தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French intelligence collects all data of France Telecom/Orange பிரெஞ்சு உளவுத்துறை பிரான்ஸ் Telecom/Orange இன் அனைத்து தரவுகளையும் சேகரிக்கிறது
By Anthony Torres Use this version to print| Send feedback எட்வார்ட் ஸ்னோவ்டெனால் வெளிப்படுத்தப்பட்டு, நாளேடு Le Monde பகுப்பாய்ந்துள்ள ஆவணங்கள் பல தசாப்தங்களாக பிரெஞ்சு உளவுத்துறைப் பணிகள் தகவல்கள் சேகரிப்பதில் பிரெஞ்சு Telecom/Orange உடைய பங்கை வெளிப்படுத்தி காட்டுகின்றன. பிரான்சின் வெளிப்பாதுகாப்பு பொது இயக்குனரகம் (DGSE) Orange வாடிக்கையாளர்களின் தரவுகள் அனைத்தையும், முற்றிலும் சட்டவிரோத வகையில் தடையின்றி பெறுகிறது. Le Monde பிரித்தானிய சமிக்ஞைகள் புலனாய்வு உளவு வலைப்பின்னலை (GCHQ) அடித்தளமாகக் கொண்டிருந்தது. GCHQ இனால் இந்த ஆவணங்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து ஸ்னோவ்டெனால் எடுக்கப்பட்டவையாகும். செய்தித்தாளினபடி, இவை DGSE மற்றும் Orange இற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு நிறுவனத்தின் முக்கிய ஸ்தானத்தில் இருந்த “பாதுகாப்புப்பிரிவு இரகசியங்களை அணுகும் நபர்களால் நிர்வாகிக்கப்பட்டுள்ளது. இது குறைந்தப்பட்சம் முப்பது ஆண்டுகளாக இரு நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகொண்டு செயல்படும் பொறியியல் வல்லுனர்களால் நடத்தப்படுகிறது.” “DGSE, Orange வலைப்பின்னலை முற்றுமுழுதாக அணுகக்கூடியதாக இருந்தது” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் ராய்ட்டர்ஸ், இந்த குறுக்கீடுகள், பயங்கரவாதத்திற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலுக்கும் எதிரான போராட்டம் பற்றி தொடர்புடைய ஜூலை 10, 1991 சட்டத்தின் வடிவமைப்புக்குள்ளேயே நடத்தப்பட்டது என வலியுறுத்துகிறது. இந்த நடைமுறை, நான்கு மாதங்களுக்கு ஆவணப்படி வேண்டுகோள்விடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு தலையீட்டு ஆணையினால் (CNIS) பரிசோதிக்கப்பட்டபின், பிரதம மந்திரியின் ஒப்புதலின் பேரில் நடக்கிறது. Orange ஊடாக, பிரெஞ்சு அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் ஒரு தரவுசேகரிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியது. Le Monde விளக்குவது போல்: “DGSE இன் அனுகூலங்கள் Telecom-Orange வாடிக்கையாளர்களின் தரவுகளை அணுக வழங்கப்பட்ட சட்டவிதிகளுடன் திருப்தியடையவில்லை என்ற உண்மையில் தங்கியுள்ளது. எவ்விதமான கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு, அதனது வலையமைப்புக்களையும் மற்றும் அதனூடாக செல்லும் தரவுகள் பாய்வு பற்றிய ஒரு சுதந்திரமான, முற்றுமுழுதான அணுகுதலுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடற்ற சேகரிப்பு Orange இன் பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. தரவுகள் “NSA இற்கு அவற்றை அனுப்பும் GCHQ போன்ற வெளிநாட்டு நட்பு அமைப்புக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன”. இந்த வெளிப்படுத்தல்கள் மீண்டும் சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்னோவ்டென் விவகாரத்தில் கொண்டுள்ள பிற்போக்குத்தன உத்திகளின் மோசமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஸ்னோவ்டென் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து பிரெஞ்சு