சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No to war! Vote PSG!

போரை எதிர்ப்போம்! PSGக்கு வாக்களிப்போம்!

ஐரோப்பியத் தேர்தலுக்கான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை

18 April 2014

Use this version to printSend feedback

முதலாம் உலகப் போர் வெடித்து நூறு ஆண்டுகளுக்கும் இரண்டாம் உலகப் போர் தொடங்கி 75 ஆண்டுகளுக்கும் பின்னர் ஐரோப்பாவானது மீண்டுமொருமுறை பெருநாசத்தின் விளம்பில் நின்று கொண்டிருக்கிறது. ஜேர்மன் அரசாங்கமும் நேட்டோவில் இருக்கும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்கு திட்டமிட்டுத் தூண்டி வருகின்றன, இது ஒரு அணுப் பேரழிவுக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்துகிறது.

இந்த போர்வெறிக் கொள்கையை சோசலிச சமத்துவக் கட்சி (The Partei für Soziale Gleichheit - PSG) சமரசமின்றி எதிர்க்கிறது. போர் அச்சுறுத்தலை ஏற்றுக் கொள்ள தயாரில்லாத அனைவருக்கும் நாம் முறையீடு செய்கிறோம்: மே 25 அன்று நடைபெறுகின்ற ஐரோப்பிய தேர்தலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PSG) க்கு வாக்களியுங்கள்! போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துகின்ற போர்-எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதன் முதல் படியாக இதனை ஆக்குங்கள்! இரண்டு உலகப் போர்களிலும் யூதப் படுகொலையின் சொல்லமுடியாத குற்றங்களிலுமாய் பத்து மில்லியன் கணக்கான மக்கள் உயிர்துறந்து விட்டிருப்பதற்குப் பின்னர், மீண்டுமொருமுறை ஐரோப்பா ஏகாதிபத்தியப் போரின் ஒரு யுத்தக்களமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக் கூடாது

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை

ஜேர்மன் அரசாங்கமும் மற்றும் அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளும் மக்களின் முதுகின் பின்னால் ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திட்டமிட்டு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். இரண்டு உலகப் போர்களை கட்டவிழ்த்து விட்டு படுபயங்கரமான குற்றங்களை இழைத்த அதே ஆளும் வட்டங்களும், வங்கிகளும் மற்றும் பெருநிறுவனங்களும் மீண்டும் பெரும் வல்லதிகார அரசியலைப் பின்பற்றி வருவதோடு இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கும் திட்டமிடுகின்றன

இந்த அரசியல் பிரச்சாரத்தை ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌவ்க் தொடக்கி வைத்தார். சென்ற அக்டோபரில் ஜேர்மன் இணைப்பு தின அனுசரிப்பை ஒட்டிய அவரது உரையில் இது நடந்தது. ”அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களில்இருந்து ஒதுங்கி இருப்பதற்கு ஜேர்மனி ஒன்றும்ஒரு தீவு அல்ல என்று அவர் அறிவித்தார்.

அதன் பின் பிப்ரவரி தொடக்கத்தில் நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கௌவ்க்கும், வெளியுறவு அமைச்சரான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும்  மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லையனும் “இராணுவத்தின் ஒதுங்கியிருக்கும் கொள்கைமுடிவுக்கு வந்துவிட்டதை அறிவித்தனர். வருங்காலத்தில், சர்வதேச நெருக்கடிப் பிராந்தியங்களில் ஜேர்மனிமிகத் தீர்மானகரமாகவும் மற்றும் மிகக் கணிசமாகவும்தலையீடு செய்யும் என்றனர்.

அப்போது முதல், ஜேர்மனி ஒரு தயவுதாட்சண்யமற்ற வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வந்திருக்கிறது. ஹிட்லரின் அழித்தொழிக்கும் போர் நடைபெறவே இல்லை என்பதைப் போல, ஜேர்மன் ஏகாதிபத்தியமானது தனது பாரம்பரியமானகிழக்கை நோக்கிய முனைப்பைமீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது

