World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s incoming government launches historic attack on working class

பிரான்சின் புதிய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்று தன்மை வாய்ந்த தாக்குதலை தொடுக்கிறது

By Kumaran Ira 
21 April 2014

Back to screen version

பதவிக்கு வந்த பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் (PS) அறிவித்த மிகப்பரந்த சமூக வெட்டுக்கள், பிரான்சில் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கின்றது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரும் மற்றும் நாஜி ஒத்துழைப்பு ஆட்சி சரிவிற்கு பின்னரும் பிரான்சில் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புக்ளை சோசலிஸ்ட் கட்சி கைவிடும் என்பதை அது அடையாளம் காட்டியுள்ளது.

இது, முன்பு உள்துறை மந்திரியாகவும், நவ-பாசிச தேசிய முன்னணி விரும்பும் கொள்கைகளை ஆதரிக்கும் உயர்மட்ட போலீஸ் அதிகாரியுமான வால்ஸை ஆட்சி அமைக்க அழைத்த முடிவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பெருகிய முறையில் சுரண்டப்பட்ட, சீற்றம் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் மீது நிதிய தன்னலக்குழுவின் பிடியை ஸ்திரப்படுத்திக்கொள்ள PS நகர்கையில், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு தீவிர வலதுசாரி அழைப்புக்கள் கொடுப்பதன் மூலம் சமூகத்தை கண்காணிக்கும் ஒரு புதிய ஆட்சி வகைகளை பிரெஞ்சு ஆளும் வர்க்கம் இப்பொழுது தேடுகிறது.

கடந்த புதன் கிழமை ஒரு அமைச்சரவை காபினேட் கூட்டம் PS ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் நடைபெற்ற பின், தொழிலாளர் செலவினங்களில் 30 பில்லியன் யூரோக்கள் வெட்டும், ஹாலண்டின் வணிகசார்பு பொறுப்புணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அரசாங்கம் 2017 ஐ ஒட்டி பொதுநலச் செலவுகளில் 50 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களையும் அறிவித்தது. செலவு வெட்டுக்களில், 18 பில்லியன் யூரோக்கள் மத்திய அரசாங்கச் செலவுகளிலும், 11 பில்லியன் யூரோக்கள் உள்ளூர் அரசாங்கம் மறுசீரமைக்கப்படுவதிலும் இருக்கும் என்றார். மீதமுள்ள 21 பில்லியன் யூரோக்கள் வெட்டு, சமூகநலச் செலவுகள், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் இருந்து வரும் என்றார் வால்ஸ்.

அரசாங்கத்தின் வழிமுறைகள் முன்கண்டிராத ஆத்திரமூட்டல் மற்றும் மிருகத்தனம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வால்ஸ் பதவிக்கு வருவதற்கு முன்னரே, பொதுத்துறை (public sector) தொழிலாளர்களிடையே நன்கு வெளிப்படுத்தப்பட்ட பரந்த எதிர்ப்பு இருந்து வந்தபோதிலும் அவை பிரான்சின் 5 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களில் முடக்கத்திற்கு ஆணையிட்டன. இளைஞர்கள், நீண்டகால வேலையின்மையில் இருப்பவர்களுக்கு சில உதவிகள் உட்பட நலன்கள், பெரும்பாலான அரசாங்க ஓய்வூதியங்கள் மற்றும் குடும்ப நலன்களும் நிறுத்தப்படும்.

சுகாதார பாதுகாப்பை பொறுத்தவரை, வால்ஸ் தான் பிரான்சில் சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கையை வெட்டுவதின் மூலம் நிதியை சேமிப்பார் என்றும், இன்னும் அதிக ஜெனரிக் மருந்துகளை மருத்துவமனைகளில் பயன்படுத்துவதின் மூலமும், மருத்துவமனைகளில் நீண்டகாலம் இருப்பதை தவிர்ப்பதின் மூலமும் சேமிக்கப் போவதாக கூறினார். இது பெரும்பாலான உழைக்கும் மக்களுடைய சுகாதாரப் பாதுகாப்பு, வரலாற்று ரீதியிலான தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வணிகக் குழுக்கள், இந்த வெட்டுக்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க PS அதிகாரிகளுடனும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் அமர்கையில், அவை குறைந்தப்பட்ச ஊதியம் அகற்றப்படல் உட்பட, இன்னும் தொலைதூர விளைவுகளுடைய வெட்டுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. கடந்த வாரம் முதலாளிகள் அமைப்பான Medef இன் தலைவர் பியர் கட்டாஸ் (Pierre Gattaz) “இடைப்பட்ட குறைந்தப்பட்ச ஊதியம்ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றார். சட்டபூர்வ குறைந்த பட்சத்தை விடக் குறைவாக இருக்கும் இது, “ஒரு இளைஞர் அல்லது வேலை காணமுடியாத நபருக்குகொடுக்கப்படும்.

