சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Erdogan’s AKP wins Turkish municipal elections

எர்டோகனின் AKP துருக்கிய நகரசபைத் தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளது

By Peter Schwarz 
1 April 2014

Use this version to printSend feedback

பிரதம மந்திரி ரெசப் டியிப்பின் கன்சர்வேடிவ் இஸ்லாமியவாத நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி (AKP) ஞாயிறன்று துருக்கியில் நடைபெற்ற நகரசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

தேர்தல்கள் அவருடைய அரசாங்கத்தின் மீது ஒரு நம்பிக்கை வாக்காக இருக்கும் என்று எர்டோகன் அறிவித்திருந்தார்; சமீபத்திய மாதங்களில் இது தொடர்ந்த இலஞ்ச ஊழல்களினால் அதிர்ச்சிக்கு உட்பட்டிருந்தது. சர்வாதிகார நடவடிக்கைகளை பெருகிய முறையில் எதிர்கொண்டது. அவர் மொத்த வாக்கில் 39% கிடைக்கும் என்று இலக்கு கொண்டிருந்தார்; அதைத்தான் AKP ஆனது 2009ல் நடைபெற்ற கடைசி நகரசபைத் தேர்தல்களில் பெற்றிருந்தது.

AKP கணிசமாக நல்ல முடிவை 45% வாக்குகள் பெற்றதன் மூலம் சாதித்தது. ஆனால் தன்னுடைய 2011 பாராளுமன்ற தேர்தல்கள் முடிவைவிட பின்தங்கியது; அதில் அது கிட்டத்தட்ட 50% வாக்குகளைப் பெற்றிருந்தது. AKP இரண்டு பெரிய நகரங்களான இஸ்தான்பூல், அங்காரா ஆகியவற்றிலும் வெற்றி பெற்றது; அங்காராவில் முடிவு மிக நெருக்கமாக இருந்தது என்றாலும். AKP வேட்பாளர் தன்னுடைய கெமாலியவாத குடியரசு மக்கள் கட்சி (CHP) வேட்பாளரைவிட 1.0 விகிதம்தான் போடப்பட்ட வாக்குகளில் அதிகமாகக் கொண்டிருந்தார்.

துருவமுனைப்படுத்தப்பட்ட அரசியல் சூழலில், வாக்கு போட மக்கள் மிக அதிக அளவில் 90% என வந்திருந்தனர். சில வாக்காளர்கள் பல மணி நேரம் காத்திருந்து தங்கள் வாக்குகளை போட்டனர். போட்டி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதல்களில், நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் காயமுற்றனர்.

எர்டோகன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் நிற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது; அல்லது 2015 பாராளுமன்றத் தேர்தல்கள் ஒருவேளை அதற்கு அப்பாலும் பிரதம மந்திரியாக நீடிக்கலாம். ஆனால் இன்னொரு பதவிக் காலம் பிரதமராக இருப்பதற்கு சட்டத்துறையில் ஒரு மாற்றம் தேவைப்படும்.

AKP யின் தேர்தல் வெற்றி துருக்கியில் பதட்டமான அரசியல் நிலைமையை குறைக்கப் போவதில்லை. எர்டோகன் தன் அரசியல் விரோதிகளுக்கு எதிராக இன்னும் சர்வாதிகார வழிவகைகள் பயன்படுத்தக்கூடும், சிரியாவுடன் ஒரு போரைத் தூண்டும் முயற்சியையும் கொள்ளக்கூடும்.

ஞாயிறு மாலை களிப்புற்ற ஆதரவாளர்கள் முன் தோன்றிய எர்டோகன் சிரியாவுடன் போர் என்ற அச்சுறுத்தலையும் தன்னுடைய அரசியல் விரோதிகளுக்கு எதிராக பழிவாங்குதலையும் முன்வைத்தார். அவருடைய மனைவி எமைன், மகள் சுமீயா, மகன் பிலால் ஆகியோர் அவருடன் வந்திருந்தனர்; மகன் இலஞ்ச வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார்.