பாராளுமன்றம் அதன் சோசலிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையுடன் நவம்பர் 2013 இராணுவ ஒதுக்கீட்டு மசோதாவை ஏற்றது. அது நிறுவனங்களுக்கும் DGSE க்கும் இடையே தகவல் பறிமாற்றத்தை சட்டபூர்வமாக்கியது. இச்சட்டம் தொலைபேசி மற்றும் இணைய தள தொடர்பு கண்காணிப்புக்களை ஒரு நீதிபதியின் தலையீடு இன்றி உடனுக்குடன் அனுமதி கொடுக்கிறது. உண்மையில், அரசாங்கம், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உடந்தையுடன், சோசலிச கட்சியின் பிற்போக்குத்தன சட்டத்தினால் வழங்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பின்னோக்கிய நடைமுறைக்குவரும் ஒப்புதல் இல்லாமல்கூட இது ஏற்கனவே நடைமுறைப்பட்டுள்ளது. பிரான்ஸ் Telecom-Orange இன் CFE-CGC நிர்வாகிகள் சங்கத்தின் தலைவர் செபஸ்டியான் குரோட்சியர் Le Monde பத்திரிகையுடைய வெளிப்படுத்தல்களை உறுதிப்படுத்தினார்: “பல நாடுகள் பெரியளவில் தரவுகளை சேகரிப்பது எந்த சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. அவற்றின் அளவு எப்படி இருந்தாலும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவற்றை எதிர்க்கும் திறனற்றவை. செயல்படுத்துபவவர் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய இறைமையின் செயற்பாடாகும். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.” Orange அல்லது தொழிற்சங்கங்களோ Orange இன் வாடிக்கையாளர்களுடைய ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முற்படவில்லை. குரோட்சியர் விளக்குவது போல், “இந்த பிரச்சினை” தொழிலாளர்களால் கிரகித்துக்கொள்ளப்படவில்லை. இது தொழிற்சங்க அதிகாரத்துவமும் அவற்றுடன் இணைந்த போலி இடது சக்திகள் போன்ற புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சியுடைய (NPA) மௌனமான உடந்தையை காட்டுகிறது.” இதன் மூலம், குட்டி முதலாளித்துவ போலி-இடது அமைப்புக்கள் NSA நடவடிக்கைகளை ஸ்னோவ்டென் வெளிப்படுத்திய பின்னரும் ஏன் அவரை பாதுகாக்க முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுவது எளிதாகிறது. இந்த அமைப்புக்களுக்கு அரசாங்கத்தின் பொலிஸ் நடவடிக்கைகள் பற்றி தெரிந்தும் மௌனமாக இருந்து, உளவுத்துறையுடனான தங்களது உடந்தை விசாரணைக்குட்படுத்தப்படுவதை தவிர்க்க விரும்புகின்றன. இதை செயல்படுத்துவோரினதும் மற்றும் தொழிற்ங்க அதிகாரத்துவத்தினரின் செயலற்ற தன்மையை குரோட்சியர் நியாயப்படுத்தும் வகையில் அனைத்து பலம்வாய்ந்த அரசு தேவை என்னும் போலிக்காரணத்தை காட்டுகிறார். இந்த தொழிற்சங்க அதிகாரி பின்வருமாறு தொடர்கிறார்: “சட்டத்தின் ஆட்சி வேறுபாட்டை உருவாக்குகின்றது: ஒரு விஷயத்தில் தொலைத்தொடர்பு வெட்டப்படலாம், மற்றொரு விடயத்தில் ஒழுங்குவிதிகளை திருத்தியமைத்தலால் உங்கள் செலவுகள் பொறுத்துக்கொள்ள முடியாததாக போய்விடும்.” குரோட்சியரின் இந்த அறிவிப்புக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, Orange மற்றும் Orange இல் இருக்கும் தொழிற்சங்கங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும் முயலாததுடன், அரசாங்கம் பின்னர் கொடுக்கும் பதிலடிகளுக்கு எதிராக தங்கள் நலன்களுக்கும் சட்ட பாதுகாப்பை நாடவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. முழு அரசியல் ஆளும்தட்டினுடன் இணைந்த வகையில் அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பரந்த ஒற்று நடவடிக்கையில் உடந்தையாக உள்ளனர். |
|
|