பிப்ரவரியில் ஜேர்மனி, அமெரிக்காவுடன் கைகோர்த்து பாசிசக் கட்சிகள் மற்றும் ஆயுத குழுக்களின் நெருக்கமான ஒத்துழைப்புடன் உக்ரேனில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைத்து அங்கு வலது-சாரி, ரஷ்ய-விரோத ஆட்சி ஒன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது. இது ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகும். ரஷ்யாவின் எதிர்வினை முன்கணிக்கக் கூடியதாக இருந்ததால் முன்கூட்டியே அது கணக்கிலெடுக்கப்பட்டு விட்டது. உலகின் மிகச் சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணி நேரடியாக ரஷ்ய எல்லைக்கு முன்னேறுவதை ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புட்டினின் தேசியவாத ஆட்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஆட்சிக்கவிழ்ப்புக்கான பதிலிறுப்பில் கிரிமியாவை இணைத்துக் கொண்டது.

அதுமுதலாக, ஜேர்மன் அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் தங்களை மறுஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும் ரஷ்யாவை இராணுவரீதியாக சுற்றிவளைப்பதற்கும் உக்ரைனில் அவை தூண்டியிருந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேட்டோ, ரஷ்யாவிற்கு அருகாமையில் விமானங்களையும் மற்றும் கப்பல்களையும் நிறுத்தியிருக்கிறது; எல்லைக்கருகே இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது; அத்துடன் ஜோர்ஜியா, மால்டோவா மற்றும் உக்ரேனை கூட்டணி அங்கத்தவர்களாக ஏற்றுக் கொள்வதற்கும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கும் புதிய டாங்கிகள் மற்றும் ஆளில்லா போர் விமானங்களுக்காய் நிதி ஒதுக்குவதற்கும் ஜேர்மனியின் உயர் இராணுவத் தலைமைகள் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றன.

எந்த விமர்சனரீதியான குரல்களையும் அச்சுறுத்தும் நோக்கத்துடன், காதைச் செவிடாக்கும் பிரச்சார மூட்டத்தைக் கொண்டு ஊடகங்களும் இந்த இராணுவமயமாக்கல் பிரச்சாரத்தில் தோள்கொடுக்கின்றன. ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோயபல்ஸின் உத்திகளை நினைவூட்டத்தக்க பொய்களையும் புரட்டுகளையும் அவை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவை அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ எல்லாம் கியேவில் இருக்கும் பாசிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதை தணித்துக் கூறிவிட்டு, ரஷ்யாவைஆக்கிரமிப்புநாடாக காட்டுகின்றன. ரஷ்யாஉக்ரேனை கிழக்கில் இருந்து சுருட்டிக் கொள்ள(Süddeutsche Zeitung) முனைவதாக அவை கூறுகின்றன.

யதார்த்தத்தில் ஆசிரியர் குழு அலுவலகங்களில் இருந்து கிறுக்கித் தள்ளுபவர்கள் தான் உண்மையான போர் வெறியர்கள். “ரஷ்யா-வக்காலத்துவாதிகளுக்குஎதிராக கொந்தளிக்கும் Die Zeit இன் இணை ஆசிரியரான ஜோசப் ஜோஃப்பே, ரஷ்யாவின்ஜாரிசத்தை எப்போதைக்குமாய்நசுக்க கூடுதலாக டாங்கிகளும் படைவீரர்களும் வேண்டுமென்கிறார். உலகெங்கும் செவிமடுக்கப்பட வேண்டுமென்றால் ஜேர்மனிஒரு மின் அதிர்ச்சி வைத்திய எந்திரத்தைப் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்அத்துடன்மறுஆயுதபாணியாக்கிக் கொள்ளவும் வேண்டும்என்று பழமைவாத Die Welt கோருகிறது.

ஒரு அனைத்துக் கட்சி சதி

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீட்சியை எதிர்க்கின்ற ஒரே கட்சி PSG மட்டுமே. இடது கட்சி உள்ளிட்ட மற்ற அனைத்துக் கட்சிகளுமே, இராணுவவாத வல்லாதிக்க அரசியலை பரவலாக எதிர்க்கின்ற பரந்துபட்ட மக்களுக்கு எதிராகச் சதி செய்கின்றன.

சமூக ஜனநாயகக் கட்சியினர் (SPD) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினரின் (CDU/CSU) பெருங் கூட்டணி அரசாங்கமானது இராணுவவாதத்தையே தனது கொள்கைகளின் இருதயத்தானமாகக் கொண்டுள்ளது. SPDம் அதன் வெளியுறவுத் துறை அமைச்சரான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் இராணுவவாதம் மற்றும் போருக்கு ஆர்ப்பரித்து ஊக்குவிப்பவர்களின் பாத்திரத்தை ஏற்றிருக்கின்றனர்.

