தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் US-backed regime drops deadline against east Ukraine protesters, but threat of war remains அமெரிக்க ஆதரவு ஆட்சி, கிழக்கு உக்ரேன் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான காலக் கெடுவை கைவிடுகிறது; ஆனால் போர் அச்சுறுத்தல் தொடர்கிறது
By Mike Head Use this version to print| Send feedback மேற்கத்திய ஆதரவு கியேவ் ஆட்சி கிழக்கு உக்ரேனில் அரசாங்க அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்ப்பாளர்களுக்கு பின்வாங்க 48 மணி நேர காலக்கெடு கொடுத்த பின்னரும், ஓர் உள்நாட்டுப் போர் ஆபத்து மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலில் ரஷ்யாவுடன் போருக்கான ஆபத்துக்கள் உக்ரேன் மக்களின் தலைமீது இன்னமும் தொங்கிக்கொண்டிருக்கிறது. காலக்கெடு முடிந்தவுடன் அமெரிக்க சார்பு ஆட்சியின் இடைக்காலப் பிரதம மந்திரி ஆர்சென்யி யாட்சென்யுக் எதிர்ப்புக்களை குறைக்கும் வகையில், நாட்டில் பிராந்தியத் தன்னாட்சிக்கு கருத்து வாக்கெடுப்புக்கு அனுமதிக்க அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் முயல்வதாக உறுதியளித்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரேனின் இடைக்கால உள்நாட்டு மந்திரி ஆர்சென் அவகோவ் கிழக்கே உள்ள முக்கிய நகரங்களான டோனெட்ஸ்க், கார்க்கிவ் மற்றும் லுகன்ஸ்க்கிற்கு கட்டிடங்களை விட்டு அகலுவதற்கு 48 மண நேரம் முன்னறிவிப்புக் கொடுத்தார். கியேவில் ஜனாதிபதி ஆட்சியின் துணைத் தலைவரான ஆண்ட்ரி சென்சேச்சென்கோ ஆட்சியின் பாதுகாப்புப் படைகள் “கொல்லுவதற்கு சுடும்” என்று அறிவித்தார். நேற்று யாட்சென்யுக் இந்த இறுதி எச்சரிக்கையில் இருந்து தான் “பலவந்தமான காட்சிகளுக்கு எதிரானவர்” என்று கூறி பின்வாங்கினார், ஆனால் “எதற்கும் ஒரு எல்லை உள்ளது” என்றார். கியேவில் உள்ள தீவிர வலது ஆட்சி இரத்தக்களரி பாதைக்கு அச்சுறுதுத்துவதின் மூலம், உக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆட்சி கவிழ்ப்பு செயற்பாட்டின் அப்பட்டமான பாசாங்குத்தனம், இரட்டை வேடம் ஆகியவை வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றுவதற்கு நவ பாசிச சக்திகளை அதிர்ச்சித் துருப்புக்கள் போல் பயன்படுத்தியபின் – யானுகோவிச்சின் பாதுகாப்புப் படைகளை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க பயன்படுத்தியதால் நெறியை இழந்துவிட்டார் என்று கூறி– தேர்ந்தெடுக்கப்படாத, மேற்கத்திய சக்திகளில் நிறுவப்பட்ட ஆட்சி கவிழ்ப்பை எதிர்க்கும் மக்களைப் படுகொலை செய்யும் அதன் விருப்பத்தை அறிவித்துள்ளது. மேற்கத்தைய சக்திகளின் ஜனநாயகத்திற்கு பாடுபடுபவர்கள் என்னும் கூற்றில் உள்ள மோசடி, கிழக்கு உக்ரேன் மக்களுக்கு தெரியாமல் போகவில்லை. ஒரு கார்க்கிவ் மாணவரான அலெக்சியை, ரஷ்ய தொலைக்காட்சி நிலையம் பேட்டி கண்டபோது, “கிரிமியாவில் மக்கள் மிகப் பெரும்பான்மையில் ரஷ்யாவிற்கு திரும்ப வாக்களித்தனர்... ஆனால் மேற்கு அதை அரசியலமைப்பிற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது எனக் கூறுகின்றது. உக்ரேனிலேயே ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு எவரும் உண்மையில் விரும்பாத கொள்கைகள் திணிக்கப்படுகின்றன. மேலும்... இது ஜனநாயகம் என்றும் கூறப்படுகிறது!” ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றால் திணிக்கப்பட்ட மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்கு மக்களின் எதிர்ப்பு, கியேவ் ஆட்சியில் பிணைந்துள்ள பாசிச சக்திகளுக்கு ஆழ்ந்த விரோதப்போக்கு, பெரும்பாலன மக்கள் ரஷ்ய மொழி பேசும் பிராந்தியத்தில் ரஷ்ய மொழி அடக்கப்படுவதற்கு எதிர்ப்பு, ரஷ்ய செய்தி ஊடகத்தை அணுகுதலுக்கு விரோதம் என்பதாலும் எரியூட்டப்பட்ட சீற்றத்தின் விளைவாக, நாட்டின் தொழில்துறை, சுரங்கத் துறையின் இதயத்தானமாகிய கிழக்கு உக்ரேனில் பரவலாக எழுந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பின் பெருகிய சான்றை ஒட்டி ஆட்சியின் காலக்கெடு கைவிடப்பட்டது. யாட்சென்யுக் இன்னும் பிற அதிகாரிகள் நேற்று டோனெட்ஸ்க்கிற்கு பயணித்தபோது, அவர்கள் எதிர்ப்பாளர்களை சந்திக்கவில்லை, ஆனால் மாறாக ஆட்சியால் சுமத்தப்பட்டுள்ள கிழக்கு உக்ரேனிய ஆளுனர்களையும் மேயர்களையும் மற்றும் முக்கிய வணிகர்களையும், குறிப்பாக ரினட் அக்மெடோவ், உக்ரேனின் பெரும் செல்வந்தரையும் சந்தித்தனர். பேச்சுக்களில் பங்கு பெற்றவர்களில் நியமிக்ப்பட்ட பிராந்திய கவர்னரும், பில்லியனரும் உலோக வர்த்தக பெரும் செல்வந்தர் செர்ஜி ஏ. டாருட்டாவும் இருந்தார்; இவர்களுடைய அலுவலகங்கள் தன்னைத்தானே டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு என அறிவித்துக் கொண்டவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன. EU, IMF கோரிக்கைகளை எதிரொலிக்கும் வகையில், யாட்சென்யுக் தேசிய ஐக்கியத்திற்கு தன் செய்முறையை விவரித்தார்: “நாம் மக்களிடம் இது கடுமையானது என்பதை அறிவோம் என சொல்ல வேண்டும், ஆனால் வருங்காலத்தில் எப்படி வேலைகளை அடைவது, ஊதியங்களை உயர்த்துவது, முதலீட்டாளர்களை ஈர்ப்பது, அதிகாரத்தை இன்னும் பரவலாக பகிர்வது, மக்கள் வாழ்க்கையில் திருப்தியாக இருக்க என்ன செய்வது என்பதை அறிவோம்.” “கடுமையான” நடவடிக்கைகள் என்று IMF கூறுவதிலுள்ள உண்மை, 27 பில்லியன் டாலர்கள் கடனுக்கு ஈடாக, எரிவாயு மற்றும் வெப்பமேற்றுதல் விலைகளில் ஏற்கனவே 120% உயர்த்தப்பட்டுள்ளது, சமூகநல செலவுகள் குறைக்கப்பட்டது ஆகியவை அடங்கும், இதில் இலவச மருத்துவ உதவி கைவிடப்பட்டுள்ளது மற்றும் பல மருத்துவமனைகள் மூடப்பட்டது என்பவை அடங்கும். ஏற்கனவே அசோசியேட்டட் பிரெஸ் (AP), பிராந்தியத்தின் பல அரச ஆதரவு கனரகத் தொழில்கள் மூடப்பட வேண்டும் என்னும் IMF உடைய தவிர்க்க முடியாத தேவைகள் குறித்து “நீடித்த அநீதி உணர்வு” உள்ளது என்று தகவல் கொடுத்துள்ளது. சோவியத் ஒன்றியம் 1991ல் கலைக்கப்பட்டதில் இருந்து பல்லாயிரக்கணக்கான வேலைகள் ஏற்கனவே இத் துறைகளில் அழிக்கப்பட்டுள்ளன, ஊதியங்கள் கிட்டத்தட்ட பட்டினி மட்டங்களுக்கு கீழே சரிந்துவிட்டன. கியேவ் ஆட்சி, நவ நாஜி ஸ்வோபோடா கட்சியில் இருந்து சில நபர்களை சேர்த்துள்ளது மற்றும் பாசிச வலது பிரிவு போராளிகளை