சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Libyan kangaroo court trials begin against Gaddafi’s sons

லிபியக் கங்காரு நீதிமன்ற விசாரணைகள் கடாபியின் மகன்களுக்கு எதிராக ஆரம்பிக்கின்றன

By Jean Shaoul 
18 April 2014

Use this version to printSend feedback

இந்த வாரம் லிபிய அரசு ஒரு வெகுஜன வழக்கு விசாரணையை தொடக்கியது; இதன் அனைத்து கவனமும், அகற்றப்பட்ட தலைவரான கேர்னல் முயம்மர் கடாபியின் இரு மகன்களான, அவரது பட்டத்து வாரிசு சைப் அல்-இஸ்லாம் மற்றும் சாதிக் ஆகும். பிந்தையவர் சமீபத்தில் நைஜரில் இருந்து நாடு கடத்தப்பட்டார்; அவர் 2011 அமெரிக்க தலைமையிலான போரின் வேளையில் அங்கே தஞ்சமடைந்திருந்தார்.

மேலும் விசாரணையை எதிர்கொள்பவர்களில் 36 உயரமட்ட அதிகாரிகளும் உள்ளனர். அதில் கடாபியின் உளவுத்துறைத் தலைவரும் மற்றும் அவரது வலது கைபோன்ற அப்துல்லா அல் செனுசியும் உண்டு; அவர் 2012ல் மௌரிட்டேனியாவிற்கு வெளியேற்றப்பட்டிருந்தார்; தவிர முன்னாள் பிரதம மந்திரிகள் அல் பாக்தாதி அல்-மஹ்முதி மற்றும் பௌஜிட் டோர்டா, முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல் அடி அல்-ஒபிடி ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் பெங்காசியில் இஸ்லாமியவாத-சார்பு இயக்கத்தை அடக்கியதில் கொண்ட பங்கு என்பதற்கான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். அதைப் பயன்படுத்தியே நேட்டோ கடாபியை கவிழ்த்தது.

இப்பொழுது நடைபெறுவது, கங்காரு நீதிமன்றம் அனுமதித்த மற்றொரு படுகொலையின் அனைத்து அடையாளங்களை கொண்டுள்ளது; இப்படித்தான் ஈராக்கிய தலைவர் சதாம் ஹுசைன் 2006ல் கொல்லப்பட்டார்.

இந்த விசாரணை திரிப்போலி அல-ஹட்பா சிறையில் நடக்கிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தப்படுபவர்களின் குடும்பங்கள், செய்தியாளர்கள், வக்கீல்கள், பொதுமக்களிடம் விசாரணை பகிரங்கமாக இராது என்று கூறியபோது சீற்றமிகு காட்சிகள் வெளிப்பட்டன. இது, லிபியாவின் நீதித்துறை மந்திரி சலா அல்மெர்கானி, “நான் எத்தகைய கிறுக்குத்தனத்தையும் அனுமதியேன், சர்வதேச தரங்களை அது பூர்த்தி செய்யும் என உறுதியாக இருக்கிறேன்... எனவேதான் நாம் விசாரணகளை ஆரம்பித்துள்ளோம்” என்று கூறியபோது வெளிப்பட்டது.

இறுதியில் சிறிய எண்ணிக்கையில் சர்வதேச செய்தியாளர்கள், .நா. நோக்கர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அவர்களது கைபேசி ஒப்படைக்கப்பட்டபின் அனுமதிக்கப்பட்டனர்.