ஒரு தற்காலிகமானதும் நிலையற்றதுமான வழியில் குறைந்தபட்ச ஊதியத்திற்கு சற்றுகுறைவாக கொடுக்கும் நிறுவனத்தில் வேலை செய்வது என்பது அவர்களை வேலையில்லாது வைத்திருப்பதை விட சிறந்ததுதான்என்றார் கட்டாஸ்.

முன்னாள் உலக வணிக அமைப்பின் தலைவர் பஸ்கால் லாமி குறைந்த பட்ச ஊதியத்தைவிடக் குறைவாகக் கொடுக்கப்படுபவர்களுக்குசிறிய வேலைகள்தோற்றுவிக்கப்படலாம் என்று கூறிய திட்டத்தையும் அவர் பாராட்டினார். இத்திட்டம் ஜேர்மனியில் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட செயற்பட்டியல் 2010, ஹார்ட்ஸ் IV சட்டங்களின் கீழானசிறு வேலைகள்மாதிரியைக் கொண்டுள்ளது.

இந்த முன்மொழிவுகள் குறைவூதிய வேலைகளில் தொழிலாளர்களை நியமிப்பதை ஊக்குவிக்க வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட வால்ஸின் வணிக வரி ஊக்கங்கள், உண்மையில் ஒரு பரந்த, முழு உணர்வுடன் கூடிய பிரான்சில் ஊதியத் தரங்களைக் குறைக்க வேண்டும், தொழிலாளர்களின் சமூக நலன்களை அகற்ற வேண்டும் என்பதின் ஒரு பகுதிதான் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. வால்ஸ் குறைந்தபட்ச ஊதியம் (smic) 100 வீதத்திற்கும் 130 வீதத்திற்கும் இடையே கொடுக்கும் வணிகர்களிடம் இருந்து தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு செலுத்தும் அனைத்து சமூக வரிகளும் அகற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஏப்ரல் 10ம் திகதி Le Monde “இந்த நடவடிக்கை ஏற்கனவே இது தோற்றுவிக்கும் குறைந்தபட்ச ஊதியக்காரர் (smicards ) தலைமுறைகளைப் பற்றிய அச்சங்களை தோற்றுவித்துள்ளதுஎனக் கூறுகிறது. இது ஒரு டிவிட்டர் தகவல், “குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் நிறுவனங்களின் வணிக வரிகளைக் குறைப்பது ... குறைந்தபட்ச ஊதியத்தில் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கத்தை நடைமுறையில் பரப்ப ஒரு சிறந்த யோசனைஎன்று மேற்கோளிடுகிறது. இக்கொள்கை ஓய்வூதிய, சுகாதார பாதுகாப்பு நிதியையும் குறைக்கும். இது தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்; ஏற்கனவே அவர்கள் தங்கள் பொது தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு நிதியளிக்கும் திட்டங்களில் சேர நேர்ந்துள்ளது, பரந்த பாதுகாப்பு வழங்கும் செலவு மிகுந்த திட்டங்களை வாங்க வேண்டியுள்ளது. அத்தகைய திட்டங்களுக்கு மாதம் 150 முதல் 200 யூரோக்கள் செலவு என ஆகின்றன. ஆனால் அவை தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளால் செலுத்த முடியாதவை. அவர்கள் ஒரு சம்பள காசோலையில் இருந்து மறு சம்பள காசோலையை எதிர்பார்த்துத்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

ஆனால், இன்னும் பரந்த வகையில் PS ன் நோக்கம், கிரேக்கத்தில் உள்ள வறிய வர்க்க சகோதரர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியுள்ளது போன்று ஒரு முழு புதிய தலைமுறை இளைஞர்கள் மற்றும் வேலையற்ற தொழிலாளர்களை மிகவும் அடிமட்ட ஊதியத் தரங்களில் நியமிப்பதாகும். தரம்குறைந்த வேலைகளில் குறைவான சமூகநலன்களுடன் வறிய ஊதியங்களில் நியமிக்கப்பட்டுள்ள இவர்களை சுரண்டும் நிலை, பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட உலகப் போட்டித்தன்மையை கொடுத்துள்ளது.

