சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

முன்னிலை சோசலிச கட்சி

புதிய-வலதுசாரி போலி இடது குழு

By K. Ratnayake
20 December 2013

Use this version to printSend feedback

நான்கு பாகங்களைக் கொண்ட கட்டுரைத் தொடர் முதல் இங்கு முழுமையாக பிரசுரமாகின்றது

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜேவிபீ) இருந்து பிளவுபட்ட குழுவொன்று, கடந்த ஆண்டு ஆரவாரங்களுடன் முன்னிலை சோசலிசக் கட்சியை (முசோக) ஸ்தாபிப்பதாக அறிவித்தது. போலி இடதுகளான நவசமசமாஜ கட்சி (நசசக), ஐக்கிய சோசலிச கட்சி (ஐசோக) ஆகியவை, இந்தக் கட்சியை கட்டியெழுப்புவதானது இலங்கையில் அரசியல் நிலைமையினுள் ஏற்பட்டுள்ள ஒருமுற்போக்கானஅபிவிருத்தி என வர்ணித்தன.

இந்த அலங்காரங்களை கீழித்தெறிந்த முசோக, சுமார் கடந்த ஆண்டு பூராவும், அது முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் எதிராக எழுச்சியுறும் பொதுஜனங்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறிக்கிடங்காகும் ஒரு வலதுசாரி அமைப்பு என்பதை நிரூபித்துள்ளது.

தசாப்த காலங்களாக, ஜேவிபீயின் பிற்போக்கு கொள்கைகளை பாதுகாத்த முசோக தலைவர்கள், ஜேவிபீ ஆழமான நெருக்கடிக்குள் மூழ்கிய நிலைமையிலேயே அதில் இருந்து பிரிந்து சென்றனர். இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில், ஜேவிபீ ஒருமார்க்சிசகட்சி என சித்தரிக்கப்பட்ட போதிலும், அதற்கும் மார்க்சிசத்துக்கும் எந்த காலத்திலும் தொடர்பு இருந்ததில்லை.

1960களின் கடைப் பகுதியில், கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் மாவோ வாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆயுதப் போராட்டத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டே இந்தக் கட்சி அமைக்கப்பட்டது. 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (லசசக), முதலாளித்துவ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) உடன் கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டு செய்த வரலாற்று காட்டிக்கொடுப்பு நிலைமையின் கீழ், வேலையின்மை மற்றும் வறுமையிலும் மூழ்கிப்போய் கிளர்ச்சியடைந்திருந்த கிராமப்புற இளைஞர்கள், ஜேவிபீயை ஒருஇடதுசாரிஅமைப்பாக கண்டனர்.

ஆயுதப் போராட்ட சாகசத்தில் இருந்து பாராளுமன்ற அரசியல்வரை தள்ளாடிய ஜேவிபீ, இப்போது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் இறுக்கமாக பிணைந்துள்ள ஒரு அமைப்பாகும். ஜேவிபீ, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்தது; 1988-1990 ஆண்டுகளில், தொழிலாளர்களுக்கும் அரசியல் விரோதிகளுக்கும் எதிராக, பாசிச தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. 2004ல் அன்றைய ஜனாதிபதியான சந்திரகா குமாரதுங்கவுடன் ஒரு கூட்டரசாங்கத்தில் நுழைந்துகொண்டது. இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் தொடங்கிய யுத்தத்துக்கும் உழைக்கும் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்களுக்கும் ஆதரவளித்த ஜேவிபீ, அதைத் தொடர்ந்து, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) உடன் கூட்டணி சேர்ந்திருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பொது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதிலும் பங்களிப்பு செய்தது. இந்த பிற்போக்கு உபாயங்களை உச்சத்துக்கு கொண்டுவந்த ஜேவிபீ, 2001 செப்டெம்பரில் நியூ யோர்க் நகரின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலின் பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டிபிள்யூ. புஷ், ஏகாதிபத்திய தேவைகளின்படி முன்னெடுத்த, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என சொல்லப்பட்டதற்கு ஆதரவளித்தது.

இந்த பிற்போக்கு செயற்பாடுகள் காரணமாக, ஜேவிபீயானது இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தது. அதன் விளைவாக, 2004ல் 39 ஆக இருந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2010ல் 3 உறுப்பினர்களாக வீழ்ச்சி கண்டது.

காலங்கடந்து, இந்த வலதுசாரி வேலைத்திட்டங்களில் சிலவற்றைப் பற்றி விமர்சனங்களை முன்வைத்த முசோக தலைவர்கள், கட்சியின் ஸ்தாபகரான ரோஹண விஜேவீரவின் மரபுரிமைகளின் பக்கம் மீண்டும் திரும்புவதாக கூறிக்கொண்டு ஜேவிபீயில் இருந்து பிரிந்தனர். உண்மையில் இந்தமரபுரிமை, பிற்போக்கானதும் சந்தர்ப்பவாதமானதுமாகும். ஜேவிபீ பற்றி வெறுப்படைந்திருந்த இளைஞர்கள், அதற்கு எதிராக வாய்ச்சவடால் விட்ட புதிய கட்சியில் விமோசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அதன் பக்கம் இழுபட்டுச் சென்றனர். ஜேவிபீயால் கட்டுப்படுத்தப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் (அபமாச) பிளவுபட்ட குழுவுடன் இணைந்துகொண்டது.

இப்போது முசோகவும் அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ஜேவிபீ மீது நம்பிக்கை இழந்து இணைந்துகொண்ட பல இளைஞர்கள் முசோகவை கைவிட்டுச் சென்றுள்ளனர். கட்சி பிரசுரித்த இரண்டு பத்திரிகைகள்தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சில தலைவர்கள், கட்சியை கைவிட்டு நன்கு வளர்ந்த சேனைகளைச் சென்றடைந்துள்ளனர். ஒரு முசோக தலைவரான சேனாதீர குணதிலக, “முரண்பாடுகள் காரணமாக எமது கட்சியின் சில உறுப்பினர்கள்கட்சியை விட்டுச் சென்றுள்ளனர் என த நேஷன் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

முசோக சில காலமாக கூறித்திரிந்தஇடது அமைப்புகளைமீண்டும் இணைக்கும் முயற்சியை இப்போது முன்னிலைப்படுத்தியுள்ளது. முசோக இதற்காக முதலாளித்துவ குழுக்களுக்கும் போலி இடதுகளின் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. தாம் உட்பட குழுக்களின் கடந்த கால பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு புதிய முகமூடியை போட்டுக்கொண்டு, தொழிலாள வர்க்கத்தை தடம்புரளச் செய்வதற்கும், அதன் போராட்டத்தை நசுக்குவதற்கும் ஒரு பரந்த இடது முன்னணியை அமைப்பதற்கு முசோக இப்போது முயற்சிக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்ற இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக, உலகம் பூராவும் இடம்பெறுவதைப் போல், தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்கள் இலங்கையிலும் வெடிக்கூடிய நிலைமை இருப்பதையிட்டு, ஏனைய போலி இடதுகளைப் போலவே முசோகவும் பீதியடைந்துள்ளது.

நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியையும் அந்த கூட்டணி அமைப்புக்குள் இணைத்துக் கொண்டமை, அதன் வலதுசாரி பண்பை காட்சிப்படுத்தியது. அந்தக் கட்சிகள் முதலாளித்துவத்தின் சகல குழுக்களுடனும் சேர்ந்துகொண்டும், இப்போது யூஎன்பீ உடன் அணிசேர்ந்துகொண்டும் இழிவான சந்தர்ப்பவாத துரோகத்தை சுமந்துகொண்டுள்ளன.

கிரேக்கத்தில் சிரிசா (தீவிர இடது கூட்டணி) அமைப்பை, இலங்கையில் இடது கூட்டமைப்புக்கு ஒரு சிறந்த மாதிரியாக முசோக சித்தரிக்கின்றது. கடந்த ஆண்டு செப்டெம்பர் 2 அன்று, முசோக பத்திரிகையான ஜனரல, “கிரேக்கத்தில் சிரிசா போன்ற தீவிர இடதின் சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக, அந்த கலந்துரையாடலை, அதாவது இடது குழுக்களின் கலந்துரையாடலை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது. முதலாளித்துவ மற்றும் போலி இடது குழுக்களின் சிரிசா கூட்டமைப்பு, கிரேக்கத்தில் முதலாளித்துவத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கு விரோதமான ஒரு முட்டுக்கட்டையாக செயற்படும் அதேவேளை, ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டாக செயற்படுவதற்கு முழு விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. சிரிசா தலைவர் அலக்சேன்டர் சிப்ராஸ், வாஷிங்டன் உட்பட ஏகாதிபத்திய உலகின் தலைநகரங்களுக்குச் சென்று, அவர் பற்றியும் அவரது அமைப்பு பற்றியும் பீதியடைய வேண்டிய அவசியம் இல்லை என புரியவைத்து வருகின்றார்.

சிரிசா மாதிரியை முசோக தூக்கிப் பிடிப்பது, அது ஆற்றப் போகும் பிற்போக்கான வகிபாகத்தைப் பற்றி முன்கூட்டியே வெளிப்படுத்துகின்றது.

உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைந்துவரும் நிலைமையின் கீழ், புரட்சிகர போராட்டங்கள் வளர்ச்சியடையும் போது, தொழிலாள வர்க்கத்தை தடம் புரளச் செய்வதற்கு, நாட்டுக்கு நாடு புதிய கூட்டமைப்புகள் அமைக்கப்படுகின்றன. சிரிசா தவிர, பிரான்சின் முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு மற்றும் எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்டுகளும் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்களில் சிலவாகும்.

முசோக, ஜேவிபீயின் அரசியலில் இருந்து பிரிந்துவிட்டதாக வாய்ச்சவடால் விடுக்கின்றது. ஆயினும், இந்தக் கட்சிக்கு ஜேவிபீயின் அரசியலுடன் எந்தவொரு அடிப்படை வேறுபாடும் கிடையாது என்பதை கடந்த மாதங்களில் அதன் செயற்பாடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கட்சியின் பிரதான அடித்தளமாக கணிக்கப்படும் மாணவர்கள் மத்தியில், முசோக வின் செயற்பாடுகள் அதற்கு ஒரு சாட்சியாகும். ஜேவிபீ போலவே முசோகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஊடாகவே செயற்படுகின்றது. வசதிகள் இன்மை, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயப்படுத்தல் மற்றும் ஜனநாயக உரிமைகளை பறிப்பதன் காரணமாகவும் மாணவர்கள் தீவிரமடைந்து வருகின்றனர். ஆயினும், இராஜபக்ஷ அரசாங்கத்தை அழுத்தத்துக்கு உள்ளாக்க முடியும் என பொய் கூறி, மாணவர்கள் மத்தியிலான சீற்றத்தை கரைத்து விடுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் (அபமாச) அடுத்தடுத்து ஆரப்பாட்டங்களை ஏற்பாடு செய்கின்றது. சபரகமுவ மாணவர்களின் உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்ப்பதற்காக, ஏகாதிபத்தியவாதிகளால் இயக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பக்கமே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் திரும்பியது.

