சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Tens of thousands in France, Italy protest austerity measures

பிரான்ஸ், இத்தாலியில் பல்லாயிரக்கணக்கானவரகள் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர்

By Kumaran Ira 
14 April 2014

Use this version to printSend feedback

னிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரான்சிலும் இத்தாலியிலும் தெருக்களுக்கு வந்து அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைள் மற்றும் சந்தை-சார்பு தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பாரிஸ் ஆர்ப்பாட்டக் கோஷம்
: “
சிக்கனக் கொள்கைகள் வேண்டாம்”

ரோமில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற எதிர்ப்பு, பொலிசார் எதிர்ப்பாளர்களை தாக்கியதால் வன்முறையில் முடிவடைந்தது. பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டைப்பயன்படுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தினர். பொலிஸ் மற்றும் எதிர்ப்பாளர்கள் பக்கத்திலும் டஜன் கணக்கில் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது, குறைந்தபட்சம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கூறியது.

பிரான்சில் எதிர்ப்பு, தொழிற்சங்கங்களாலும் அவற்றின் போலி இடது ஆதரவு அமைப்புக்களான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) Jean-Luc Mélenchon உடைய இடது கட்சியும் (PG) இணைந்த கூட்டான இடது முன்னணி (FG) ஆகியவற்றால் அழைப்புவிடுக்கப்பட்டது. அணிவகுப்பில், கிரேக்க தீவிர இடது கூட்டணி சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ், PCF இன் பியர் லோரோன்ட், மெலோன்சோன் மற்றும் NPA செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ ஆகியோருடன் இணைந்து அணிவகுத்துச் சென்றார். சிப்ரஸ், ஐரோப்பிய தேர்தல்களில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வேட்பாளராக ஐரோப்பிய இடது (EL) கட்சியின் சார்பில் நிற்கிறார்.

பாரிஸ் எதிர்ப்பில் கிட்டத்தட்ட 25,000 மக்கள் பங்கு பெற்றனர் என்று போலிஸ் மதிப்பீடு கூறுகிறது; ஆனால் PCF 100,000 பேர் பங்கு கொண்டனர் எனக் கூறுகிறது. பல பிற எதிர்ப்புக்களும் மற்ற பிரெஞ்சு நகரங்களில் கூட்டப்பட்டன; அதில் 1,600 பேர் பங்கு பெற்ற மார்சேய் கூட்டமும் அடங்கும்.



பாரிசில் எதிர்ப்புக் கோஷம்
: “முதலாளிகளால் அதிக செலவு; கண்ணுக்குக் கண் என்று அவர்களுக்கு திருப்பிக் கொடுப்போம்
.”

பாரிசில் எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை விமர்சித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர். “போதும், ஹாலண்ட்”, "நீங்கள் இடதுசாரி என்றால், நீங்கள் நிதி துறையை வரி செலுத்தச் சொல்லுங்கள்" "நீங்கள் இடதுசாரி என்றால், நீங்கள் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்" “நீங்கள் இடது சாரி என்றால், ஐரோப்பா என்றால் மக்கள் தான் முதலில்” என கோஷ அட்டைகள் கூறின.

பாரிசில் ஒப்புமையில் குறைந்த பங்கு பெற்றோர் எண்ணிக்கை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மீதான ஆழ்ந்த எதிர்ப்புக்கும் அப்பால் ஐரோப்பிய போலி இடதின் பிற்போக்குத்தன அரசியல் தொடர்பாக பரந்துபட்ட மக்களின் ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கோபத்தையும் பிரதிபலிக்கிறது. அணிவகுப்பில் போலி இடது கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பெரும்பாலும் அவற்றை சுற்றியுள்ளவர்கள்தான் கலந்துகொண்டனர், இது ஒரு குடும்ப விழா போல் இருந்தது.



பாரிஸ் எதிர்ப்பில் ஒரு கோஷ அட்டை கூறுகிறது
: “PS
சமன் போலி சோசலிஸ்ட்”

முக்கூட்டு”, ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை பேரழிவு தரும் சிக்கன நடவடிக்கைகளை கிரேக்கத் தொழிலாளர் மீது சுமத்த உதவிய சிரிசாவின் பங்கைத்தான் இடது முன்னணி மற்றும் NPA ஆகியவையும் கொண்டிருந்தன. அது, ஐரோப்பிய ஒன்றிய கொள்கை பற்றி தந்திரோபாய குறைகூறல்களைத் தெரிவித்தாலும், சிரிசா சமூக எதிர்ப்பை தடுக்க அனைத்தையும் செய்ததுடன், உட்குறிப்பாக சிக்கனத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களை நசுக்குவதையும் ஆதரித்தது. இது “முக்கூட்டை” ஊதியங்களை 30 வீதம் அல்லது அதற்கு மேலும் குறைக்கவும், நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிக்கவும் அனுமதித்தது.

