தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை SEP meeting in Colombo to campaign for International May Day online rally சர்வதேச இணையவழி மே தின கூட்டத்துக்கான பிரச்சாரத்துக்கு கொழும்பில் சோசக கூட்டம்By Socialist
Equality Party (Sri Lanka) Use this version to print| Send feedback இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், கொழும்பில் மே 1 அன்று பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. இந்தக் கூட்டம், ஞாயிறு மே 4 அன்று உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்துக்கான பிரச்சாரத்தின் பாகமாகும். பூகோள முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியினால் இந்த சர்வதேச இணையவழி மேதினக் கூட்டத்தின் முக்கியத்துவம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. முதலாம் உலக யுத்தம் வெடித்து 100 ஆண்டுகளின் பின்னரும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கி 75 ஆண்டுகளின் பின்னரும், மனித குலம் மீண்டும் உலக யுத்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. உக்ரேனில் பாசிச சக்திகளைப் பயன்படுத்திக்கொண்ட அமெரிக்காவும் ஜேர்மனியும், கியேவில் ஒரு வலதுசாரி ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளித்ததோடு ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கும் தூண்டுகின்றன. இதன் விளைவாக வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இடையில் ஒரு யுத்தம் வெடித்தால், அது ஆணுவாயுதங்களைக் கொண்ட சக்திகளுக்கு இடையிலான முதலாவது நேரடி யுத்தமாக இருப்பதோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு பிரமாண்டமான ஆபத்தை ஏற்படுத்தும். அதே சமயம், அமெரிக்கா அதன் ஆத்திரமூட்டும் “ஆசியாவில் முன்னிலையில்” கொள்கையின் பாகமாக, சீனாவை இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியில் சுற்றி வளைத்திருப்பதானது இந்து-பசுபிக் பிராந்தியம் பூராவும் பதட்டங்களை அதிகரித்துள்ளதோடு பரந்த யுத்தத்துக்கும் அச்சுறுத்துகின்றது. 2008 உலக நிதி நெருக்கடியின் பின்னர், உழைக்கும் மக்களுக்கு எதிராக கொடூரமான வணிக-சார்பு சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்திய ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவம், முன்னெப்போதும் இல்லாத மட்டத்துக்கு சமூக சமத்துவமின்மையை உருவாக்கிவிட்டுள்ளது. முதலாளித்துவ நெருக்கடி இலங்கையில் கூர்மையாக வெளிப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கு அழைப்பு விடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா பாசாங்குத் தனமாக ஒரு தீர்மானத்துக்கு அனுசரணையளித்தது. கொழும்பு அரசாங்கத்தை பெய்ஜிங்கில் இருந்து தூர விலகச் செய்ய நெருக்குவதே அதன் உண்மையான நோக்கமாகும். அமெரிக்காவின் பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்தை பேணும் ஆக்கிரமிப்பு முயற்சியின் பாகமாக, ஆசிய-பசுபிக்கில் ஒவ்வொரு நாடும் அதனால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சோசக, கொழும்பில் நடக்கவுள்ள கூட்டத்தை, சர்வதேச இணையவழி மேதி தினக் கூட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கப் பயன்படுத்தும். நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கூட்டத்துக்கு வருகை தருமாறும் இணையவழி கூட்டத்துக்கு பதிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். திகதியும் நேரமும்: மே1, வியாழன், மாலை 3.00 மணி இடம்: புதிய நகர மண்டபம், கிரீன் பாத், கொழும்பு 7. |
|
|