World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

New York Times tries to whitewash publication of faked Ukraine photos

போலியான உக்ரேன் புகைப்படங்கள் வெளியீட்டை நியூ யோர்க் டைம்ஸ் மூடிமறைக்க முயற்சிக்கிறது

By Alex Lantier 
24 April 2014

Back to screen version

கியேவில் உள்ள மேற்கத்தைய-சார்பு ஆட்சிக்கு எதிராக கிழக்கு உக்ரேனில் எதிர்ப்புக்களை ரஷ்ய சிறப்புப் படைகள் தூண்டிவிடுகின்றன எனக் கூறும் அதன்  தயாரிக்கப்பட்ட அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டதற்கு நேற்று நியூ யோர்க் டைம்ஸ் விடையிறுத்தது.   

செவ்வாயன்று “Scrutiny over Photos Said to Tie Russia Units to Ukraine” என்ற தலைப்பில் வந்த ஒரு கட்டுரை சேதத்தை கட்டுப்படுத்தும் ஒரு அவசரமான முயற்சியே ஆகும். பத்திரிகையில் உட்பக்கங்களில் புதையுண்டிருந்த இக்கட்டுரை தொடங்குகிறது: “உக்ரேனில் ரஷ்ய படைகள் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளன, அமெரிக்கா அதை ரஷ்ய ஈடுபாடு எனக்காட்டும் புகைப்படத் தொகுப்புக்கள் பரிசீலனையில் உள்ளன.” “அமெரிக்க அதிகாரிகள் சில படங்களை அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரிக்கு அவர் ரஷ்ய, ஐரோப்பிய, உக்ரேனிய அதிகாரிகளிடம் கடந்த வியாழன் அன்று ஜெனிவாவில் பேசுவதற்கு முன் கொடுத்தனர்” என்றும் டைம்ஸ் குறிப்படுகிறது.

இந்தப் போலி புகைப்படங்களைத்தான் அது ஒரு முதல் பக்க கட்டுரையில் பிரசுரித்து, அது பரவியது என்பதை டைம்ஸ் குறிப்பிடவில்லை. டைம்ஸ்தான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி “ரஷ்ய படைகள் நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ளன” என ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. புகைப்படங்கள் “கண்காணிப்பில்” உள்ளன என்று விளக்கும் அதன் முயற்சிகள்கூட டைம்ஸும் இந்த இழிந்த தவறில் ஒரு பகுதியாக உள்ளது என்று காட்டுகின்றன.

ஒரு தொகுப்பு புகைப்படங்கள், “நீண்ட தாடியுடன் கூடிய சீருடை அணிந்த ஒரு நபர், இந்த ஆண்டு ஸ்லோவ்யன்ஸ்க் மற்றும் கிராமடோர்ஸ்க்கில் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என உக்ரேனியர்கள் உறுதியாகக் கூறுகின்றனர், சிறப்புப் படைகள் அடையாளம் அணிந்து... ஜோர்ஜியாவில் 2008 ரஷ்யப் போர் நடவடிக்கைகளின் போதும் புகைப்படும் எடுக்கப்பட்டார், சில நோக்கர்கள் ஜோர்ஜியாவில் புகைப்படம் எடுக்கப்பட்ட ந் நபர்தான் கிழக்கு உக்ரேனிலும் எடுக்கப்பட்டாரா எனக் கேட்கின்றனர்.”

“நோக்கர்கள்” புகைப்படச் சித்திரங்களை வினாவிற்கு உட்படுத்தினார்கள் என்றால், டைம்ஸின் அதி நுட்ப பதிப்புக்களிலும், ஆன்லைனிலும் காணப்படும் இவை இரண்டும் வெவ்வேறு நபர்களுடையது என்பதைக் காட்டுகிறது. ஜோர்ஜியாவில் ரஷ்ய சிப்பாய் எனப்படுபவர் ஒல்லியாக உள்ளார், ஒரு சிவப்பு தாடி கொண்டுள்ளார்,  கிழக்கு உக்ரேனில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள தாடி நபர் பருத்துள்ளார், நரைக்கும் கறுப்புத் தாடியைக் கொண்டுள்ளார் (முழு வடிவங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.)

இரு நபர்களும் ஒருவர்போல் காட்சியளிக்கின்றனர், ஏனெனில் டைம்ஸ் அவ்வளவு நுட்பம் இல்லாத தோற்றத்தை வெளியிட்டது; கறுப்பு, வெளுப்பு புகைப்படத் தோற்றங்கள் ஆன்லைனில் காணமுடியும்.

