As talks open in Geneva, US begins direct arming of Syrian militia
ஜெனீவாவில் பேச்சுக்கள் ஆரம்பமாகையில் அமெரிக்க சிரிய ஆயுதக்குழுக்களுக்கு நேரடியாக ஆயுதங்களைக் கொடுக்கிறது
By Alex Lantier
13 September 2013
நேற்று அமெரிக்க, ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் சிரியாவிற்கு எதிரான போரைத் தவிர்க்கும் நோக்கத்துடன் ஜெனீவாவிற்கு வருகையில், அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் நேரடியாக சிரியாவிற்குள் இருக்கும் இஸ்லாமியவாத எதிர்ப்பார்களுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சவுதிஅரேபியா மற்றும் கட்டார் போன்ற பிற பாரசீக எண்ணெய் ஷேக் முடியாட்சிகளினால் நிதியளிக்கப்பட்ட ஆயுதங்களை திருட்டுத்தமான துருக்கி, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஏனைய அரபு நாடுகளில் இருக்கும் தளங்களின் வலைப்பின்ன்னல் மூலம் எதிர்த்தரப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதை CIA மேற்பார்வையிட்டுள்ளது. ஆனால் இப்பொழுது அமெரிக்காவின் வரி செலுத்துபவர்களின் நிதி, அல் குவேடாவுடன் பிணைந்துள்ள அல்லது தொடர்புகொண்டுள்ள எதிர்த்தரப்பினருக்கு ஆயுதங்களை வழங்கச் செல்லும்.
அமெரிக்க அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீடுகளின்படி வாஷிங்டன் இச்சக்திகளுக்கு மொத்தம் 250 பில்லியன் டாலர்களை உதவியாகச் செலவழிக்கும். CIA பல இலகுரக ஆயுதங்கள், வெடிமருந்துகளை வழங்குகின்றபோதிலும், எதிர்த்தரப்புச் செய்தித் தொடர்பாளர் இந்த ஆயுத வழங்கல்களை வெறும் “அடையாளத்திற்காக” என்று குறைகூறி, அமெரிக்க டாங்கி எதிர்ப்பு, விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குமாறு கோரியுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறையும் வாகனங்கள், நவீனத் தொலைத்தொடர்புக் கருவிகள் மற்றும் முன்னேற்றகரமான மருத்துவ உதவுகளை வழங்கி வருகிறது.
கிளர்ச்சியாளர்கள் எனப்படுவோருக்கு வாஷிங்டன் ஆயுதம் வழங்குவது சிரியா பற்றி ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடாத்துவது பற்றிய அதன் திருப்பம் நம்பிக்கையின்மையுடன் தான் என்பதை காட்டுகிறது. ஒபாமா நிர்வாகம், இந்த வாரம் சிரிய இரசாயன ஆயுதங்கள் அழித்தலை விவாதிக்க வேண்டும் என்னும் மாஸ்கோவின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டது. ஏனெனில் காங்கிரஸ், பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்க்கும் சிரியா மீதான போருக்கு ஆதரவு தரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனத் தோன்றியது. ஆனால் இந்த தந்திரோபாயம் அமெரிக்கப் போர் உந்துதலில் எந்த அடிப்படை மாற்றத்தையும் குறிக்கவில்லை.
மாறாக, அமெரிக்க அரசாங்கமும் அதன் நட்பு நாடுகளும், அவர்களுடைய போர்த்திட்டங்களுக்கு அமெரிக்க, மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆழமான எதிர்ப்பின் காரணமாக நெருக்கடிக்கு பிரதிபலிப்பாக தங்கள் குற்றம் சார்ந்த தலையீட்டை தீவிரமாக்குகின்றன. இஸ்லாமியவாதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை அவர்கள் முடுக்கிவிட்டுள்ள அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாக சிரியா மீது நேரடி இராணுவத் தாக்குதலுக்கும் தொடர்ந்து தயாரிப்புக்களை நடத்துகின்றனர்.
