தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German Left Party MPs vote for military deployments ஜேர்மனிய இடது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர்By Ulrich Rippert Use this version to print| Send feedback பல முக்கிய உறுப்பினர்களை உள்ளடக்கிய ஐந்து இடது கட்சிப் பிரதிநிதிகள், நேற்று ஜேர்மனியின் ஒரு போர்க்கப்பல் மத்தியதரைக் கடலுக்கு அனுப்பப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சியின் 18 உறுப்பினர்கள் வாக்களிப்பை தவிர்த்துக் கொண்டனர். இடது கட்சி உறுப்பினர்கள் இராணுவத் தலையீட்டிற்கு வாக்களித்துள்ளமை ஒரு புதிய திருப்பமும் மற்றும் இக் கட்சி வலது நோக்கி மேலும் திரும்பியிருப்பதற்கான முக்கிய அடையாளமுமாகும். ஏப்ரல் 9 வாக்கெடுப்புவரை, இடது கட்சி ஒன்றுதான் ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) உத்தியோகபூர்வமாக வெளிநாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று ஜேர்மனிய பாராளுமன்றத்தில் (Bundestag) நிராகரித்து வெளியுறவுக் கொள்கையை இராணுவமயமாக்குவதற்கு எதிராக எச்சரித்திருந்தது. நேற்றைய வாக்களிப்பு இந்த நிலைப்பாடு மாற்றப்பட்டுவிட்டது என்பதை குறிக்கிறது. கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களிடையே இந்த அணுகுமுறையில் மாற்றம் என்பது, உக்ரேன் நெருக்கடி வெடித்துள்ளதற்குப்பின் தீவிரமடைந்துள்ள ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ கட்டமைப்புடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது. பெப்ருவரி மாதம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்க மந்திரிகள் இராணுவ சுயகட்டுப்பாட்டுக் காலம் முடிவடைந்துவிட்டது, ஜேர்மனி இராணுவரீதியாக உட்பட இன்னும் ஆக்கிரோஷமாக தலையிடவேண்டும் என்ற அறிக்கைகளை தொடர்ந்து, முக்கிய அரசியல் பிரிவினரும் ஜேர்மன் செய்திஊடகமும் போர்வெறிப் பிரச்சாரத்தை பாரியளவில் கட்டவிழ்த்துள்ளன. கடந்த வாரம் நேட்டோ ரஷ்யா இனி ஒரு பங்காளி அல்ல என்றும் எதிராளி என்றும் அறிவித்தது. நேட்டோ தனது விமானங்கள், கப்பல்கள், துருப்புக்களை ரஷ்ய எல்லைக்கு அருகே நகர்த்தியுள்ளதுடன், கிழக்கு ஐரோப்பாவில் தன் இராணுவ பிரசன்னத்தை தீவிரமாக அதிகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையன் இராணுவ மறுகட்டமைப்பை மேற்பார்வையிடுவதுடன், கட்டாய இராணுவசேவை மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை பற்றி இராணுவத் தலைவர்கள் வாதிடுகின்றனர். இப்பின்னணியில், இடது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவுகொடுப்பது மூலம் தனது பிரதிபலிப்பை காட்டியுள்ளது. அதே நேரத்தில் அது தனது வழியை மூடிமறைத்து குழப்பத்தை தூவ, வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளுக்கான தனது ஆதரவை “நிரந்தர சமாதானக் கொள்கையின் தொடர்ச்சி” என்று கூறுகிறது. மார்ச் 31 கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற பிரிவுத் தலைவர் கிரிகோர் கீசி ஜேர்மன் கடற்படையை அனுப்பிவைத்தற்கு நல்ல காரணங்கள் உள்ளன என்று அறிவித்தார். கப்பலை 300 