38 குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர்களில் 23 பேர்தான் நீதிமன்றத்திற்குள் இருந்தனர்; அவர்கள் அனவரும் கறுப்பு இரும்புக் கூண்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்தனர். கடாபியின் மகன்கள் இல்லை. சைப் அல்-இஸலாம் சின்டானில் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; “முறையான வெகுமதிகள்” இல்லாததால் திரிப்போலியில் உள்ள அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

சின்டான் சிறையில் அவர் இருந்து கொண்டு வீடியோ இணைப்பின்மூலம் விசாரிக்கப்படலாம் என்று ஒரு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் சின்டான் போராளிக்குழு அவரை நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள அனுமதிக்கவில்லை. மிஸ்ரடாவில் உள்ள மற்ற 7 பேர், வீடியோ இணைப்பு மூலம் பங்கு கொள்ளும் உரிமையை நாடினர். சாதிக் கடாபி உட்பட இன்னும் 9 பேர், எக்காரணமும் கொடுக்கப்படாமல் சமூகமளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வக்கீல்களை அணுக மறுக்கப்பட்டனர். மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் லிபிய ஆராய்ச்சியாளர் ஆனான் சலா, விசாரணையில் பலர் ஆரம்பத்தில் இருந்தே வக்கீல் இல்லாமல் உள்ளனர் – இது நியாமான விசாரணைக்கு எடுத்துக் காட்டு எனப்படுகிறது” என்றார்.

எங்களிடம் பல வழக்குகள் உள்ளன; அவற்றில் விசாரணைக்குட்பட்டவர்களின் வக்கீல்கள சாட்சியத்தை பரிசீலக்க முடியவில்லை; நீதிமன்ற ஆவணங்களைக் காணமுடியல்லை; விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் (விசாரணைக்கு முந்தய நீதிபதி அறையில்) ... சில தொடர்பற்ற வழக்குகளில் நீதிபதிகளும் வக்கீல்களும் துன்புறுத்தப்பட்டனர், கட்டாய வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்றும் கூறப்படுகிறது.” என்றார் அவர்.

தான் இப்பொழுதுதான் கொலை, சித்திரவதை, கடத்தல், போலியாக சிறையில் வைத்தல், பண மோசடி மற்றும் கற்பழிக்கத் தூண்டியது என்ற குற்றச்சாட்டுக்களில் அவருக்காக தோன்றுவதற்கு ஒரு வக்கீலை பெற்றுள்ளார் என்று அல்-செனுசி கூறினார். முன்னாள் உளவுத்துறைத் தலைவர், மெலிந்தும், அவர் அலுவலகத்தில் இருக்கையில் இருந்தது போல் இல்லாத நிலையிலும் காணப்படும் அவர் விசாரணை நீதிபதியிடம் நடுங்கும் குரலில் “ஐந்து நாட்களுக்கு முன்தான் என் வக்கீலிடம் ஒரு தாளில் கையெழுத்திட்டுள்ளேன்” என்றார்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 27க்கு ஒத்தி வைத்தனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் விசாரிக்கலாம், ஆனால் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிரான சாட்சியங்களின் நகல்களை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்றனர்.

இந்த பரந்த மட்டத்திலான விசாரணை மேற்கத்தைய சக்திகளின் புரட்டுக்களையும் முழுக் குற்றத்தன்மையையும் அம்பலப்படுத்துகின்றது. இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சினால் 2011 கோரப்பட்டதில் இருந்து, முயம்மர் கடாபி, சைப் அல்-இஸ்லாம் கடாபி மற்றும் அப்துல்லா அல் செனுசி ஆகியோருக்கு எதிரான போர்க் குற்றங்கள் குற்றச்சாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.

இத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை, நேட்டோ சக்திகள் திரிப்போலி இன்னும் பல இடங்களில் குடிமக்கள்மீது நடத்திய ஆயிரக்கணக்கான வான் தாக்குதல்களை புறக்கணிக்கின்றன. அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு அரசாங்கங்கள் நடத்தும் ஆட்சி-மாற்ற சட்டவிரோதப் பிரச்சாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் ஒரு முறைகேடான முயற்சியாகும்.