இக் கட்சி ரஷ்யாவுக்கு எதிராக இழிந்த போர்-வெறிக் கூச்சலைக் கொட்டுவதன் மூலம், முதலாம் உலகப் போருக்கு அது ஆதரவளித்ததன் 100வது ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது. ரஷ்யாஐரோப்பிய எல்லைகளில் டாங்கிகள் நகர்வதைக் காண விருப்பத்துடன் இருக்கிறது என்பது வெளிப்படைஎன்று இக்கட்சியின் தலைவரான சிக்மார் காப்ரியல் குற்றம் சாட்டியிருக்கிறார். கட்சியின் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரான ரைய்னர் அர்னோல்ட் ஏற்கனவே கிழக்கில் அடுத்த இராணுவப் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். “நேட்டோவிற்குள்ளாக டாங்கி வரிசைகளை கட்டுப்பாடற்றுக் குறைப்பதை மறுபரிசீலனை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்.

சமூகநல உதவிகளை வெட்டி விட்டு கூடுதல்நெகிழ்வுடனானதொழிலாளர் நெறிமுறைகளை திணித்த ஹார்ட்ஸ் சட்டங்களை ஏற்றுக் கொண்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், SPD, அதன் இரண்டு கால்களும் பெரும் பண முகாமில் தான் ஊன்றி நிற்கின்றன என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கட்சியின் தொனியை உருவாக்கிக் கொடுத்த உயர் ஊதியம் பெறுகின்ற அரசியல்வாதிகளும், உயர்நிலை குடிமைப் பணியாளர்களும், நடுத்தர வர்க்க வணிகர்களும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் சமூக சீர்திருத்தங்களின் மூலமாக தொழிலாளர்களை முதலாளித்துவத்துடன் நல்லிணக்கம் செய்து வைப்பதற்கு இனியும் முனைவதில்லை. அதற்குப் பதிலாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாட்சண்யமற்ற தாக்குதல்களின் மூலமாகவும் மற்றும் மூர்க்கமான வல்லாதிக்க அரசியலின் மூலமாகவும் அவர்கள் முதலாளித்துவத்தை பாதுகாக்கின்றனர்.

SPD இன் போர்வெறிக் கூச்சலை விஞ்சுவது பசுமைக் கட்சியினர் மட்டுமே. இந்தக் கட்சியின் அடித்தளமாக இருக்கக் கூடிய வசதியான உயர் நடுத்தர வர்க்க அடுக்கினர் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களை முழுமையாக ஆதரிக்கின்றனர். இந்த முன்னாள் சமாதானவாதிகள் 1998 இல் கூட்டரசாங்கத்தில் இணைந்தது முதலாகவே, ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் அத்துடன்மனித உரிமைகள்மற்றும்மனிதாபிமானவாதம்என்ற பேரில் தொடுக்கப்படுகின்ற போர்களுக்கும் ஆதரவாக முரசு கொட்டி வந்திருக்கின்றனர். பசுமைக் கட்சித் தலைவர்களும் கட்சியுடன் இணைந்த Heinrich Böll Foundation ம் கியேவில் நடந்த பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்புக்கு செயலூக்கத்துடன் ஆதரவளித்தனர். இப்போதுரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்குஎதிராக முடிவெடுக்காமல் இருப்பதாக அவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்

போர் ஆதரவுக் கட்சிகளில் மிகச் சீரழிந்ததாக இருப்பது இடது கட்சி தான். ஜேர்மன் இராணுவவாதம் உலக அரங்கிற்குத் திரும்புவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் நேரம் பார்த்து இடது கட்சி சரியாக தனது சமாதானவாத அங்கியை கீழே போடுகிறது. ஏப்ரலில் முதன்முறையாக இடது கட்சியின் நாடாளுமன்றவாதப் பிரதிநிதிகள் ஜேர்மன் இராணுவத்தை (Bundeswehr) வெளிநாடுகளில் நிறுத்துவதற்கு ஆதரவாய் வாக்களித்தனர். உக்ரேன் விடயத்திலும் கூட இடது கட்சியானது ஜேர்மன் அரசாங்கத்தின் மூர்க்கமான பாதையை ஆதரிக்கிறது. கட்சி நிர்வாகம் விடுத்த ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையானதுமோதல் பாதைக்கு ரஷ்யாவை பொறுப்பாக்கியதோடு கிரிமியாவில்சர்வதேச சட்டத்தை மீறியதற்காகரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டனம் செய்கிறது.