இவ்வாறு அர்த்தமற்ற ஒரு தொகை ஆர்ப்பாட்டங்களுக்குள் மாணவர்களை சிக்கவைத்து, அரசாங்கத்தின் இடைவிடாத தாக்குதல்களுக்கு முசோக கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் அதன் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும், இலவசக் கல்வியை காப்பதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சோசலிச கொள்கையின் அடிப்படையில் போராடுவதன் பேரில், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் மாணவர்களை திருப்புவதற்காக முன்னெடுக்கும் போராட்டத்துக்கு முசோக மற்றும் அபமாசவும் கடும் எதிரிகளாவர்.

கடந்த ஆண்டு, இரண்டு மாதங்களுக்கும் அதிகமான காலம் தொடர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் போரட்டத்தில், சோசலிச கொள்கையின் அடிப்படையில் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை அணிதிரட்டுவதற்கு முசோக காட்டும் விரோதம் அம்பலத்துக்கு வந்தது. சோசக வேலைத் திட்டத்துக்கு எதிராக, ஜனரல ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு கூறியாது: “கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 6 வீதம் அதிகரித்தல் என்ற விடயம் வரை இப்போது இந்ததொழிற்சங்கபோராட்டம் வந்துள்ளதுஅவ்வாறு செய்வதன் மூலம் கல்விப் பிரச்சினை தீர்க்கப்படுமா? இல்லை. ஆயினும் அது ஸ்திரமான முறையில்மனதை ஈர்க்கும்சீர்த்திருத்தமாக இருக்கும். தொண்ணூற்று சொச்சம் நோய்களையும் வியாதிகளையும் சுகப்படுத்திக்கொள்வதற்காக (தேசியப் பிரச்சினை உட்பட) சோசலிசத்தை கட்டியெழுப்புவது வரை பார்த்திருக்கும் பொழுதுபோக்கு எங்களுக்கு இல்லை.”

இராஜபக்ஷ அரசாங்கத்திடம் இருந்துமனதை ஈர்க்கும்சீர்திருத்தங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றே இங்கு குறிப்பிடப்படுகிறது. சோசலிசத்துக்கான போராட்டமானது காத்திருக்க முடியாதளவு தொலை தூரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. விரிவுரையாளர்களின் சங்கம், இராஜபக்ஷ அரசாங்கத்திடம் இருந்து எப்படியாவது கோரிக்கைகளை வெற்றிகொள்வது என்ற பெயரில், பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை அரசாங்கத்துடனான கொடுக்கல் வாங்கலுக்குள் முடக்கி காட்டிக்கொடுப்பதற்கு செயற்பட்ட அதேவேளை, முசோக இந்த வகையிலேயே அதற்கு ஒத்துழைத்தது.

ஜேவிபீயின் இனவாத அரசியலை தான் எதிர்ப்பதாக மிகைப்படுத்திக் காட்டுவதற்கு முசோக அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றது. அதன் பாகமாக, இந்தக் கட்சி, இராஜபக்ஷ அரசாங்கம் மனித உரிமைகளை மீறியமை தொடர்பாக விமர்சிக்கின்றது. இந்த போலி அக்கறை, தமிழ் மக்கள் சம்பந்தமாக தமது இனவாத கொள்கையை மூடி மறைப்பதற்கான முயற்சியே ஆகும்.

தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, போலியாக செயல்முறையில் முன்னிலை வகிப்பது என்ற பெயரில், முசோக பொய் சத்தியம் செய்கின்றது. இந்தசெயல்முறையில் முன்னிலை வகிப்பதுஎன்ற பெயரில்சம உரிமை இயக்கம் ஒன்றைத் தொடங்கியது. (இந்த இயக்கத்தை இப்போது காணவில்லை) அது எந்தவொரு முதலாளித்துவ கும்பலும் முன்வைக்கும் மோசடியான 16 கோரிக்கைகளை முன்வைத்தது. தமிழ் மக்கள் தமது மொழியில் செயற்படுவதற்கு இடமளிப்பது, யுத்தத்தில் சேதமாகிய சொத்துக்களுக்கு நட்ட ஈடு வழங்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கு இலங்கையில் சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துவது மற்றும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதும் அந்தக் கோரிக்கைகளில் அடங்கும்.

ஆயினும் முசோக, இராஜபக்ஷ அரசாங்கம் உட்பட சகல அரசாங்கங்களும் முன்னெடுத்த இனவாத யுத்தங்களை எதிர்க்காதது மட்டுமன்றி, வடக்கு மற்றும் கிழக்கில் நிபந்தனையின்றி இராணுவத்தை வெளியேற்றும் கோரிக்கைக்கும் எதிரானதாகும்.

தமது ஆசிரியரான ஜேவிபீயை பின்பற்றும் முசோக, இந்திய விரோதத்தை கிளறிவிடுவதிலும் கூட்டுச் சேர்ந்துள்ளது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் படி ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இந்தக் கட்சி எதிர்ப்பதில் இருந்து வெளிப்படுவதும் இதுவே. ஜேவிபீ மற்றும் ஏனைய முதலாளித்துவ குழுக்களைப் போலவே, இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்தியா இலங்கையில் தலையீடு செய்வதாக முசோகவும் கூறுகின்றது.

இலங்கையின் முதலாளித்துவ ஒற்றை ஆட்சியை பாதுகாப்பதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்குவதற்கும் மற்றும் தமிழ் முதலாளித்துவ கும்பலுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்குமே, 1987 ஜூலையில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களால் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்தி, தனது தாக்குதலை உக்கிரமாக்குவதற்கே, இப்போது 13வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு விரோதமாக சிங்கள-பௌத்த இனவாத கும்பல்களின் ஆதரவையும் சேரத்துக்கொண்டு இனவாதத்தை கிளறிவிடுவதில் ஈடுபட்டுள்ளது. ஜேவிபீ மற்றும் முசோக, அரசாங்கத்தின் இந்த இயக்கத்துடன் அணிசேர்ந்துள்ளன.

சோசக, இந்த பேரினவாத அரசியலையும், அதேபோல் இந்திய-இலங்கை உடன்படிக்கையையும் மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தையும் எதிர்ப்பது, தொழிலாள வர்க்க சர்வதேசியவாத நிலைப்பாட்டில் நின்றுகொண்டே ஆகும். அதாவது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்பி, தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதை அடித்தளமாகக் கொண்டே ஆகும். அது உலகம் பூராவும் சோசலிசத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாகும்.

இந்த போராட்டத்தை கடுமையாக எதிர்க்கும் முசோக, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கும் தமது செயற்பாட்டை மூடி மறைத்துக்கொள்வதற்கே, சோசலிசம் என்ற சொல்லை போலியாகப் பயன்படுத்திக்கொள்கின்றது.

ஜேவிபீ வரலாறும் முன்னிலை சோசலிசக் கட்சியும்

2012 ஏப்பிரல் மாதத்தில் முன்னிலை சோசலிசக் கட்சி (முசோக) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டபோது, ஜேவிபீயின் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து தாம் பிளவுபட்டுள்ளதாக அறிவித்து, 1978-2012 ஜேவிபீ பயணப் பாதை: சுய விமர்சனத்துடன் கட்சியை நோக்கி மீண்டும் திரும்பிப் பார்ப்பதும், எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையும் (சுயவிமர்சனம்) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டது. இந்த நூல், ஜேவிபீயின் அரசியல் சீரழிவை மட்டுமன்றி, தமது அரசியல் கபடத்தனத்துக்கு ஒரு மறைப்பாக போலி இடது வார்த்தை ஜாலங்களை உளறிய போதிலும் முசோக அந்த அரசியலில் இருந்து பிரியவில்லை என்பதையே நிரூபிக்கின்றது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுத்து, 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (லசசக) முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீலசுக) கூட்டரசாங்கம் ஒன்றில் நுழைந்துகொண்டதன் மூலம் ஏற்பட்ட ஆழமான அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே, 1965ல் ஜேவிபீ ஸ்தாபிக்கப்பட்டது. 1953 ஆகஸ்ட் 12 இடம்பெற்ற ஹர்த்தாலில் வெளிப்படுத்தப்பட்ட, 1950களில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு குழி பறிப்பதற்காக கிளறிவிடப்பட்ட, ஸ்ரீலசுகயின் சிங்கள மேலாதிக்கவாதத்துக்கு லசசக நேரடியாக அடிபணிந்தது.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை நிராகரித்து, நான்காம் அகிலத்துக்குள் தலைநீட்டிய பப்லோவாத திருத்தல்வாத போக்கின் தலைவர்களாலேயே லசசகயின் காட்டிக்கொடுப்பு தயார் செய்யப்பட்டது. பப்லோவாத போக்கானது முதலாளித்துவத்தின் யுத்தத்துக்குப் பிந்திய சமரசத்துக்கு அடிபணிந்ததோடு, ஸ்ராலினிச அதிகாரத்துவம் முற்போக்கு வகிபாகத்தை ஆற்றும் என தெரிவித்தது. ட்ரொட்ஸ்கிச கட்சிகள் ஸ்ராலினிச, சமூக ஜனநயாகவாத மற்றும் தேசிய முதாலளித்துவ கட்சிகளுக்குள் நுழைந்து, அவற்றை இடது பக்கம் தள்ள வேண்டும் என பப்லோவாதிகள் கூறினர். லசசக பப்லோவாதிகளின் இந்த வேலைத் திட்டத்துக்கு ஆதரவளித்தது. பப்லோவாதிகள், மறுபக்கம், முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்குள் நுழைவதற்கு லசசகவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

லசசக காட்டிக்கொடுப்பானது, 1960களில் ஜேவிபீ தோன்றுவதற்கும், 1970ல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலசுக-லசசக-கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரண்டாவது கூட்டரசாங்க காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட குட்டி முதலாளித்துவ குழுக்கள் தோன்றுவதற்கும் கதவைத் திறந்துவிட்டது.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவராக இருந்த விஜேவீர, பீகிங் குழுவில் இருந்து பிரிந்து, மாவோவாத கட்சி ஒன்றை அமைத்தபோது அதில் இணைந்துகொண்டார். பின்னர் அதில் இருந்து பிரிந்து சென்று ஜேவிபீயை அமைத்தார். மாவோவாதத்தையும் காஸ்ட்ரோவாதத்தையும் சிங்கள இனவாதத்துடன் கலந்துகொண்டிருந்த ஜேவிபீயின் அரசியல், கிராமப்புற இளைஞர்களின் விடுதலைக்காக வேறு மார்க்கம் இருக்கின்றது எனக் கூறிக்கொண்டு, தேசப்பற்று இயக்கம் ஒன்றை அமைப்பதற்கு அர்ப்பணித்துக்கொண்டது.

1960ம் ஆண்டுகளின் இந்த அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே, 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (புகக) கட்டியெழுப்பப்பட்டது. லசசக காட்டிக்கொடுப்புக்கும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தின் படிப்பினைகளை கிரகித்துக்கொண்ட புகக, சகலவிதமான தேசியவாதங்களையும் நிராகரித்தது. தொழிலாள வர்க்கம், கிராமப்புற வறியவர்களுக்கு தலைமைவகித்து முன்னெடுக்கும் சோசலிச புரட்சியின் விளைவாகவே பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகக் கடமைகளை இட்டு நிரப்ப முடியும் என வலியுறுத்தும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையே புகக முன்னோக்கு அடித்தளமாகக் கொண்டிருந்தது.