“சிரியா நம்முடன் போர் நிலையில் உள்ளது. அவர்கள் நம் விமானங்களுக்குத் தொந்தரவு கொடுக்கின்றனர். நம் சகோதரர்களை தியாகிகளாக்கிவிட்டனர். இதற்குப் பின்னும் நாம் மௌனமாக இருக்கலாமா?’

தன்னுடைய அரசியல் போட்டியாளர்களுக்குக் கூறுகையில் அவர் கடுமையாகத் தெரிவித்தார்: “இதற்கு அவர்கள் விலை கொடுக்க வேண்டும்! நாளைக்குப்பின் இவர்கள்தான் ஒருவேளை ஓடிவிடுவர்!” தன்னுடைய அணியில் விரோதிகள்  “ஊடுருவப்படுவார்கள் என்று அவர் அறிவித்தார். “அதன் பின் அவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.”

இந்த அச்சுறுத்தல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம் மதகுரு பெதுல்லா குலெனுடைய ஆதரவாளர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது; அவர்கள் எர்டோகனை பொலிஸ் மற்றும் நீதித்துறையில் ஊடுருவியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் விசாரணைகளை தொடக்கியுள்ளார், மற்றும் சமரசத்திற்கு இடம் கொடுக்கும் தொலைபேசி உரையாடல்களை இணைய தள அரங்குகளில் வெளியிட்டுள்ளார். தேர்தல்களுக்கு முன் அவர் ஆயிரக்கணக்கான பொலிசார், நீதிபதிகள் அரசாங்க வக்கீல்கள் ஆகியோருக்கு பதில் மற்றவர்களை நியமித்தார். அவர்கள் குலேன் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டனர்; YouTube யும் ட்விட்டரையும் இன்னும் பல அம்பலமாகாமல் இருக்கும்  பொருட்டுத் தடைக்கு உட்படுத்தினார்.

குலென் இயக்கம் முதலில் எர்டோகனை ஆதரித்தது. ஆனால் அவர் இஸ்ரேல் மீது மோதல் போக்கை எடுத்து, கெஜி பூங்கா எதிர்ப்புக்களை நசுக்கி, எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு ஆதரவு கொடுத்து, சிரியாவில் தீவிர இஸ்லாமியவாத ஆதரவாளர்களுக்கு ஆதரவு கொடுத்தபின் அவரை எதிர்க்கத் தொடங்கியது. இது அமெரிக்க அரசாங்கத்துடன் மோதலுக்கு வகை செய்தது.

பெதுல்லா குலென், பல ஆண்டுகள் பென்சில்வேனியாவில் வசித்தவர், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்.

எர்டோகனுக்கும் குலெனுக்கும் இடையே தீவிர மோதல், இறுதியில் பெருகும் அழுத்தங்கள் மற்றும் துருக்கிய முதலாளித்துவத்திற்குள் மோதல்களைப் பிரதிபலிக்கிறது. எகிப்தில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மாற்றம், சிரியாவில் ஏகாதிபத்திய சக்திகள் தூண்டிவிட்டுள்ள உள்நாட்டுப்போர், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள வேறுபாடுகள் எர்டோகனின் வெளியுறவுக் கொள்கையை சிதைத்துள்ளன. இது துருக்கியின் அண்டை நாடுகளுடன் மோதல்களைத் தூண்டாமல் முக்கிய பிராந்திய சக்தியாக இருப்பதைத் தளம் கொண்டுள்ளது.

