சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Police attack locked out Toyota workers in India

இந்தியாவில் கதவடைப்பு செய்யப்பட்ட டொயோட்டோ தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மீது போலிஸ் தாக்குதல் நடத்துகிறது

By Arun Kumar and Moses Rajkumar and Kranti Kumara 
11 April 2014

Use this version to printSend feedback

இந்தியாவில் உள்ள டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (TKM) நிறுவனத்தின் ஏராளமான தொழிலாளர்கள் நிறுவனத்தின் மூன்று-வார கால கதவடைப்பு நடவடிக்கைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்தி வந்த நிலையில், சென்ற ஞாயிறு, ஏப்ரல் 6 அன்று, மாநில போலிசார் அவர்கள் மீது வன்முறையான தாக்குதலில் இறங்கினர். தென்மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் (முன்னதாக பெங்களூர் என்று இருந்தது) இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிடதி என்னும் இடத்தில், இந்த ஜப்பானிய நாடுகடந்த நிறுவனத்தின் இரண்டு அசெம்பிளி தொழிற்சாலைகள் இயங்குமிடத்தில், இந்த தாக்குதல் நடைபெற்றது.

போலிசார் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில், ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் சோர்ந்து போயிருந்த தொழிலாளர்களில் இரண்டு பேர், படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முற்றிலும் எந்தவித ஆத்திரமூட்டல்களும் இல்லாத நிலையிலேயே இந்தப் போலிஸ் தாக்குதல் நடைபெற்றதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் உலக சோசலிச வலைத் தள நேர்காணலில் தெரிவித்தனர்.

ஏப்ரல் 2 அன்று தொழிற்சங்கம் தொடங்கிவைத்த உண்ணாவிரதத்தின் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தொழிலாளர் சங்கத்தின் (TKMWU) துணைத் தலைவரான சண்முக கவுடாவிடம் WSWS பேசியது.

“ஞாயிறன்று அதிகாலை சுமார் 1 மணிவாக்கில், சுமார் 40 போலிஸ்காரர்கள் திடீரென்று எங்களது உண்ணாவிரதக் கூடாரத்திற்கு வந்தனர்” என்றார் அவர். “இரண்டு போலிஸ் அதிகாரிகளின் தலைமையில் வந்த அவர்கள், நாங்கள் நான்கு நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பதால் எங்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்களையும் ஆம்புலன்ஸையும் கொண்டுவருவதற்குப் பதிலாக எங்களது நிறுவனப் பேருந்தையே அவர்கள் கொண்டு வந்திருந்தனர்! எங்களுக்கு உடனடியாக சந்தேகம் வந்து விட்டது. ஆகவே நாங்கள் அவர்களுடன் செல்ல மறுத்தோம். ஆனால் விடாப்பிடியாக இருந்த போலிஸ் நாங்கள் மரியாதையாக அவர்களுடன் வர வேண்டும் என்று வலியுறுத்தியது.” 

கவுடா தொடர்ந்து சொன்னார்: “போலிஸ் தொழிலாளர்களை நிறுவனத்தின் பேருந்துக்கு இழுத்துச் சென்று திணிக்க செய்த முயற்சியில் இரண்டு தொழிலாளர்கள் தரையில் விழுந்தனர். தொழிலாளர்கள் மீது பாய்ந்த போலிசார், அவர்களை அடித்ததோடு தங்களது பூட்ஸ் காலால் உதைக்கவும் செய்தனர். அந்த இருவரையும் அவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் உடல் பாதிப்புற்றிருந்த மற்றவர்களையும் நாங்கள் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது.”

சண்முக கவுடா தொடர்ந்தார்: “இதற்குள்ளாக சில தொழிலாளர்கள் மொபைல் போன் மூலமாக அக்கம்பக்க பகுதிகளில் வசிக்கும் எங்களது சக தொழிலாளர்களுக்கு தகவல் கூறினர். அத்துடன் ஊடகங்களுக்கும் அவர்கள் தகவல் கூறினர். அரை மணி நேரத்திற்குள்ளாக, 1,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வந்துசேர்ந்து விட்டனர். அதற்குப் பின்னர் தான் போலிஸ் பேருந்தில் எங்களை திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு அவசரமாக பின்வாங்கினார்கள்.”

