சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Inequality and the drive to war

சமத்துவமின்மையும், யுத்த உந்துதலும்

Andre Damon
16 April 2014

Use this version to printSend feedback

அமெரிக்காவிலுள்ள அதிக வருவாய் ஈட்டும் முதல் 100 பெருநிறுவன தலைமை செயலதிகாரிகள், 2013இல் 13.9 மில்லியன் டாலருக்கு, 9 சதவீத சராசரி சம்பள உயர்வைப் பெற்றிருப்பதாக செயலதிகாரிகளின் ஊதிய ஆய்வு நிறுவனம் Equilar கடந்த வாரம் அறிவித்தது.

அமெரிக்க ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகமும் இந்த முறை ரஷ்யாவிற்கு எதிராக ஒரு புதிய யுத்த பிரச்சார ஓட்டத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது. சேர்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா மோதல்களில் செய்யப்பட்டதைப் போலவே, அமெரிக்க ஊடகங்கள் உக்ரேனிய நெருக்கடி மீதும் வெட்கமின்றி பொய்களைப் பரப்பி வருகின்றன. எப்போதும் போல, எதுவும் புறநிலைரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை, எதிராளிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிக்க எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படுவதில்லை, எந்தவொரு வரலாற்று பின்புலமும் வழங்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, இராணுவ தலையீட்டுக்கு மக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த, அவர்களை மிரட்டவும், முடக்கவும் அங்கே முயற்சி செய்யப்படுகிறது.

புதிய யுத்தங்களில் அமெரிக்கா எந்த ஒழுங்குமுறையில் அச்சுறுத்துகிறதோ அல்லது பிரவேசிக்க தலைபடுகிறதோ, அது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாடற்ற மற்றும் சூறையாடும் புவிசார் அரசியல் நோக்கங்களின் ஒரு செயல்பாடாகும். அது சமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சியால் தோற்றுவிக்கப்பட்ட ஆழ்ந்த சமூக பதட்டங்களிலும் வேரூன்றி உள்ளது.

சமூக கோபங்களை வெளியில் திசைதிருப்பவும், ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக அவற்றை வழிநடத்தவும் யுத்தம் நீண்டகால சேவை செய்து வந்துள்ளது. உரிமைகள் சாசனத்தை எழுதிய ஜேம்ஸ் மேடிசன், “எப்போதெல்லாம் கலகம் உண்டாகிறதோ, ஒரு யுத்தத்தைத் தூண்டிவிடு என்பது ரோமானியர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் ஒரு பழமொழியாகும்," என்றார்.

பிரதான தொழில்துறைமயமான சக்திகளில் மிகவும் சமநிலையின்றி உள்ள அமெரிக்கா, ஒரு சமூக வெடியுலையாக உள்ளது. பொருளாதார மந்தநிலைக்கு இடையே, மக்களில் மிகப் பெரும்பான்மையினர் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஒரு வரலாற்று பின்னடைவைக் கண்டுள்ளனர். ஆனால் பணக்காரர்களும், பெரும் பணக்காரர்களும் முன்பில்லாதளவிற்கு மிகப் பெரும் செல்வவளத்தைத் திரட்டியுள்ளனர்.

Equilar அறிக்கையில் காட்டப்பட்ட தலைமை செயலதிகாரிகளின் சம்பள உயர்வானது, அந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு வெளிப்பாடாகும். மிகப்பெரும் மென்பொருள் நிறுவனமான ஓரக்கல் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பணக்கார மனிதருமான லேரி எல்லிசன், 2013இல் சம்பளமாக மற்றும் போனஸாக வீட்டுக்கு 78.4 மில்லியன் டாலர் எடுத்து சென்று, மீண்டுமொருமுறை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். எல்லிசனின் மொத்த சொத்து மதிப்பு 48.8 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 100 தனித்தனி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். 2012 இல், எல்லிசன் அவரது நூறு மில்லியன் டாலர் மதிப்பிலான ரியல் எஸ்டேட் கையிருப்புகளில் கூடுதலாக சேர்க்க, ஹவாய் தீவின் லனாயில் 98 சதவீத நிலங்களை விலைக்கு வாங்கினார்.