“ரஷ்யாவில் எடுக்கப்பட்ட ஒரு குழுவின் புகைப்படம் குறித்தும் வினா” வந்துள்ளது என்று டைம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது. ஸ்லோவ்யன்ஸ்க்கில் எடுக்கப்பட்ட நபர்களின் மற்ற படங்கள் ரஷ்ய சிப்பாய்கள் உக்ரேனில் ஊடுருவியுள்ளனர் எனக் காட்டுவதற்கு இந்த புகைப்படத்தைப் பயன்படுத்தி டைம்ஸ் புகைப்படத்தில் உள்ளவர்கள் ரஷ்யர்கள் என்று கூறியது.

உண்மையில், டைம்ஸின் கூற்றான “ரஷ்யாவில் எடுக்கப்பட்ட குழுவின் புகைப்படம்” என்பதே ஒரு பொய். “இது ஸ்லோவ்யன்ஸ்க்கில் எடுக்கப்பட்டது”, இதை எடுத்த புகைப்படக்காரர் மாக்சிம் டோன்டியுக் டைம்ஸிடம் கூறினார்: “இந்தப் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு என்னிடம் எவரும் அனுமதி கேட்கவில்லை.”

டைம்ஸ் கட்டுரை “சான்றாக இருக்கும் செய்தித்தாள் ஆவணங்கள்” மிக அடிப்படையான பொருளின் உண்மைத்தன்மையை சோதித்தல் என்பதில் ஈடுபடவில்லை, இது கியேவ் ஆட்சியால் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது, அதன் முதல் பக்கத்தில் இதை “சான்று” என வெளியிடுவதற்கு முன்பு.

இது, முதலில் எப்படி டைம்ஸின் புகைப்பட அறிக்கையில் வெளியிடப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஒன்று டைம்ஸின் ஆசிரியர்கள், அந்தக் கட்டுரையையும் அதன் மங்கிய புகைப்படங்களையும் சுயாதீன ஆய்வின்றி பார்த்திருக்க வேண்டும் அல்லது ஆசிரியர்கள் நிகழ்வை சோதிக்கவில்லை, அது ஒரு கோரமான தவறு, எப்படியும் வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.

எப்படியாயினும டைம்ஸ் ஒரு நெறியான வெளியீட்டுப் பதிப்பகமாக நடந்து கொள்ளவில்லை, அரசாங்கத்தின் பிரச்சார அமைப்புப் போல் நடந்து கொண்டது.

இன்னும் சில கூடுதலான வினாக்களும் எழுகின்றன:

  • தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்னும் முடிவு எப்படி, யாரால் எடுக்கப்பட்டது?
  • இந்த மோசடியில் டைம்ஸின் பங்கு என்ன? அது புகைப்படங்களை சரி செய்ததா அல்லது திறமையற்ற முறையில் இன்னும் பெயரிடப்படாத நடவடிக்கையாளர்கள் கியேவ் அல்லது வாஷிங்டனில் இருப்பவர் சரிசெய்த புகைப்படங்களை வெளியிட்டதா?
  • டைம்ஸின் ஊழியர்கள் அரசாங்கத்திடம் இருந்து வரும் தகவல்களை எத்தகைய திறனாய்வு பரிசீலனைக்கும் உட்படுத்துவதில்லையா?

இப்புகைப்படங்களை டைம்ஸ் வெளியிட்டது ஒரு நிரபராதச் செயல் அல்ல. இது அமெரிக்க அதிகாரிகளுக்கு அரசியல் வெடிமருந்தை, கியேவில் உள்ள கைப்பாவை அரசாங்கத்தை கிழக்கு உக்ரேன் எதிர்ப்புக்களை நசுக்க அழுத்தம் கொடுக்க வைத்தது. இப்புகைப்படம் அமெரிக்க துணை ஜனாதபதி ஜோ பைடென் கியேவிற்கு ரஷ்யாவுடன் அழுத்தங்களை அதிகரிக்க புறப்பட்டபோது வெளியிடப்பட்டது.

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜீ லாவ்ரோவ், நேற்று மாஸ்கோ கிழக்கு உக்ரேனில் இனவழி ரஷ்யர்கள் மீதான வன்முறைக்கு உண்மைத் தலையீட்டை செய்யப்போவதாக கருதுகிறது என்று குறிப்பிட்டார். இது ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இராணுவ மோதல் என்னும் நேரடி அச்சுறுத்தலைக் காட்டுகிறது; அது அணுவாயுதங்கள் உடைய சக்திகள் ஒரு உலகப் போரைத் தூண்டும் அபாயத் திறனைக் கொண்டுள்ளது.