மாத ஊதியத்தில் சொற்பமான 4,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) அதிகரிப்பைக் கோரிய தொழிற்சங்க கோரிக்கையை நிராகரித்து டொயோட்டோ தனது ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர்களுக்கும் மார்ச் 16 அன்று கதவடைப்பு செய்து விட்டது. தனது “இறுதிச் சலுகை”யான 3,050 ரூபாய் (51 அமெரிக்க டாலர்) அதிகரிப்பை விட்டு கொஞ்சமும் அசைந்து கொடுக்கப் போவதில்லை என்று நிர்வாகம் கூறி விட்டது. (காணவும்: “இந்தியாவில் வாகனத்துறை தொழிலாளர்களுக்கு டொயோடா கதவடைப்பை அறிவிக்கிறது).”

கதவடைப்பு இரண்டாம் வாரத்தில் நுழைந்த நிலையில், தொழிலாளர்கள் எந்த வேலை மெதுவாக்க நடவடிக்கைகள், வேலைநிறுத்தங்கள் அல்லது பிற தொழிலக நடவடிக்கைகளில் இறங்க மாட்டோம் என்று வாக்குறுதியளிக்கும் ஒரு “நன்னடத்தைப் பத்திர”த்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் நிர்வாகம் கோரியது. இது தங்களை அச்சுறுத்துவதற்கும் அத்துடன் வருங்கால பலியாக்கல்கள் மற்றும் வேலைநீக்கங்களுக்கான போலிச்சாக்கை உருவாக்குவதற்குமான இன்னொரு முயற்சி என்பதை நன்கு அறிந்திருந்த தொழிலாளர்கள் கையொப்பமிட மறுத்தனர்.

இந்த நிலைமைகளின் கீழ், TKMWU இன் 10 தலைவர்கள் ஏப்ரல் 2 புதனன்று ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கினர். தொழிற்சாலை அருகே போடப்பட்ட ஒரு தற்காலிக கூடாரத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கரம் கோர்த்தனர்.

TKMWU எந்த பெரிய இந்திய தொழிற்சங்க கூட்டமைப்புடனும் முறையாக இணைந்த ஒன்று அல்ல என்றபோதிலும் கூட, அதற்கென்று எந்த சுயாதீனமான முன்னோக்கும் இல்லை என்பதோடு அதுவும் பெரும் தொழிற்சங்க கூட்டமைப்புகள் போன்றே அதே முட்டுச்சந்து அரசியலையே ஊக்குவித்துக் கொண்டிருந்தது. தொழிற்சங்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில அரசாங்கம் மற்றும் பிற ஊழலடைந்த அரசியல் கட்சிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்கிறது. இக்கட்சிகளோ உலகளாவிய பெருநிறுவனங்களை ஈர்ப்பதற்காய் மலிவு உழைப்புக்கான ஒரு புகலிடமாக இந்தியாவைப் பராமரிப்பதற்கு முழுமையாக உறுதிபூண்டிருக்கக் கூடியவை ஆகும்.

வடஇந்திய மாநிலமான ஹரியானாவில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக நடத்திய நெடிய போராட்டத்தை, அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம், மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கியது. நிர்வாகத்தின் ஆத்திரமூட்டலால் உண்டாகியிருந்த ஒரு மோதலில் ஒரு மேலாளரைக் கொலை செய்ததாக மோசடியானதொரு குற்றச்சாட்டினை இட்டுக்கட்டி, சித்திரவதை செய்து சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்களில் 149 தொழிலாளர்கள் இன்னும் சிறையிலிருக்கிறார்கள். (காணவும்: இந்தியா: மாருதி சுஜூகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கை எதிர்ப்பு போராட்டம் கண்டிக்கிறது ”).

