தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் Medvedev visits Crimea, as Putin announces partial troop withdrawal from Ukraine border மெட்வெடேவ் கிரிமியாவிற்குப் பயணம், உக்ரேன் எல்லையில் இருந்து புட்டின் பகுதி பகுதியாக துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
By Chris Marsden Use this version to print| Send feedback பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வெடேவ் இன் நேற்றைய கிரிமிய விஜயம், தீபகற்பம் ரஷ்யாவுடனான ஒருங்கிணைப்பு வேகமாக தொடர வேண்டும் என்பதற்கான மாஸ்கோவின் உறுதிமொழியாகும். மார்ச் 16 அன்று ஒரு வாக்கெடுப்பு நடைபெற்றபின், ரஷ்யா கிரிமியாவை முறையாக மார்ச் 21ல் இணைத்தது. மெட்வெடேவ் கல்வி, சுகாதார பாதுகாப்பு மற்றும் சாலைகள், இரயில்வேக்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கு விரைவில் நிதியளிப்பதாக உறுதியளித்து, ஊதியங்களையும் ஓய்வூதியங்களையும் அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார். ஒரு சிறப்பு அரசாங்க அமைச்சரகம் கிரிமியாவின் வளர்ச்சி குறித்து மேற்பார்வையிட உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி உரையில் அவர் ரஷ்ய அரசாங்கம் சிறப்புப் பொருளாதார பகுதியை குறைந்த வரிகளுடன் முதலீட்டிற்கு ஊக்கம் தர உருவாக்கும் என்றார். கிரிமியா உக்ரைன்மீது அதன் நீர் மற்றும் மின்சாரத்திற்கு நம்பியிருப்பதால், மெட்வெடேவ் நீண்ட கால தீர்வுகளுக்கு உழைப்பதாக உறுதியளித்தார், கிரிமியாவை ரஷ்யாவின் மின்விசைத் திட்டத்துடன் இணைத்தல், அவ்வாறே நீருக்கும் செய்தல் என – இதைத்தவிர புதிய நீர்த்தேக்க அணைகளை கட்டுவதும் உள்ளடங்கியிருக்கும். கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளது நிரந்தரம், ஆனால் அது அமைதியான முறையில் செயல்படுத்தப்படும் என்பதை தெளிவாக்கத்தான் மெட்வெடேவின் வருகை உள்ளது. அதே நேரத்தில் பாரிசில் வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவிற்கும் வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரிக்கும் இடையே ஞாயிறன்று நடந்த பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, உக்ரேனிய கிழக்கு எல்லையில் இருந்து துரிதமாக நகரும் காலாட்படைப் பிரிவு ரோஸ்டோவில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. பின்னர், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலிடம் ஒரு தொலைபேசி அழைப்பில் உக்ரேனுடனான எல்லையில் இருந்து துருப்புக்கள் “பகுதியளவு திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். ரஷ்ய படைகள் அவை மார்ச் 1ல் இருந்த நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பது நிலைமையின் அழுத்தத்தை குறைக்க முன்நிபந்தனை என்று கெர்ரி வலியுறுத்தியிருந்தார்; அதேபோல் அது கியேவிற்கும் மாஸ்கோவிற்கும் நேரடிப் பேச்சுக்களுக்கும், மே 25 திட்டமிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி தேர்தல்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதும் முன்னிபந்தனை என்றார். லாவ்ரோவ் ஞாயிறன்று உக்ரேன் ஒரு கூட்டாட்சிக் குடியரசாக வேண்டும், கிழக்கு, மேற்கில் உள்ள பிராந்தியங்களுக்கு பரந்த முறையில் தன்னாட்சி கொடுக்க வேண்டும் (அவ்விடங்களில் ரஷ்யா செல்வாக்கைக் கொண்டுள்ளது), ரஷ்யா இரண்டாம் மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், உக்ரேன் நேட்டோவில் சேரக்கூடாது என்று கூறினார். உக்ரேனில் மேற்கு இருத்தியுள்ள அரசாங்கம் இத்திட்டங்களை “ரஷ்ய ஆக்கிரமிப்பின் நிரூபணம்” எனக் கண்டித்தது. மெட்வெடேவின் கிரிமியாவிற்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழி சர்வதேச விதிகளை “நயமற்ற முறையில் மீறுபவை” என்றும் அது குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா துருப்புக்களை கட்டமைக்கும் பிரச்சினை பல வாரங்களாக உலக செய்தி ஊடகங்களில் மேலாதிக்கம் கொண்டுள்ளது; இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும். இது காகசஸில் உள்ள அண்டை நாடுகளை நேட்டவில் இணைத்திருப்பது மற்றும் லாட்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா மற்றும் போலந்தில் துருப்புக்களை நிறுத்தியிருப்பதிலும் மையம் கொண்டுள்ளது. ரஷ்யா தோற்றுவிக்கும் “அச்சம், மிரட்டல்” சூழல் பற்றி கெர்ரி பேசினார்; பேச்சுக்களுக்கு பின், உக்ரேன் எல்லைகளுக்கு அருகே உள்ள துருப்புக்கள் முற்றிலும் இராணுவப் பயிற்சிகளுக்காகத்தான் உள்ளது, “எங்களுக்கு முற்றிலும் உக்ரேன் எல்லைக்குள் நுழைய வேண்டும் என்ற விருப்பமோ அக்கறையோ இல்லை” என லாவ்ரோவ் கூறினார். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரகம், முன்பு அது திடீர் இராணுவப் பயிற்சிகளை தெற்கு மேற்கு மாவட்டங்களில், 8,500 உறுப்பினர்கள் கொண்ட பீரங்கிப் படைப் பிரிவுகள் மூலம் ரோஸ்டோவ், பெல்கோரோட், குர்ஸ்க் மற்றும் தாம்போவ் பகுதகளில் அனைத்தும் உக்ரேன் எல்லைக்கு அருகே உள்ளவற்றில் நடத்தியதாகவும், கிட்டத்தட்ட 4,000 பாரசூட் துருப்பினர் வான் பயிற்சிகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தியதாகவும் கூறியது. நேட்டோவின் கூட்டுப்படைகளின் ஐரோப்பிய தலைமை தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ், உக்ரேனிய எல்லைக்கு அருகே ரஷ்யப்படைகள் “மிக, மிக, அதிகம், மிக, மிகத் தயார் நிலையில் உள்ளவை”, மற்றும் மோல்டோவா முக்கிய ரஷ்யமொழி பேசும் பிரிவினைவாத (டிராட்ஸ்நீஸ்ட்ரியா என்றும் அறியப்படுவது) பிராந்தியத்திற்கு ஆபத்தைக் கொடுக்கலாம் என்றார். வாஷிங்டன் கூறும் மகத்தான ரஷ்யத் துருப்பு நடவடிக்கைகள் குறித்து சரிபார்த்தல் ஏதும் இல்லை; அல்லது சரியான எண்ணிக்கை