தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
New Snowden documents detail political and corporate espionage by US, UK அமெரிக்கா, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் மற்றும் பெருநிறுவன உளவுகளை புதிய ஸ்னோவ்டெனின் ஆவணங்கள் விவரிக்கின்றன
By Thomas Gaist, Use this version to print| Send feedback அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) மற்றும் பிரித்தானிய அரசாங்க தகவல்தொடர்பு தலைமையகம் (GCHQ) இரண்டும் ஜேர்மனியின் அரசியல் மற்றும் பெருநிறுவன ஸ்தாபனத்திற்கு எதிராகவும் உலகின் 100 நாட்டுத் தலைவர்களுக்கு எதிராகவும் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன என்று Der Spiegel மற்றும் Intercept வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்கள் காட்டுகின்றன. இரகசிய தகவல் வெளியீட்டாளர் எட்வர்ட் ஸ்னோவ்டென் இரகசியக் கோப்புக்களை இரு வெளியீடுகளுக்குக் கசியவிட்டுள்ளமையானது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலையும் 100 மற்ற வெளிநாட்டு அரசாங்கங்களின் தலைவர்களையும் “நிம்ரோட்” (Nymrod) எனப்பட்ட திட்டத்தன் கீழ் NSA இலக்கு கொண்டதைக் காட்டுகிறது. கசியவிட்ட கோப்புக்களில் பட்டியலிடப்பட்டுள்ள அரசாங்கத் தலைவர்களில் மலேசியப் பிரதம மந்திரி அப்துல்லா படாவி, சோமாலிய ஜனாதிபதி அப்துல்லாஹி யூசுப், பெருவிய ஜனாதிபதி ஆலன் கார்சியா, பெலாரூஸின் ஜனாதிபதி அலெக்சாந்தர் லுகஷென்கோ, குவாத்தமாலா ஜனாதிபதி ஆல்வரோ கோலோம், கொலம்பிய ஜனாதிபதி ஆல்வரோ யுரைக், மாலி ஜனாதிபதி அமடௌ டூமைன் டூரே, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், உக்ரேனிய பிரதம மந்திரியும் தன்னலக் குழுத்தலைவருமான (oligarch) யூலியா திமோஷெங்கோ ஆகியோரும் அடங்குவர். இந்த ஆவணங்கள் GCHQ ஆனது மூன்று ஜேர்மனிய நிறுவனங்கள் மீது சிக்கல் வாய்ந்த நடவடிக்கைகள் மூலம் அவற்றின் கணினி முறைகளை ஊடுருவி அவற்றின் ஊழியர்களை கண்காணிப்பதை இலக்கு கொண்டிருந்ததையும் காட்டுகின்றன. ஜேர்மனிய அரசுடன் தொடர்புடைய IABG என்னும் பாதுகாப்பு, தகவல்தொடர்பு நிறுவனமும், Stellar மற்றும் Cetel என்னும் அதே போன்ற நிறுவனங்களும் கண்காணிப்பிற்கு இலக்கு வைக்கப்பட்டன, ஏனெனில் அவைகளும் ஜேர்மனிய நிறுவனங்களுக்கு தகவல்தொடர்புத் துறைகளில் சேவையையும், டயமண்ட் சுரங்கம் மற்றும் எண்ணெய் எடுப்பதற்கு தோண்டுதல் என செல்வம் செழிக்கும் துறைகளை உலகம் முழுவதும் நடத்தும் ஜேர்மனிய நிறுவனங்களுக்கு அளிக்கின்றன. “இந்த ஆவணமானது, பங்காளி உளவு நிறுவனங்களுடன் கண்காணிப்பிற்கு வாய்ப்பு இருக்கும் நிறுவனங்களை அணுகுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக அணுகும் ‘அணுகல் முனைகளை’ அடையாளம் காண முடியும் என GCHQ நம்புகிறது” என்று Intercept தகவல் கொடுத்துள்ளது. “வேறுவிதமாகக் கூறினால், இந்நிறுவனங்களை ஊடுருவுதல் பிரித்தானிய முகவர்களுக்கு ஒரு முடிவுக்கு வழிமுறையாக பார்க்கப்பட்டது. இவற்றின் இறுதி இலக்குகள் வாடிக்கையாளர்களாக இருக்கலாம். உதாரணமாக, Cetel இன் வாடிக்கையாளர்கள் அதன் தகவல்தொடர்பு முறைகளை ஆபிரிக்கா, மத்திய கிழக்குடன் இணைக்கும் அரசாங்கங்களை கொண்டுள்ளன. Stellar தகவல்தொடர்பு முறைகளை பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறது, இவைகள் உளவாளிகளுக்கு நலன் கொடுக்கும் திறனைக் கொண்டவை. இதில் சர்வதேச பெருநிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்கள், அகதிகள் முகாம்கள், எண்ணெய் தோண்டும் அரங்குகள் ஆகியவை அடங்கும்” என்று Intercept எழுதியுள்ளது. NSA உடைய கண்காணிப்பு நடவடிக்கைகள், ஜேர்மனியின் தலைமையை இலக்கு கொண்டுள்ளன என்பதன் சமீபத்திய வெளிப்பாடுகள்தான் என்று காட்டுகின்றன. இன்னும் ஜேர்மனி நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ சவால் விடுவதற்கு தயக்கம் காட்டுகிறது; ஏனெனில் அத்தகைய நடவடிக்கை ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கும இடையேயுள்ள பெருகிய அழுத்தங்களை இன்னும் அதிகரிக்கும். “GCHQ வின் முகவர்களுக்கு அல்லது NSA