World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Chinese President Xi Jinping visits France

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரான்ஸ் விஜயம்

By Kumaran Ira 
2 April 2014

Back to screen version

மார்ச் 25-28 திகதிகளில், ஜேர்மனி, பெல்ஜியம் உள்ளடங்கலான ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரான்சிற்கு முதலாவது தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

மார்ச் 26 அன்று எலிசே ஜனாதிபதி அரண்மனையில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை கோலாகலத்துடன் சந்தித்தபின், 18 பில்லியன் யூரோக்கள் ($25 பில்லியன் மதிப்புடைய 50 வணிக உடன்பாடுகளிலும் ஒப்பந்தங்ககளிலும் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டார்.

ஜி மற்றும் ஹாலண்டின் கூட்டு அறிக்கை சீன-பிரான்ஸ் உறவுகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகின்றன, இதில் நெருக்கமானதும் மற்றும் நீடித்த விரிவான மூலோபாய கூட்டுழைப்பு இருக்கும் என்று கூறுகிறது. ஜி இந்த உடன்பாடுகள் பொது திசையைக் காட்டுவதுடன், புதிய இலக்குகளை நிர்ணயிக்கின்றன மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புக்களைத் திறக்கின்றன. என்றார்.

ஜியுடனான தன் பேச்சுக்களில் ஹாலண்ட், எங்கள் கண்ணோட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகத்தை மறு சமச்சீர் செய்ய கடமைப்பட்டிருந்தாலும் எங்கள் இருதரப்பு உறவுகள் மிகச் சிறப்பாக உள்ளன என்றார்.

பெரும் ஒப்பந்தங்கள் மற்றும் ஜியினாலும் ஹாலண்டினாலும் அனைத்தும் அழகாக காட்டப்பட்டபோதிலும், சீனாவிற்கும் பிரான்சிற்கும் இடையே உள்ள உறவு மோதலடையும் புவி மூலோபாய அழுத்தங்களினாலும் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியாலும் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்றது. இந்த நெருக்கடியின் முக்கிய இலக்குகளில் ஒன்று சீனாவே ஆகும். கூட்டு அறிக்கை இந்த அழுத்தங்களைக் குறிப்பிட்டு, நாம் 21ம் நூற்றாண்டு, இணைத்தல் மற்றும் பிரிவினைவாதம் உள்ளவையாக இருக்கக் கூடாது என விரும்புகிறோம. இங்கு ஒவ்வொருவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய ஒரு அறிக்கையை ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் கையெழுத்திடுவது ஒரு அரசியல் பாசாங்குத்தனமான செயலாகும். சோசலிஸ்ட் கட்சி ரஷ்யாவிற்கு விரோதமான ஒரு பாசிசத் தலைமையிலான ஆட்சிசதியூடாக கியேவில் மேற்கு சார்புடைய ஆட்சியை இருத்தும் அமெரிக்க ஜேர்மனிய உக்ரேனிய தலையீட்டிற்கு ஆதரவு கொடுக்கிறது. பாரிஸ் பல முறையும் வலதுசாரி பிரிவினைவாதப்போக்குகளை சீனாவிற்குள்ளேயே ஊக்குவித்துள்ளதுடன், 2008ல் திபேத்திய தலாய் லாமாவுடன் பகிரங்க கூட்டங்களையும் நடத்தியது.

2011 இல் இருந்து பிரான்ஸ் ஆபிரிக்காவில் மீண்டும் பிரான்சின் முன்னாள் காலனித்துவ பேரரசை மறு கட்டமைக்கும் வகையில், லிபியா, மாலி, ஐவரி கோஸ்ட் மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் போர்களினூடாக சீனச் செல்வாக்கை குழிபறிக்கும் நோக்கத்தில் அதன் இராணுவத் தலையீட்டை தீவிரமாக்கியுள்ளது.

பிரெஞ்சு மற்றும் அமெரிக்க நலன்களுக்கு சலுகையாக, கூட்டு அறிக்கை மேற்கு ஏகாதிபத்திய சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக சீன உதவியை நம்பியுள்ள வட கொரியா மற்றும ஈரான் மீது குறிப்பிடத்தக்க தாக்குதலை உள்ளடக்கியுள்ளது. அது பின்வருமாறு கூறுகிறது: பிரான்ஸும் சீனாவும் இரு அணுசக்தியுள்ள நாடுகள். ஆனால் அவற்றிற்குத் தம் பொறுப்பு பற்றி நன்கு தெரியும். அவை உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் நாடுகள் அணுவாயுதங்களை வைத்திருப்பதை விரும்பவில்லை. இது வட கொரியாவை பொறுத்தவரை உண்மை, ஈரானைப் பொறுத்த வரையும் உண்மை.

ஜியின் வருகையின்போது பிரான்ஸும் சீனாவும் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் மீண்டும் நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. 1964ல் ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோலின் கீழ் பிரான்ஸ் முதல் பெரிய மேற்கு சக்தியாக 1949 சீனப் புரட்சிக்கு 15 ஆண்டுகளுக்குப்பின் மாவோ சேதுங்கின் சீன மக்கள் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை நிறுவியது. டு கோலின் இந்நடவடிக்கை பிரான்சை நேட்டோ இராணுவ கட்டுப்பாட்டு கட்டமைப்பில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பின்வாங்கிய முடிவுடன் பிணைந்திருந்தது.