குறித்தும் தெரியவில்லை; ஆனால் இந்த பிரகடனம் வெளிவேட தாராளவாத கார்டியனை “ரஷ்யா உக்ரேன் உடன்பாட்டிற்கு 40,000 துருப்புக்களை எல்லையில் நிறுத்தி வைத்து நிர்ணயிக்கிறது” என அறிவிக்கச் செய்துள்ளது. அமெரிக்க ஆதாரங்கள் மேற்கோளிட்ட மதிப்பீடுகள் 30,000 முதல் 80,000 துருப்புக்கள் வரை இருக்கலாம் என்று கூறுகின்றன. ஒரு தேசிய பாதுகாப்பு ஆதாரம் எண்ணிக்கையை 100,000 என்று கூறுகிறது. அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட “உருமறைப்பு” (camouflage) படங்களை பயன்படுத்தி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ரஷ்ய துருப்புக்கள் தம் நிலைப்பாட்டை மறைக்கின்றன என்று கூறியுள்ளது. “இன்னும் ஒரு 50,000 துருப்புக்கள் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களில் வந்திருக்கலாம்” என்று ரூபர்ட் முர்டோக்கின் Fox News “புதிய அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை” மேற்கோளிட்டு தகவல் கொடுத்துள்ளன “ரஷ்யா கிழக்கு உக்ரேன்மீது படையெடுக்கலாம் என்பதற்கான கூடுதல் அறிகுறிகள் உள்ளன.” உக்ரேனிய பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக், தனது பங்கிற்கு, “ரஷ்யா படையெடுத்து கணிசமான உக்ரேனிய பகுதியை கைப்பற்றலாம் என்பதற்கு பெரும் வாய்ப்பு உண்டு” என Fox இடம் கூறினார். இத்தகைய முற்றிலும் வேறுபட்ட எண்ணிக்கைகள், கிரிமியாவில் நிறுத்தப்பட உள்ள 22,000 துருப்புக்களை அடங்கியுள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ரஷ்யா தவிர்க்கமுடியாமல் இராணுவ ஆக்கிரமிப்பு நடத்தும் என்னும் சித்திரத்தைக் கொடுப்பதில் அமெரிக்காவிற்கு முக்கிய பிரச்சினை இத்தகைய பெரிய துருப்புக் கட்டமைக்கப்படல் என்னும் கூற்றிற்கு ஆதாரமாக எவரும் சான்றுகளை கொடுக்கவில்லை. இதற்கு மாறானதுதான் உண்மையாக உள்ளது. மார்ச் 28 அன்று பிரித்தானியாவின் டெய்லி டெலிகிராப் கேலியான குரலில் “புட்டினின் கண்ணுக்குத் தெரியாத இராணுவத்தைத் தேடல்” என எழுதியது. ஜனாதிபதி பாரக் ஒபாமா “ரஷ்யத் துருப்புக்கள் எல்லையில் துருப்புக்களைக் குவிப்பதாக எச்சரிக்கை கொடுத்துள்ளார்” எங்கே என நிருபர் ரோலண்ட் ஓலிபன்ட் குர்ஸ்க்கில் இருந்து எழுதியுள்ளார். “ஆனால் ரஷ்ய படையெடுப்பு சக்திகள் —அவை அங்கிருந்தால்— பெரும் மறைப்பைக் கொண்டிருக்க வேண்டும். 200 மைல் பயணத்தை எல்லைப் பிராந்தியத்தில் மேற்கொண்டதில் இங்கு வெளிப்பட்டது, ரஷ்ய படை பழைய முறையில்தான் இருந்துள்ளது, நகரச் சதுக்கங்களில் நிலைப்பாட்டை கொண்டிருந்தன. போர் நினைவு T-34 கள் குர்ஸ்க்கில் 1943ல் மிகப் பெரிய டாங்கி போர்களில் ஒன்றை வெற்றிகொண்டது, தங்கள் உயரிடங்களில் இருந்து புறப்பட்டு உக்ரேன் நோக்கி வரும் என்று தோன்றவில்லை.” இரண்டு நாட்களுக்குப்பின் NBC News இன்னும் சேதம் விளைவிக்கும் அறிக்கையை கொடுத்தது; இதில் நிருபர் Jim