இடது கட்சிக்குள்ளாக இயங்கி வருகின்ற மார்க்ஸ்21 மற்றும் சோசலிச மாற்று (SAV) போன்ற போலி-இடது போக்குகள் எல்லாம், மைதான் சதுக்கத்தில் நடந்த பாசிசக் கலகங்களைஜனநாயக வெகுஜன எழுச்சிகளாகப் போற்றுவதன் மூலமாக இந்தப் பாதையை ஆதரிக்கின்றன.

இடது கட்சி தனது சமாதானவாத அங்கியை கழற்றி விட்டது என்பது தற்செயலானதொன்றும் அல்லை. அது எப்போதும் முதலாளித்துவத்தை பாதுகாத்து வந்திருக்கிறது. தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது அது இடது வார்த்தைஜாலங்களை உதிர்த்தாலும், நடைமுறையில் அது மிகவும் வலது-சாரி அரசியலையே ஆதரிக்கிறது. வர்க்கப் போராட்டம் தீவிரமடைகின்ற நிலையில், அது பகிரங்கமாக ஆளும் வர்க்கத்தின் பக்கத்திற்குச் செல்கிறது

இடது கட்சியின் தேய்வுறச் செய்கின்ற மற்றும் முடக்கிப் போடுகின்ற செல்வாக்கிற்கு எதிராக PSG சளைக்காமல் போராடி வருகிறது. உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதும், இராணுவவாதம் மற்றும் போரை நிராகரிப்பதை அவற்றின் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றுசேர்க்கின்றதுமான ஒரு கட்சியை நாங்கள் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவமும் போரும்

1914 மற்றும் 1939 இல் போல, இப்போதும் உலக முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியே இராணுவவாதத்தின் மீளெழுச்சிக்கான காரணமாக இருக்கிறது. கால் நூற்றாண்டுக்கு முன்பாக, கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகள் உருக்குலைந்தபோது, அமைதி மற்றும் வளமைக்கான ஒரு புதிய சகாப்தத்திற்கு முதலாளித்துவ பிரச்சாரங்கள் கட்டியம் கூறின. ஆனால் பின் தொடர்ந்து வந்ததோ பொருளாதார வீழ்ச்சி, நலன்புரி உதவி வெட்டுகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர் ஆகியவை தான்.

முதலாளித்துவம் தனது அத்தனை மனத்தயக்கங்களையும் விட்டுவிட்டு மீண்டும் தன்னை முழுமையான மிருகத்தனத்துடன் வெளிக்காட்டியது. ஒரு மிகச்சிறு எண்ணிக்கையினர் வரம்பற்ற செல்வத்தைக் குவிக்கின்ற அதேவேளையில், பெரும்பான்மையான மக்களோ சரிந்து செல்லும் ஊதியங்களுக்கும், வேலைவாய்ப்பற்ற நிலைக்கும் மற்றும் வறுமைக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். எங்கெங்கிலும் சமூக முரண்பாடுகள் முற்றிச் செல்லும் நிலைக்கு ஆளும் வர்க்கமானது போலிஸ் அரசின் வழிமுறைகளைக் கொண்டும் இராணுவவாதத்தைக் கொண்டும் பதிலிறுக்கிறது.

அமெரிக்கா தனது ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை நாசப்படுத்தியது. இப்போது ஜேர்மன் ஏகாதிபத்தியமானது நாஜி ஆட்சியின் குற்றங்களைத் தொடர்ந்து அதன் மீது திணிக்கப்பட்டிருந்த வரம்புகளை உதறித் தள்ளவும் உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் முன்னிலைக்கு நகரவும் முடிவு செய்திருக்கிறது.