வால்ஸ் தன்னுடைய கொள்கையை நியாயப்படுத்தும் வகையில், “பிரெஞ்சு மக்களுக்கு நான் உண்மையை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நம் பொதுச் செலவினங்கள், எங்கள் தேசிய வருமானத்தில் 57 சதவிகிதத்தை பிரதிபலிக்கிறது. நாம், நமது சக்திக்கு மீறி வாழ முடியாது.”

தொழிலாளர்கள் வறுமையில் வாட வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்பது ஒரு பிற்போக்குத்தனமான பொய்யாகும்.. இதே ஆளும் உயரடுக்குதான் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவை அடுத்த வாரங்களில் 360 பில்லியன் யூரோக்களை ஒரே இரவில் பிரெஞ்சு வங்கிகளின் பிணையெடுப்பிற்கு கொடுத்தது. பிரான்சில் அம்பலத்திற்கு வந்துள்ளது, உலக முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் முதலாளித்துவ அரசியல் நடைமுறையின் திவால்தன்மையாகும்.

மத்திய அரசாங்கமும் பல்வேறு நிலைகளில் உள்ள உள்ளூர் அரசாங்கங்களும் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 சதவீதத்தை செலவழிக்கின்றன என்றாலும், பிரான்சின் முதலாளித்துவ அரசாங்கம் இந்த நிதிகளின் நலன்களை எவர் பெறுகின்றனர் என்பதை அறியும். இது ஆழ்ந்த சமத்துவமற்ற சமூக ஒழுங்கு தோற்றுவிக்கப்படுவதை மேற்பார்வையிட்டுள்ளது. 2010ல், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு உணரப்படுவதற்கு முன்பே, பிரெஞ்சு சமூகத்தின் உயர்மட்ட 10 சதவீதத்தினர் தேசிய செல்வத்தில் 62 சதவீதத்தை கொண்டிருந்தனர், கீழ் உள்ள 50 சதவீதத்தினர் 4 சதவீதத்தைத்தான் கொண்டிருந்தனர். உயர்மட்ட 1 சதவீதத்தினர் சொத்துக்களில் கால் பகுதியை கொண்டிருந்தனர்.

இந்த நிதியப் பிரபுத்துவத்தின் சலுகைகளை பாதுகாக்கத்தான் PS போருக்குப் பிந்தைய சமூகக் கொள்கையின் தளத்தில் எஞ்சி இருப்பது அனைத்தையும் அகற்ற முற்படுகிறது, நவ-பாசிசக் கொள்கைகளை வளர்க்கிறது. வால்ஸ் தனது பாராளுமன்ற உரையில் FN உடைய அரசியல் கருத்துக்களுக்கு அழைப்புவிட்டு, “பாதுகாப்பற்ற தன்மை, “தீச்செயல்கள்மீது குவிப்புக்காட்டி ஆத்திரமூட்டும் வகையில்கிறிஸ்துவ- எதிர்ப்புசெயல்களை கண்டித்தார்.

இடதில் உள்ள வெற்றிடம், போலி இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் இடது முன்னணியின் (FdG) ஆதரவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதியின் கீழ், பிரான்சின் முக்கிய முதலாளித்துவஇடதுகட்சி, வரலாற்றுத் தன்மை உடைய தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த சக்திகளால் தேசிய இனவெறியையும், வெளிநாட்டவர் விரோதத்தையும் தூண்டுவதன் மூலம் முக்கிய அரசியல் இலாபங்களை அடைவது FN ஆகவே இருக்கும் என்று கணிக்கப்பட முடியும். வால்ஸின் நடவடிக்கைகளை கண்டித்தாலும், FN உடைய துணைத் தலைவர் ஃப்ளோரியான் பிலிப்போமில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தில் சரிவை அடையப்போகின்றனர், ஏனெனில் அரசாங்கம், யூரோ தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று வலியுறுத்துகிறதுஎன்றார்.

PS, FdG மற்றும் NPA அனைத்தும் வால்ஸின் பிற்போக்குத்தனக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளின் ஒரே விரோதி என்று தேசிய முன்னணி (FN) தன்னைக் காட்டிக் கொள்ள முடிகிறது.