாடுகளும் மோதல் என்னும் அபாயத்தில் விழும் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பாக எச்சரிக்கிறார். டோக்கியோவிற்கு, சீனாவுடனான நம் ஈடுபாடு ஜப்பான் அல்லது மற்ற நட்பு நாடுகளுடைய இழப்பில் இல்லை, வரவும் வராது என்றார்.

சீன ஆட்சி ஒபாமாவின் கருத்துக்களை அப்பட்டமாக நிராகரித்ததில் வியப்பேதும் இல்லை. வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் குங் காங் நேற்று மோதலுக்குரிய தீவுகளுக்கு அமெரிக்க ஜப்பானிய உடன்பாட்டினை பயன்படுத்துவற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இது ஒரு பனிப்போர் கூட்டணி என்றும் சீனாவின் இறைமை மற்றும் நியாயபூர்வமான நலன்களை சேதப்படுத்தப் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார். வாஷிங்டன் மாஸ்கோவிற்கு ஆத்திரமூட்டும்வகையில் கியேவில் பாசிசத் தலைமையிலான ஆட்சிசதியை ஏற்படுத்திய சூழலில், பெய்ஜிங் கிழக்கு சீனக் கடல் அழுத்தங்கள் விரைவில் சீனாவிற்கு எதிரான போர் அச்சுறுத்தல்களுக்கு காரணமாகலாம் என்று வெளிப்படையாக பயப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் சீனா தென் சீனக் கடலில் ஒரு வான் பாதுகாப்பு அடையாளப் பிராந்தியமாக அறிவித்ததை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் அணுவாயுதத்திறன் கொண்ட B52 குண்டுவீசும் விமானங்களை அறிவிக்காமலே அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. இது ஒரு மோதலை அல்லது சீன விமானத்துடனான எதிர்ப்பு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

சீனாவை இராஜதந்திர, பொருளாதார, இராணுவரீதியாக கட்டுப்படுத்தும் நோக்கத்தைகொண்ட ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில் முன்னிலை கிழக்கு சீனக்கடலை ஆபத்தான பகுதியாக்கியுள்ளது. சென்காகு/டயோயு தீவுகள் குறித்த நீண்டகாலமாக செயலற்றிருந்த மோதல் வேண்டுமென்றே ஜப்பானியப் பிரதம மந்திரி யுகியோ ஹடோயாமா ஜூன் 2010ல் இராஜிநாமா செய்யப்பட்டபின் தூண்டிவிடப்பட்டது. ஓகினாவாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் குறித்த தீவிர கருத்து வேறுபாட்டை ஒட்டி அமெரிக்கா ஹடோயமாவை பதவியில் இருந்து இறங்குமாறு அழுத்தம் கொடுத்தது. சீனாவுடன் ஜப்பானிய பிணைப்புக்களை முன்னேற்றுவிக்கும் அவருடைய முயற்சிகள் ஒபாமாவின் மரபார்ந்த முன்னிலையின் குறுக்கே வந்தன.

செப்டம்பர் 2010இல் நாவோடோ கானின் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் மோதலுக்குட்பட்ட தீவுகளை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஒரு சீனப் படகின் தலைமை மாலுமியைக் கைது செய்ததின் மூலம் சீனாவுடன் பெரும் இராஜதந்திர மோதலை தூண்டியது. இந்த மோதலை முன்னாள் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் பாதுகாப்பு உடன்படிக்கையின் கீழ் ஜப்பானை ஆதரித்ததன் மூலம் எரியூட்டினார். ஜப்பானிய அரசாங்கம் சென்காகு/டயோயு தீவுகளை தேசியமயமாக்கிய பின் செப்டம்பர் 2012ல் அழுத்தங்கள் மீண்டும் வெடித்தன. இது பெருகிய முறையில் இப்பிராந்தியத்தில் சீன, ஜப்பானிய கப்பல்கள் மற்றும் விமானங்களின் ஆபத்தான நடவடிக்கைகளுக்கு இட்டுச்சென்றது.

ஒபாமாவின் முன்னிலை, அபேயும் அவருடைய தாராளவாத ஜனநாயக கட்சியும் (LDP) 2012 தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அதனை சாதகமாக பயன்படுத்துக்கொள்ள ஒரு அச்ச சூழ்நிலையை தோற்றுவித்ததுடன், ஜப்பானை மீண்டும் இராணுவமயமாக்கும் அவருடைய திட்டத்திற்கும் உதவியது. Yomuiri Shimbun  பேட்டியில், ஒபாமா வெளிப்படையாக அபே ஜப்பானிய பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்துதல், நம் இராணுவங்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துதல், கூட்டு சுய பாதுகாப்பு பயிற்சியின் தற்பொழுதுள்ள மட்டுப்படுத்தல்களை பரிசீலித்தல் ஆகியவற்றிற்கு பாராட்டினார். நாம் நம்முடைய இருநாடுகளின் நலன்களுக்காக ஜப்பானிய சுயபாதுகாப்பு படைகள் நம் கூட்டின் வடிவமைப்பிற்குள் இன்னும் அதிகம் செய்யும் என நம்புகிறோம்.