அசாத் கடந்த மாதம் கூத்தாவில் நச்சு வாயுவைப் பயன்படுத்திக் குடிமக்களைக் கொன்றார் என்னும் பொய்களின் தளத்தைக் கொண்டு, அமெரிக்க அதிகாரிகள், சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட துரிதமான காலஅட்டவணை ஒன்றை கோரியுள்ளனர். இந்த தெளிவுபடுத்தப்படாத, ஆனால் குறுகியகால அட்டவணை பின்பற்றப்படவில்லை என்றால் அமெரிக்கா தாக்கும் என்றும் அடையாளம் காட்டியுள்ளனர்.
நேற்று மாலை ஜெனீவாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரி வாஷிங்டன் இன்னமும் போர் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது என வலியுறுத்தினார். அவர் கூறியது: “ஜனாதிபதி ஒபாமா இராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால் அசாத் இந்த ஆயுதங்களை பயன்படுத்தும் திறனை தடுக்கவும், அழிக்கவும் படைவலிமை பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளார்.”
உண்மையில் அமெரிக்க, ஐரோப்பிய தலையீடு இரசாயன ஆயுதங்களை அழிக்கும் நோக்கத்தை மட்டும் கொள்ளவில்லை, மாறாக மத்திய கிழக்கில் மேலாதிக்கம் கொள்ள வேண்டும் என்னும் ஒரு பரந்த மூலோபாயத்தின் பாகமாக அசாத்தை கவிழ்ப்பதாகும். அசாத்தின் அரசாங்கத்தை அகற்றிவிடுவதன் மூலம் வாஷிங்டன் சிரியாவின் நட்பு நாடான ஈரானை தனிமைப்படுத்தும். ஈரான் மத்திய கிழக்கின் முக்கிய பிராந்திய எதிராளி நாடாக அமெரிக்காவிற்கு உள்ளது. எனவே வாஷிங்டன் குறுங்குழுவாத சுன்னி இஸ்லாமியவாதிப் போராளிகளுக்கு ஆதரவையும் ஆயுதங்களையும் கொடுக்கிறது. அவர்களை சிரியாவினுள் இருக்கும் மிகவும் நம்பிக்கையுடைய ஈரானிய எதிர்ப்புச் சக்திகள் என்று காண்கிறது.
சிரிய எதிர்த்தரப்பு, இரசாயன ஆயுதங்கள் பிரச்சினையை உதறித்தள்ளி, பேச்சுவார்த்தைகளுக்கான எவ்விதமான முயற்சிகளையும் கண்டித்துள்ளது. “ரஷ்ய ஆரம்ப முயற்சியான இரசாயன ஆயுதங்களைச் சர்வதேச பாதுகாப்பில் வைக்க வேண்டும் என்பதை உறுதியாக நாங்கள் நிராகரிக்கிறோம்.” என சிரிய எதிர்த்தரப்பு உயர் இராணுவக் குழுவின் தலைவர் சலிம் இட்ரிஸ் கூறினார்.
வோல்ஸ்ட்ரீட்ஜேர்னலின் கருத்துப்படி, எதிர்தரப்புச் சக்திகள் “ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றும் சிறந்த சந்தர்ப்பத்தை இழந்துவிட்டதாக அஞ்சுகின்றனர்.” அவர்கள் சிரியத் தலைநகரான டமாஸ்கஸ் மீது தரைமூல தாக்குதல் திட்டங்களை ஒத்திவைக்கும் கட்டாயத்தில் உள்ளனர். இதை அவர்கள் அமெரிக்க, பிரெஞ்சு வான் தாக்குதல்கள் நடத்தப்படும் மறைப்பின்கீழ் செயல்படுத்தலாம் என நம்பியிருந்தனர்.