அப்போது புகக பொதுச் செயலாளராக இருந்த, காலஞ்சென்ற கீர்த்தி பாலசூரிய, 1970ல் எழுதிய மக்கள் விடுதலை முன்னிணியின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர், ஆழமான பகுப்பாய்வில் ஜேவிபீ அரசியலின் முட்டுச் சந்தினையும் பிற்போக்குப் பண்பையும் அம்பலப்படுத்தியது. (இந்த கட்டுரைகள் அதே பெயரில் நூல்வடிவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.)

தொழிலாள வர்க்கம் எனப்படும் ஒடுக்கப்பட்ட வர்க்கமே, இந்த முதலாளித்துவ யுகத்தில் பிரதானமான புரட்சிகர சக்தி என்ற, தொழிலாள வர்க்கம் பற்றிய மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வமான நிலைப்பாட்டை நிராகரித்துக்கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்பது கிராமப்புற வறியவர்கள் உட்பட சகல ஒடுக்கப்பட்டவர்களும் அடங்கிய சமூகக் குழுவினரே என மோசடியான சூத்திரமொன்றை ஜேவிபீ முன்வைத்தது. ஜேவிபீ, ஸ்ராலினிச இரண்டு கட்டப் புரட்சி தத்துவத்தைஅதாவது புரட்சியின் முதலாவது கட்டம் என்பது, தேசிய முதலாளித்துவத்துடன் அணிசேர்ந்து செய்கின்ற முதலாளித்துவ புரட்சி என்றும், சோசலிசப் புரட்சியை எதிர்கால சந்தர்ப்பத்துக்கும் பங்கிடும் தத்துவம்- அணைத்துக்கொண்டு, தேசிய முதலாளித்துவ வர்க்கம் முற்போக்கு வகிபாகம் ஆற்ற இலாயக்குள்ளது என அறிவித்தது.

தமது நிலைமையை அபிவிருத்தி செய்துகொள்வதற்காக தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தபோது, “கஞ்சிக் கோப்பைக்கான போராட்டம்என ஜேவிபீ அவற்றை கண்டனம் செய்தது. இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களைவரப்பிரசாதம் படைத்த குழுவினர்என்றும், “இந்திய விஸ்தரிப்புவாதத்தின் பகடைக்காய்கள் என்றும் ஜேவிபீ முத்திரை குத்தியது. இந்த நிலைப்பாட்டில் இருந்து, ஜேவிபீயின் அரசியலுக்குள் எதிர்கால பாசிசவாதத்தின் விதைகள் வெளிப்படுகின்றன என கீர்த்தி பாலசூரிய தெளிவுபடுத்தினார்.

தமது குட்டி முதலாளித்துவ கொள்கைகளின் அடிப்படையில், 1971 ஏப்பிரல் மாதத்தில் நடத்திய ஜேவிபீயின் கெரில்லா எழுச்சி சாகசங்கள், 15,000 கிராமப்புற இளைஞர்களின் படுகொலையுடன் ஆட்சியில் இருந்த கூட்டரசாங்கத்தால் நசுக்கப்பட்டது.

1971 அழிவு, ஜேவிபீ பற்றிய புகக பகுப்பாய்வை நிரூபித்தது. 1970 கூட்டரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்ட அதேவேளை, அதைஎதிர்புரட்சிகளில்இருந்து பாதுகாப்பதற்கும் வாக்குறுதியளித்து, ஜேவிபீ செய்த சந்தர்ப்பவாத அடிபணிவை புகக அம்பலப்படுத்தியது. தொழிலாள வர்க்கத்தை நிராகரித்து முன்னெடுக்கப்படுகின்ற தனிமைப்பட்ட, சாகச கெரில்லா கிளர்ச்சி மூலம், கூட்டரசாங்கத்தின் கைகள் பலப்படுத்தப்படுவதாக புகக சுட்டிக் காட்டியது. எவ்வாறெனினும், தமது கொள்கைப் பிடிப்பான அரசியல் பலத்தை வெளிப்படுத்தி, ஜேவிபீயின் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான சக்திவாய்ந்த போராட்டத்துக்கு புகக தலைமை வகித்தது.

இந்த நெருக்கடியின் பின்னர், விஜேவீர, 1971 ஏப்பிரலின் பக்கம் சுய-விமர்சனத்துடன் மீண்டும் திரும்பிப் பார்ப்போம் என்ற பெயரில் ஒரு சுய விமர்சன அறிக்கையை 1978ல் வெளியிட்டார். அது ஜேவிபீயின் முட்டுச்சந்தை சுட்டிக் காட்டியது. தனது கட்சி ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின்மென்ஷிவிக் வாத கருவறைக்குள்ளேயேபிறந்தது என அவர் பிரகடனம் செய்தார். ஸ்ராலினிசத்துக்கும் லசசக-கம்யூனிஸ்ட் கட்சி அரசியலை எதிர்ப்பது போன்ற சிறந்த பண்புகளும் கட்சியிடம் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிக்கை முற்றிலும் போலியானதாகும். ஜேவிபீயானது ஸ்ராலினிச அரசியலில் மூழ்கிப்போன, கூட்டரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்த கட்சியாகும். அதிருப்தி கண்ட உறுப்பினர்களை கட்சிக்குள் கட்டிவைத்துக்கொள்வதற்கே, சுய விமர்சனம் என்ற பெயரில், சமரசவாத சாம்பார் ஒன்றை அவர் முன்வைத்தார்.

கட்சியை சுய விமர்சனத்தின் மூலம் துப்புரவு செய்து கொண்டதாக கூறும் விஜேவீரவின் பூச்சாண்டி வார்த்தைகள், 1977ல் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் யூஎன்பீ அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மீது தொடுத்த கொடூரமான தாக்குதல்களுக்கு அடிபணிந்து ஜேவிபீ எடுத்த வேகமான வலதுசாரி திருப்பத்தை மூடி மறைப்பதற்கான கண்கட்டி வித்தையாகும். ஸ்ரீலசுக-லசசக-கம்யூனிஸட் கட்சி கூட்டரசாங்கத்துக்கு விரோதமான வெகுஜன சீற்றத்தை சுரண்டிக் கொள்வதற்காக, ஜயவர்தன ஜேவிபீயின் அரசியல் கைதிகளை விடுதலை செய்தார். எனினும், இந்த குட்டி முதலாளித்துவ இயக்கத்தை தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமான ஒரு எதிர் சக்தியாக பயன்படுத்திக்கொள்வதே அவரின் கணக்கெடுப்பாக இருந்தது. ஜேவிபீ அந்த வகிபாகத்தை வெட்கமின்றி இட்டு நிரப்பியது.

தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான யூஎன்பீ அரசாங்கத்தின் தாக்குதல், பூகோள செயற்பாட்டின் ஒரு பாகமாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் செய்துகொள்ளப்பட்ட சமரசங்களின் பின்னர், உலக முதலாளித்துவத்தின் முதலாவது ஆழமான பொருளாதார நெருக்கடி, 1971 ஆகஸ்ட்டில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் டொலரின் தங்கப் பெறுமதி பின்னணியை அகற்றிக்கொண்டதில் அறிகுறியாகத் தென்பட்டது. அதனால் உருவான நெருக்கடியை சுமத்தி, எல்லா நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், போர்த்துக்கல் மற்றும் கிரேக்கம் உட்பட ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகரப் போராட்டங்கள் வெடிப்பதற்கு வழியமைத்தது. அமெரிக்காவுக்குள் வர்க்க மோதல்களும் அரசியல் நெருக்கடிகளும் உக்கிரமடைந்தன. அநேகமான காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளும், இதே போன்ற கிளர்ச்சிகளால் ஆட்டங்கண்டன.

பப்லோவாதிகளின் ஒத்துழைப்பைப் பெற்ற சமூக ஜனநாயகவாத மற்றும் ஸ்ராலினிச கட்சிகளின் உதவியுடன், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள், வெகுஜனப் புரட்சிகர அலைகளை நசுக்குவதில் வெற்றி கண்டன. பின்தங்கிய நாடுகளின் மலிவு உழைப்புத் தளங்களுக்குள் குதித்து, சுரண்டலை உக்கிரமாக்கி கொள்ளை இலாபம் பெறுவதற்கு, அபிவிருத்தியடைந்து வந்த புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொண்டு பூகோள ரீதியில் உற்பத்தியை ஒழுங்கமைப்பதை நோக்கி பிரதான ஏகாதிபத்திய நாடுகள் திரும்பின. இந்த தாக்குதலின் ஆரம்பத்திலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பொருளாதாரத்தை திறந்துவிடுவதன் பக்கம் திரும்பிய நாடு இலங்கையாகும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையொன்றை ஸ்தாபித்துக்கொண்ட ஜயவர்தன, சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி திறந்த பொருளாதார கொள்கையை முன் தள்ளினார். இந்த தாக்குதலின் பாகமாக, 1980 ஜூலை பொது வேலை நிறுத்தத்தை ஒடுக்கி, ஒரு இலட்சம் அரசாங்க ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிரித்து, தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதன் பேரில், ஒரு தொடர் தமிழர்விரோத ஆத்திரமூட்டல்களின் பின்னர், ஜயவர்தன 1983ல் பிரிவினைவாத புலிகளுக்கு எதிராக யுத்தத்தை தூண்டிவிட்டார். 1983 ஜூலையில், தென் பகுதியில், விசேடமாக இலங்கையின் பிதான தொழிலாள வர்க்க மையமான கொழும்பில், தமிழர் விரோத படுகொலை வன்முறையை கிளறிவிட்ட அரசாங்கம், வன்முறைக்கான பொறுப்பை ஜேவிபீ, நவசமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது சுமத்தி அந்தக் கட்சிகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்தது.

இந்த காலகட்டத்தைப் பற்றிய தனது சுய விமர்சனத்தை எழுதும் முசோக, போலி விமர்சனத்துக்குள் ஒழிந்துகொண்டு ஜேவிபீ விரைவில் வலது பக்கம் சென்றதை மூடிமறைக்கின்றது. 1980ல் வெளியிடப்பட்ட ஜேவிபீயின் புரட்சிகர கொள்கைப் பிரகடனம் என்ற அறிக்கை, “திறந்த பொருளாதாரம் என்ற புதிய-தாராண்மைவாத கொள்கையின் முதல் ஆட்டமுறையை தெளிவாக கண்டுகொள்ளவில்லைஎன்பது அதற்குள்ள ஒரு விமர்சனமாகும். பட்டியலில் உள்ள ஜேவிபீயின் ஏனையபிழைகளுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை உருவாக்கியதற்கு எதிராக

போதுமான போரட்டத்தை நடத்தாமை, மற்றும் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் சிவில் உரிமைகளை அகற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததும் அடங்குகின்றன. தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தமை தொடர்பாக, “கட்சி போதுமானளவு கவனம் செலுத்தவில்லை என்றும் முசோக தெரிவிக்கின்றது. ஆயினும் முசோக 1980 ஜூலை வேலை நிறுத்தத்துக்கு எதிராக கட்சி செய்த கருங்காலி வேலையை பாதுகாக்கின்றது. பரந்தளவில் அதிருப்திக்கு உள்ளான இந்த தொழிலாள விரோத நடவடிக்கைகள் காரணமாக, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜேவிபீயில் இருந்து பிரிந்து வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியது.

