World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் US-backed crackdown threatens civil war in Ukraine அமெரிக்க-ஆதவு வன்முறைத் தாக்குதல் உக்ரேனில் உள்நாட்டுப்போர் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது
By Johannes Stern வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பச்சை விளக்கு காட்டப்பட்டவுடன், கிழக்கு உக்ரேனில் அரசாங்கத்திற்கு விரோதமான எதிர்ப்புக்கள் மீது குருதி கொட்டும் வன்முறைத் தாக்குதலை கியேவ் ஆட்சி தொடங்கியது. இது மேற்கத்தைய சக்திகள் மற்றும் ரஷ்யா இடையே முழு அளவிலான உள்நாட்டு போரை தூண்டுவதாக விரிவாக்கம் அடையக்கூடும். செவ்வாய் அன்று அரசாங்க படைகள், ரஷ்ய சார்பு நடவடிக்கையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த Kramatorsk இராணுவ விமானத் தளத்தை தாக்கி அதை மீண்டும் கைப்பற்றினர். உக்ரேனிய படைகள், போர் விமானங்கள் மற்றும் குறைவான உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களின் ஆதரவை பெற்றிருந்தன; அவை எதிர்ப்பாளர்கள் மீது குண்டு வீசின. குறைந்தபட்சம் நான்கு ஆக்கிரமிப்பாளர்கள் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் என ரஷ்ய செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை சந்தித்தனர்; அவற்றுள் பெரும்பாலானவர்கள் கியேவ் ஆட்சிக் கவிழ்ப்புக் குழுவுக்கு ஆழ்ந்த விரோதம் காட்டுபவர்கள். நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் Kramatorsk விமான நிலையத்திற்குள் உக்ரேனியத் துருப்புக்கள் நுழைவதை தடுக்க புறப்பட்டனர் என்று RIA Novosti தகவல் கொடுத்துள்ளது. நிறுவனத்தின்படி பெரும்பாலான மக்கள் ரஷ்ய மற்றும் உள்ளூர் கொடிகளை ஏந்திய குடிமக்கள் ஆவர். Kramatorsk இல் உள்ள ஒரு ராய்ட்டர்ஸ் நிருபர், அங்கு வசிக்கும் மக்கள் துருப்புக்கள் வருவதை எதிர்த்து தடைகளை நிறுவி, “வெட்கம்! திரும்பிச் செல்க!” என்று முழக்கம் இட்டனர் என தெரிவித்துள்ளார். எனினும், கியேவ் டாங்குகள், கவச வாகனங்கள் மற்றும் கனரக பீரங்கிகளை அரசாங்க எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரங்கள் மீதான தாக்குதலுக்கு தயார் செய்ய அனுப்புகிறது. இவற்றுள் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களைக் கொண்ட தொழிற்துறை நகரமான டோனெட்ஸ்க், மாரிபோல் (மக்கட் தொகை 460,000), லுகன்ஸ்க், மாகியிவ்கா, கார்ட்ஸ்யிக், யேவகியேவி, ஹர்லிவ்கா, ட்ருஷ்கிவ்கா, க்ரமடோர்ஸக் மற்றும் ஸ்லோவ்யான்ஸ்க் ஆகியவை அடங்கும். ஆட்சி, பெப்ருவரி 22 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக வழிநடத்தி ஆட்சிக் கவிழ்ப்பை கொண்டுவந்த பாசிச சக்திகளையும் திரட்டுகிறது. செவ்வாயன்று உக்ரேனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர், ஆண்ட்ரி பருபிய், “மைதான் தன்னார்வ சுய பாதுகாப்பு படைகளை உள்ளடக்கிய” ஒரு தேசிய பாதுகாப்புப் படைப்பிரிவு கியேவில் இருந்து டோனெட்ஸ்க் பகுதிக்கு சென்றுள்ளதாக கூறினார். கியேவில், ஐரோப்பிய ஒன்றிய சார்பு எதிர்ப்பிற்கு வழிநடத்திய, “மைதான் தன்னார்வ சுய பாதுகாப்பு படைகள்” பாசிச Right Sector தலைமையிலான ஆயுதக்குழுக்களாகும். பாசிச குண்டர்கள் வழிநடத்தும் இந்த இராணுவச் செயற்பாட்டிற்கு வாஷிங்டன் முழுமையாக ஆதரவு கொடுக்கிறது; இது பல்லாயிரக்கணக்கான கிழக்கு உக்ரேன் குடிமக்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துகிறது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே வன்முறைத் தாக்குதலுக்கு வாஷிங்டனுடைய ஆதரவை அடையாளம் காட்டினார். அமெரிக்கா “பலத்தை பயன்படுத்துவது ஒரு விருப்புரிமை அல்ல” என்று ஒப்புக் கொண்டாலும், எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு அவர் இழிந்த முறையில் ஒப்புதல் கொடுத்தார். “அப்படி இருந்தும், உக்ரேனிய அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு உள்ளது” என்று அவர் அறிவித்தார்; “சட்டம் ஒழுங்கு அளிக்கப்பட வேண்டும், கிழக்கு உக்ரேனிய ஆத்திரமூட்டுதல்கள் அரசாங்கங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையை தோற்றுவிக்கின்றன. உக்ரேன் பெரும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது, பல நாட்களாக பூசல்களை சமாதானமாக தீர்க்க, பொதுமன்னிப்பு, உரையாடல் மூலம் முயன்று வருகிறது” என்றார். இச்செயற்பாடுகள் நேரடியாக திட்டமிடப்பட்டு ஒபாமாவின் வெள்ளைமாளிகை, CIA ஆகியவற்றின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறது என்பதை கார்னே தெளிவுபடுத்தினார். CIA இயக்குனர் பிரென்னன் கடந்த வார இறுதியில் கியேவிற்கு பயணித்திருந்தார். பிரென்னன் மற்றும் பிற அதிகாரிகள் கியேவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் என்ன கூறினர் என கேட்கப்பட்டதற்கு கார்னே அப்பட்டமாக விடையிறுத்தார்: “உக்ரேனிய அரசாங்கம் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம், ஏனெனில் இது ஆயுதமேந்திய போராளிகளால் ஏற்படுத்தப்படும் நிலை... நாம் தெளிவாக இருப்போம்: வன்முறை கூடாது என்பதை இந்த ஆயுதமேந்திய துணை படைகளுக்கு உறுதிபடுத்துவதற்கு, இந்த ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் கட்டிடங்களைக் காலி செய்து ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்போம்”. மக்கள் மீது ஹெலிகாப்டர் துப்பாக்கிகள் சுடுகையிலும், டாங்குங்கள் பெரிய நகரங்களை சுற்றி வருகையிலும், கியேவ் ஆட்சியின் “பொறுப்பு”, “உரிய எச்சரிக்கை” ஆகியவற்றை கார்னே பாராட்டி இருப்பது, ஒரு வெறுக்கத்தக்க பொய் ஆகும். நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் உக்ரேனிய பாதுகாப்புப் பிரிவின் முதல் துணைத் தலைவர் ஜெனரல் வாசிலி க்ரூடோவ், தன்னுடனும் மற்றும் ஐயத்திற்கு இடமின்றி கியேவில் உள்ள தங்கள் கைக்கூலிகளுடனும், பிரென்னன் இன்னும் பிற அமெரிக்க அதிகாரிகள் விவாதித்ததை, அவர் சுருக்கமாகக் கூறினார்: “அவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்; ஆயுதங்களை அவர்கள் களையவில்லை என்றால் அவர்கள் அழிக்கப்பட வேண்டும்” என்றார். எதிர்ப்பாளர்களை “வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள்”, “ரஷ்ய