PS ஐப் பொறுத்தவரை, நவ-பாசிச தேசிய முன்னணி (FN)  மார்ச் மாதம் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று, இது அடைந்த அவமானகரமான நகரசபை தேர்தல்கள் தோல்வியை அடுத்து, மேலும் வலதிற்கு நகர்ந்ததோடு; சிக்கன நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதி கொண்டு FN க்கு சட்டம்-ஒழுங்கு குறித்த முறையீடுகளையும் விடுத்துள்ளது. ஹாலண்ட் அரசாங்கத்தின் “பொறுப்புணர்வு உடன்படிக்கை” என்பதின் கீழ் வருடாந்திர பொதுச் செலவினங்களில் 50 பில்லியன் யூரோக்களை வெட்ட திட்டமிட்டுள்ளது.

வலது நோக்கிய தீவிர நகர்வு என்பது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள “இடது” அரசியலின் முதலாளித்துவ சீரழிவை பிரதிபலிக்கிறது. இந்த பிற்போக்குத்தனக் கொள்கைகளுக்கு தொழிலாளர்களின் ஆழ்ந்த சமூக எதிர்ப்பு, NPA மற்றும் இடது முன்னணியின் பிற்போக்குத்தன அரசியலில் வெளிப்பாட்டை காணவில்லை. அவை PS க்கு முக்கிய நட்பு அமைப்புக்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுப்பவையுமாகும்.

ஹாலண்டிற்கு இவர்களின் வெற்று எதிர்ப்பு, ஓர் அரசியல் மோசடியாகும். NPA மற்றும் இடது முன்னணி, பதவியில் இருந்த வலதுசாரி நிக்கோலோ சார்க்கோசிக்கு எதிராக 2012 ஜனாதிபதி தேரதல்களில் ஹாலண்டை ஆதரித்து, PS மீது பிரமைகளை ஊக்குவிக்க செயற்பட்டன. ஹாலண்ட் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவார் என்பதை ஒப்புக்கொண்ட அவை, இடதுசாரிக் கொள்கைகளை ஏற்க PS க்கு அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கூறின. இக்கூற்றுக்கள் முற்றிலும் திவாலானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பிற்குப்பின், இடது முன்னணியும் NPA யும் இழிந்த முறையில், அவர்கள் சோசலிஸ்ட் கட்சி சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார். பெசன்ஸெநோ கூறினார்: “செய்தி தெளிவாக உள்ளது; மானுவல் வால்ஸ் முதல் வெளி எதிர்ப்புடன் தொடங்குகிறார், இது முக்கியம், ஏனெனில் இது ஒரு புதிய அரசியல் சூழ்நிலையை திறந்துதுள்ளது என்று பொருள்.”

மெலோன்சோன் கூறினார்: “இந்நாட்டில் ஓர் இடது உள்ளது மற்றும் அது ஒரு வலதுசாரி பொருளாதார கொள்கையை செயல்படுத்துவது ஏற்க தக்கதல்ல, இது அரசாங்கத்திற்கு அனுப்பப்படும் தகவல்.....” என்றார்.

இத்தகைய கருத்துக்கள் மக்களுடைய பரந்த உணர்வான பிரான்சின் அரசியலில் இடது இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாகும்; மேலும் PS மற்றும் அதன் நட்பு அமைப்புக்கள், இடது முன்னணி, NPA உட்பட, தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதம் அல்லது பொருட்படுத்தாத தன்மையைக் காட்டுகின்றன.

ஆனால், மெலன்சோனும் பெசென்ஸெனோவும் PS க்கு பேச்சளவில் எதிர்ப்பு காட்டினாலும், ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போரிட தொழிலாளர்களுக்கு எதையும் வழங்கவில்லை. இவை PS இன் வெறும் அரசியல் நிழல்கள்தான். இந்த எதிர்ப்பை விடுத்துள்ளதற்கு அவர்களுடைய நோக்கம் தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் PS அரசாங்கத்தின் பிற்போக்குத்தன செயற்பட்டியலுக்கு தாழ்த்துவதும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை அரசியல் ரீதியாக அடிபணியச் செய்வதுமாகும்.

ரோமில் எதிர்ப்பு, இத்தாலிய பொருளாதாரம் உயரும் வீட்டுச் செலவுகள், வேலையின்மை, தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் என்று சரிந்து வருவதை எதிர்த்து நடைபெற்றது. எதிர்ப்பாளர்கள் மாட்டியோ ரென்சியின் சமூக-ஜனநாயக ஜனநாயகக் கட்சி (PD) ஐ கண்டித்தனர்; அவர் தொழில் விதிகளை சீர்திருத்த திட்டமிட்டுள்ளார், அவை நிறுவனங்களுக்கு ஊழியர்களை நியமிக்க, நீக்க எளிதாக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் கோரிய பொருளாதார சீர்திருத்தங்களை அவருக்கு முன் பதவியில் இருந்த என்ரிக்கோ லெட்டாவால் செயல்படுத்த முடியாமல் போன பின், ரென்சி அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்டார். தன்னுடைய அரசாங்கம் விரைவில் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தும், பொதுச்செலவைக் குறைக்கும் என்று ரென்சி உறுதிமொழி அளித்துள்ளார்.