படையினருடன் அனுப்பிவைத்திருப்பது, அமெரிக்க சிறப்புக் கப்பலான “Cape Ray,” ஐ பாதுகாக்க என்றார். அது மத்தியதரைக் கடலில் சிரிய இரசாயன ஆயுதங்களை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. இரசாயன ஆயுதங்கள் அகற்றப்பட்டு, அழிக்கப்பட வேண்டும் என்னும் இடது கட்சியின் மரபார்ந்த கோரிக்கை, இப்பொழுது அது ஜேர்மனிய இராணுவம் ஒரு “சமாதான நடவடிக்கையின்” பாகமாக பங்குபெறுகிறது என வாதிடப் பயன்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், மார்ச் 31 கூட்டத்தில் கீசி எதிர்ப்பை எதிர்கொண்டு, பின்னர் தன் பாராளுமன்றப் பிரிவை பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டாம் என அழைப்புவிட்டார். ஆனால் இது கேட்கப்படவில்லை. அக்குழு கட்சி ஆணையை செயல்படுத்தவில்லை, உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்று கூறிவிட்டது. முன்பு பாராளுமன்ற வெளியுறவுக் கொள்கை குழுவில் கட்சியின் பிரதிநிதியான இடது கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்டீபன் லைபிச், தான் உறுதியாக இராணுவத்தை பயன்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்தார். சிரிய இரசாயன ஆயுதங்கள் அழிக்கப்படுவது “சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நல்ல விடயம்” என்ற அவர் அரசாங்கம் அவ்றை அழிப்பது பற்றி முடிவை ஆதரிப்பதாகக் கூறினார். Südwestrundfunk (SWR2) வானொலிக்கு இம்மாதம் முன்னதாகக் கொடுத்த பேட்டி ஒன்றில், லைபிச் கூறினார்: “நம் குழுவில் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நான் போராடியுள்ளேன்.” இதில் “ஒரு முற்றிலும் ஏற்கத்தக்க தலையீடு” என்றார். இடது கட்சி மற்றும் அதன் பாராளுமன்றக் குழுவில் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இன்னும் ஏன் எதிர்ப்பு உள்ளது என்று கேட்கப்பட்டதற்கு லைபிச் பின்வருமாறு கூறினார்: “நான் இந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தான போருக்கு இராணுவம் அனுப்பப்பட்டதற்கும் பாரிய அழிவுக்குரிய ஆயுதங்களை அழிப்பதில் பங்குபெறுவதற்கு ஈடுபடுத்தப்பட்டதற்கும் வேறுபாடு உண்டு” என்றார். இதே போன்ற வாதம்தான் பல ஆண்டுகள் முன் இடது கட்சியின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளராக இருந்தபோது பௌல் ஷேபரால் பயன்படுத்தப்பட்டது. அவர் இடது கட்சி பாராளுமன்ற பிரிவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக தெளிவாக வாக்களிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். இல்லாவிடின் இடது கட்சி “ஆயுதக்களைவுக்கான கட்சி என்னும் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிடும்” என்று அவர் எழுதினார். இத்தகைய மக்களைத் திருப்திப்படுத்தும் கொள்கை முதல் முறை நிகழ்வதல்ல. இதேபோன்ற வழிவகைகள இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முதலில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), பின்னர் பசுமைவாதிகளாலும் எடுக்கப்பட்டது. இரு கட்சிகளும் இதேபோல் தங்கள் அமைதிவாததில் இருந்து இராணுவவாதத்திற்கான திருப்பத்தை ஆயுதக்களைவு, மனிதஉரிமைகள் பற்றிய சொற்றொடர்களைக்கூறி மறைக்க முற்பட்டன. 1992ல் சமூக ஜனநாயகக் கட்சி வெளிநாட்டில் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு கம்போடியாவில் மருத்துவப் பணிக்குத் தேவைப்படுகிறது என்று கூறி அதன் முதல்முதலான உடன்பாட்டை நியாயப்படுத்தியது. 