குலென் இயக்கமானது பின்னணியில் வேலைசெய்து, அரசியல் கட்சி என்று பிரச்சாரம் செய்யவில்லை ஆதலால், கெமாலியவாத CHP, AKP உடைய பிரச்சனைகளிலிருந்து ஆதாயம் அடையலாம் என நம்பியது. அவ்வாறு அது செய்ய முடியவில்லை, வாக்குகளில் 28% ஐத்தான் பெற்றது. வலதுசாரி தேசியவாத இயக்கக் கட்சி (MHP) 15% வாக்குகளைப் பெற்றது, குர்டிஷ் அமைதி, ஜனநாயகக் கட்சி (BDP) அதன் ஆதரவை கிழக்கு, தென்கிழக்கு அனடோலியாவில் அதிகப்படுத்திக் கொள்ள முடிந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, எப்படி AKP கெசி பூங்கா எதிர்ப்புக்கள், இலஞ்ச ஊழல்கள், சிரிய உள்நாட்டுப் போரில் இதன் குற்றத்தன்மை, பெருகிய சர்வாதிகார ஆட்சி இவற்றை மீறி வெற்றிபெற்றது என்பது பற்றிக் கணிசமான ஊகங்கள் உள்ளன. சில வர்ணனையாளர்கள் தேர்தல் மோசடி பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்; செய்தி ஊடகத்தை மிரட்டுதல், செய்த ஊடகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நலன் இல்லாமல் செய்வது ஆகியவற்றை குறித்துள்ளனர். இத்தகைய காரணிகள் ஒரு பங்கைக் கொண்டுள்ளன, ஆனால் அவை மட்டுமே முடிவை விளக்க இயலாது. நம்பகத்தன்மை உடைய எதிர்த்தரப்பு இல்லாதது இன்னும் முக்கியமாகும்.

கெமாலியவாத CHP, தேசியவாத MHP மற்றும் குர்டிஷ் BDP ஆகியவை வலதுசாரிக் கட்சிகள், ஏதேனும் ஒரு வகையில் ஏகாதிபத்திய சக்திகள், நிதிய மூலதனத்துடன் சார்பு கொண்டவை, பெரும்பாலான மக்களுக்கு முன்னோக்கு எதையும் கொடுக்கவில்லை. துருக்கியில் தீவிரமாகவுள்ள போலி இடது குழுக்கள் தங்களை இத்தகைய முதலாளித்துவக் கட்சிகள் ஏதேனும் ஒன்றிற்கு தாழ்த்தி வைத்துக் கொண்டுள்ளன.

எர்டோகனின் 11 ஆண்டுக்கால ஆட்சி பல வாக்காளர்களால் அவர் அதிகாரத்தில் இருந்தபொழுது நடைபெற்றுள்ள பொருளாதார மாற்றங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சிகள், கெமாலிய CHP ஆகியவற்றில் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது நிலைமை மோசமாகிவிடும் என்பதுதான்.

சந்தேகத்திற்கு இடமில்லாத ஊழலையும் மீறி AKP சமூக உள்கட்டுமானத் திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி சுகாதாரப் பாதுகாப்பு முறைக்காக செலவிட்ட சதவிகிதம் 3.9% த்தில் இருந்து 5.1% என 2004 க்கும் 2009க்கும் இடையே உயர்ந்துள்ளது. 10 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் இப்பொழுது பச்சை அட்டை வைத்துள்ளனர்; இது அவர்களுக்கு சுதந்திரமான, தடையற்ற அணுகுதலை சுகாதாரப் பாதுகாப்பை அளிக்கிறது; அவர்களுடைய பொருளாதார நிலைமை எப்படி இருந்தாலும். 2003ல் இந்த எண்ணிக்கை 2.5 மில்லியன்தான் இருந்தது. மின்வசதி, எரிவாயு, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளும் முன்னேறியுள்ளன.

ஆனால் இச்சாதனைகள் மண்ணில் கட்டப்பட்டவை. பொருளாதார ஏற்றம் வெளிநாட்டு முதலீட்டில் பெரும் அளவு கட்டப்பட்டுள்ளது; இது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக திரும்பப் பெறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. உத்தியோகபூர்வ வேலையின்மை கிட்டத்தட்ட 10% என இருக்கையில், பெரும் குறைவூதிய தொழிலாளர் துறையும் இருக்கையில், நிலைமை விரைவில் தொழிலாள வர்க்கத்தை எர்டோகனின் சர்வாதிகார ஆட்சியுடன் மோதலுக்குக் கொண்டுவரும்.