இந்த பிற்போக்கு செயற்பாடுகள்சரளமான பிழைகள் அல்ல. அவற்றின் மூலம், ஜேவிபீயின் வலதுசாரி பயணமும், அது யூஎன்பீ உடன் உத்தியோகபூர்வமற்ற கூட்டணியில் இருந்ததும் அம்பலத்துக்கு வந்தன. ஜேவிபீ சிங்கள இனவாதத்துக்குள் மூழ்கிப் போயிருந்ததாலேயே, அது தமிழ் மக்களுக்கு விரோதமான தாக்குதல் தொடர்பாகபோதுமானளவு கவனம் செலுத்தவில்லை. யுத்தம் தொடங்கிய நாளில் இருந்து, ஜேவிபீ அதன் பிரதான தண்டோராக்காரனாக முன்னணியில் இருந்தது. ஜேவிபீ 26 ஆண்டுகால கொடூர யுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை முசோக எதிர்க்காததோடு, தாமும் யுத்தத்தை எதிர்க்கவில்லை என்பதை சமிக்ஞை செய்துள்ளது. ஏனைய முதலாளித்துவ பேரினவாத கும்பல்களைப் போலவே, ஜேவிபீயின் கொள்கையும், முதலாளித்துவ ஒற்றை ஆட்சியை பாதுகாப்பதே ஆகும்.

ஒடுக்குமுறை யுத்தத்துக்கு முகங்கொடுத்த வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள், பத்தாயிரக்கணக்கில் தென்னிந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் உட்பட வெளிநாடுகளுக்கு தஞ்சம் தேடி ஓடினர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தமிழ்நாட்டில் வாழும் நெருக்கமான இன உறவுகொண்ட மக்கள் மத்தியில் ஆழமான அமைதியின்மையை கிளறிவிட்டது. தமிழ் நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையை தீர்ப்பதற்கு, இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் முதலாளித்துவத் தட்டுக்கள் மத்தியில் மட்டுப்படுத்தப்பட்டளவில் அதிகாரத்தைப் பகிர்வதற்காகஅரசியல் தீர்வொன்றைமுன்வைப்பதையே புது டெல்லி செய்தது.

ஸ்ரீலங்காதாய் நாட்டின்மீதான இந்திய ஆக்கிரமிப்பு நெருங்கிவிட்டது என கூச்சல் போட்டு பேரினவாத பிரச்சாரத்தை தீவிரமாக்குவதற்கு ஜேவிபீ இதை பற்றிக்கொண்டது. அதன் பின்னால்இனத்தை விடுவித்தல்என்ற பெயரில் ஸ்ரீலசுக உடன் தேசப்பற்று இயக்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜேவிபீ முயற்சித்தது.

இந்த பிற்போக்குப் பிரச்சாரத்தை, புரட்சிகர முயற்சியாக மிகைப்படுத்தி முசோக பின்வருமாறு எழுதியுள்ளது:

அரசியல் ரீதியில் நெருங்கிவரும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைக்கக்கூடிய சக்திகளை ஐக்கியப்படுத்துவதற்குத் தேவையான வேலைத் திட்டமொன்றுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. 1986ல் கட்டியெழுப்பப்பட்ட தாய்நாட்டை காக்கும் இயக்கம் இத்தகைய ஒரு முயற்சியாக இருந்ததோடு, தூக்கக் கலக்கத்துக்குள் செயற்பாடின்றி இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, தோன்றியுள்ள நிலைமைக்கு எதிராக விழிப்படையச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.” (பக்கம் 48.)

புலிகளை நிராயுதபாணிகளாக்கும் அதேவேளை, தமிழ் பிரபுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை பகிர்வதற்கு பிரேரிக்கப்பட்ட 1987 ஜூலை இந்திய-இலங்கை உடன்படிக்கை, இரு நாட்டு அரசாங்கங்களாலும் கைசாத்திடப்பட்ட போது, ஜேவிபீயின் ஆத்திரமூட்டல் பிரச்சாரம் சுகப்படுத்த முடியாத வியாதியாகியது. ஜயவர்தன அரசாங்கமும் இந்தியாவும்தாரைவார்த்துபிளவுபடுத்தி வடக்கு மற்றும் கிழக்கை தட்டில் வைத்து புலிகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிப்பதாக அது பொய்யாகக் கூறிக்கொண்டது.

தனது பேரினவாத பிரச்சாரத்தை எதிர்த்தவர்களை படுகொலை செய்வதற்காக, ஜேவிபீ ஆயுதபாணி பாசிச கொலைகார தாக்குதலை தொடுத்தது. அதன் குண்டர்கள், 1988-90 காலத்தில், அவ்வாறு கொலை செய்யப்பட்ட அரசியல் எதிரிகள் மற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானவர்களாவர். அதன் பாசிச தாக்குதல்களுக்கும் யூஎன்பீ அரசாங்கத்தின் படுகொலைகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக போராடியதற்காக, ஜேவிபீ குண்டர்கள் புகக உறுப்பினர்கள் மூவரை படுகொலை செய்தனர்.

ஜேவிபீ போலவே முசோகவும் இந்த கொலைகாரத் தாக்குதல்களை முழுமையாக நியாயப்படுத்துகின்றது. கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால் அதன்அரசியல் நடவடிக்கைகளை புதிய கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த புதிய நிலைமையின் கீழேயே தேசப்பற்று ஆயுதப் போராட்டத்துக்கு வெளிப்படையாக தலைமை கொடுப்பதற்காக [ஜேவிபீ] திரும்பியது,” என முசோக தெரிவிக்கின்றது. முசோக பிரதான தலைவரான குமார் குணரத்னமும் சேனாதீரவும் இந்த குண்டர்களோடு ஒன்றாக செயற்பட்டவர்களாவர்.

தேசப்பற்றாளனாகஜேவிபீயால் முடி சூட்டப்பட்ட முன்னாள் யூஎன்பீ ஜனாதிபதி ஆர். பிரேமதாச உடன் விஜேவீர இரகசிய சூழ்ச்சிகளை செய்தார். ஜேவிபீ பிரேமதாசவின் பக்கம் இழுபட்டுச் செல்வதற்கு, அவரது இனவாத இந்திய எதிர்ப்பு ஒரு காரணமாகியது. எவ்வாறெனினும் இந்த சூழ்ச்சிகள் பிழையாகிப் போன பின்னர், பிரேதமாச ஜேவிபீக்கு எதிராகத் திரும்பி, இராணுவத்தால் அமைக்கப்பட்ட கொலைப் படைகளை கட்டவிழ்த்துவிட்டு விஜேவீர உட்பட ஜேவிபீ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை அழித்தார். தமது வறுமையின் காரணமாக கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த கிராமப்புற இளைஞர்களில் சுமார் 60,00 பேரை கொன்று தள்ளுவதன் மூலம் இந்தப் படுகொலைகள் முடிவுக்கு வந்தன.

இந்த பாசிச இயக்கத்தை, “சோசலிசத்துக்கான வீரப் போராட்டமாகமிகைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் நினைவுக் கூட்டங்களை நடத்தி, அதன் கௌரவத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக ஜேவிபீயும் முசோகயும் சண்டையில் ஈடுபடுகின்றன. முசோகயின் சுய விமர்சனம் வெறும் மோசடி என்பதும், ஜேவிபீயின் அரசியலை மூடிமறைத்து முன்னெடுத்துச் செல்கின்றது என்பதும் இந்த இழிந்த நடவடிக்கையின் மூலம் வெளிப்படுகின்றது. ஆளும் கும்பலும் அதன் யூஎன்பீ அரசாங்கமும் இந்த படுகொலைக்கு பிரதான பொறுப்பாளிகளாக இருக்கின்ற போதிலும், முசோக தலைவர்கள் உட்பட ஜேவிபீயும், கிராமப்புற இளைஞர்களை அழிவுக்குத் தள்ளியதற்கு அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

இந்த அரசியல் நிலைமையில், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கும் ஜேவிபீயின் தாக்குதல்களுக்கும் எதிராக, தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு ஐக்கிய முன்னணியை அமைக்க கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை எடுத்தது புகக மட்டுமே. புகக தூய்மையான சர்வதேசியவாத பலத்துடன், அனைத்துலகக் குழுவின் கட்சிகளின் ஒத்துழைப்புடன் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பை அந்தப் போராட்டத்துக்காக வெற்றிகொள்வதற்கு போராடியது. ஆயினும் லசசக, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜ உட்பட கட்சிகள், யூஎன்பீயின் ஒடுக்குமுறையுடன் அணிதிரண்டன. கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் ஜேவிபீ ஒடுக்கப்படுவதற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் முன் தோன்றியிருந்த ஆபத்துக்கள் பற்றி புகக மட்டுமே எச்சரித்தது.

புதிய வலதுசாரி போலி-இடது குழு

ஜேவிபீ 1990 தசாப்தம் தொடக்கம் தீவிரமான வலதுசாரி சீரழிவை நோக்கி நகர்ந்தது. முசோக இந்த மாற்றங்கள் தொடர்பாக தமது வலதுசாரி சூழ்ச்சிக்கு பொருத்தமான வகையில் மூடி மறைக்கின்றது, அல்லது போலி விமர்சனத்தை வைக்கின்றது.

1990களில் இலங்கையின் ஆளும் தட்டு ஆழமான அரசியல் நெருக்கடியில் மூழ்கியிருந்தது. வடக்கு கிழக்கில் யுத்தத்தின் சுமை, பல பத்தாயிரக் கணக்கான கிராமப்புற இளைஞர்களின் படுகொலை மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களாலும், யூஎன்பீ அரசாங்கத்துக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு வளர்ந்து வந்தது. பதட்ட நிலைமைக்கு முகம் கொடுப்பது எப்படி என்ற பிரச்சினையில், யூஎன்பீ உள்ளே தலைநீட்டிய எதிர்க் கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல்கள், அரசாங்கம் கவிழ்வதை சமிக்ஞை செய்ததோடு அப்போதைய ஜனாதிபதியான பிரேமதாச உட்பட பிரதான தலைவர்கள் கொலைசெய்யப்பட்டதில் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த படுகொலைகளுக்கான பொறுப்பு புலிகள் மீது சுமத்தப்பட்டாலும், யூஎன்பீ உள்ளே மோதிக்கொண்ட கோஷ்டிகளின் பொறுப்புடைமை பற்றிய விடயத்தை அலட்சியம் செய்ய முடியாது.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, “சமாதானத்தையும் ஜனநாயகத்தையும்கொண்டுவருவதாக பாசாங்கு செய்த, ஸ்ரீலசுக தலைவராகி இருந்த சந்திரிகா குமாரதுங்கவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு ஆளும் வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினர் முடிவெடுத்த அதேவேளை, மக்கள் மத்தியில் அமைதியின்மையை கரைத்து வெளியேற்றுவதற்கான ஒரு பாதுகாப்பு குழாயாகப் பயன்படுத்துவதன் பேரில், தடை செய்யப்பட்டிருந்த ஜேவிபீயில் எஞ்சியிருந்த பகுதியினருக்கு பகிரங்க அரசியலில் ஈடுபட அழைப்புவிடுப்பதற்கும் செயற்பட்டனர். குமாரதுங்கவுக்கு ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்வதற்காக அவருடன் இழிந்த கொடுக்கல் வாங்கலின் மூலம் தமது ஜனாதிபதி வேட்பாளரை அகற்றிக்கொள்வதே ஜேவிபீயின் முதலாவது அரசியல் நடவடிக்கையாக இருந்தது.