அது நம்பியிருப்பது குறித்து மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆட்சியின் புதிய தேசிய பாதுகாப்புப் படைகளில் பாசிசக் குண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்; இதில் சில பகுதிகள் கிழக்கு உக்ரேனில் திட்டமிடப்பட்டுள்ள வன்முறையை செயல்படுத்த சேர்க்கப்பட்டுள்ளன. டோனெட்ஸ்க்கில் எதிர்ப்பாளர்கள் “உக்ரேனில் பாசிசம் பற்றி நாங்கள் அஞ்சுகிறோம்” என்ற கோஷ அட்டைகளை ஏந்தியிருந்தனர். ஆட்சி ஒரு “பாசிச இராணுவக் குழு” என்று கண்டிக்கப்படுகிறது என்று AP குறிப்பிடுகிறது; “உக்ரேனிய தேசியவாதிகள் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த மரபியம் பற்றி பல நேரமும் குறிப்புக்கள் வந்துள்ளன” என்றும் அது கூறுகிறது. AP தொடர்கிறது: “முக்கிய உக்ரேனிய தேசியவாத எழுச்சியாளர் ஸ்டீபன் பண்டேரா, சோவியத் ஒன்றியத்தின்மீது படையெடுக்க நாஜிக்களுக்கு உதவியவரின் பெயர் தலைநகர் கியேவில் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களால் ஒரு சாபப் பெயராக பயனபடுத்தப்படுகிறது.” உள்ளூர் செய்தி ஊடகத் தகவல்களின்படி, உக்ரேனின் விசேட ஆல்பா படைப்பிரிவு, டோனெட்ஸ்க்கில் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்த கட்டிடங்களை முற்றுகையிட வேண்டும் என்னும் ஆணைக்கு கீழ்ப்படிய மறுத்துள்ளது. அதிகாரிகளிடம் ஒரு தளபதி, அவருடைய வீரர்கள் கடத்தப்பட்டவர்களை மீட்பது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது ஆகியவற்றைத்தான் செய்வர், சட்டப்படிதான் நடந்து கொள்வர் என்று தெரிவித்தார் என கூறப்படுகிறது. இதேபோல் கார்க்கிவில் ஒரு உள்ளூர் பொலிஸ் தலைவர், எதிர்ப்பாளர்கள் வைத்திருக்கும் கட்டிடத்தை முற்றுகையிட கியேவ் அதிகாரிகளால் தான் ஏமாற்றப்பட்டு டஜன் கணக்கானவர்களை ஆபத்தான ஆயுதமேந்திய கொள்ளையர் என்று பிடித்ததாகக் கூறினார்; இதையொட்டி அவர் இராஜிநாமா செய்துவிட்டார். மக்கள் எதிர்ப்பிற்கு தளத்தில் ஆதாரங்கள் இருந்தபோதிலும்கூட, வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிரான அதன் அச்சுறுத்தல் முழக்கத்தை அதிகரித்துள்ளது; ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கிழக்கு உக்ரேனை இணைக்கத் தயாரிக்கிறார் மற்றும் எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது. எந்தவித ஆதாரமும் இன்றி மாஸ்கோ ஈடுபாட்டிற்கு "பெரும் சான்றுகள்" இருப்பதாக கூறும் அமெரிக்க உதவி வெளிவிவகார செயலர் விக்டோரியா நூலண்ட் புதன் அன்று காங்கிரஸ் குழு ஒன்றிடம் கிழக்கு உக்ரேனில் கட்டிடங்களை ஆக்கிரமித்தல் “மிகவும் கவனத்துடன், திட்டமிடப்பட்டு, நல்ல இலக்குடைய நடவடிக்கைகள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றது” என்றார். “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்” தடுப்பின்றி தொடர்ந்தால் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். வியாழன் அன்று நேட்டோவின் தலைமை தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ் வர்த்தக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தொகுப்பு ஒன்றை வெளியிட்டு