Senate resolution authorizes war for regime change in Syria
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போருக்கு செனட் தீர்மானம் அனுமதியளிக்கிறது
By Barry Grey and Thomas Gaist
5 September 2013
புதனன்று, ஒபாமா நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை செனட் வெளியுறவுக் குழு இயற்றியது; இது சிரியாவிற்கு எதிராக பேரழிவு தரும் போரை நடத்த ஜனாதிபதிக்கு தடையற்ற அதிகாரத்தை அனுமதிக்கிறது; அதையொட்டி “போர்க் களத்தின் வேகம் மாற்றப்படும்”, மற்றும் பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்ற முற்படுபடும் அமெரிக்க பினாமிப் படைகள் வலுப்படுத்தப்படும்.
10 க்கு 7 என்ற வாக்குக் கணக்கில் இயற்றப்பட்ட இத்தீர்மானம், 7 ஜனநாயகக் கட்சியினர் ஆதரவாக வாக்களித்த நிலையில், கூட்டாக குடியரசுக் கட்சியின் ஜோன் மக்கெயின் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கிறிஸ் கூன்ஸ் முன்வைத்த ஒரு திருத்தமானது, “அமெரிக்காவின் கொள்கையாக இருப்பவை’’ களத்தில் படைகளின் உறவு நிலையில் எதிர்த்தரப்பிற்கு ஆதரவாக மாற்றுவது, சிரிய எதிர்த்தரப்பின் கூறுபாடுகளுடைய போரிடும் திறன்களை விரிவாக்குவது” என்று அறிவிக்கிறது.
இத்தீர்மானம் ஆரம்பத்தில் செவ்வாய் பிற்பகுதியில் இயற்றப்பட்டது; வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி, பாதுகாப்பு மந்திரி சக் ஹாகெல் மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் மார்ட்டின் டெம்ப்சே ஆகியோரை கேட்டபின்; இதிலுள்ள சொல்லாட்சி, ஜனாதிபதி தேவை எனக்கருதும் சக்தியை சிரியா பேரழிவு ஆயுதங்கள் இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ பயன்படுத்துவதைத் ‘தடுக்க மற்றும் சிதைக்க’ எழுச்சியாளர்கள் எனப்படுவோருக்கு “அனைத்து வகை” இராணுவ, அரசியல் உதவியையும் அளிப்பதற்கும், ஈரான் அரசாங்கம் மற்றும் பிற சக்திகளிடமிருந்து சிரிய ஆட்சிக்கு வரும் ஆதரவைக் குறைப்பதற்கும் அனுமதிக்கிறது.
தீர்மானத்தின் சொல்லாட்சி ஜனாதிபதிக்கும் பென்டகனுக்கும் சிரிய துருப்புக்கள், குடிமக்கள் மீது இறப்பையும் அழிவையும் ஏற்படுத்துவதற்கு கட்டவிழ்த்துவிட தொகை எழுதப்படாத ஒரு காசோலை கொடுத்துள்ளதற்கு ஒப்பாகும்; மேலும் அசாத்தை அகற்றவும், அமெரிக்கக் கைப்பாவை அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கும், போரை ஈரான், ரஷ்யாவுடன்கூட விரிவாக்கம் செய்யவும் அனுமதிக்கிறது. வெள்ளை மாளிகையின் பொய்க் காரணமான ஒரு “மட்டுப்படுத்தப்பட்ட” மற்றும் “மட்டுப்படுத்தப்பட்ட இலக்கு” கொண்ட தலையீட்டிற்குத்தான் தயாரிப்பு என்பதை இது வெடிக்க வைத்துள்ளது—ஜனாதிபதி ஒபாமா கடந்த வாரம் அசாத் ஆட்சியின் “வில்லின் மீது ஒரு அடி” இது என்று கூறியிருந்தார்.