ஜேவிபீயின் வலதுசாரி திருப்பம், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் வீழ்ச்சியை அடுத்து, 1991ல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடன் உலகம் பூராவும் தேசிய முதாலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களை வலதுபக்கம் தள்ளிய பூகோள இயல்நிகழ்வுகளின் வெளிப்பாடே ஆகும். சோவியத் குடியரசு ஒன்றியத்துக்கும் ஸ்ராலினிசத்துக்கும் நெருக்கமாக இருந்த ஒரு தொகை சந்தர்ப்பவாத மற்றும் தீவிரவாத அமைப்புக்கள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானதுசோசலிச முகாமின்பொறிவை சமிக்ஞை செய்துள்ளது என்று ஸ்ராலினிசத்தையும் சோசலிசத்தையும் சுட்டிக் காட்டி கூறிக்கொண்டன.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் பிரதிநித்துவம் செய்தது சோசலிசத்தின் வீழ்ச்சி அல்ல என்பதையும், உலக பொருளாதாரத்துக்கும் தேசிய அரச அமைப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைகின்ற நிலைமையின் கீழ், தேசியவாத மற்றும் ஸ்ராலினிசதனிநாட்டில் சோசலிசம்என்ற பிற்போக்கு திட்டத்தின் வீழ்ச்சியே அதில் வெளிப்பட்டது என்பதையும் சுட்டிக் காட்டியது அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் புகக/சோசக கிளைகள் மட்டுமே. சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய காலகட்டத்தை கொண்டுவரவில்லை என்றும், உலக முதலாளித்துவ நெருக்கடியின் புதிய காலகட்டத்தை குறிக்கின்றது என்றும் தெளிவுபடுத்தியது நாம் மட்டுமே. குளிர் யுத்த அரசியல் நிலைமைகளுக்குள் சோசவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் தள்ளாடிக்கொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்ற ஒரு தொகை குழுக்கள், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விரைவில் வாஷிங்டனின் பக்கம் திரும்பின.

இந்த அரசியல் அபிவிருத்திகளுக்கு அடிபணிவது பற்றிய விடயத்தில் முசோக மற்றும் ஜேவிபீக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததில்சமநிலை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக மாறி, “அமெரிக்க ஆதிக்கம் சவால் இன்றியே நிரூபிக்கப்பட்டதுஎன்று முசோக கூறுகின்றது. கட்சியை தொடங்கிய பின்னர், ஜனரல பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த முசோக பிரதான தலைவரான குமார் குணரத்னம், “அதே போல் சோசலிச முகாம் ஒன்று இப்போது கிடையாது. சோவியத் தேசம் கிடையாது. சீனா சீரழந்துவிட்டது. ஏகாதிபத்தியம் மிகம் பலம்வாய்ந்தது. அந்த நிலைமையில் ஆயுதப் போராட்டம் ஒன்று பொருந்துவதற்கு இடம் இல்லை,” எனத் தெரிவித்தார்.

நிலவிய சோசலிசம் என குணரத்னம் குறிப்பிடுவது ஸ்ராலினிசமே. அவர் அப்போது ஜேவிபீ செயற்பாட்டாளராகவும் இப்போது முசோக தலைவராகவும் சேர்ந்திருப்பது, “சோசலிசம் தோல்வியடைந்துவிட்டது, ஏகாதிபத்தியம் எல்லா விதத்திலும் பலம்வாய்ந்தது எனக் கூறும் பிற்போக்கு பிரச்சார அலையை அணைத்துக்கொண்டு மத்தியதர வர்க்கத்தின் தோல்விமனப்பான்மையை விதைப்பதற்கே ஆகும்.

2001 செப்டெம்பர் 11 அன்று நியூ யோர்க் நகர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட உடன், அமெரிக்கவாவின் புஷ் நிர்வாகம் போலித்தனமான பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அறிவித்த்தையடுத்து, உலக அரசியல் நிலைமை தீவிரமாக மாற்றம் அடைந்தது. புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை பாராட்டி ஜேவிபீ வெளியிட்ட அறிக்கை, “அமெரிக்கா தனது விஞ்ஞான அறிவையும் பொருளாதார திறமையையும் மனித குலத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துமெனில் அதற்குஎந்த சிரமமும் இன்றி உலகத் தலைவராகஆக முடியும் எனத் தெரிவித்தது.

அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்த்துக்காக முன்னெடுக்கின்ற தாக்குதலின் எதிரில், தாம் ஓரங்கட்டப்பட்டுள்ளோம் என பீதியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள், அப்போதைய யூஎன்பீ அரசாங்கத்துடன்சமாதான முன்னெடுப்புக்குஉடன்பட்டு, 2002 பெப்பிரவரி மாதம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்த ஜேவிபீ, யூஎன்பீ நாட்டைப் பிரித்து புலிகளுக்கு வடக்கு-கிழக்கை காட்டிக்கொடுப்பதற்கு திட்டமிடுகின்றது என குற்றஞ்சாட்டி உடன்படிக்கையை கிழித்தெறியுமாறு கூறியது. இது இனவாதத்தை கிளறிவிடுவதற்காக பிரச்சாரம் செய்யப்பட்ட முழுப் பொய்யாகும். புலிகளை இளைய பங்காளியாக்கி, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் சிலவற்றை கொடுத்து, தமது ஏகாதிபத்திய சார்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அதன் ஆதரவைப் பெற்றுக்கொள்வதே யூஎன்பீயின் திட்டமாகும்.

இராணுவத்தைப் போலவே ஜேவிபீயும், யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக இருந்த ஜனாதிபதி குமாரதுங்கவுக்குசமாதான உடன்படிக்கையைதகர்த்தெறியுமாறு அழுத்தம் கொடுத்தது. 2003 நவம்பரில் பாதுகாப்பு, உள்ளக மற்றும் செய்தி அமைச்சை தனது அதிகாரத்தன் கீழ் அபகரித்துக்கொண்ட குமாரதுங்க, 2004 பெப்பிரவரியில் யூஎன்பீ அரசாங்கத்தை கலைத்தார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைதாயகத்தைபாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட தைரியமான நடவடிக்கை என ஜேவிபீயினர் எல்லையற்ற ஆனந்தத்துடன் அங்கீகரித்தனர்.

ஜேவிபீ, குமாரதுங்க தலைமை வகித்த ஸ்ரீலசுக உடன் கூட்டணிக்குச் சென்று, 2004 ஏப்பிரல் மாதம் அதன் கீழ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி தேர்தலில் வென்ற பின்னர், ஜேவிபீ தலைவர்கள் நால்வர் குமாரதுங்கவின் அமைச்சரவையில் நுழைந்துகொண்டனர். முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் முழுமையாக இணைந்துகொண்டு ஜேவிபீ எடுத்த இத்தகைய நடவடிக்கைகள் அதன் தீர்க்கமான வலதுசாரி திருப்புமுனையாகும்.

ஜேவிபீயின் சகல அட்டூழியங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய முசோக தலைவர்கள், 2004 ஸ்ரீலசுக உடன் கூட்டணி அமைத்தமை, “அதன் தீர்க்கமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுவது புதுமையானது அல்ல, என தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஜேவிபீயின் அரசியலில் இருந்து தர்க்க ரீதியில் தோன்றியதாக முசோக மூடி மறைக்கின்றது. 1970ல் விஜேவீர ஸ்ரீலசுக தலைமையிலான கூட்டரசாங்கத்துக்கு ஆதரவளித்தார். 1977ல் ஜேவிபீ ஜயவர்தனவின் யூஎன்பீயை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு இரகசியமாக ஒத்துழைத்தது. 1994ல் ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக அவருடன் கொடுக்கல் வாங்கலுக்குச் சென்றது.

தாம் பிற்போக்கு மாற்றம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அறிவிப்பதற்காக 2005 ஏப்பிரல் மாதம் ஜேவிபீ தலைவர் சோமவன்ச அமரசிங்ஹ, தெற்காசியவிற்குப் பொறுப்பாக இருந்த அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் கிரிஸ்டினா ரொக்காவை கொழும்பில் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அமரசிங்ஹ தனது கடிதத்தில் மகிழ்ச்சியுடன் பின்வருமாறு தெரிவித்திருந்தார்: “பாராளுமன்றவாத கட்சி என்ற வகையில், கலப்பு பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு உடன்பட்ட முதலாவது புரட்சிகரக் கட்சியாக ஆகுவற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். புஷ்ஷின் போலித்தனமான பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கு ஆதரவை வழங்கிய அமரசிங்ஹவின் கடிதம், புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு வாஷிங்டனின் உதவியைத் தருமாறு ரொக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தது.

தாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நேரடியாக கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கும் ஒரு கட்சியாக ஆகியிருப்பதை ஜேவிபீ மீண்டும் உறுதிப்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஜேவிபீ அடிக்கடி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மிகக் கேவலமான மோசடியாகும்.

குமாரதுங்கவின் அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நியத்தின் சிக்கனத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு நேரடியாக ஆதரவளித்த இந்தக் கட்சி, 2005 ஜூலை மாதத்தில் விஷமத்தனமாக சிங்கள இனவாதத்தை கிளறிவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. தொடர்ந்தும் யுத்த நிறுத்த உடன்படிக்கையுடன் இணைந்திருந்த புலிகளுடன், 2004 டிசம்பரில் ஆசிய சுனாமி அழிவுக்கு இரையாகி இருந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குநிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும்முறைமை ஒன்றை அமைப்பதற்காக, குமாரதுங்க கொண்டுவந்த பிரேரணையை ஜேவிபீ ஒரேயடியாக எதிர்த்தது.

மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகி, தமது அடித்தளம் அதிகம் ஆட்டம் கண்டுவருவதை கண்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருந்தாலும், ஜேவிபீ  2005 செப்டெம்பர் மாதத்தில் ஸ்ரீலசுக ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த இராஜக்ஷவுடன் கூட்டணி ஒன்றுக்குள் நுழைந்துகொண்டது. ஆட்சிக்கு வந்தவுடன், புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்தல் இந்தக் கூட்டணியை அமைப்பதற்கான பிரதான நிபந்தனையாக இருந்தது. அதன் அர்த்தம், யுத்தத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதாகும். தொடர் ஆத்திரமூட்டல்களின் பின்னர், 2006 ஜூலை மாதத்தில் இராஜபக்ஷ மீண்டும் யுத்தத்தை தொடங்கிய பின்னர், அடுத்து வந்த மூன்று ஆண்டுகள் பூராவும் ஜேவிபீ யுத்தத்தின் முன்னணி வழிநடத்துனராக இருந்தது.