கடாபி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபின், சைப் அல்-இஸ்லாம், அல்-செனுசி லிபியப் போராளிகளால் கைப்பற்றப்பட்டபின், மேற்கத்தைய சக்திகள் முன்னாள் யூகோஸ்லேவிய ஆட்சியாளர் சுலோபோடன் மிலோசேவிக்கின் ஐந்து ஆண்டுக்கால விசாரணை போல் மீண்டும் நடக்கும் இடரை விரும்பவில்லை என்பது தெளிவாயிற்று; அவருடைய விசாரணை 1990களில் பால்கனில் “மனிதாபிமானத் தலையீடு” என்ற போலிக் கூற்றுக்களை அவருடைய சொந்த பாதுகாப்பு அம்பலப்படுத்தியது.

ஹேக்கில் நீடித்த விசாரணை என்பது, கடாபி ஆட்சிக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் 2004 முதல் 2011 வரை இருந்த நெருக்கமான உறவுகளை வெளிப்படுத்தி சங்கடம் ஏற்படுத்தும். அப்பொழுது சர்வாதிகாரி ஒதுங்கிய நிலையில் இருந்து வெளிக் கொண்டுவரப்பட்டு லிபியா வணிகத்திற்கு திறக்கப்பட்டது. அல் செனுசி சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டன் மற்றும் லண்டனின் உலகளாவிய சித்திரவதை இணையம் பற்றி சாட்சியம் அளிப்பார், சைப் அல் இஸ்லாம் முன்னாள் பிரித்தானிய பிரதம மந்திரி டோனி பிளேயர் இன்னும் பல முன்னாள் தொடர்பாளர்களை சாட்சியங்களாக அழைப்பார்.

பிளேயர் ஹேக்கில், அதுவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் வழக்கில் சாட்சியாக வரும் காட்சி என்பது, இதேபோன்ற குற்றச்சாட்டுக்களுக்கு, ஈராக்கில் சட்டவிரோத படையெடுப்பில் அவருடைய பங்கிற்கு பிளேயர் மீதும் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்னும் சர்வதேச கூக்கூரலை எழுப்பும் அச்சுறுத்தலை தூண்டியது.

ICC குற்றச்சாட்டு அதன் நோக்கத்திற்கு உதவியிருக்கையில், நேட்டோ சக்திகளும் அவற்றின் பதிலிகளும் லிபியாவில் பிடிபட்ட இருவர்களையும் ஹேக்கிற்கு மாற்றுவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. மாறாக இருவரையும் ஒப்படைக்கும் சட்டபூர்வ கடப்பாட்டைக் கடப்பதற்கு லிபியாவிலேயே விசாரணையை நடத்துவது, இதில் ICC ரப்பர் முத்திரையாக இருக்கும் என்றும் முடிவெடுத்துள்ளன.

விசாரணை, ஒரு முழு சட்டமின்மை அரசியல் மற்றும் சட்ட முறை செயல்படுவதற்கான அறகுறிகளே இல்லாத நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது. அமெரிக்கா இருத்திய அரசாங்கமோ சிதைவு, முழு உள்நாட்டுப்போரின் விளிம்பில் நிற்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் வளைகுடா நாடுகளால் ஊக்குவிக்கப்படும் போட்டி வலதுசாரி பயங்கரவாத ஆயுதக்குழுக்கள், தங்கள் செல்வச்செழிப்பிற்காக நாட்டையை கொள்ளையடித்துள்ளன.

நாடுகடந்த எண்ணெய் நிறுவனங்கள் நீடித்த உறுதியற்ற தனமையினால் உற்பத்தியை நிறுத்திவிட்டன மற்றும் சின்டன் போராளிக்குழுவின் கீழ் உள்ள பகுதியில், கடந்த மாதம் ஒடும் பாதையை ராக்கெட்டுகள் தாக்கியபின், பல முக்கிய சர்வதேச விமானங்களும் திரிப்போலி பயணங்களை நிறுத்திவிட்டன.

பாராளுமன்றத் தலைவர் நௌரி அபு சாஹமின் கருத்துப்படி லிபியா கடந்த ஜூலை மாதத்தில் இருந்து கிழக்கு மாநிலமான சிரெனைகாவில் உள்ள எண்ணெய் நிலையங்கள் ஆயுதக்குழுக்களின் முற்றுகையாலும் மற்றும் இன்னும் சமீபத்தில் லிபியாவின் கடைசியாக எஞ்சியிருந்த நாட்டின் மேற்கே உள்ள குழாய் திட்டங்கள் வெட்டப்பட்டதாலும் திவாலை எதிர்நோக்குகிறது என்றார்.