கிட்டத்தட்ட 40,000 ரஷ்ய துருப்புக்கள், நீண்ட டாங்கு வரிசைகள், கவச வாகனங்கள், பீரங்கிகள், விமானங்கள் ரஷ்யாவின் உக்ரேனிய எல்லையில் இருப்பதாகக் காட்டினார். தன்னுடைய ட்விட்டரில்: “உக்ரேனை சுற்றியுள்ள ரஷ்யப் படைகள் படையெடுப்பதற்கு முற்றிலும் ஆயுதங்களை/திறனைக் கொண்டுள்ளன. பகிரங்கமாக மறுக்கப்படுவது முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சித்திரங்கள் உண்மைக் கதையை கூறுகின்றன.” என அவர் எழுதியுள்ளார். ஆனால் ரஷ்ய இராணுவ தலைமை அதிகாரி ஒருவர், அப்படங்கள் ஆகஸ்ட் 2013ல் எடுக்கப்பட்டவை, அசாதாரண இராணுவ நடவடிக்கைகள் எதையும் காட்டவில்லை என வியாழன் அன்று தெரிவித்தார். ரஷ்யா இராணுவத்தை திரட்டுகிறது என்று குற்றம் சாட்டுகையில், அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் இந்த பிராந்தியத்தில் கட்டமைப்பை தொடர்கின்றன. சமீபத்திய நடவடிக்கையில், வெள்ளியன்று USS Donald Cook, Aegis ஏவுகணைகளைக் கொண்ட கப்பல் கருங்கடலில் நுழைந்துள்ளது; இது ரஷ்ய கடற்படையின் முக்கிய தாயகம் ஆகும். அடுத்த வாரத்திற்குள் அத்துடன் பிரெஞ்சு கண்காணிப்புக் கப்பல் Dupuy de Lome, மற்றும் அழிக்கும் கப்பல் Dupleix ம் இணைந்து கொள்ளும். கிழக்கு உக்ரேனில் எதிர்ப்புக்களை “கவனத்துடன் ஏற்பாடு” செய்ததற்கு மாறாக, புட்டின் அரசாங்கம் எழுச்சியை எதிர்கொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை பிரிவினைக் கோரிக்கைகளை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் கியேவ் இராணுவ ஆட்சி குழுவை அங்கீகரிக்கும் வகையில் நகர்கிறது. நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆட்சியின் நான்கு வழி பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 17ல் ஜெனீவாவில் நடைபெறும் என்று உறுதிப்படுத்தபட்டுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம், வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ், “உக்கேரினிய பிராந்தியங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடலுக்கும், மற்றும் விரிவான அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கும்” கியேவ் ஆட்சிக்கு ஊக்கம் கொடுக்க அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரியுடன் தொலைபேசியில் பேசினார் என்று கூறியுள்ளது. மேலும் நேற்று புட்டின், ரஷ்யா அதன் ஐரோப்பிய எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு தன் பொறுப்புகளை நிறைவேற்றும், உக்ரேனுக்கு வினியோகங்களை நிறுத்தும் திட்டம் இல்லை என்றும் கூறினார் – இது உக்ரேன், ரஷ்ய எரிவாயுவிற்கு கொடுக்க வேண்டிய 2.2 பில்லியன் டாலர்கள் கடனை கொடுக்கத் தவறியதால் ஐரோப்பாவிற்கு அளிப்புக்கள் பாதிக்கப்படும் என்று விடுத்த எச்சரிக்கைக்கு மறுநாள் வந்துள்ளது. அப்படி இருந்தும், ஒபாமா நிர்வாகம் அதன் திமிர்த்தன வனப்புரையை தொடர்கிறது, உதவிச் செயலர் நூலண்ட், முன்கூட்டியே மோதலை முடிக்கும் எந்த வாய்ப்பையும் நிறுத்திவிட்டார். “இப்பேச்சுக்களில் எங்களுக்கு அதிக எதிர்பார்ப்புக்கள் இல்லை என்று நான் கூறுவேன்.” என்றார் அவர். |
|
|