கட்சியின் போலி செஞ்சேனைப் படை, இராணுவத்துக்கு யுத்த அரண்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இராணுவ புலனாய்வுத் துறையுடன் செயற்பட்ட ஜேவிபீ, சிங்கள மக்கள் மத்தியில் யுத்தத்துக்கு எதிராக இருந்தவர்களை பிடிப்பதற்காக தகவல்களை வழங்கியது. “முதலாவது தாய்நாடுஎன்பது தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கான ஆயுதமாகியது. கட்சி அடித்தளமாகக் கொண்டு தேசப்பற்று பற்றிய பிற்போக்கு நோக்கு நிலையில் இருந்தே இந்த அநியாயங்கள் ஊற்றெடுத்தன. ஜேவிபீ இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களுக்கு ஆதரவளித்து அதைப் பாதுகாத்தது. முசோக தலைவர்கள் ஜேவிபீ உடன் இருந்து இந்த வெட்கக்கேடான நடவடிக்கைகளை அங்கீகரித்தனர்.

2008ல், ஜேவிபீ அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதைநிறுத்துவதாக கூறியிருந்தாலும், யுத்தத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தது. உழைக்கும் மக்கள் மத்தியில் கட்சி மேலும் மேலும் அதிருப்தியடைந்து வரும் நிலைமையின் கீழேயே அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதை நிறுத்தும் தந்திரத்தை அது பயன்படுத்தியது. யுத்தத்தில் வென்ற பின்னர், அரசாங்கத்துக்குள் மீண்டும் நுழைந்துகொள்ளும் முயற்சியில், அதை ஊழல்களில் இருந்து சுத்தப்படுத்தும் பிரேரணைகளுடன் ஜேவிபீ முன்வந்திருந்தலும், அந்தக் கோரிக்கைகளை இராஜபக்ஷ குப்பைக் கூடைக்குள் போட்டதால் அது தடுக்கப்பட்டது. 2010 ஜனாதிபதி தேர்தலில், ஜேவிபீ, யூஎன்பீ உடன் சேர்ந்து இராஜபக்ஷவின் யுத்தத்தை நடைமுறைப்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு இன்னொரு பிற்போக்கு கூட்டணிக்குள் நுழைந்துகொண்டது.

இந்த வலதுசாரி பிற்போக்கு நடவடிக்கைகளை ஒன்று விடாமல் அங்கீகரித்து ஒத்துழைத்ததன் பின்னரே முசோக தலைவர்கள் ஜேவிபீயில் இருந்து பிரிந்தனர். இந்தப் பிளவு தற்செயலானது அல்ல.

எகிப்திய புரட்சிகர போராட்டங்களில் வெளிப்பட்டவாறு, அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர எழுச்சிகளின் காலகட்டம் ஒன்று தோன்றியுள்ளது. இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் அரசியல் நெருக்கடி நீண்டு வருகின்றது. அனைத்துலக புரட்சிகர உணர்வுகள் இலங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதையிட்டு ஆளும் வர்க்கமும் அதன் இராஜபக்ஷ அரசாங்கமும் பீடியடைந்துள்ளன. அபிவிருத்தியடைந்து வரும் உலக நெருக்கடியின் மத்தியில், தாம் எதிர்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாளர்களதும் ஏழைகளதும் மற்றும் இளைஞர்களின் விரோதம் வளர்ச்சிகண்டு வருகின்றது.

உலக முதலாளித்துவம் பொறிவை நோக்கிப் பயணிக்கின்றது. முதலாளித்துவ வர்க்கம், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக புதிய ஆயுதங்களை தேடியும் தயாரித்தும் வருகின்றது. முசோக, இந்த வகிபாகத்தை ஆற்றுவதற்காக இலங்கைக்குள் முன்னணிக்கு வந்துள்ள வலதுசாரி தந்திரத்தை பிரதிநித்துவம் செய்கின்றது. தனக்குச் சமமான போலி-இடது மற்றும் முதலாளித்துவ குழுக்களை சேர்த்துக்கொண்டு மீண்டும் குழுவமைவதன் மூலமாக, முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கப் புரட்சிக்கு குழி பறித்து ஒடுக்குவதற்கு பொறி ஒன்றை அமைக்கும் எதிர்ப் புரட்சிகர வகிபாகத்தை ஆற்றுவதற்கே முசோக முன்வந்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சி மார்க்சிச-விரோத கூட்டணி ஒன்றை அமைக்கத் திட்டமிடுகின்றது

இலங்கைக்குள் ஒரு எதிர்ப் புரட்சிக்கு வழி அமைப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை சுற்றி வளைப்பதன் பேரில், போலி இடது குழுக்களை ஒன்றுசேர்த்து மார்க்சிச-விரோத கூட்டணி ஒன்றை அமைப்பதே, முன்னிலை சோசலிசக் கட்சி (முசோக) இப்போது பொறுப்பெடுத்துள்ள பிரதான பணியாகும். இதற்காக முசோகஇடதுகுழுக்களுடன் கலந்துரையாடல் ஒன்றைத் தொடங்கி, மார்க்சியத்தின் அடிப்படைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் தலமையிலான புரட்சிகர நடவடிக்கைகள் பற்றிய மார்க்சிச நிலைப்பாட்டுக்கும் தாக்குதல் தொடுப்பதை புதிய மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது.

நவம்பர் 23ம் திகதி இந்த குழுக்களுடன் தொடங்கிய கலந்துரையாடலுக்கு, கட்சிக்குள் ஏற்கனவே இடம்பெற்றுவரும் கலந்துரையாடலின் ஒரு தொகை ஆவணங்களை முசோக முன்வைத்துள்ளது. அவற்றுடன் அனுப்பப்பட்ட அறிமுகக் கடிதத்தில், பல தசாப்தங்களாகமார்க்சிசம் மற்றும் லெனினிசம் என்ற பெயரில் பல்வேறு சந்தர்ப்பவாத கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ள நிலைமையினுள், கம்யூனிசவாத அடிப்படைகளை மீண்டும் ஸ்தாபித்துக்கொள்வதும் சிக்கலை அகற்றிக்கொள்வதுமேஇந்தக் கலந்துரையாடலின் இலக்கு, எனக் குறிப்பிட்டிருந்தது. “வர்க்க அமைப்புக்குள்ளும் சமூக நனவிலும் ஏற்பட்டுள்ள நெருக்கத்தின் எதிரில், முதலாளித்துவ சிந்தனை உபகரணங்கள் மிகவும் வளர்ச்சியடைந்து சிந்தனாவாத நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலைமையின் கீழ், அந்த அடிப்படைகளை நிகழ்காலத்துடன் இணைத்துக்கொள்வது அவசியம்,” என அந்த அறிமுகத்தில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிசத்தின் மீது தாக்குதல் தொடுப்பதைத் தவிர இந்தநடவடிக்கைக்குவேறு எந்த தொடர்பும் கிடையாது. ஜேவீபீயைப் போலவே, முசோகவுக்கும் மார்க்சிசத்துடன் எந்த தொடர்பும் இருந்ததில்லை. தொழிலாள வர்க்கமும் மார்க்சிசத்தால் ஈர்க்கப்படும் ஏனைய பகுதியினரும் முதலாளித்துவத்துக்கு அடிபணிகின்றஅடிப்படைகளைஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே, “மார்க்சிச அடிப்படைகளை நிகழ்காலத்துடன் இணைத்துக்கொள்வதுஎன்பதில் சுட்டிக் காட்டப்படுகின்றது. மார்க்ஸ் விவரித்ததைப் போன்ற தொழிலாள வர்க்கம் இப்போது இல்லை எனக் கூறுவதற்கே, “வர்க்க அமைப்பில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. முசோக அமைக்கவுள்ள புதிய இடது குழுவமைவின் மார்க்சிச-விரோத பண்பே, இந்த நிலைப்பாடுகளில் எடுத்துக் காட்டப்படுகின்றது.

1977ல் யூஎன்பீ அரசாங்கம் திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் இருந்தே தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சமூகத்துடன் கட்டுண்டுள்ளதாக முசோக தனது சுயவிமர்சன நூலில் குறிப்பிட்டுள்ளது: “நுகர்வோர்வாதத்தினதும் பயன்பாட்டுவாதத்தினுதும் இரையாக இலங்கை சமுதாயம் பரிணாமம் அடைவது இந்த வேறுபாட்டின் எதிரிலேயே ஆகும். இந்த சீர்திருத்தங்களின் பாய்ச்சலினால் தனி மனிதனுக்கு அவனது வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினுள் மத்தியதர வர்க்க மாயை ஒன்று ஸ்தாபிதமானது. மத்தியதர வர்க்கம் சடரீதியில் கட்டியெழுப்பப்படாமல் ஆசியாவிலான தாழ்வு மனப்பான்மையினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும்…”

புரட்சிவாத கொள்கைப் பிரகடனம் என்ற பெயரில் முசோக வெளியிட்டுள்ள ஆவணம், மேலும் முன்சென்று, “புதிய தாராண்மைவாத உபாய வழிகளின்படி, அதன் முதல் கட்டத்தில் இருந்தே, பரிவர்த்தனைப் பண்டங்களை அதிகம் வணங்குவதும் நுகர்வோர்வாத கலாச்சாரமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம்வாழ்க்கையின் மனிதத் தன்மை அகற்றப்பட்டு, கொடூரவாதத்துக்குள் இழுத்துத் தள்ளப்பட்டுள்ள சமூகத்தில், சுயநலவாதமும் போலி காட்சிப்படுத்தல்வாதமும், மோசடி மற்றும் சுய ஏமாற்றமும்விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. “இலங்கை சமூகத்தில் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான கூட்டுழைப்பு பற்றிய பண்பை அபிவிருத்தி செய்வது சவாலாக இருக்கின்றதுஎன அந்த ஆவணம் கூறுகின்றது.

இப்போது, நுகர்வோர்வாதத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சமூகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், மார்க்சிஸ்டுகள் சுட்டிக் காட்டுகின்ற தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வகிபாகம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது, என்ற பின்நவீனத்துவவாதிகள் உட்பட மத்தியதர வர்க்க குழுக்களின் நச்சுத்தனமான பிரச்சாரமே இந்த பொய்புலம்பல்களின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. விசேடமாக, 1991 சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர், இந்த பிற்போக்கு பிரச்சாரம் உக்கிரமாக்கப்பட்டது.

1960களில் பிராங்ஃபர்ட் பள்ளி உட்பட குட்டி முதலாளித்துவ போக்குகள், நுகர்வோர்வாதத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ சமூகத்துக்குள் மூழ்கிப் போவது பற்றி மார்க்சிசத்துக்கு எதிராக முன்வைக்கின்ற கோட்பாடுகள், இந்த குழுக்களின் மூலம் இன்று நிரம்பி வழிகின்றது. பிராங்ஃபர்ட் பள்ளியில் முன்னிலையில் இருப்பவர்களில் ஒருவரான ஹேர்பர்ட் மார்க்யூஸ் பின்வருமாறு தெரிவிக்கின்றார்: “தம்மிடம் உள்ள பண்டங்களின் மூலமே மக்கள் தங்களை அடையாளங் கண்டுகொள்கின்றனர்; அவர்கள் தங்களது சொத்துப்பத்துக்கள், ஆடம்பர பொருட்கள், வீடு மனைகள் மற்றும் சமயலறை உபகரணங்களின் மூலம் தமது ஜென்மத்தை காண்கின்றனர். தனி மனிதனை அவனது சமூகத்துடன் கட்டிப்போடும் இயந்திரங்கள் மாற்றமடைந்துள்ளன.”