இரண்டு ஷிப்டுகளுடன் நாளொன்றுக்கு 500 முதல் 700 வரை வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டதற்கு பதிலாக இப்போது தொழிற்சாலையில் நாளொன்றுக்கு ஒரு ஷிப்டு மட்டுமே இயக்கப்பட்டு 150 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்றபோதிலும், 2,500 ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை மட்டும் கொண்டு உற்பத்தியைத் தொடர்வதற்கு நிர்வாகம் முயற்சி செய்கிறது என்று தொழிற்சங்கம் கூறுகிறது. மேலும் நிர்வாகம் 30 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்திருப்பதாகவும் தொழிற்சங்கத் தலைவரான பிரசன்னா உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.  

உண்ணாவிரதப் போராட்டங்களில் பாதிப்புற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழு தொழிலாளர்களை சந்திக்க WSWS செய்தியாளர்களை தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச் சென்றனர். போலிஸ் தாக்குதலில் காயம்பட்டிருப்பது தெரிந்ததும் முதலில் அனுமதித்த மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்ததால் இரண்டாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட நேர்ந்த இன்னும் இரண்டு காயம்பட்ட தொழிலாளர்களையும் WSWS செய்தியாளர்கள் சந்தித்தனர்.

24 வயது சந்திர கீர்த்தி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். போலிஸ் தாக்குதலில் அவருக்கு கால் முறிந்து விட்டது. “அவர்களுக்கு [போலிஸுக்கு] இதயமே கிடையாது. நான்கு நாட்கள் சாப்பிடாமல் ரொம்ப பலவீனமாக இருந்தோம். நாங்கள் போட்டிருந்த மேடையில் தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். போலிஸ் எங்களை வலுக்கட்டாயமாய் இழுத்து தரையில் வீசியது. அவர்களுக்கு உண்மையிலேயே எங்களது ஆரோக்கியத்தின் மீதுதான் கவலை என்றால், அவர்கள் ஏன் மருத்துவர்களையும் ஆம்புலன்ஸையும் உடன் அழைத்து வரவில்லை?

சந்திர கீர்த்தியையும், போலிஸ் தாக்குதலில் கழுத்து மோசமாகக் காயமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இன்னொரு தொழிலாளியான புனித்தையும் காண சந்திராவின் சகாக்கள் சிலர் வந்திருந்தனர்.

தாக்குதலுக்குப் பின்னர் மற்ற தொழிற்சங்கங்கள் அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து அவர்களுக்கு ஆதரவு எதுவும் கிடைத்திருக்கிறதா என்று WSWS செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறினர்: “இதுவரைக்கும் ஒரேயொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல் கட்சியோ கூட இந்த முகாந்திரமற்ற போலிஸ் தாக்குதலைக் கண்டித்திருப்பதாய் தெரியவில்லை”.  

தொழிற்சாலை வாயிலில் இருந்த சில டொயோட்டோ தொழிற்சாலைத் தொழிலாளர்களுடனும் WSWS பேசியது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தில் உள்ள தமது தோழர்களுக்கு ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிப்பதற்கு அவர்கள் மிக ஆர்வம் காட்டினர். 

“நாங்கள் MSWU பிரதிநிதிகளை அழைத்திருக்கிறோம் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக 300,000 ரூபாய் கொடையளித்திருக்கிறோம். இதற்கென எங்கள் தொழிற்சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினருமே எந்தவித தயக்கமும் இல்லாமல் நிதியளித்தார்கள். இது தவிர, டொயோட்டோவின் சப்ளையர் தொழிற்சாலைகளில் இருக்கும் தொழிலாளர்களும் கூடுதலாக 100,000 ரூபாய் நன்கொடை அளித்தனர்.”