Maceda உக்ரேன்-ரஷ்ய எல்லையில் பயணித்ததில் “இராணுவக் கட்டமைப்புக்கான எந்த அறிகுறிகளும்” இல்லை என்றார். Maceda வும் அவருடைய சக ஊழியர்களான டிமிட்ரி சோலோவ்யோவ் மற்றும் அலெக்சி கோர்டையன்கோவும் ஒரு சிறு வாகனத்தில் 1,200 மைல் எல்லையில் பயணித்தனர். குர்ஸ்க்கில் சுட்ஷா என்னும் சிறு நகரத்தில், “நாங்கள் எந்த டாங்குகளையும் பார்க்கவில்லை, ஆயுதமேந்திய நபர்களைக் கொண்ட வாகனங்களையும் பார்க்கவில்லை” என்றனர். “எல்லையை ஒட்டி நாங்கள் கிட்டத்தட்ட 500 மைல்கள் பயணித்தோம்.... அதன்பின் ஓரளவு இராணுவ நடவடிக்கையைக் கண்டோம்” என்று Maceda எழுதுகிறார் – இரண்டு MI-24 ஹெலிகாப்டர்கள் ஒரு இராணுவத் தளத்திலும் சில “கனரக டிரக்குகளும்... ஆனால் டாங்கிகளும் பீரங்கிகளும் எங்கே?’ “நாங்கள் இன்னும் அதிக இராணுவத் தளங்களைக் கண்டோம்”. ஆனால் 1,000மைல்கள், 80 மணி நேரப் பயணத்திற்குப்பின், “நாங்கள் பார்த்த ஒரே செயல்பாடு, தீவிர கழிப்பறைக் கடமையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குத்துச்சண்டையை ரசிப்பதையும்தான். எங்கள் பயணத்தை Rostov-on-Don ல் முடித்தோம். இங்கு ரஷ்ய-உக்ரேனிய எல்லை அஜோவ் கடலில் கரைகிறது”. மேர்க்கெல் புட்டினுடன் நடத்திய உரையாடலுக்கு விடை அளிக்கும் வகையில், உக்ரேன் அரசாங்க ஆதாரங்கள் CNN இடம் “ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கவில்லை, தங்கள் நிலைப்பாடுகள் இன்னும் வடக்கே கொண்டுள்ளன” என்றன. “ஒரு உக்ரேனிய அதிகாரி, ரஷ்யத் துருப்புக்கள் ‘உக்ரேனிய எல்லையில் தெளிவற்ற உபாயங்களை நடத்துகின்றன....’ என உளவுத்துறைத் தகவல் குறிப்பிட்டுள்ளது என்றார். திங்களன்று ஒரு குறுகிய செய்தியாளர் கூட்டத்தில் உக்ரேனிய வெளியுறவு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் Evhen Perebyinis, ரஷ்யா அப்பிராந்தியத்தில் இராணுவ சக்திகளை நிறுத்தும் நோக்கத்தை கியேவிற்கு கூறவில்லை என்றார். “சில எல்லை மாவட்டங்களில் துருப்புக்கள் பின்வாங்கியுள்ளன, மற்றவற்றில் அவை எல்லையை நோக்கி வருகின்றன” என்றார் அவர். “இராணுவத்தின் இந்த நடவடிக்கை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.” அமெரிக்காவும் உக்ரேனில் உள்ள அதன் கைப்பாவை ஆட்சியும் தாங்கள் பொய்கூறுகிறோம் என்பதை அறிவர், செய்தி ஊடகமும் அப்படித்தான். நேற்று கியேவை தளம் கொண்ட Centre for Military Political Information உடைய தலைவர் டிமிட்ரி டிம்சக், பேஸ்புக் தகவலில் ரஷ்யத் துருப்புக்கள் உக்ரேனின் எல்லையில் உண்மையில் வெறும் 10,000 என்றுதான் உள்ளது என்றார். டிம்சக் ஒன்றும் ரஷ்யாவின் நண்பர் அல்ல. கியேவ் போஸ்ட், “ரஷ்யாவின் உக்ரேனிய கிரிமிய தீபகற்பத்தின் மீது படையெடுப்பு பற்றிய பிரச்சார பொய்களை எதிர்க்க” Centre for Military-Political Information ஐ டிம்சக் நிறுவியதாக கூறுகிறது. |
|
|