அமெரிக்க ஆக்கிரமிபுப் படைகளால் இயற்றப்பட்ட போருக்குப் பிந்தைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜப்பான் வெளிப்படையாக போரினை நாட்டின் தேசிய இறைமைக்கான உரிமை என்பதை நிராகரித்து, சர்வதேச மோதல்களை தீர்க்க படைகளை பயன்படுத்துவது அல்லது அச்சுறுத்துவது என்பதும் கைவிடப்படுகிறது என்றது. போருக்குப் பிந்தைய அரசாங்கங்கள் விதிகளுக்கு மறு விளக்கம் கொடுத்து சுய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படுவது கட்டமைக்க அனுமதித்தன. கூட்டுச் சுய பாதுகாப்பு என்ற கோஷத்தின்கீழ் அபே இப்பொழுது அமெரிக்காவுடன் ஆக்கிரமிப்புப் போர்களில் ஆசியாவில் ஜப்பான் ஈடுபடுவதற்கான தடைகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு மட்டும் இல்லாமல், உலகின் மற்ற பகுதிகளிலும் செயல்பட விரும்புகிறார். அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய, ஈராக் படையெடுப்புக்களில் ஜப்பான் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவுப் பங்கை கொண்டிருந்தது.

நிகழ்ச்சிநிரலில் இல்லாவிடினும், அபே அரசாங்கம் முன்கூட்டிய சுயபாதுகாப்பை அனுமதிக்க ஒரு அரசியலமைப்பு விளக்கத்தையும் தூண்டியுள்ளார். வேறுவிதமாகக் கூறினால், உண்மையாகவோ அல்லது தயாரிக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாக ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு விளக்கமளிக்க முனைகின்றார். தற்பொழுது அமெரிக்காவுடன் சீனாவிற்கு எதிரான முன்னிலையில் இணைந்தாலும், அபே ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, மூலோபாய நலன்கள் அமெரிக்காவினதுடன் மோதிக்கொண்டாலும் இல்லாவிடினும், அதை நடைமுறைப்படுத்த ஆயுதம்தரிக்க முனைகின்றார்.

ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையே உறவுகளில் விரிசல்கள் உள்ளன. வெளிப்படையாக குறைகூறவில்லை என்றாலும், அபே அரசாங்கம், அமெரிக்கா கடந்த ஆண்டு வான் பாதுகாப்பு அடையாளப் பிராந்தியம் குறித்து சீனாவுடன் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை கொள்ளவில்லை என அதிருப்தி கொண்டது. ஜப்பானைப்போல் இல்லாமல், அமெரிக்கா சீனாவிற்கு அத்தகைய பிராந்தியத்தை அறிவிக்க உரிமை உண்டு என ஒப்புக் கொண்டது. அமெரிக்க இராணுவ விமானங்கள் சீனாவின் புதிய விதிகளுக்கு உடன்படாது என்றாலும், வாஷிங்டன் அமெரிக்க பொதுப்போக்குவரத்து விமானங்களை அதற்கு உடன்படுமாறு கூறியது.

ஜப்பான் மற்றும் அமெரிக்கா இரண்டும் TPP எனப்படும் பசிபிக்கிற்கு இடையிலான கூட்டு குறித்த பேச்சுக்களிலும் தேக்கத்தை அடைந்துள்ளது. இது 12 நாடுகள் தொடர்பு கொண்டுள்ள ஒரு விரிவான உடன்படிக்கையாகும். இதன் மூலம் ஒபாமா நிர்வாகம் இப்பிராந்தியம் முழுவதும் வணிகம், முதலீட்டிற்கு விதிகளை நிர்ணயிக்க முற்படுகிறது. அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையான உடன்பாடு அவ்வாறான ஒரு உடன்படிக்கையை நிறுவ முக்கியம் ஆகும். ஆனால் இரு நாடுகளும் விவசாயம் மற்றும் வாகனங்களின் காப்பு வரி குறித்து உடன்பாடின்றி உள்ளன.

தனது வருகையின்போது புதிய உடன்பாட்டை அறிவிக்கலாம் என்று நம்பியிருந்த ஒபாமா, TPP யின் முக்கியத்துவத்தை, காப்புவரிகள், தடைகள், பிராந்திய வழக்கங்கள் வணிகத்தையும் முதலீட்டையும் மட்டுப்படுத்துவதை அகற்றும் என்று வலியுறுத்தியதுடன், இதனால் தற்பொழுது பொருளாதாரங்கள் முழுத்திறனை அடையமுடியவில்லை என்றும் கூறினார். அபே அரசாங்கத்திற்கு மிகவும் நன்கு தெரிந்த முறையில், ஒபாமா அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபங்களை அவற்றின் போட்டியாளர்கள் இழப்பில் அதிகப்படுத்தும் வழிவகையாகத்தான் இந்த வணிக, முதலீட்டுத் தடைகளை அகற்ற முனைகின்றார். ஜப்பானின் விவசாய காப்புவரிகளுக்கு முற்றுப்புள்ளி என்பது கிராமப் புறங்களில் பேரழிவுகரமான தாக்கங்களை ஏற்படுத்தும். அப்பகுதிகள்தான் ஆளும் LDPக்கு கணிசமான அரசியல் அடித்தளத்தை கொடுப்பவையாகும்.

ஒபாமாவின் வருகை ஐயத்திற்கு இடமின்றி சீனாவிற்கு எதிரான அமெரிக்க மற்றும் ஜப்பானிய கூட்டு இராணுவக் கட்டமைப்பில் கவனத்தை செலுத்தும். ஆனால் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள வேறுபட்ட பொருளாதார, மூலோபாய நலன்களின் அடித்தளத்தில் உள்ள வேறுபாடுகளையும் எடுத்துக்காட்டுகின்றன. இதனால் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஆசியாவின் மேலாதிக்கத்திற்கான இரத்தம்சிந்திய பசிபிக் போர் நடைபெற்றது. இந்த வேறுபாடுகள் எதிர்காலத்திலும் பிராந்தியத்தின் இரு பெரும் ஏகாதிபத்திய சக்திகளிடையே புதிய மோதல்களுக்கு தீயூட்டமுடியும்.