World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் EU and Ukrainian regime seek to discipline fascist Right Sector ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனிய ஆட்சியும் பாசிச வலது பிரிவைக் கட்டுப்படுத்த முயல்கின்றன
By
Stefan Steinberg and Chris Marsden ஐரோப்பிய ஒன்றியமும் தேர்ந்தெடுக்கப்படாத மேற்கத்தைய ஆதரவுடைய உக்ரேன் ஆட்சியும் மே 25ல் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன், பாசிச வலது பிரிவை (Right Sector) அரச கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரத்தில் வலது பிரிவு உறுப்பினர்கள் உக்ரேனிய பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு உள்துறை மந்தரி ஆர்சென் அவகோவின் இராஜிநாமாவைக் கோரினர்; அவரைத்தான் அவர்கள் வலதுசாரி துணைத்தலைவர் அலெக்சாந்தர் முசிச்கோவின் மரணத்திற்குக் குறைகூறுகின்றனர். சாஷா பில்யி என்றும் அறியப்பட்ட முசிச்கோ பொலிசால் மார்ச் 24 அன்று ரிவ்னேயில் கொல்லப்பட்டார்; இந்த நடவடிக்கை உக்ரேனிய அரசாங்கத்தால் ஒப்பந்த முறையில் கொல்லப்பட்ட தன்மையுடன் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆட்சியை அகற்றுவதில் உச்சக்கட்டம் அடைந்த மைதான் எதிர்ப்புக்களில் வலது பிரிவு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அவர்கள் யானுகோவிச்சின் கலகப்பிரிவு பொலிசை நசுக்கனர், ஆட்சி கவிழ்ப்பின் போது உக்ரேனிய அரச கட்டிடங்களை சூழ்ந்தனர், அரச கருவிகளையும் யானுகோவிச்சின பிராந்தியக் கட்சியையும் மேற்கத்தைய ஆதரவுடைய எதிர்த்தரப்பிற்கு ஆதரவு கொடுக்குமாறு பயமுறுத்தினர். 5 பில்லியன் டாலர் என எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு வாஷிங்டன் ஒதுக்கிய நிதியின் கணிசமான பகுதி வலது பிரிவை அமைத்துள்ள பலதரப்பட்ட பாசிச குழுக்களுக்கு ஏற்றம் கொடுக்கப் போயிருக்கும். இதன் தலைவர் டிமிட்ரோ யாரோஷ், தன்னுடைய அமைப்பு மைதான் எதிர்ப்புக்கள் நடைபெற்ற வாரங்களின்போது வெற்றிகரமாக இராணுவம், பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களை “தேர்ந்தெடுத்துள்ளது” என்று கூறினார். ஆனால் பெப்ருவரி 22ல் யானுகோவிச் அகற்றப்பட்டபின், வாஷிங்டனால் இருத்தப்பட்ட புதிய மற்றும் “ஜனநாயக ஆட்சிக்கும்” பாசிச குழுக்களுக்கும் இடையே உள்ள உறவு பெருமளவில் சிக்கல் நிறைந்ததாகிவிட்டது. குண்டர்கள் அரசியல்வாதிகளை அடிப்பது, ரஷ்ய எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டுதல், ஆயுதங்களைக் கொண்டு நாஜி அடையாளங்களை வைத்துக் கொண்டு பல குற்றங்களைச் செய்தல், ஆகியவை மேற்கத்தைய சக்திகளின் இழிந்த கூற்றான மைதான் எதிர்ப்புக்கள் ஜனநாயகப் புரட்சி என்பதை வெளிப்படையாக முரண்படுத்தின. ஏகாதிபத்திய சக்திகள் இதை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் கரத்தை வலுப்படுத்துவதில் ஒரு பெரிய காரணி என்று கண்டனர். பாசிஸ்ட்டுக்களை இணைப்பது புதிய ஆட்சியின் முக்கிய அடிப்படை என்று அவர்கள் செயல்படுகையில், உக்ரேனிய எதிர்ப்பும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் பெருகிய முறையில் வலது பிரிவை கட்டுப்படுத்த முயன்று தங்கள் செயற்பட்டியலில் அதை நெருக்கமாக பிணைக்கவும் முற்பட்டனர். இடைக்கால ஆட்சியால் யாரோஷ் க்கு தேசியப் பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவர் பதவியை வழங்கப்பட்டது, அவர் ஆண்ட்ரே பருபியின்கீழ் பணிபுரிந்தார்; பிந்தையவர் ஸ்வோபோடாவின் முன்தோன்றலான உக்ரேனின் சமூக தேசியக் கட்சியின் இணை நிறுவனர் ஆவார். யாரோஷ் இந்த