சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Obama’s tour to reinforce “pivot to Asia”

ஆசியாவில் முன்னிலையை வலுப்படுத்துவதற்கான ஒபாமாவின் பயணம்

By Peter Symonds 
22 April 2014

Use this version to printSend feedback

உக்ரேன் குறித்த ரஷ்யாவுடன் நடக்கும் மோதலுக்கு இடையே, ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆசியப் பயணத்தின் முதல் சுற்றாக நாளை ஜப்பானுக்கு செல்கின்றார். இப்பயணத்தில் அவர் தென் கொரியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்சுக்கும் செல்லவுள்ளார். ஆசியாவில் முன்னிலைஎன்னும் தன் கருத்தை முன்னேற்றுவதை அடையாளம் காட்டுவது ஒபாமாவின் முக்கிய நோக்கமாகும். அது, இப்பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முற்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம், வாஷிங்டனில் அரசாங்கம் மூடப்பட்டதை காரணங்காட்டி ஒபாமா ஆசியாவிற்கான தனது பயணத்தை இரத்து செய்துடன், ASEAN உச்சிமாநாடுகள் இரண்டில் அவர் கலந்து கொள்ளவுமில்லை. உக்ரேன் நெருக்கடி அதிகரித்துள்ள போதிலும் தற்பொழுதைய பயணத்தைத் தொடர்வது என்னும் அவர் முடிவு சீனாவிற்கு எதிராக அதன் ஆசிய இராஜதந்திர தாக்குதலிலும் மற்றும் இராணுவ பலப்படுத்தலிலும் உறுதியாக உள்ளது என்பதை அமெரிக்க நட்பு நாடுகளுக்கு உத்தரவாதமளிப்பதற்காகவாகும்.

ஒபாமாவின் பயணம், டிசம்பரில் துணை ஜனாதிபதி ஜோ பைடென், பெப்ருவரியில் வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரி, இம்மாதம் முன்னதாக பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் ஆகியோரின் பயணங்களை தொடர்கிறது. இவை அனைத்துமே சீனாவுடன் பிராந்திய அழுத்தங்களை  வேண்டுமென்றே தீவிரப்படுத்தின. பிடெனுடைய பயணம் கிழக்கு சீனக் கடலில் வான் பாதுகாப்பு அடையாள பிராந்தியத்தை (ADIZ) அறிவித்ததுடன் இணைந்திருந்தது. பென்டகன் அணுவாயுதத்திறன் கொண்ட B52 குண்டுவீசும் விமானங்களை இப்பகுதிக்குள் அறிவிக்காமல அனுப்பியது.

ஜப்பானுக்கானதும் பின்னர் சீனவுக்கானதுமான ஹெகலின் பயணத்தின்போதும் பாதுகாப்பு மந்திரி கியேவில் அமெரிக்கா ஒழுங்கமைத்த பாசிசத் தலைமையிலான ஆட்சிசதிக்கு பிரதிபலிப்பாக கிரிமியாவை ரஷ்யா இணைத்தற்கும் மற்றும் தென் சீன, கிழக்கு சீனக் கடல்களில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் உட்பட அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள சீனாவின் பிராந்திய மோதல்களுக்கும் ஒரு நேரடி சமாந்திரத்தை வரைந்தார். இந்த கடற்பகுதிப் மோதல்களில் அமெரிக்கா நடுநிலை என்று கூறிக் கொண்டாலும், பெய்ஜிங் வலிமையின் மூலம் நிலப்பகுதி நேர்மையை மீறுகிறதுஎன்று ஹெகல் குற்றம் சாட்டினார். சீனப்பாதுகாப்பு மந்திரிக்கு அருகே நின்று, ஹெகல், அமெரிக்கா அதன் ஜப்பான், பிலிப்பைன்ஸுடனான இராணுவக் கூட்டுக்களுக்கு முற்றிலும் உறுதியாக உள்ளது என்றார். வேறுவிதமாகக் கூறினால், போர் மூண்டால் சீனாவிற்கு எதிராகச் செயல்படும் என்றார்.

டோக்கியோவில் ஒபாமா ஒரு தசாப்தத்திற்கு முன் அமெரிக்க ஜனாதிபதியான கிளின்டனுக்குக்கு கொடுக்கப்பட்டது போன்ற முழு அரசாங்க வரவேற்பைப் பெறுவார். மூன்று நாட்களில் ஒபாமாவும் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயும் சந்தேகத்திற்கு இடமின்றி போருக்குப் பிந்தைய இரு நாடுகளின் பாதுகாப்பு உடன்பாட்டிற்கு முழு அர்ப்பணிப்பையும் அறிவிப்பர். 2009ல் இருந்து ஒபாமா நிர்வாகம் ஜப்பானை சீனாவுடன் சென்காகு/டயோயு தீவுகள் பற்றிய மோதலில் இன்னும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டைக் கொள்ள அழுத்தம் கொடுத்துள்ளதுடன், அதன் இராணுவத்தை கட்டியெழுப்புமாறும், அதன் ஆயுதப்படைகளின் செயற்பாட்டினை தடுக்கும் அரசியலமைப்பு, சட்டரீதியான தடைகளைத் தளர்த்துமாறும் கோரியுள்ளது.

இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் குறிப்பாக சீனா மீது அமெரிக்கா அதன் மேலாதிக்க நிலைப்பாட்டை உறுதிப்படுத்த முயல்கையில்,  ஜப்பானுடனான கூட்டில் அழுத்தங்கள் வெளிப்படத்தொடங்கியுள்ளன. இரு நாடுகளும் மோசமான பொருளாதார நெருக்கடிச் சகதியில் ஆழ்ந்துள்ளதுடன், போட்டி நாடுகளின் இழப்பில் அந்நெருக்கடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முற்படுகின்றன. இக்கட்டத்தில் வலதுசாரி அபே அரசாங்கம் அமெரிக்காவின் முன்னிலைக்கு ஆதரவாக உள்ளதை மீள உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இராணுவமயமாக்கவும், ஜப்பானிய மூலோபாய, பொருளாதார நலன்களை நடைமுறைப்படுத்த தனது சொந்த இராஜதந்திர தாக்குதலை தென்கிழக்கு ஆசியாவில்அதிகரிக்கின்றது. ஆனால் இவை எப்பொழுதும் அமெரிக்காவின் நிகழ்ச்சிநிரலுடன் இணைந்திருக்கவில்லை.

டிசம்பர் 2012ல் பதவி ஏற்றதில் இருந்து, அபே ஜப்பானிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை ஒரு தசாப்தத்தில் முதல் தடவையாக அதிகரித்து, அமெரிக்க மாதிரியிலான தேசிய பாதுகாப்புக் குழுவை நிறுவியுள்ளார். அத்துடன் நாட்டின் இராணுவ மூலோபாயத்தை சீன நிலப்பகுதிக்கு எதிரே உள்ள தெற்கு தீவுக் கூட்டத்தை ஒட்டி மறுநிலைநோக்கு செய்துள்ளதுடன், மேலும் ஜப்பானிய இராணுவத்தின் பிற்போக்குத்தன மரபுகளை புதுப்பித்துள்ளார். ஒரே ஆண்டில் அபே அனைத்து 10 ASEAN அங்கத்துவ நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளதுடன், குறிப்பாக பிலிப்பைன்ஸ் உட்பட அவற்றுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளார்.

நேற்று பைனான்சியல் டைம்ஸ் பின்வருமாறு கூறியது: அமெரிக்க-ஜப்பானிய உறவிலும், ஆசியப் பாதுகாப்பு மற்றும் அரை நூற்றாண்டுகாலமான இப்பிராந்தியத்தின் பொருளாதார ஏற்றத்திற்கும் இது ஒரு எழுச்சிமிக்க ஆண்டாகும். தேக்கமுற்றிருந்த வணிகப் பேச்சுக்களில் எரிச்சல் மூட்டுபவதிலிருந்து மூத்த ஜப்பானியத் தலைவர்கள் போர்க்கால வரலாறு குறித்துப் பேசும் வழக்கம் வரை இருந்தன.

அபேயுடனான பேச்சுவார்த்தைகளில் 12 நாட்டு பசிபிக் கடந்த கூட்டினை (12-nation Trans-Pacific Partnership -TPP) நிகழ்ச்சிநிரலில் முக்கியமாக ஒபாமா கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் ஆசியாவில் அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கத்தை உறுதி செய்யும் எனக் கருதும் TPP பற்றிய உடன்பாடு கடந்த ஆண்டு இறுதியில் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான விவசாய, கார்த் தொழிலில் பற்றிய வேறுபாடுகளை ஒட்டி சிக்கலுக்குள்ளானது.

முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ரொம் டோனிலோன் வாஷிங்டன் போஸ்ட்டில் எழுதிய கட்டுரையில் TPP யின் முக்கிய பங்கு இன்று பேச்சுக்களுக்கு இடையே மிக முக்கியமான வணிக உடன்பாடு ஆகும்.எனக் குறிக்கிறது. இது வணிகம், முதலீட்டில் இருந்து அறிவார்ந்த சொத்து உரிமைகள், பெருநிறுவன சட்டங்கள் வரை அமெரிக்க  கோரிக்கைகளை நேரடியாக செயல்படுத்தும். ஓர் உடன்பாடு ஆசியாவில் அமெரிக்க தலைமையை உறுதியாக்குவதுடன், ஐரோப்பாவுடனான ஒரு சுதந்திர வர்த்தக உடன்பாட்டுப் பேச்சுக்களுடன், அமெரிக்காவை பெரும் திட்டத்தின் மையத்தில் இருத்தும். இத்திட்டம் அடுத்த நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை நடத்தும் விதிகளை எழுதும்.என்று டோனிலோன் கூறினார்.