இன் ஊழியர்களுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பது விரைவில் பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து ஏற்கனவே அழுத்தம் நிறைந்த அட்லான்டிக் கடந்த உறவுகளை இன்னும் விரிவாக்கும்” என்று Der Spiegel கூறுகிறது. இந்த ஆவணங்கள் NSA உடைய சிறப்பு தரவு நடவடிக்கைகள் (Special Source Operations -SSO), கூகுள், மைக்ரோசாப்ட், வெரிசன், AT&T உட்பட அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைப்பின் "பெருநிறுவன கூட்டு" ஜேர்மனிக்குள் இலக்குகளுக்கு எதிராக கண்காணிப்பு நடத்துவதற்கு 2013 ல் ஒரு திறந்த FISA நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளன என காட்டுகின்றன. Der Spiegel உடைய தகவலின்படி, FISA நீதிமன்றம் இதேபோன்ற ஒப்புதல்களை, மெக்சிக்கோ, வெனிஜூவேலா, யேமன், பிரேசில், குவாத்தமாலா, பொஸ்னியா, ரஷ்யா, சூடான் மற்றும் சீனாவில் மொத்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக கொடுத்துள்ளது. ஒபாமா நிர்வாகம் மேற்பூச்சு “சீர்திருத்தங்களை” NSA இன் தொலைபேசி பெருந் தொகுப்பு கண்காணிப்பு (metadata surveillance) நடவடிக்கைளில் செயல்படுத்த இருப்பதற்கு நடுவே இப்புதிய கசிவுகள் வந்துள்ளன. சீர்திருத்தம் என்னும் பேரில் ஒபாமா நிர்வாகம் அரசாங்கத்தை தொழில்துறை பெருநிறுவனங்கள் உடன் இன்னும் ஒருங்கிணைக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுவன முறையாக்கவும் முயல்கிறது. ஒபாமாவின் திட்டம் NSA இன் மொத்த சேகரிப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், ஒரு வகை தரவுகளுக்கு – தொலைபேசி பெருந்தொகுப்பிற்கு (telephone metadata); இப்பொழுது NSA கண்காணிப்புத் திட்டத்தில் பலவகைகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் FISA நீதிமன்றத்தின் இரப்பர் முத்திரையிட்ட ஒப்புதலைப் பெற்றபின் NSA தொடர்ந்து தொலைபேசி எண்களை விருப்பப்படி உளவு பார்க்க முடியும். இந்த முன்மொழிவு, ஸ்தாபகமயமான கண்காணிப்பை “விமர்சிப்பவர்களால்” ஒரு சட்டபூர்வ, ஜனநாயகமுறைக் கண்காணிப்பு என்று ஊக்குவிக்கப்படுகிறது. ஓரேகான் செனட்டர் ரோன் வைடன், இந்த முன்மொழிவுக்கு ஆதரவு கொடுத்து என்.பி.சி.யின் “செய்தியாளர்களை சந்திக்கவும்” நிகழ்ச்சியில் பேசினார்; பிற மொத்த சேகரிப்புக்களும் அதே முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என தான் நினைப்பதாகவும் கூறினார். “நாம் அனைத்து கண்காணிப்பு வலையையும், அமெரிக்காவில் சட்டப்படி நடக்கும் குடிமக்கள் மீதான உளவுத் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும், வெறும் தொலைபேசி சான்றுகள் மட்டும் இல்லாமல், மருத்துவ சான்றுகள், கொள்முதல் இன்னும் மற்றவற்றையும்” என்று வைடன் கூறினார். இது அதிக எரிச்சலைக் கொடுப்பது. உண்மையில் கண்காணிப்பு வலை அமெரிக்கர்களுக்கும் உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கு எதிராக என்பதுதான் கண்காணிப்பு முறையின் முக்கிய நோக்கமே ஆகும். உளவு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில், முதலாளித்துவ “ஜனநாயக” நிறுவனங்களின் முழு இயலாத்தன்மை என்பது சமீபத்திய வாரங்களில் CIA ஆனது செனட் உளவுத்துறைக் குழுவை உளவு பார்த்து அந்த அமைப்பின் சித்திரவதை, “இருண்ட தள” சிறைகள் பற்றிய அறிக்கையை சேகரித்தபோது வெளிப்பட்டது. குழுத் தலைவர் Dianne Feinstein மற்றொரு ஞாயிறு பேட்டி நிகழ்வில் பிரச்சினை பற்றி பேசியபோது குறைந்த அளவே குறிப்பிட்டார். “நான் அவரை மன்னிப்புக் கோருமாறும் இனி அவ்வாறு நடைபெறாது என்ற அறிக்கையையும் கோரினேன்” என்றார் அவர். “இன்றுவரை பதில் இல்லை. அது எனக்கு கவலை கொடுக்கிறது.” நட்பு ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் அமெரிக்க காங்கிரசுக்கு எதிராகவே அமெரிக்கா ஆக்கிரோஷ நடவடிக்கைகளை நடத்துகையில், உள்நாட்டு அரசியல் எதிர்ப்பாளர்களும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திலுள்ள போர்க்குணமிக்க கூறுபாடுகளும் இன்னும் தொலைதூர விளைவு தரும் நடவடிக்கைளுக்கு உட்படுத்தப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. |
|
|