இந்த ஆண்டு நிறைவு கடந்த அரை நூற்றாண்டின் சமூக மாற்றங்களின் பிற்போக்குத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சீனாவில் முதலாளித்துவ மீட்பு, 1989இல் தியானன்மென் சதுக்கப் படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்து, சீனாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் பிரிவாக மேற்கு மூலதனத்திற்கு திறந்ததுவிட்டது. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வாஷிங்டனுடன் புதிய காலனித்துவ அலைகளை உலகெங்கும் பெருக்க சேர்ந்துள்ளது. இதில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்காவின் ஆக்கிரோஷம் நிறைந்த ஆசியாவுக்கு முன்னுரிமை கொடுத்தல் அடங்கும். (பார்க்கவும்: Hollande’s state visit to Washington: France embraces global neo-colonialist war

ஹாலண்ட் தனக்கு முன் இருந்த நிக்கோலோ சார்க்கோசியின் கொள்கைகளை தக்க வைத்துள்ளார். அவர் நேட்டோ இராணுவக் கட்டுப்பாட்டில் 2009இல் மீண்டும் சேர்ந்த்துடன், பாரிசை அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையுடன் பிணைத்தார். கடந்த ஆண்டு பிரெஞ்சு இராணுவத்தின் வெள்ளையறிக்கை சீனாவை பிரான்சின் ஒரு முக்கிய விரோதியாக இருக்கும் சாத்தியப்பாட்டை அடையாளம் கண்டதுடன், இந்து சமுத்திரத்தை பிரெஞ்சுத் தலையீட்டிற்கு முக்கிய அரங்காகவும் கண்டுள்ளது. இது பிரான்சை தென் சீனக்கடலில் தலையிடும் திறனை அபிவிருத்திசெய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஜியின் உத்தியோகபூர்வ விஜயம் 126 Rafale போர்விமானங்களை இந்தியாவிற்கு விற்கும் 20 பில்லியன் டாலர்கள் உடன்பாட்டை பாரிஸ் முடிக்கத் தொடரும் முயற்சிகளுக்கு நடுவே நிகழ்ந்துள்ளது. இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிர்ப்பலமாக வளர்க்க நோக்கம் கொண்டுள்ளது.

இந்த புவி மூலோபாய அழுத்தங்கள் பெய்ஜிங் மற்றும் பாரிசினால் கையெழுத்திடப்பட்டுள்ள வணிக உடன்பாடுகளின் பலமற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பாரிஸ் தனது நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்தை மிக அதிகம் சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களை பயன்படுத்தியும் மற்றும் சீனாவின் குறுகிய ஆனால் வசதி படைத்த உயரடுக்குகளுக்கு இடையே புதிய சந்தைகளை வளரப்பதின் மூலமும் ஸ்திரப்படுத்த முயல்கிறது.

சிக்கலுக்குள்ளாகியிருக்கும் பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA Peugot-Citroen கடந்த மாதம் உடன்பாட்டை சீனாவின் டாங்பெங்குடன் (Dongfeng) நடைமுறைப்படுத்தியது. டாங்பெங் பிரெஞ்சு நிறுவனத்தின் மறுமுதலீட்டுத் திட்டத்தின் கீழ் PSA இன்14% பங்கை வாங்கும். இக்கூட்டு முயற்சி PSA வை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஊடுருவ அனுமதிப்பதுடன், அதன் பிரான்சில் ஆலைகளை மூடல் மற்றும் ஏராளமானவர்களை பணிநீக்கம் செய்தல் மூலம் தனது வருமானத்தை பெருக்கும். PSA-Dongfeng உடன்பாடு பாரிசிற்கு அண்மையிலுள்ள Aulnay இல் PSA தனது ஆலையை மூடி பிரான்சில் 8000 பேரை வேலைநீக்கம் செய்ததை அடுத்து வந்துள்ளது.

சீனா ஒரு புதிய 10 ஆண்டு உடன்பாட்டில், விமானத் தயாரிப்பாளர் ஏயர்பஸ்ஸை 2025 வரை டியான்ஜினில் A320 விமானங்களை பொருத்துவதற்கு கையெழுத்திட்டது. அது 70 புதிய விமானங்கள் வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதில் 7 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய 27 ஏயர்பஸ் A330விமானங்கள் அடங்கும். இதைத்தவிர கூட்டுஉற்பத்தி செய்யப்படும் பிரெஞ்சு EC175 ஹெலிகாப்டர்கள், ஏயர்பஸ்ஸுடன் வரும். மற்றும் பிரான்சில் Safran உடைய turboprop இயந்திர தயாரிப்பில் கூட்டாக ஈடுபடும்.

சீனாவுடனான அதன் வர்த்தகப்பற்றாக்குறையை மறுசீராக்கவும் பிரான்ஸ் முயல்கிறது. இது கடந்த ஆண்டு 26 பில்லியன் யூரோக்கள் என இருந்தது. பிரான்சின் சீனாவுடனான வணிகம் ஜேர்மனியை விட மிகவும் பின்தங்கியுள்ளது. அது சீன இறக்குமதிகளில் ஜேர்மனியின் 4.8% என்பதுடன் ஒப்பிடுகையில் 1.2% என்று இருந்தது.

சீன-பிரெஞ்சு உறவுகள் பற்றிய கருத்தரங்கை திறந்து வைக்கையில், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸ் பிரான்ஸ் சீனத் தொழிலாளர்களை சுரண்டுவதில் இழந்துவிட்ட நேரத்தை ஈடு செய்ய முயல்கிறது என்றார். பிரான்ஸ் சீனாவின் ஆரம்ப தொழில்துறைமயமாக்கலில் முழுமையாகப் பங்கு கொள்ளவில்லை. அதுதான் நாம் பேசும் சமச்சீரற்ற தன்மைக்கான காரணங்களில் ஒன்றாகும். சீனாவிற்குள் பாரிசின் பொருளாதார கனத்திற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று ஃபாபியுஸ் அழைப்பு விடுத்தார். இப்புதிய பொருளாதார சகாப்தம் மற்றும் சீன சமூகத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் இருக்க விரும்புகிறதுஎன்றார்.