தொழிலாளர்கள் தொடர்ந்து கூறினர்: ”இந்த தொழிற்சாலைப் பகுதியில் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டுவதற்காக இப்போது டொயோட்டோ துணைநிறுவனங்களது தொழிலாளர்கள் கூட்டமைப்பையும் (Toyota Ancillary Workers Federation) இப்போது உருவாக்கியிருக்கிறோம். 13 சப்ளையர் நிறுவனங்களின் தொழிலாளர்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் பெங்களூரு நகரில் பிப்ரவரி 28 அன்று ஒரு மாபெரும் பேரணியை நடத்தினோம்.”

டொயோட்டோ நிர்வாகத்தின் ஆத்திரமூட்டுகின்ற நடத்தையை விவரித்து அவர்கள் நிறைவு செய்தனர். “கதவடைப்புக்கு முன்பாக தொழிலாளர்களை சீண்டுவதற்காக நிர்வாகம் திட்டமிட்டு முயற்சிகள் செய்தது. ஜனவரி முதலாகவே, காலத்தை “தவறவிட்டதற்காக” நிறுவனம் தொழிலாளர்களை தண்டிக்கத் தொடங்கியது. ஒரு தொழிலாளி ஓய்வறைக்குச் சென்று விட்டு ஒரு சில நிமிடங்கள் தாமதமாய் திரும்பி வந்தாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.”

”சென்ற ஆண்டில் ஊதிய உயர்வு இல்லை. பொதுவாக எங்களுக்கு வருடா வருடம் ஊதிய அதிகரிப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. எங்களது ஊதியக் கோரிக்கையுடன் சேர்த்து பாதுகாப்பு மேம்பாடுகள் விடயத்திலான எங்களது கோரிக்கைகளையும் நிர்வாகம் தொந்தரவாய் கருதியிருக்க வேண்டும். கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக நாங்கள் ஏராளமான பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறோம், நிர்வாகம் முற்றுமுதலாய் அதற்கு அலட்சியம் காட்டி வந்ததோடு அந்தக் கோரிக்கைகளுக்கு அதீத குரோதமாகவும் நடந்து கொண்டது. இதன் விளைவாக உற்பத்தியிடத்தில் பல தொழிலாளர்களும் காயம்பட்டிருக்கிறார்கள்.”

வாகனத் தயாரிப்பு தொழிலாளர்கள் வன்முறையாக ஒடுக்கப்படுவதானது இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு சுயாதீனமான அரசியல் மூலோபாயம் அவசியமாயிருப்பதை முன்நிறுத்துகிறது. டொயோட்டோ நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அதன் அனைத்து வாகனத் தயாரிப்பையும் திட்டமிட்டு மூடுவது உட்பட தொழிலாளர்கள் மீது ஒரு உலகளாவிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. வட அமெரிக்காவில் மிருகத்தனமான சம்பள வெட்டுகளையும், ஐரோப்பாவில் தொழிற்சாலை மூடல்கள் மற்றும் பாரிய ஆட்குறைப்புகளையும், சீனா மற்றும் இந்தியாவில் மிருகத்தனமான சுரண்டலையும் விளைவித்திருக்கும் உலகளாவிய வாகனத் தயாரிப்பு பெருநிறுவனங்களது சர்வதேச மறுசீரமைப்பு நிகழ்முறையின் பகுதியாக இது இருக்கிறது.  

ஸ்ராலினிச-செல்வாக்குடைய தொழிற்சங்கங்களது தேசியவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு வேலைத்திட்டத்தில் இருந்து இந்தியாவின் வாகனத் தயாரிப்புத்துறை தொழிலாளர்கள் தங்களை விடுவித்துக் கொண்டாக வேண்டும். இத்தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சி மற்றும் பெரு வணிகத்தின் மற்ற அரசியல் சேவகர்களுடன் கட்டிப் போடுகின்றன. வாகனத் தயாரிப்புத் துறை மற்றும் பிற பெரிய பெருநிறுவனங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது உட்பட, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த ஒரு புதிய வேலைத்திட்டம் மற்றும் தலைமையே அவசியமாக இருப்பதாகும்.