எல்லிசன் ஓர் ஒட்டுமொத்த சமூக அடுக்கின் பிரதிநிதியாவார். பெரும் பணக்காரர்களின் வருவாயில் ஏற்பட்ட பிரமாண்ட அதிகரிப்பு, அவர்களின் மொத்த செல்வவளத்தின் வேகமான மேலதிக அதிகரிப்போடு இணைந்துள்ளது. 1980களில் இருந்து, வருவாய் ஈட்டுவோரில் மேலே உள்ள 1 சதவீதத்தினரைத் தவிர்த்து, மக்கள் தொகையின் ஒவ்வொரு பகுதியினரின் செல்வவளத்தின் பங்கு கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அந்த மேலே உள்ள 1 சதவீதத்தினரின் செல்வம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர்கள் எம்மானுவேல் சாயிஜ் மற்றும் கேபிரியல் ஜூக்மேன் ஆகியோரால் இந்த மாதம் பிரசுரிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

செல்வவளமையின் மிகப் பெரும் உயர்வு மேலே மிக மேலே உள்ளவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது. செல்வவளத்தில் மிகச் செல்வசெழிப்பான 0.5 சதவீதத்தினரின் பங்கு, 1978இல் ஏறக்குறைய 17 சதவீதத்தில் இருந்து 2012இல் 35 சதவீதத்திற்கு சற்று குறைவான அளவிற்கு இரண்டு மடங்காகி உள்ளது. மேலே உள்ள 0.1 சதவீதத்தினர் (மக்கள்தொகையில் ஆயிரத்தில் ஒருவர்) இப்போது மொத்த செல்வவளத்தில் 20 சதவீதத்திற்கு கூடுதலாக கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்.

செல்வங்கள் ஒரே துருவத்தில் குவிவது, மறுபுறம் சீரழியும் சமூக நிலைமைகளோடு பிணைந்துள்ளது. ஓர் ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் வறுமை மற்றும் வேலையின்மைக்குள் தள்ளப்பட்டுள்ளன. 25இல் இருந்து 34 வயதிற்குள்ளான ஏறத்தாழ 16 சதவீத இளைஞர்கள், பெடரலின் நிர்ணயிக்கப்பட்ட வறுமை விகிதத்தையும் விட குறைந்த வருவாய் ஈட்டுகின்றனர். ஒப்பிட்டுப் பார்த்தால், 2010இல் அதே வயது வரம்பில் 10 சதவீதத்தினர் வறுமையில் இருந்தனர். இளைஞர்களின் குடும்ப சராசரி வருமானம், நிஜமான வரையறைகளில், 2000இல் இருந்ததை விட குறைவாக 8000 டாலராக உள்ளது.

2008 பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி தொடங்கி ஐந்தரை ஆண்டுகள் ஆன பின்னரும், மக்கள் தொகையின் பெரும்பான்மையினர், இளைஞர்களும் முதியோரும், முகங்கொடுத்து வரும் சமூக நிலைமையானது, பொருளாதார பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியங்கள் மற்றும் முன்பில்லாதளவிற்கு கடன் அளவுகளோடு குணாம்சப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக சமத்துவமின்மையின் இந்த அளவுகள் ஜனநாயகத்தோடு பொருந்துவன அல்ல. அரசியல் அமைப்புமுறையோ முன்பிருந்ததை விட மேலதிகமாக மிக மிக அப்பட்டமாக ஓர் ஒட்டுத்தனமான நிதியியல் செல்வந்த தட்டின் கருவியாக செயல்படுகிறது.