யுத்தத்துக்குப் பிந்திய காலத்திலான சமரசத்தினுள், உலக முதலாளித்துவத்துக்குள் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அடிபணிந்தே என்று இந்த நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துக்குள், புதிய தாராண்மை பொருளாதார வழிமுறை என்ற பல்வேறு திறந்த பொருளாதார கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலைமையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களாகவே, இந்த கருத்துக்கள் இப்போது முன்வைக்கப்டுகின்றன.

முசோக, இந்த கருத்துக்களை பகிர்ந்துகொள்பவர்கள் மத்தியில், ஸ்லெவோக் ஜிஜெக் என்ற தத்துவ ஆசிரியராக தோன்றும் கம்யூனிச-விரோத, பின்நவீனத்துவ வாதியும் அடங்குகிறார். அவரை தீவிரவாதிகளும் போலி இடதுகளும் அணைத்துக்கொண்டுள்ளனர். ஜிஜெக், “சமூகம் நுகர்வோர்வாதத்துக்குஅடிபணிவது பற்றி உத்வேகமடைந்து நுகர்வோர்வாதத்தின் விரோதியாக காட்டிக்கொள்கின்றார். அநேக கட்டுரைகளில் இதை மிகைப்படுத்தும் ஜிஜெக், 2010 லண்டன் நகரில் இளைஞர்களின் கிளர்ச்சியை கண்டனம் செய்து, அவைநுகர்வோர்வாத நோக்குக்கு பிரதிலிப்புமற்றும்நுகர்வோர்வாத ஆசையின் வெளிப்பாடுஎன்று குறிப்பிட்டார். அவர்தெருப்பொறுக்கிகள் மற்றும் மூர்க்க கும்பல்என்று அந்த இளைஞர்களை கண்டனம் செய்தார்.

தொழிலாள வர்க்கம் நுகர்வோர்வாதத்துக்கு அடிபணிந்து முதலாளித்துவ சமூகத்துடன் கட்டுண்டுள்ளதாக போலி சித்திரம் ஒன்றை, மார்க்சிச வரலாற்றுப் சடவாத விதிமுறைக்கு எதிராக முசோக முன்வைக்கின்றது. தொழிலாளியின் தொழிலாள வர்க்கப் பண்பு, தனி மனிதனின் இடத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. நிலைமை அதுவெனில், சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு வாய்ப்புகள் இல்லை.

முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சிந்தனையாளர்களால், சமூகம் தனி மனிதனின் கூட்டாக காட்டப்படுவதை மார்க்ஸ் நிராகரித்தார். மார்க்ஸ் குன்றிஸ்ஸில் தெளிவுபடுத்தியவாறு, “சமூகம் தனி மனிதர்களால் அமையப்பெற்றது அல்ல, அது உள் உறவுகளின் மொத்தத்தையும் பிரதிபலிக்கின்றது. இந்த நபர்கள் அந்த உறவுகளிலேயே இருக்கின்றனர்.” அதாவது, அது வர்க்க உறவுகளின் வெளிப்பாடாகும்.

2008ம் ஆண்டில் அமெரிக்க நிதி நிறுவனங்கள் பொறிந்து உலகமெங்கிலும் பரவிய முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி, முதலாளித்துவப் பொருளாதார வீழ்ச்சியின் புதிய காலகட்டத்தின் சமிக்ஞையாகியது. அமெரிக்கா உலக ஆதிக்கத்தினைப் பெற தனது புதிய இராணுவப் பலத்தை பியோகிக்கும் நிலைமைக்குள், புதிய அழிவுகரமான உலக யுத்தமொன்றுக்கான அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. இந்த ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியினால், புரட்சிகர போராட்டங்களின் புதிய காலகட்டம் திறந்துவிடப்பட்டு சோசலிசப் புரட்சிக்கான அனைத்துலக நிபந்தனைகள் தோற்றமெடுத்துள்ளன.

சோசலிசத்துக்கான போராட்டமானது வரலாற்று அவசியமாகும். அதன் வரலாற்று சடவாத அடித்தளத்தை தெளிவுபடுத்தி மார்க்ஸ் பின்வருமாறு கூறினார்: “மனிதர்களின் இருப்பு தீர்மானிக்கப்படுவது அவர்களது நனவில் அல்ல. அதற்கு மாறாக, சமூக இருப்பினாலேயே அவர்களது நனவு தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பண்ட உற்பத்தி சக்திகள், அவற்றின் வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டத்தில், நடப்பில் உள்ள உற்பத்தி உறவுகளுடன் மோதிக்கொள்ளும். இந்த உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் வரம்புகளில் இருந்து அவற்றின் விலங்காக ஆகும். அப்போது சமூகப் புரட்சியின் காலகட்டம் ஒன்று தொடங்கும்.”

இந்த வரலாற்று புறநிலை அபிவிருத்தியின் மூலமே, தொழிலாள வர்க்கத்துக்குள் பரந்து கிடக்கும் முதலாளித்துவ சிந்தனைகளின் முடிச்சுகளை வெட்டித்தள்ளுவதற்கான நிலைமைகள் உருவாகும். அந்த போராட்டத்துக்கு புரட்சிகர கட்சி ஒன்று அவசியம். உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் மார்க்ஸ் சுட்டிக் காட்டிய மோதல்களே, உற்பத்தி சக்திகளின் சமூகமயப்படுத்தலுக்கும் தனியார் சொத்துடைமைக்கும் மற்றும் உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தால் ஆழமாக்கப்பட்டுள்ள உலக பொருளாதாரத்துக்கும் தேசிய அரசுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக அபிவிருத்தி அடைந்துள்ளன. உலக முதலாளித்துவத்தின் பொறிவும், வளர்ச்சி கண்டுவரும் புரட்சிகர போராட்டங்களும், இன்று அத்தகைய ஒரு கால கட்டத்தை திறந்துவிட்டுள்ளன.

அதற்கு எதிராக, முசோக உள்ளே இடம்பெறும் மார்க்சிச-விரோத கலந்துரையாடல்கள், அதனால் விநியோகிக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் தெளிவாகின்றன. “வர்க்கம், அமைப்பு மற்றும் புரட்சிஎன்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணமொன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்படுகின்றது: “முதலாளித்துவத்தில் மனித இருப்பின் மெல்லிய நாடித் துடிப்புகளையும் இடைவெளிகளையும் கிரகித்துக்கொண்டு, நுகர்வோர்வாதத்தின் மூலம் அந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டுவருகின்ற நிலைமையில், “முதலாளித்துவத்தின் பொறிவு எந்தவகையிலும் எதிர்பார்க்க முடியாத நிலையில்உற்பத்தி உறவுகள் மற்றும் சக்திகளுக்கு இடையிலான மோதலின் மூலம், புரட்சியை எதிர்பார்ப்பதன் மூலம், கானல் நீருக்குப் பின்னால் சென்ற மான்குட்டியின் தலைவிதியே எங்களுக்கு கிடைக்கும்.” இது, முதலாளித்துவத்தை ஒரே உண்மையான அமைப்பு முறையாக ஏற்றுக்கொள்வதாகும்.

உயிரில்லா பண்ட உருவ வழிபாட்டைப் (fetishism) பற்றிய முசோகயின் கருத்து, மார்க்ஸ் உயிரில்லா பண்ட உருவ வழிபாட்டைப் பற்றி தெளிவுபடுத்திய உன்னதமான மெய்யியல் விளக்கத்துக்கு முற்றிலும் மாறானதாகும். மார்க்ஸ் உயிரில்லா பண்ட உருவ வழிபாட்டைப் பற்றி சுட்டிக் காட்டியது, விற்பனைப் பொருளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ சமுதாயத்துக்குள் (பண்ட உற்பத்தியின்) சமூக உறவுகள் பண்டங்களுக்கு இடையிலான உறவுகளாக தோன்றுவதையே ஆகும். பண்ட கொடுக்கல் வாங்கலுக்கான பண புழக்கம் இந்த சமூக உறவுகளை மர்மமானதாக்கியுள்ளது. மார்க்சின் இந்த கண்டுபிடிப்பு, முதலாளித்துவத்துக்குள் ஒழிந்துகொண்டிருக்கும் சமூக உறவுகளை அம்பலத்துக்கு கொண்டுவந்தது. முசோகஉயிரில்லா பண்ட உருவ வழிபாடுஎன்பதை மூர்க்கமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பது, தொழிலாள வர்க்கத்துக்கு குழி பறிப்பதற்கே ஆகும்.

முசோக தொழிலாள வர்க்க விரோதத்தால் முண்டிக்கொண்டிருக்கும் அமைப்பாகும். மேல் குறிப்பிடப்பட்ட கலந்துரையாடல்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளகட்சியும் புரட்சிகர வெகுஜன இயக்கமும்என்ற இன்னொரு ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது; “1953ல் ஒரு கொத்து அரிசியை 25 சதத்தால் அதிகரித்தபோது, உடனடியாக எழுச்சிகண்ட மக்கள், இப்போது ஊழல், யுத்தம் மற்றும் இராணுவத் தலையீடுகள் போன்ற அதற்கும் அப்பாலான தாக்குதல்களை எதிர்கொண்டு, அவற்றுக்கு எதிராக அவ்வப்போது எழும் எதிர்ப்புகளை அலட்சியம் செய்வது, அந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் இராஜபக்ஷ மேலாதிக்கத்துடன் சேர்ந்து ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒட்டுமொத்த பிணைப்பினாலேயே ஆகும்.”

இராஜபக்ஷ நிர்வாகம் பொலிஸ்-அரசை கட்டியெழுப்புவதற்கு ஜேவிபீயில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்து வந்து, பின்னர் அதில் இருந்து பிரிந்து சென்ற நபர்களாலேயே இந்த அறிக்கைகள் விடுக்கப்படுகின்றன. மேலும், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு, ஏனைய போலி இடதுகள், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ குழுக்களுடன் சேர்ந்து தானும் பரம எதிரியாக இருப்பதாலேயே, முசோக அவ்வாறு கூறுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தால் தமது வரப்பிரசாத பங்கை இழந்த யூஎன்பீயும் உயர் மத்தியதர வர்க்கத்தினரின் பகுதிகளும் இவ்வாறு தொழிலாளர்களை அடிக்கடி திட்டித் தீர்க்கின்றனர். தொழிலாளர்களையும் ஏனைய மக்கள் பகுதியினரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, அரசாங்கத்தின் கைகளைப் பலப்படுத்துவது சம்பந்தமாக, முசோக உட்பட போலி இடதுகளும் தொழிற்சங்கங்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். தொழிலாளர்களும் மாணவர்களும் போராட்டத்துக்கு வரும் பொழுது, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சோசலிச கொள்கையின் அடிப்படையிலான அரசியல் போராட்டத்துக்கு முற்றிலிலும் எதாராக நின்று, அவர்களை திக்குமுக்காடச் செய்து மீண்டும் திருப்பி அனுப்பியதும் இவர்களே.