ஒபாமா வருகைக்கு முன்பு, திங்களன்று ஜப்பானில் போரில் இறந்தவர்களுக்கான யாசுக்குனி நினைவாலயத்திற்கு சமய வழிபாடு ஒன்றை அனுப்பியதின் மூலம் அபே மீண்டும் வரலாற்றுப் பிரச்சினைகளை பற்றிய பிராந்திய அழுத்தங்களை மோசமாக்கினார். இன்று மூத்த அமைச்சரவை மந்திரி யோஷிடகா ஷின்டோ விவாதத்தை இன்னும் சூடாக்கும் வகையில் அதே இகழ்வான நினைவுச் சின்னத்திற்கு 147 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவின் தலைவராக சென்றார். டிசம்பர் மாதம் அபே சீனா, தென் கொரியாவின் எதிர்ப்புக்களை தூண்டும் வகையில் தானே யாசுகுனி நினைவாலத்திற்குச் சென்றார். இது ஜப்பானிய இராணுவவாதத்தின் அடையாளம் ஆகும். அவருடைய வருகை செய்தி ஊடகத்தின் பெருகிய பிரச்சாரத்திற்கு பச்சை விளக்கைக் காட்டியது. ஜப்பானிய இராணுவம் நான்ஜிங் படுகொலை போன்ற கொடூரங்களை நடத்தியதை மூடிமறைப்பு செய்வதற்கு NHK பொது தொலைக் காட்சிக் குழுவிற்கு Naoki Hyakuta போன்ற நபர்கள் அபேயினால் நியமிக்கப்பட்டனர்.

அமெரிக்க வெளிவிவகாரத்துறை ஏபேயின் யாசுகுனி நினைவாலய பயணத்தை குறித்து தன் அதிருப்தியை எச்சரிக்கையுடன் வெளியிட்டது. ஓரளவிற்கு ஒபாமா நிர்வாகம் வட-கிழக்கு ஆசியாவில் இரு நட்புநாடுகளான ஜப்பான், தென் கொரியாவிற்கு இடையேயான உறவுகள் கிட்டத்தட்ட முறிந்து விட்டது குறித்து கவலைப்படுகிறது. கடந்த ஆண்டு பதவியில் இருத்தப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை  அபேயே சந்திக்க மறுத்து விட்டார். 1930களிலும் 1940 களிலும் இராணுவ விபசார விடுதிகளில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்ட தென் கொரியர்கள் உட்பட கட்டாய விபச்சாரப் பெண்களை நடத்திய முறையை நியாயப்படுத்துவதை ஜப்பான் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை மேற்கோளிட்டு அவ்வாறு செய்தார். கடந்த மாதம் ஒபாமா மத்தியஸ்தராக செயல்படும் கட்டாயத்திற்கு உட்பட்டு, ஹேக்கில் அணுவாயுத பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது அபேயையும் பார்க்கையும் முதல் தடவையாக ஒன்றாக கொண்டுவந்தார்.

ஆனால், இன்னும் அடிப்படையில் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள அழுத்தங்கள் இரு ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு இடையே விரிவடையும் இடைவெளியைப் பிரதிபலிக்கின்றன. பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது: இந்த உராய்வுகளுடைய அடித்தளத்தில் ஒரு கடந்த காலகட்டத்தின் எச்சம் போல் தோன்றுவது, ஒரு பங்காளித்தனத்திற்கு இரு நாடுகளும் எவ்வாறு அர்ப்பணித்துள்ளன என்ற  பிரச்சனைதான். அப்பொழுது பசிபிக் போருக்குப் பின் அமெரிக்கா சவாலுக்கு உட்படாத சக்தியாக இருந்தது.

அபே வாஷிங்டனுடன் முறித்துக் கொள்ளப் போவதில்லை என்றாலும், தன்னுடைய நிகழ்ச்சிநிரலை அவர் போருக்குப் பிந்தைய ஆட்சியில் இருந்து தப்புவதுஎன்று விவரித்துள்ளார். அதாவது போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பில் ஜப்பான் ஆசியாவில் அமெரிக்க இராணுவத்திற்காக நம்பியிருத்தல் மற்றும் ஒரு விசுவாசமாக அடிபணிந்த நாடு என்ற பங்கை வகித்ததில் இருந்து தப்புவதாகும். போருக்குப் பிந்தைய ஆட்சிஎன்பது ஒரு முழு அளவிலான போருக்குப் பின் உருவாக்கப்பட்டது. ஆசியா மீது, குறிப்பாக சீனா மீது எந்த நாடு ஆதிக்கம் செலுத்துவது என்ற அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையேயான போரில் மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர்.

டோக்கியோவில் ஒபாமாவின் நோக்கம் TPP உடைய பொருளாதார செயற்பட்டியலில் இருந்து ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக ஜப்பானை மீண்டும் ஆயுதமயமாக்குவது வரை ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை தொடர்வதை உறுதிப்படுத்துவதாகவே இருக்கும்.