அது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவை பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் ஐக்கியப்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன. 2008 நிதி நெருக்கடிக்கு பதிலிறுப்பாக புரூசேல்ஸும் பேர்லினும் முன்னெடுத்த மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முற்றச் செய்திருப்பதோடு சமூக உறவுகளை முறிவுப் புள்ளிக்கு கொண்டுவருமளவு மோசமடையச் செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளாக, உத்தியோகபூர்வமாக 26 மில்லியனுக்கும் அதிகமானோர், அதாவது 11 சதவீதம் பேர் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். பல பிராந்தியங்களில், குறிப்பாக 10 வருடங்களுக்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றால் உத்தரவிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளிலும், மிகவும் மோசமான வறுமை நிலவுகிறது. செழுமை நிலவுவதாக சொல்லப்படுகின்ற ஜேர்மனியிலும் கூட, மூன்றில் ஒரு தொழிலாளி மிக ஆபத்தான நிலைமைகளின் கீழ் வேலை செய்யும் நிலை உள்ளது என்பதுடன் 6 மில்லியன் மக்கள் நலன்புரி அரச உதவிகளை நம்பி வாழும் நிலை உள்ளது.

இராணுவவாதத்திற்கு உயிரூட்டுவது தான் இந்த நெருக்கடிக்கு ஜேர்மன் அரசாங்கம் கொடுத்திருக்கக் கூடிய பதிலிறுப்பாகும். சந்தைகள், கச்சாப் பொருட்கள் மற்றும் மலிவு உழைப்புக்கான பெரு நிறுவனங்களின் வேட்கையை தணிப்பது; ஐரோப்பா மற்றும் ஜேர்மனிக்கு உள்ளே சமூகப் பதட்டங்களை திசைதிருப்பி விடுவது; அத்துடன் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிணைப்பது ஆகியவையே இதன் நோக்கமாக உள்ளது. முன்னதாக ஐரோப்பிய ஒன்றியம் மூலதனம் மற்றும் பொருட்களின் தடையில்லாத பாய்வு மற்றும் பொதுவான நாணயமதிப்பு போன்ற பொருளாதார விடயங்களையே பிரதான அடிப்படையாகக் கொண்டிருந்தது. வருங்காலத்தில் அதன் உட்புற ஒன்றிணைவானது ஒரு பொதுவான வெளிப்புற எதிரிக்கு எதிரான போராட்டம் என்பதை அடிப்படையாகக் கொள்ளவிருக்கிறது.  

இராணுவவாதத்திற்கான விலை

இராணுவவாதத்திற்கான செலவுகளை தொழிலாள வர்க்கமே செலுத்த வேண்டியதாயிருக்கும். இராணுவ வலிமையை மறுகட்டமைப்பதற்கான நிதி, சமூகச் செலவினங்கள் மேலதிகமாக வெட்டப்படுவதன் மூலமாக ஏற்பாடாகவிருக்கிறது. இளம் தலைமுறையினர் போரின் பீரங்கிகளுக்கான இரைகளாக மாற்றப்படவிருக்கின்றனர். சமூகம் இராணுவமயமாக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படவிருக்கின்றன.

அமெரிக்க அரசாங்கம் ஒட்டுமொத்த சமூகத்தையும் நிரந்தரமாக போர் முனைப்பில் நிறுத்துவதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குமான ஒரு சாக்காக 2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டது. ஹிட்லரின் Gestapo ஐயும் ஸ்ராலினின் KGB ஐயும் பின்னுக்குத் தள்ளும் அளவில் அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் கண்காணிப்பு எந்திரந்தை நிர்மாணித்து விட்டிருக்கின்றன. பயங்கரவாதிகளாக சொல்லப்படுபவர்களையும் அவர்களுடன் சேர்த்து அப்பாவிப் பொதுமக்களையும் - குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அமெரிக்க குடிமக்கள் உட்பட - அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கில் கொல்கின்றன

உக்ரேன் நெருக்கடியும், ஜேர்மனிக்கு இதே நோக்கத்திற்கே சேவை செய்ய இருக்கிறது. ஜேர்மன் அரசாங்கம் ஸ்வோபோடா (Svoboda) மற்றும் வலது பிரிவு (Right Sector) இன் பாசிஸ்டுகளுடன் பகிரங்கமாக சேர்ந்து வேலை செய்வதன்பது, அரசியல் ரீதியான ஒரு எச்சரிக்கை ஆகும். ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் இது ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்தை மிரட்டுவதற்கும் அஞ்சி நடுங்கச் செய்வதற்கும் ஜேர்மனியில் இருக்கும் ஆளும் வர்க்கம் வலது-சாரி மற்றும் பாசிச சக்திகளை சார்ந்திருக்கும் என்பதே இதன் ஒரே பொருளாக இருக்க முடியும். பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில், பாசிச சக்திகள் தமது செல்வாக்கை ஏற்கனவே அதிகரித்து வருகின்றன என்பதோடு ஆளும் வர்க்கத்தில் அதிகமான ஆதரவைப் பெற்று வருகின்றன.