இந்த ஆவணத்தின் படி, அரசாங்கத்தின் கொள்ளையடிப்புஅளவுகடந்துசென்று பொது மக்கள்எதிர்முனையின்பக்கம் திரும்புகின்றனர். ஆயினும்எதிர்முனைபலவீனமானது. இடது என்ற சக்தியும் அழுத்தம் கொடுக்கும் இயலுமையில் இருந்து தொலைவில் இருக்கின்றது.” அப்படியாயின், முசோக கூறுவதன் படி என்ன செய்ய வேண்டும்? இந்த ஆவணம் குறிப்பிடுவதாவது: “இலங்கை புரட்சிகர வெகுஜன போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவது, ஏனைய இடது கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் கூட்டின் ஊடாகவே இடம்பெற வேண்டும்.” அதாவது, முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பாதுகாப்பதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள அமைப்புக்களை ஒன்றாக அணிதிரட்டுவதே முசோகயின் நடவடிக்கை ஆகும். வலதுசாரி யூஎன்பீ உடன் கூட்டணியில் இருக்கும் நவசமசமாஜ கட்சியும் அதில் ஒன்றாகும். இராபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக பேயுடன் கூட்டுச் சேர்ந்தாலும் பரவாயில்லை என்று யூஎன்பீ மீது சாந்துகொண்டுள்ள ஐக்கிய சோசலிசக் கட்சி இன்னொன்றாகும்.

முசோக இந்த நிலைமையின் கீழ், கிரேக்கத்தில் போலி இடதுகள் மற்றும் முதாலளித்துவ கன்னைகளின் கூட்டமைப்பான சிரிசா அமைப்பினால் ஈர்க்கப்படுவதும், அதற்கு முழுமையாக ஒத்துழைக்கும் ஜிஜெக்கை தனது குருவாக ஏற்றுக்கொள்வதும் புதுமையானது அல்ல. முசோக சிரிசா அமைப்பின்எழுச்சிபற்றி கற்றுக்கொள்வதைபிரதான பணியாக அறிவித்துள்ளது. சிரிசா, கிரேக்க முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள அமைப்பாகும். முசோக வெளியிட்ட ஒரு அறவித்தல் பின்வருமாறு கூறுகின்றது:

வேறுபாடுள்ள இடதுகளின் நீண்ட கால ஒருங்கிணைந்த போராட்டமாகவும், பல்வேறுபட்ட சமூக போராட்டங்கள் ஒன்று திரண்டு அமைக்கப்பட்ட ஒன்றாகவும், பாசிச போலி காப்பாளர்களுக்கு எதிரான தீவிரவாத இடதுகளான சிரிசா பக்கம் ஈர்க்கப்படுவது எமது நோக்மாகும்.

சிரிசா ஆரம்பத்தில் இருந்தே தூக்கிப் பிடித்து வந்த ஜிஜெக், மே மாதம் குரோஷியாவில் சப்ரெக்கில், சிரிசா தலைவர் அலக்ஸிஸ் சிப்ராசுடன் நடத்திய கலந்துரையாடலில் பின்வருமாறு உபதேசம் செய்தார்: “ஐரோப்பிய அரசியல் பிரபுக்களுக்கு தமது ஆட்சியை கொண்டு நடத்தும் இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போகின்றது. சிரிசா முன்னுள்ள பணி, பித்துப்பிடித்த தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது அன்றி, சரளமாக நிலைமையை உறுதிப்படுத்துவதே.”

இவ்வாறு யோசனை தெரிவிக்கும் ஜிஜெக், விவரணத் திரைப்படமானபர்வர்ட்ஸ் கைட் டு ஐடோயோலொஜி (The Pervert's Guide to Ideology) பற்றி கொடுத்த பேட்டி ஒன்றில், ஜிஜெக் தன்னை பின்வருமாறு அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார்: “கேளுங்கள், நான் மார்க்சிசவாதி, ஆயினும் கம்யூனிசவாதத்தின் பழைய நோக்குக்கு நாம் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. புரட்சி முடிந்துவிட்டது; அது தோல்விகண்டுவிட்டது. உண்மையில், நம்பக்கூடிய வகையில், முதலாளித்துவம் எதோவொரு காரணத்தால், இந்த நூற்றாண்டின் தெளிவான நோக்குள்ள வெற்றியாளனாகும். ஜிஜெக்கின் சிந்தனை முசோகவுக்கு மிகவும் நெருக்கமானதாகும். முசோக, ஜிஜெக் மட்டுமன்றி அதற்கு சமமான மார்சிச-விரோத போக்கின்படி செயற்படும் அமைப்பாகும்.

தொழிலாள வர்க்கம் புரட்சிகர சக்தியாகும் என்ற மார்க்சிச நிலைப்பாட்டுக்கு குழி பறிப்பதற்காக, முசோசக மேலும் முன் செல்கின்றது. இப்போது மேலும் பல சக்திகளை அதற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சாக்குப் போக்குக்குள் ஒழிந்துகொண்டு அந்தக் கருத்தை முன்வைக்கின்றது. புதிய தாராண்மைவாத கொள்கைகளின் கீழ், “வர்க்க கூட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்தக் கட்சி கூறுவது இதையே ஆகும். சுய விமர்சனத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது: “தொழிலாள வர்க்கப் பகுதியினர், கூலி உழைப்பு படையின் முன்னிணியினர் என்ற கருத்தில் எங்களுக்குள் வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், அதற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டிய புதிய சக்திகளின் பண்புகள் -பொருள் மற்றும் சமூக நனவுக்கு தக்க வகையில்- திறமைகளை நாம் அடையாளங் கண்டுகொள்ள வேண்டும்.” வெற்றிகளைப் பெற வேண்டுமெனில், “நடப்பில் உள்ள முதலாளித்துவத்தின் நெம்புகோல்களின் இயக்கத்தை அவ்வப்போது நிறுத்தும் சக்திகளின் பெரும்பான்மையை வெற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.”

முசோக இந்த சக்திகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. முசோக தொழிலாள வர்க்கத்துக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பிரேரிக்கும் புதியசக்திகள், உற்பத்தியின் உலகமயமாக்கத்துடன் செல்வச் செழிப்புடன் தோன்றியுள்ள முகாமைத்துவ தட்டினர் மற்றும் முன்னணிக்கு வந்துள்ள தொழில் வல்லுனர்களே ஆவர். தொழிலாள வர்க்கத்தை இத்தகைய மத்தியதர வர்க்கப் பிரிவினரின் அதிகாரத்திற்குள் கட்டிவைத்து, அதனூடாக முதலாளித்துவத்துக்கு அடிபணியச் செய்வதே முசோகவின் குறிக்கோளாகும்.

முதலாளித்துவ கும்பலையும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் திரும்பியுள்ள உயர் மத்தியதர வர்க்கக் குழுக்களையுமே முசோக பிரதிநிதித்துவம் செய்கின்றது. உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துடனும் மற்றும் கடந்த காலத்தில் மேலும் மேலும் உற்பத்தியில் இருந்து விலகி வளர்சிகண்டுள்ள நிதி மேலாதிக்கத்துக்கும் சமாந்தரமாக, ஏனையை நாடுகளில் போலவே இலங்கையிலும் சந்தை ஊகவாணிப நடவடிக்கைளுக்கு, வர்த்தகம் மற்றும் வங்கி உட்பட நிதித் துறை மற்றும் தொழிற்துறையோடு சம்பந்தப்பட்ட பரந்த மத்தியதர வர்க்க குழுக்கள் தோன்றியுள்ளன. சமூக அநியாயங்களை விமர்சித்துக்கொண்டு, துப்புரவான சமுதாயம் மற்றும் நேர்மையான ஆட்சியை பற்றி போதிக்கும், அநேகமாக வெளிநாட்டு பணத்தில் தங்கியிருக்கும், ஒரு தொகை அரச சார்பற்ற அமைப்புக்களும் மேற் குறிப்பிடப்பட்ட வளர்ச்சியோடு தலைநீட்டியுள்ளன. அநேகமான தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் ஏகாதிபத்திய நாடுகளின் அரச சார்பற்ற நிறுவனங்களில் தங்கியிருக்கின்றன.

உயர் மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் முதலாளித்துவத்தின் கனிசமான பகுதியினர், இராஜபக்ஷ தலைமையிலான ஆளும் கும்பல் நாட்டை ஆட்சி செய்வது பற்றி அதிருப்திக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியுள்ளனர். அதற்கு காரணம், இராஜபக்ஷ குழு பொருளாதாரத்தின் பெரும் பகுதியின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு, அதன் இலாபங்களை தமது அரசியல் மற்றும் வர்த்தக உறவினர்களுடன் பங்கு போட்டுக்கொள்வதாகும். அரசியல் ரீதியில் செயற்படும் மத்தியதர வர்க்க குழுக்களின் அரசாங்க எதிர்ப்பின் அடிப்படை இதுவே. இந்த போலி இடதுகள் உள்ளடங்கலான மத்தியதர வர்க்கப் பகுதியினர், தமது நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்திய, குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் பக்கம் திரும்பி ஜனநாயகம், மனித உரிமை, நேர்மையான ஆட்சி என்பவற்றை நிலைநாட்ட உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்தப் பெரும் பலவான்கள் தமது அரசியல் தேவைக்காகவே மனித உரிமைகள் போன்ற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. முசோக அமெரிக்க ஏகாதிபத்தியம் பெரும் பலவானாக இருக்கின்றது என ஏற்றுக்கொண்டுள்ள ஒரு அமைப்பாகும்.

உயர் மத்தியதர வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள முசோக உட்பட இலங்கையில் உள்ள போலி இடதுகளின் பிரதான பண்பு, மார்க்சிசத்துக்கும் மற்றும் தொழிலாள வர்க்க தலைமையிலான அரசியல் சுயாதீனத்திற்கும் புரட்சிகர செயற்பாடுகளுக்கும் விரோதமாக இருப்பதாகும். முசோக உட்பட இந்தக் குழுக்கள், மார்க்சிசத்துக்கான போராட்டத்தின் வரலாற்று தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்யும், ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் அதன் இலங்கை கிளையான சோசலிச சமத்துவக் கட்சிக்கும் முற்றிலும் எதிரானவையாகும்.

உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் மத்தியில், சர்வதேச ரீதியில் வளர்ச்சியடையும் புரட்சிகர போரட்டங்கள் இலங்கைக்குள்ளும் வெடித்து எழுவதை தடுப்பதற்காக, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் ஒத்துழைப்பதற்கே இந்த போலி இடதுகளின் கூட்டமைப்பை முசோக தயார் செய்கின்றது. தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள், சோசலிச புரட்சிக்குத் தலைமை கொடுப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப இணைந்துகொள்வது அவசரமான தேவையாக முன்னெழுந்துள்ளது. அனைத்துலக சோசலிசத்துக்கான முன்னோக்குக்காக தெற்காசியாவுக்குள் போராடுவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.