வேண்டுகோளை நிராகரித்து உக்ரேன் ஜனாதிபதிப் பதவுக்குப் போட்டியிட விரும்புகிறோர். முழு வலது பிரிவும் பின்னர் ஆயுதங்களைக் களைந்து புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புப் படையில் சேருமாறு வலியுறுத்தப்பட்டனர் – தங்கள் சுதந்திர செயலை முடிக்கும் பொருட்டு; இதுவரை அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்துள்ளனர். மார்ச் 28 அன்று, பிரித்தானியாவின் டெய்லி டெலிக்ராப், இக்கோரிக்கையின் தோற்றத்தின் காரணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் “நிலைமை, கிரெம்ளின் கையில் உள்ளது என்ற ஆழ்ந்த கவலையை கொண்டது. டெலிகிராப் இரண்டு சமீபத்திய ஐரோப்பிய ஒன்றிய உக்ரேன் மீதான அறிக்கைகள் “துணை இராணுவ அமைப்புக்கள் கலைக்கப்பட வேண்டும் என்னும் விதியை உள்ளடக்கியதாக அறிகிறது. அதிகாரிகள் பின்னர் இந்த விதியை நீக்கினர்; ஏனெனில் அவர்கள் அது ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் பிரச்சார முறைக்கு உதவும் என்று அஞ்சினர்.” நீக்கப்பட்ட விதிகள் ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டும் நெறி தெளிவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றயத்தின் வெளி விவகாரங்கள், பாதுகாப்புக் கொள்கையின் உயர் பிரதிநிதி காத்ரின் ஆஷ்டன் வலது பிரிவு எதிர்ப்புக்களை, வெர்கோவ்னா ராடா கட்டிடத்திற்கு வெளியை நடப்பதை, “ஜனநாயக கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி” என்பவற்றிற்கு எதிரானவை எனக் கண்டித்துள்ளார். பாசிஸ்ட்டுக்கள் “தங்களிடம் இருக்கும் அங்கீகரிக்கப்படாத ஆயுதங்களை அதிகாரிகளிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்பது தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். ஆஷ்டன் தகவலை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், வைமாரில் மார்ச் இறுதியில் அவர்களுடன் பேசியதை தொடர்ந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்தின் தலைவர்கள் ஒரு கூட்டு வேண்டுகோளை விடுத்து உக்ரேனிய அரசாங்கம் “தீவிரக் குழுக்களிடம்” இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை “வலிமை என்பது அரச ஏகபோக உரிமை என்பதை மீண்டும் நிலைநிறுத்த தேவை” என்று வாதிட்டனர். உக்ரேனிய ஆட்சி அதன் எஜமானர்களின் குரலைக் கேட்டது. உக்ரேனின் எம்.பி. செர்ஹியி சோபோலேவ் France 24 இடம் இந்த வாரம் வலது பிரிவை பற்றிக் குறிப்பிடுகையில்: “நாம் தெளிவாக இருக்க வேண்டும் – இது அரசியல் கட்சியாக இருந்தால் அரசியல் செயலில் குவிப்புக் காட்ட வேண்டும்.... இவர்கள் போராளிகள் என்றால், நாட்டற்குச் சேவை செய்ய வேண்டும் என விரும்பினால், அவர்கள் இராணுவத்திலோ புதிய தேசியப் பாதுகாப்புப் படையிலோ சேர்ந்து செய்யலாம்.” எனக் கூறினார். அவகோவ், ரஷ்யாவுடன் மோத முன்னணிக்குச் செல்ல வலது பிரிவிற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்: “நாங்கள் அவர்களிடம் போர் முடிந்துவிட்டது. நாட்டைக் பாதுகாக்க நீங்கள் விரும்பினால், உக்ரேனிய தேசிய பாதுகாப்புப் படையில் சேரவும்” என்றோம். வலது பிரிவு, கியேவின் மையத்தில் பல கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அழைப்பு விடுத்த அவகோவ் அவர்களை “உக்ரேனின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று உக்ரேனைப் பாதுகாக்கவும்” என்றார். முசிச்கோ கொலைசெய்யப்பட்டது, அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் வேலை செய்ய தவறினால் கொடுக்க வேண்டிய விலை பற்றி