ஒற்றர்கள்” என்று கண்டித்த அவர், அரசாங்கக் கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு இன்னும் ஒரு எச்சரிக்கை என்பது “அதிக மனிதாபிமானம் ஆகும்” என்றார். தன்னுடைய நடவடிக்கை அதிக குடிமக்கள் இறப்புக்களை ஏற்படுத்தலாம் என்று க்ரூடோவ் குறிப்பிட்டார். “துரதிருஷ்டவசமாக, நாம் கடின நிலைமையை எதிர்கொள்கிறோம், ஏனெனில் தங்கள் திட்டத்தை அடைந்துள்ளவர்கள் மனிதக் கேடயங்களுக்குப் பின்னால் மறைந்துள்ளனர். அவர்களில் சிலர் இழிந்த முறையில் தங்கள் நலன்களுக்கு உழைக்கின்றனர், ஆனால் பலரும் பிரச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் உள்ளனர்.” க்ரூடோவின் கருத்துக்கள், வலது பிரிவு நட்பு அமைப்பு என்னும் அவருடைய அரசியல் முன்தோன்றல்களால் செய்யப்பட்ட குருதி கொட்டிய படுகொலைகளை நினைவிற்குக் கொண்டுவருகின்றன – உக்ரேனிய பாசிஸ்ட்டுக்கள், இரண்டாம் உலகப்போரின்போது நாஜி படைகளுடன் ஒத்துழைத்தவர்கள். கிழக்கு உக்ரேனில் வரவிருக்கும் படுகொலை அச்சுறுத்தல்கள் மேற்கத்திய சக்திகளின் முழுப் பாசாங்குத்தனத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்பு அமைப்புக்களும் சில வாரங்களுக்கு முன்பு யானுகோவிச் செய்தார் என்று அவை குற்றம் சாட்டியதைத்தான் இப்பொழுது துல்லியமாக ஏற்பாடு செய்து ஆதரிக்கின்றன -- அரசாங்க எதிர்ப்பாளர்கள் மீது வன்முறைத்தாக்குலை நடத்துதல். பெப்ருவரி மாதம் அவர்கள், அரசாங்க எதிர்ப்புக்களை அடக்கும் யானுகோவிச்சின் முயற்சிகள், அவருடைய ஆட்சிக்கு நெறித்தன்மையை இழக்கச் செய்துவட்டது, எனவே அதை அகற்றுவதை நியாயப்படுத்தமுடியும் என்றனர். (இதைபோல்தான் அவர்கள் எதிர்ப்பாளர்கள் மீது அரசாங்கம் வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்வதை எதிர்ப்பது “மனித உரிமைகள்” எனக்கூறி, லிபியாவில் ஆட்சிமாற்றத்தையும், சிரியாவில் உள்நாட்டுப்போரையும் தூண்டினர்). யானுகோவிச் அரசாங்க எதிர்ப்புக்களுக்கு தன்னுடைய விடையிறுப்பை பொலிஸ் நடவடிக்கை மூலம் கொடுத்தார் என்றால், அமெரிக்கா கிழக்கு உக்ரேனில் ஹெலிகாப்டர், டாங்குகள் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குண்டு வீசுவதை மேற்பார்வையிடுகிறது. வன்முறைக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவு என்பது, உக்ரேனில் அவை தலையிடுவது உக்ரேனின் ஜனநாயக உரிமைகளுக்கான அக்கறையினால் தூண்டுதல் பெறவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. ஆரம்பத்தில் இருந்தே, ரஷ்யாவுடன் மோதலை ஏற்படுத்தும் நோக்கில் இது உக்ரேனில் ஒரு உள்நாட்டுப் போரைத்தூண்டும் நோக்கத்தை கொண்டிருந்தது, அதையொட்டி கியேவில் பாசிசத் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பை கொண்டுவந்தபின், வாஷிங்டன், பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை இப்பொழுது கிழக்கு உக்ரேனில் மக்களுடைய தவிர்க்க முடியாத எதிர்ப்பை ரஷ்ய சதி என்று கண்டிக்கின்றன, இப்பொய்யை பயன்படுத்தி வன்முறையை தீவிரமாக்குகின்றன. மேற்கின் போர்வெறிக்கு சரியான உதாரணம், ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் ரஷ்யா “ரஷ்ய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறையான, சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்” என்று கோரியிருப்பதுதான். உண்மையை தலைகீழாக வைத்து, நேட்டோ தலைவர் ஆண்டரஸ் போக் ராஸ்முசென் ஆத்திரமூட்டும் வகையில் “ரஷ்ய நெருக்கடியை குறைக்க வேண்டும், தன் படைகளை பின் வாங்க வேண்டும்.... உறுதியற்ற தன்மையை ஆக்குவதை நிறுத்த வேண்டும், தான் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் வன்முறைச் செயல்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். அமெரிக்காவும் ஐரோப்பிய அதிகாரிகளும் கிழக்கு உக்ரேனில் எதிர்ப்புக்களுக்கு ரஷ்யா ஏற்பாடு செய்கிறது என்ற கூற்றுக்களை உறுதிபடுத்த சான்றுகள் எதையும் முன்வைக்கவில்லை. நிருபர்கள், கிழக்கு உக்ரேனில் ரஷ்யா ஈடுபாடு கொண்டுள்ளது என்பதற்கு அவரிடம் சான்றுகள் உள்ளதா எனக் கேட்டதற்கு, ராஸ்முசென் அறிவித்தார்: “நாங்கள் எப்பொழுதும்.... உளவுத்துறை நடவடிக்கைகள் பற்றி கருத்துக்கூறுவதில்லை, ஆனால் நாம் காணக்கூடியதில் இருந்து ரஷ்யா இதில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளது என்பது தெரிகிறது” என்றார். நேட்டோ ஏற்கனவே இன்னும் கப்பல்களையும் விமானங்களையும் ரஷ்யாவின் எல்லைகள் அருகே நிலைநிறுத்தியுள்ளது; நேட்டோ தூதர்கள் இன்று “கிழக்கு நட்பு அமைப்புக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பயிற்சிகள், தற்காலிகமாக விமானங்கள், கப்பல்கள் மற்ற நட்பு அமைப்புக்கள் மூலம் அனுப்பப்பட வேண்டும்” என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மந்திரிகள் சந்தித்த, ராஸ்முஸன், நேட்டோவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றார். ரஷ்யாவை ஆத்திரமூட்டும் வகையில் இலக்கு கொண்ட அவர், இரு அமைப்புக்களின் துரித நடவடிக்கை படைகள் இன்னும் வாடிக்கையாக கூட்டுப் பயிற்சிகள் நடத்த வேண்டும் என்றார். ரஷ்யா தன்னுடைய பங்கிற்கு மேற்கத்திய ஆதரவு ஆட்சியை குற்றம் சாட்டி, உள்நாட்டுப்போர் ஆபத்து பற்றியும் எச்சரித்தது. “நாடு ஒரு உள்நாட்டுப்போர் விளிம்பில் உள்ளது. இது மிகவும் வருத்தம் தருகிறது” என்று மெட்வடேவ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதினார். புதிய அதிகாரிகள் தாங்கள் கட்டுப்படுத்த முடியாத மக்கள் மீது வன்முறை அலையைக் கட்டவிழ்த்துள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார். “இச்சட்டவிரோத ஆட்சியாளர்கள் அவர்கள் இழிந்த முறையில் ஆயுதமேந்திய எழுச்சியில் பங்கு பெற்றபோது மிதித்த ஒழுங்கை மீட்க முயல்கின்றனர்” என்று அவர் எழுதினார். ரஷ்ய ஆயுதப் படைகள் வெளிப்படையாக அப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பு குறித்த நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை விடுகின்றன. திங்களன்று, ரஷ்ய போர் விமானம் ஒன்று கருங்கடலில் அமெரிக்க கடற்படை அழிப்புக் கப்பல் மீது பறந்தது என்று பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது. |
|