PSG ஐக் கட்டியெழுப்புவோம்!

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கம் மட்டுமே போர் மற்றும் பாசிச அபாயத்தை எதிர்த்து நிற்க முடியும்.

அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் இருக்கும் பல தொழிலாளர்களும் உத்தியோகபூர்வ போர் பிரச்சாரத்தை சந்தேகத்துடனும் முற்றுமுதல் குரோதத்துடனுமே பார்க்கின்றனர். சுதந்திரம், ஜனநாயகம், மற்றும் தேசிய விடுதலை குறித்த சுலோகங்கள் எல்லாம் மோசடியும் இரட்டைவேடமுமே ஆகும்; உலக அதிகாரம், சந்தைகள், கச்சாப் பொருட்கள், மலிவு உழைப்பு, இலாபங்கள் ஆகிய ஏகாதிபத்திய நலன்கள் தான் உண்மையான பணயப் பொருட்கள் என்பதை அத்தொழிலாளர்கள் அறிந்துள்ளனர், அல்லது உணர்கின்றனர்.

விடயங்களை அவற்றின் உண்மையான பெயர்கொண்டு அழைக்கின்ற, ஆளும் வர்க்கத்தின் மீது போர் அறிவிப்பு செய்கின்ற, அத்துடன் ஒரு தெளிவான சோசலிச மற்றும் சர்வதேச நோக்குநிலையைக் கொண்டு போருக்கான எதிர்ப்பை அளிக்கின்ற ஒரு கட்சியே அவர்களிடம் இல்லாமல் இருக்கின்றது. அத்தகையதொரு கட்சியைக் கட்டியெழுப்புவதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் மற்றும் பிரிட்டிஷ் பிரிவுகளான Partei für Soziale Gleichheit மற்றும் சோலிச சமத்துவக் கட்சியின் (UK) ஐரோப்பிய தேர்தலுக்கான பிரச்சாரத்தின் இருதயத்தானமாக இருக்கிறது. ஸ்ரானிசத்திற்கு எதிராக உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் பாதுகாத்த இடது எதிர்ப்பாளர்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாரம்பரியங்களின் உருவடிவாக ICFI திகழ்கிறது.

ஒரு பரந்த சர்வதேசிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப உக்ரேன் மற்றும் ரஷ்யா உள்ளிட ஐரோப்பாவெங்கும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். போர் வெறியர்களுக்கும் ஊடகங்களில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிரான ஒரு வாக்கெடுப்பாக இந்த ஐரோப்பிய தேர்தலை மாற்றுவதற்கு நாங்கள் அத்தொழிலாளர்களை அழைக்கிறோம். PSGக்கு ஆதரவான ஒவ்வொரு வாக்கும் போருக்கு எதிரான வாக்கு ஆகும்.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதே எங்களது இலட்சியம் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்அரசாங்கங்களை உருவாக்குவதும் ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது மட்டுமே இக்கண்டம் மீண்டும் தேசியவாதம் மற்றும் போருக்குள் திரும்பி விடாமல் தடுப்பதற்கு முடியும், அத்துடன் இக்கண்டத்தின் செழுமையான ஆதாரங்களும் மற்றும் உற்பத்தி சக்திகளும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுக்காய் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் அபிவிருத்தி செய்யப்படுகின்ற நிலைமைகளை உருவாக்கச் செய்ய முடியும்

PSG இன் ஐரோப்பியத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நடைமுறையிலும் நிதிரீதியாகவும் ஆதரியுங்கள்! உலக சோசலிச வலைத் தளத்தை வாசியுங்கள், எங்களது கூட்டங்களில் பங்கெடுங்கள், எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், PSGயுடன் தொடர்பு கொண்டு உறுப்பினராகுங்கள்!