அமெரிக்க கொள்கையின் குற்றம் சார்ந்த தன்மை இன்னும் திமிர்த்தனமானது. ஏனெனில் வாஷிங்டன் ஆதரிக்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் குழு, அல்நுஸ்ரா முன்னணி, ஈராக்கிய சிரிய இஸ்லாமிய அரசு (ISIS) அல்லது அக்ரர் அல் ஷாம் படைப்பிரிவு போன்று நேரடியாக அல் குவேடாவுடன் பிணைந்தவை, அத்துடன் மிக நெருக்கமாக இருக்கின்றன. அமெரிக்க அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம், அல் நுஸ்ரா ஒரு பயங்கரவாதக் குழு என்றும், சிரியாவில் நூற்றுக்கணக்கான குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பு என்று பொதுவாக அறிவித்திருந்தது.
ஆயினும்கூட வாஷிங்டன் இத்தகைய சக்திகளுக்கு உதவுகிறது. இவை வடக்கு சிரியாவில் சில பகுதிகளை ஆள்கின்றன. அங்கு அல் நுஸ்ரா போன்ற சுன்னி ஆயுதக்குழுக்கள் மரணப்படைகள் குறுங்குழுவாத கொலைகளை நடத்துகின்றனர். அமெரிக்க அதிகாரிகள், உள்ளூர் அரசாங்கக் குழுக்களை நிறுவி, எதிர்த்தரப்பின் கீழ் இருக்கும் பகுதிகளில் அடிப்படை சேவைகளை வழங்குகின்றனர்.
“இந்த உள்ளூர் சபைகள் ஒரு சிறந்த தொடக்கத்தை அடைய இயன்றதை செய்யமுடியும் என நம்புகிறோம். எங்கள் உதவி பெறும் தனிநபர்கள் எந்த பயங்கரவாத அமைப்புக்களுடனும் தொடர்பு கொள்ளாமல் இருக்க உறுதிப்படுத்துகிறோம்” என்று வெளிவிவகாரத்துறையின் அதிகாரி மார்க் வார்ட் கூறினார். லிபியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி அமைப்பிற்காக இயங்கிய வார்ட், தெற்கு துருக்கியில் இருந்து எதிர்த்தரப்பிற்கு “ஆயுதமற்ற” அமெரிக்க உதவி செல்வதற்கான ஒருங்கிணைப்பாளராவார்.
உண்மையில், அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் அல் நுஸ்ரா கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகளுக்கு உதவ இருப்பதை தெளிவுபடுத்தினர். அவர்கள் இதை இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சிரியக் குடிமக்களின் “இதயங்களையும், கருத்துக்களையும்” வென்று கொள்வதற்கான அமெரிக்க கொள்கையின் ஒரு பகுதி என்று முட்டாள்த்தனமாக காட்டுகின்றனர்.
“நீங்கள் அல் நுஸ்ரா இதயங்களையும் கருத்துக்களையும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் இடங்களில் புதிய தீயணைக்கும் வாகனங்கள், முதலுதவி வாகனங்கள் ஆகியற்றை பார்த்தால் இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.” என அமெரிக்க அதிகாரி ஒருவர் வாஷிங்டன்போஸ்ட்டிடம் கூறினார். வாஷிங்டன் போஸ்ட் இதை “ஒரு நுண்ணுணர்வான மூலோபாயம்” என்று விவரிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் சுன்னி எதிர்ப்பு பிரிவை முன்வளர்ப்பது பெரும் ஆபத்துக்களைக் கொடுக்கும். இன்று முன்னுள்ள மாற்றீடுகளில் ஒன்று ஆளும்வர்க்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் பரந்த போர் எதிர்ப்பு உணர்வு பெருமளவில் ஒரு அரசியல் அணிதிரளல் அல்லது பெருகும் மோதல்கள் மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல் சிரியாவின் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவுடனும் ஒரு பரந்த போரை ஏற்படுத்துதலுமாகும்.
வியாழன் அன்று நியூயோர்க்டைம்ஸ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எழுதிய கட்டுரை ஒன்றை, “ரஷ்யாவிடம் இருந்து கவனமாக இருப்பதற்கான ஒரு அழைப்பு” என்ற தலைப்பில் வெளியிட்டது. சிரியாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதல், “முழு சர்வதேச சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைத்துவிடும்” என்று அவர் அதில் எச்சரித்துள்ளார். மேலும் ஐ.நா.வின் ஆளுமைமையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்றார்.
சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜேர்மனிக்கு எதிராக இருந்த கூட்டைப் பாராட்டிய புட்டின் எழுதினார்: “உலகளாவிய சர்வதேச நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபை அப்பொழுது மீண்டும் இதுபோல் எதுவும் நடக்கக்கூடாது என்பதை தடுக்க நிறுவப்பட்டது… ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் கழகத்தின் [League of Nations] விதியைப் போல் போய்விடுவதை எவரும் விரும்பவில்லை. அது இரண்டாம் உலகப்போருக்கு முன் வீழ்ச்சியடைந்த காரணம் அதனிடம் உண்மையான நெம்புகோல் இருக்கவில்லை. செல்வாக்கு கொண்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியில்லாமலும் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் இன்றியும் இராணுவ நடவடிக்கையை செய்தால் இப்படி நேரிடலாம்.”
ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா ஆகியவற்றில் அமெரிக்க போர்களின் பேரழிவு விளைவுகளைப் பற்றிக் குறிப்பிடும் வகையில், புட்டின் “படைபலம் திறனற்றது, பயனற்றது” என்பதை நிரூபித்துள்ளது” என்றார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நியாயப்படுத்த ஒபாமா கூறும் அமெரிக்கா ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு என்று கூறியிருப்பதை விமர்சித்த புட்டின் எழுதினார்: “நோக்கம் எதுவாக இருந்தாலும் மக்களை தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக நோக்க உந்துதல் ஒரு மிக ஆபத்தானதாகும். பெரிய நாடுகளும் உள்ளன, சிறிய நாடுகளும் உள்ளன, செல்வம்மிக்க, வறுமையான நாடுகள் உள்ளன, நீண்டகால ஜனநாயக மரபுகளை உடையவர், இன்னும் ஜனநாயகத்திற்கான பாதையை தேடுபவையும் உள்ளன. இவற்றின் கொள்கைகளும் வேறுபடுகின்றன. நாம் அனைவரும் வேறுபாடுகளைக் கொண்வர்கள், ஆனால் நாம் இறைவனுடைய ஆசியை வேண்டுகையில், ஆண்டவன் நம்மை சமமாக படைத்துள்ளார் என்பதை மறக்கக்கூடாது.”
அமெரிக்கா தன் போர் உந்துதலை கைவிடுவதற்கு கோரிக்கைவிட்டு, அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை புட்டின் வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருப்பது அமெரிக்கச் சட்டம் இயற்றுபவர்களை சீற்றம் கொள்ள வைத்துள்ளது. செனட்டர் நான்ஸி பெலோசி புட்டினின் கருத்துக்களை கண்டிக்கும் வகையில், “நான் முற்றிலும் உடன்படவில்லை. அமெரிக்கா ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடுதான்.” என்றார்.
ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரோபர்ட் மெனென்டெஸ் புட்டினுடைய கட்டுரையை படித்தபின் தான் “வாந்தி எடுக்க விரும்பியதாக” தெரிவித்தார். “KGB ஊடாக வந்த ஒருவர் நமக்கு எமது தேசிய நலன் எது, எது இல்லை என்று கூறுகிறார்.” என்றார் அவர்.
இதற்கிடையில், பல ரஷ்ய போர்க் கப்பல்கள் கிழக்கு மத்தியதரை கடலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ரஷ்ய அதிகாரிகள், இந்த நடவடிக்கையை சிரியாவில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்றுவதற்கான தயாரிப்பு என்றாலும், இது சிரியாவிற்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு தயாரிப்புக்களை நடத்த நேட்டோ போர்க்கப்பல்களோடு பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
Smitlivy என்னும் அழிக்கும் கப்பல், Nikolai Filchenkov என்னும் தரையிலும் கடலிலும் தாக்கும் கப்பல் மற்றும் கனரக ஏவுகணை தாங்கிக்கப்பலான Moskva அனைத்தும் வரவிருக்கும் நாட்களில் இப்பகுதியை சென்றடைய உள்ளன. |