இது அரசாங்கத்தை, கிளர்ச்சித் தலைவர் இப்ராகிம் ஜத்ரனுடன் முற்றுகையை கைவிடவும், கிளர்ச்சியாளர்களுக்கு அதற்கு ஈடாக அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கைவிடவும், அவர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் உடன்பாடு காண வைத்துள்ளது; அவர்தான் கிழக்கு முனையங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்.

குழப்பம் எந்த அளவிற்கு உள்ளது என்றால், இந்த ஞாயிறு இடைக்காலப் பிரதம மந்திரி அப்துல்லா அல்-தின்னி மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது லிபிய ஆயுதக் குழுக்கள் ஒன்று தாக்கியதை தொடர்ந்து இராஜிநாமா செய்தார் தாக்குதல் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை, ஆனால் திரிப்போலி விமான நிலையத்தற்குச் செல்லும் பாதையில் நடந்தது என நம்பப்படுகிறது. அங்கு  போட்டி ஆயுதக்குழுக்களின் இரவுமோதல்கள் நடக்கின்றன. முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் இஸ்லாமியவாத ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் பிரதம மந்திரி அலி சைய்டனை அகற்றியபின் நியமிக்கப்பட்டார்.

பின்னர் ஜேர்மனிக்கு பறந்து சென்ற சைய்டன், நாட்டிற்கு நேரடி வெளிநாட்டுத் தலையீடு தேவை என்று அழைப்பு விடுத்துள்ளார்; CNN இடம் அவர், “பாதுகாப்பு கொடுக்கவல்ல எந்த வழியும் லிபியாவில் ஏற்கப்படும். .நா. வின் பகுதியாக இருக்கும் படைகளை நாம் ஏற்கவேண்டும், பிராந்திய அல்லது மத்திய கிழக்கு துருப்புக்கள் ஆயினும்.” என தெரிவித்தார்.

எண்ணெய் வளம் உடைய கிழக்கே சிரெனைகா மாநிலம், தெற்கே பெசன் மாநிலம் என ஒரு கூட்டாட்சி அரசில் இருந்து தன்னாட்சி கோருபவற்றின் எதிர்ப்புக்கு இடையே காங்கிரஸ் ஒரு புதிய பிரதம மந்திரி பற்றி உடன்பாடு காண சட்டமன்ற உறுப்பினர்களை பெறமுடியும் என்பது தெளிவாக இல்லை. 200 உறுப்பினர்கள் இருந்த காங்கிரசில் 76 பேரைத் தவிர மற்றவர்கள் பின்வாங்கிவிட்டனர். இது இந்த ஆண்டு இறுதி வரை தன் அதிகாரத்தை செலுத்த உத்தரவு பெற வேண்டும; இப்பொழுது அது பெப்ருவரியில் முடிவுற்றது.

இதன் நோக்கம், 60 உறுப்பினர் கொண்ட அரசியல் நிர்ணய சபைக்கு ஒரு புதிய அரசியலமைப்பிற்கு, குழு தயாரித்துள்ளதற்கு ஒப்புதல் தர அவகாசம் கொடுப்பதாகும், இக்குழுவில் லிபியாவின் மூன்று மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் 3.4 மில்லியன் வாக்காளர்களில் 500,000 பேர்தான் பெப்ருவரி 20 அரசியல் மற்றத்திற்கு வாக்களிக்க வந்தனர். காங்கிரஸ் இப்போது புதிய அரசியலமைப்புக்கு காத்திருக்காமல், இந்தக் கோடையில் பாராளுமன்ற தேர்தல்களை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது, இது இப்போது லிபியாவை செயல்படும் பாராளுமன்றம் இல்லாமல் விட்டுவைத்துள்ளது.