இரண்டு பெரு வணிக கட்சிகளும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுமே, செல்வ வளத்தை அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு மறுபகிர்வு செய்யும் ஒருமனதான கொள்கையை பின்தொடர்கின்றன. இதற்கிடையில் 2014 இடைதேர்தல்களின் அணுகுமுறையில், ஒபாமா நிர்வாகமும், ஜனநாயக கட்சியினரும் தங்களை சமத்துவமின்மையின் எதிர்ப்பாளர்களாக காட்ட முயன்று வருகின்றனர். அவர்கள் காட்டும் "முற்போக்கான" நிகழ்ச்சிநிரலில், குறைந்தபட்ச ஊதியங்களில் ஒரு மிதமான உயர்வும் — அது நிஜமான வரையறைகளில், 1968இல் இருந்ததை விட ஒரு மட்டத்திற்கு குறைவாக இருக்கிறது — நீண்டகால வேலையின்மைக்கான உதவிகளின் ஒருசில மாதகால நீடிப்பும் உள்ளடங்கி உள்ளது. இந்த நீண்டகால வேலையின்மைக்கான உதவிகளை அவர்களே தான் கடந்த ஆண்டு இறுதியில் காலாவதியாக அனுமதித்திருந்தார்கள். அத்தோடு பெண்களுக்கு சம ஊதியம் என்ற ஊக்குவிப்பு மூன்றாவது திட்டமாக உள்ளது.

பரந்தளவிலான சமூக நெருக்கடியைத் தீர்க்க இத்தகைய பரிந்துரைகள் முற்றிலும் போதுமானவை அல்ல என்பதோடு, அவற்றை நடைமுறைப்படுத்தும் எந்தவொரு ஆழ்ந்த எண்ணமும் இல்லாமல் அவை முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் பாரிய வேலையின்மையும் மற்றும் குறைவூதியமும், பெருநிறுவன இலாபங்களை ஊக்குவிக்கும் ஓர் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் முக்கிய உட்கூறுகளாகி உள்ளன.

நீதிமன்றங்களும் சீர்தூக்கி பார்க்கப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க சமூகத்தின் ஜனநாயக மூடுதிரையின் மற்றொரு அடுக்கை அகற்றும் விதத்தில், அரசியல் பிரச்சாரங்களுக்கு தனிநபர்கள் வழங்கும் நன்கொடையின் மொத்த அளவின் வரம்பை நீக்கி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.

ஆளும் வர்க்கம் வெளியுறவு கொள்கைகளிலும் அதே கொடூரத்தோடும், குற்றத்தன்மையோடும் செயல்பட்டு வருகிறது. அசாதாரண அடாவடித்தனத்தோடு, உக்ரேனில் பாசிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு வலதுசாரி ஆட்சிசதி ஒழுங்கமைக்கப்பட்டு, அது அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இராணுவமயமாக்கவும், ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் யுத்த அச்சுறுத்தல் விடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.

ஒரு புதிய யுத்த பீதி வெறுமனே சமூக பதட்டங்களைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது ஜனநாயக உரிமைகள் மீது புதிய தாக்குதல்களுக்கான, அரசின் பொலிஸ் அதிகாரங்களை மேலதிகமாக கட்டியமைப்பதற்கான ஒரு விளக்கத்தையும் வழங்குகிறது. மக்களை வேவு பார்ப்பதை மற்றும் அமெரிக்க பிரஜைகளைப் படுகொலை செய்வதை உரிமையாக அறிவிக்கும் ஓர் அரசாங்கத்தால், அனைத்து அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

பெருமளவில் செல்வவளங்கள் நிதியியல் பிரபுத்துவத்தால் ஏகபோகமாக்கப்படுவது, ஆதாரவளங்களை அறிவீனமாக ஒதுக்கீடு செய்வதாகும் மற்றும் மனிதயினத்தின் எதிர்காலத்திற்கு அதுவொரு அச்சுறுத்தலும் ஆகும். உலக சக்திகளுக்கிடையிலான ஓர் இராணுவ மோதலால் ஏற்படக்கூடிய யுத்தம் மற்றும் அணுஆயுத மனிதயின படுகொலைகளுக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மீதிருக்கும் நிதியியல் செல்வந்த மேற்தட்டின் இரும்புப்பிடியை உடைக்கும் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும்.

இது, உண்மையான ஜனநாயக மற்றும் சமத்துவவாத அஸ்திவாரங்களின் மீது சமூகத்தை மறுசீரமைப்பதற்கான போராட்டத்திற்கு அதாவது சோசலிச போராட்டத்திற்குதொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.