இந்த மோசடி புகைப்பட அறிக்கையும் பின்னர் அதை மூடிமறைக்கும் முயற்சியும், அரசாங்க பிரச்சாரத்தை செய்தி என மறைத்துக்காட்டும் டைம்ஸின் நீண்டகால வரலாற்றின் ஒரு பகுதியாகும். இன்னும் இழிந்த முறையில் ஈராக்கின்மீது அமெரிக்கப் படையெடுப்பு 2003ல் நடத்துவதற்கு முன், டைம்ஸின் செய்தியாளர் ஜூடித் மில்லர், புஷ் நிர்வாகம் அளித்திருந்த தவறான உளவுத்துறைத் தகவல்களை தளமாகக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டார்; அவற்றில் ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருந்தது எனக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு சிரியப் போர் ஆபத்தின்போதும், டைம்ஸ் கூத்தாவில் நடைபெற்ற இராசயனத் தாக்குதல்கள், சிரியாவால் மட்டும்தான் அரசாங்க நிலையில் இருந்து நடத்தப்பட்டிருக்க முடியும் என்று காட்டும் கட்டுரையை வெளியிட்டது; இது “சிவப்புக் கோட்டை” கடந்து அமெரிக்காவை சிரியாவில் போருக்குத் தூண்டும். ஆனால் இறுதியில் போர் நடக்கவில்லை, டைம்ஸின் கட்டுரை பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது தெரியவந்தது. சேமுர் ஹெர்ஷ் ஆவணப்படுத்தியுள்ளபடி, தாக்குதல் அமெரிக்காவின் நட்பு அமைப்புக்களால், துருக்கி, சிரிய எதிர்ப்புச் சக்திகளால் போரைத் தூண்டவேண்டும் என்ற குற்ற முயற்சிக்காக துவக்கப்பட்டது. ஹெர்ஷின் அறிக்கை முறையாக அமெரிக்க செய்தி ஊடகத்தால், டைம்ஸ் உட்பட, புறக்கணிக்கப்பட்டது.

ஈராக், சிரியா மற்றும் இப்பொழுது ரஷ்யாவில் பொதுமக்களை நம்பவைப்பதற்கு பொய்களை வெளியிடுவதைத்தவிர, ஆளும் உயரடுக்கிற்குச் சங்கடம் கொடுக்கும் வெளிப்பாடுகள் எதையும் டைம்ஸ் மறைத்துவிடுகிறது. உதாரணமாக புஷ் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி, 2004 ல் NSA இன் வெகுஜன ஒற்று பற்றிய கருத்துக்கள் வெளியிடுவதை ஜனாதிபதி தேர்தல்கள் முடியும் வரை ஒத்தி வைத்தது.

2010ல் டைம்ஸ் ஆசிரியர் பில் கெல்லர் தன்னுடைய செய்தித்தாளின் நிலைப்பாட்டை விக்கிலீக்ஸ் வெளிப்பாடுகள் பற்றிய அவருடைய விடையிறுப்பில் கொடுத்தார். அமெரிக்க அதிகாரிகளிடம் இடைவிடாத் தொடர்பு கொண்டு வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுவதா என்பது குறித்து அவர் விவாதிப்பார் என்று கூறிய கெல்லர், “முழுமனத்துடன் நாங்கள் முழு வெளிப்படைத்தன்மை முற்றிலும் நல்லது அல்ல என்று உடன்பட்டோம். செய்தி ஊடகத்தின் சுதந்திரம் என்பதில் வெளியிட வேண்டாம் என்பதும் அங்கும், அந்த சுதந்திரத்தை நாங்கள் முறையாக கையாள்கிறோம்.”

டைம்ஸை பொறுத்தவரை, செய்தி ஊடகச் சுதந்திரம் என்பது, அரசு என்ன செய்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் உரிமை அல்ல, எந் தகவலையும் அல்லது உக்ரேன் சம்பவம் காட்டுவது போல வேண்டுமென்றே பொதுக் கருத்தை அப்பட்டமான போலித்தயாரிப்புக்களால் நச்சுப்படுத்துவது என்பதுதான் செய்தி ஊடகச் சுதந்திரம்.