1999இல் பசுமைக் கட்சி தலைவர் ஜொஷ்கா பிஷ்ஷர், சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக்கூட்டணி அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரி என்னும் நிலையில், யூகோஸ்லாவியாவுடன் போர் என்பதை முற்றலும் இழிந்த கோஷமான “மீண்டும் அவுஸ்விட்ஸ் கூடாது” என்பதைக் கூறி நியாயப்படுத்தினார். கட்சியின் சிறப்பு மாநாட்டில், பிரதிநிதிகள் “மனிதாபிமான உரிமைகளுக்கான” போராட்டம் எனக்கூறப்பட்டதற்கு ஜேர்மன் இராணுவம் ஒரு சட்டவிரோதப் போரில் பங்கு பெற வேண்டும் என வாதிட்டனர்! உண்மை என்னவென்றால், இடது கட்சி, சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலுடைய அரசாங்கத்துடன் இணைந்து அணிவகுத்து நிற்கிறது. ஜேர்மனிய ஏகாதிபத்தியம் அதன் இராணுவத் தலையீடுகளை “சமாதானம்” என்னும் மறைப்பிற்குப் பின் நடத்திவரும் வரை -- ஆப்கானிஸ்தானில் அத்தகைய செயல்களை “மனிதாபிமான மறுகட்டமைப்பு” என்று விவரித்தது— இடது கட்சி தன் அமைதிவாத நோக்கங்களை வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் அரசாங்கம் அதன் வெளியுறவுக் கொள்கையை இராணுவவாதம், போர் என்று மாற்றியபின், இடது கட்சிக்கு அமைதிவாதம் என்னும் தோற்றத்தை காட்டிக்கொள்வதற்கும் மற்றும் ஆளும் வர்க்க வட்டங்களிடையே தன் நம்பகத்தன்மையை தக்க வைப்பதும் கடினமாயிற்று. பெப்ருவரியில் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இடது கட்சி அரசின் மிக உயர்ந்த மட்டங்களுடன் ஒருங்கிணைந்துள்ளது. இக்கட்சி முக்கியமான பங்கைக் கொண்டிருப்பதற்கு காரணம் புதிய இராணுவக் கொள்கைக்கு பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பு பரந்துள்ளதும், எழுச்சி பெற்றுள்ளதுமாகும். இடது கட்சி போருக்காக, “மனிதாபிமானம்” என்ற பெயரில் போர்ப்பிரச்சார வேலைசெய்ய தன்னை அர்ப்பணித்துள்ளது. அதன் உதவியுடன், முழு போலி இடது பிரிவுகளும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் இராணுவ முனைப்பில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. கடந்த வசந்த காலத்தில் அரசாங்கத்துடன் தொடர்புடைய சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழு (SWP) அமெரிக்க ஜேர்மனிய மார்ஷல் நிதியுடன் இணைந்து “புதிய சக்தி – புதிய பொறுப்பு: ஜேர்மனிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புப் கொள்கை, ஒரு மாறும் உலகிற்காக” என்ற தலைப்பில் விரிவான வெளியுறவு ஆவணத்தை உருவாக்கியது. ஸ்டீபன் லைபிச் ஆவணத்தை உருவாக்குவதில் தொடர்பு கொண்டுள்ளார். தன்னுடைய வலைத் தளத்தில் லைபிச் பரபரப்புடன் “இறுதி விளைவாக இது ஒரு இடதுசாரி ஆவணம் இல்லை என்றாலும் கூட,” முக்கிய இராணுவ மூலோபாயம் இயற்றுபவர்களுடன் தன் ஒத்துழைப்பை விரிவாக அறிவிக்கிறார். ஒரு சில வாரங்களுக்குப் பின், “இடதின் வெளியுறவுக் கொள்கை: சீர்திருத்தத்திற்கான வாய்ப்புக்கள்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை அடங்கிய ஒரு தொகுப்பு நூல் வெளியிட்டப்பட்டது. தொகுப்பு நூலில் இடது கட்சி உறுப்பினர்கள் ஜேர்மனிய இராணுவச் செயற்பாடுகள் ஏற்கப்பட வேண்டும், அமெரிக்காவுடன் அட்லான்டிக் கடந்த நெருக்கமான ஒத்துழைப்பு, இன்னும் ஜேர்மனிக்கு கூடுதல் சர்வதேசப் பங்கு ஆகியவற்றிற்கும் வாதிடுகின்றனர். “இடதும் இராணுவச் செயற்பாடுகளும்” என்னும் கட்டுரையில் பௌல் ஷேபெர் வெளிப்படையாக இராணுவத் தலையீடுகளுக்கு ஆதரவு கொடுக்கிறார். இடது கட்சி எதிர்காலப் போர் நடவடிக்கைகளில் “முன்னே நிற்க வேண்டும் என்பதை நிராகரிக்க முடியாது என்று ஷேபெர் வாதிடுகின்றார். இந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்ட, உரிமைகளற்றவர்களின் நியாயமான அக்கறைகளை பிரதிபலிப்பதால்” அவை புறக்கணிக்கப்படக்கூடாது என்று அவர் எழுதுகிறார். இடது கட்சியின் மிகச் சமீபத்திய போர்வெறிக்கு உதாரணம் இடது கட்சி உறுப்பினர் கிறிஸ்ரியான புக்கோல்ஸ் உடைய பயண நூலாகும். இவர் பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஆவார். லைபிக் ஆவணத்தின் பெரும் அதிகார மூலோபாயத்தை எழுதுவதில் ஈடுபாடு கொண்ட நிலையில், புக்கோல்ஸ் ஆபிரிக்காவிற்கு ஜேர்மன் பாதுகாப்பு மந்திரியுடன் “ஒருங்கிணைந்த எதிர்த்தரப்பு” போல் பயணித்தார். மூனிச் பாதுகாப்பு மாநாட்டை தொடர்ந்து மாலிக்கும் செனேகலுக்கும் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜேர்மன் ஜனாதிபதி ஜோகாயிம் கௌவ்க், வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையன் ஆகியோர் அனைவரும் ஜேர்மனியின் பொருளாதார, மூலோபாய நலன்கள் இராணுவ வழிவகைகளை பயன்படுத்துவதின் மூலம் முன்னேற்றுவிக்கப்பட வேண்டும் என அறிவித்தனர். இடது கட்சி இப்பொழுது அமைதிவாதம் என்னும் தன் மறைப்பை அகற்றிவிட்டது, வெளிப்படையாக ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் போர்க்கொள்கைக்கு அர்ப்பணித்துள்ளது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இடது கட்சியின் முன்னோடிகளான ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சி (SED) மற்றும் ஜனநாயக சோசலிசக் கட்சியும் (PDS) முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவ சந்தையை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. முதலாளித்துவத்தை கட்சி “விமர்சிப்பது” எப்பொழுதும் ஒப்புமையில் வசதியாக இருக்கும் அதனது சமூக அடித்தளத்திற்கு இன்னும் சலுகைகளை கோருவதுடன் நிற்கிறது. இடது கட்சி எப்பொழுதும் செல்வம் படைத்த மத்தியதர வகுப்பிற்காக பேசுகிறது. அவர்கள் தங்கள் இடத்தை முதலாளித்துவ அமைப்புமுறையிலும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலில் தங்கள் இலாபத்தைக் காணுவதிலும் கொண்டுள்ளனர். வர்க்கப் போராட்டம் தீவிரமடைகையில், இந்த அடுக்குகள் பெருகிய முறையில் ஆளும் வர்க்கத்துடன் சேர்கின்றன. போருக்கான எத்தகைய முக்கிய எதிர்ப்பிற்கும், இடது கட்சியின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு எதிரான தீவிர போராட்டம் தேவைப்படுகிறது. |
|
|