பாசிஸ்ட்டுக்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். அவர் வீடியோவில் ஒரு பிராந்தியப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளை அச்சுறுத்தியது காணப்படலாம் – வன்முறை மற்றும் மரண அச்சுறுத்தல்கள் அவரால் கொடுக்கப்பட்டன. இந்த வாரம் உத்தியோகபூர்வ விசாரணை திமிர்த்தனமாக, பொலிசார் அவருடன் தரையில் போராடுகையில் அவர் தற்செயலாக தன்னையே இதயத்தில் சுட்டுக் கொலை செய்து கொண்டார் என்று தீர்ப்பளித்தது. செவ்வாயன்று உக்ரேனிய பாராளுமன்றம், முதல் நாள் நடந்த நிகழ்வை பயன்படுத்தி உக்ரேனிய பாதுகாப்புப் பிரிவு (SBU), மற்றும் அதன் உள்துறை அமைச்சரகத்திற்கு துணை இராணுவ அமைப்புக்களின் ஆயுதங்களை களையுமாறு உத்தரவிட்டது. திங்களன்று நகர மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், வலதுசாரி உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்; இதில் மூவர் காயமுற்றனர். நபர் கைது செய்யப்பட்டார், அவருடைய குழு கியேவின் மையத்திலுள்ள ஓட்டலை விட்டு நீங்குமாறு உத்தரவிடப்பட்டது; அதை அவர்கள் தலைமையகம் போல் மாற்றியிருந்தனர். ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் அதன் பின் வலது பிரிவின் தலைமையகத்தை நகர மையத்தில் இருந்த ஓட்டல் டினிப்ரோவில் சூழ்ந்து கொண்டனர். வலது பிரிவின் ஒட்டல் தளம் கைவிடப்பட்டது அதன் சுயாதீன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அது இன்னும் கணிசமான ஆயுதங்களை கொண்டுள்ளது; உள்துறை அமைச்சரக சேமிப்புக் கிடங்கில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது – இவை எதிர்ப்புக்களின்போது பாதுகாப்பு எந்திரத்தின் பிரிவுகளால் கொடுக்கப்பட்டவையா, ஆட்சி மாற்றத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வலது பிரிவு பெரும்பாலும் ஆயுத ஒப்படைப்பிற்கான அரசாங்க காலக்கெடுவை புறக்கணித்துள்ளது. எப்படிப் பார்த்தாலும், BBC இன் “கியேவ் தீவிர வலதுடன் மோதுகிறது” என்ற பதாகைத் தலைப்புக்கள் இருந்தபோதிலும், உக்ரேனிய ஆட்சியோ அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் அதன் ஆதரவாளர்களோ வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளுடன் ஒத்துழைப்பதில் பிரச்சினை காணவில்லை. அவர்கள் வலது பிரிவு அகற்றப்பட முற்படவில்லை. ஆனால் அது அரச ஆணைகளின் கீழ் அத்துடன் இணைக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இதைத்தவிர, 6 முக்கிய பதவிகள், துணைப் பிரதமர் உட்பட, புதிய ஆட்சியில் ஸ்வோபோடா உறுப்பினர்களால் வகிக்கப்படுகின்றன. பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் பாதர்லாந்துக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்; அதனுடைய பெயரளவுத் தலைவர் யூலியா திமோஷெங்கோ உக்ரேனில் வசிக்கும் ரஷ்யர்களை அணுகுண்டால் அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட உக்ரேன் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் வலென்டைன் நாலிவைசெங்கோ ஆவார். இணைய தளத்தில் கிடைக்கும் புகைப்படங்கள் அவரை “திரிசூல” (Trident) அமைப்பின் ஆண்டு அணிவகுப்பில் பேசுவதை காட்டுகின்றன – அது யாரோஷின் தலைமையில் இருக்கும் வலது பிரிவின் ஒரு பிரிவு, அவர் 2011ல் நாலிவைசெங்கோவுடன் புகைப்படத்தில் இணைந்து இருப்பது காட்டப்படுகிறது. இக்கூட்டம், உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய வளாகமான Zarvanitsa திடலில் நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் விருப்பங்களின்படி இச்சக்திகளுக்குத்தான் உக்ரேனில் “அரச ஏகபோக உரிமை” அளிக்கப்பட உள்ளன. |
|