ஒபாமாவின் கூற்றான திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொள்ளாது என்பதை இது அம்பலப்படுத்தியுள்ளது. சிரியா மீது வரவிருக்கும் தாக்குதலுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனுடைய மத்திய கிழக்கு மீதான இராணுவ ஆக்கிரமிப்பை சிரியாவைச் சுற்றிவளைப்பதுடன் மட்டுமின்றி, ஈரான் மற்றும் இறுதியில் ரஷ்யா மற்றும் சீனாவையும் சுற்றிவளைத்துக் கொள்ளும். வரவிருக்கும் தாக்குதல் எண்ணெய் வளமுடைய மத்திய கிழக்கு மற்றும் யூரேசியப் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க மேலாதிக்க உந்துதலின் ஒரு பகுதியாகும்; இதனுடைய இறுதி முடிவுக் கட்டம் மூன்றாம் உலகப் போராகும்.
இத் தீர்மானம் ஜனாதிபதிக்கு சிரியாவில் ஆரம்ப 60 நாட்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கிறது; அத்துடன் போரை மற்றும் ஒரு 30 நாட்களுக்கு விரிவுபடுத்தவும் அனுமதிக்கிறது. அமெரிக்க தரைப் படைகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் விதியை கொண்டுள்ளது; ஆனால் இது “போர் நடவடிக்கைகளுக்காக மட்டும்” என்று சேர்த்துக் கொள்கிறது. இந்தத் தப்பிக்கும் வழி CIA மற்றும் சிறப்புப் படைத் துருப்புக்களை சிரியாவிற்குள் பயன்படுத்த உதவும்.
இல்லிநோய்சின் செனட்டர் ரிச்சார்ட் டர்பின், செனட்டில் இரண்டாவது உயர் மட்டத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்சிக்காரரும், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவருமான இவர் இராணுவத் தாக்குதலை பற்றி பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இடம் குறிப்பிட்டார்: “இது ஒன்றும் மட்டுப்படுத்தப்பட்டதாக இராது, சக்தி மிக்க விடையிறுப்பாக இருக்கும்.”
தீர்மானத்தை இயற்றுவதற்கு முன் குழுவானது ஜனநாயகக் கட்சி செனட்டர் தோமஸ் உடால் கொண்டுவந்த தீர்மானம் ஒன்றை, இராணுவ நடவடிக்கையை கடற்படைக் கப்பல்களுடன் நிறுத்தி, அமெரிக்க போர் விமானங்கள் சிரிய வான்வழியில் நுழைவதையும் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்ததையும் புறந்தள்ளிவிட்டது. அதேபோல் குழுவானது குடியரசுக் கட்சியின் ராண்ட் பால், போர் அதிகாரங்கள் 1973 சட்ட விதியைப் பயன்படுத்தி ஜனாதிபதி தவிர்க்க முடியாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொண்டால்தான் இராணுவச் சக்தியை பயன்படுத்த உத்தரவிடலாம் என்று கொண்டுவந்த தீர்மானத்தையும் உதறித்தள்ளியது.
தீர்மானம் இயற்றப்படுவதில் முதல் தடுப்பு வெள்ளை மாளிகையானது காங்கிரஸ் அனுமதியை அடைவதற்கான முனைப்பும் அடுத்த வாரமே இராணுவ நடவடிக்கையை தொடக்குவதும்தான். புதனன்று கெர்ரி, ஹாகெல் மற்றும் டெம்ப்சே மன்ற வெளியுறவுக் குழுவின் முன் தோன்றி போருக்காக வாதிட்டனர்.
தீர்மானத்தின் பொருளுரையானது நிர்வாகம் மற்றும் ஒரு வறிய முன்னாள் காலனிய நாட்டின் மீது தூண்டுதலற்ற போரை நடத்த நியாயப்படுத்தக் கூறியுள்ள பொய்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் உண்மைச் சிதைவுகளைப் பொதித்துள்ளன.
எந்த ஆதாரமும் இல்லாமல் அசாத் ஆட்சி ஆகஸ்ட் 21ம் திகதி எதிர்த்தரப்பு கட்டுப்பாட்டிலிருக்கும் டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதிகளில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்று உறுதியாகக் கூறுகிறது. நிர்வாகத்தின் கூற்றான 1000 பேருக்கு மேல் இப்படி நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலில் இறந்துவிட்டனர் என்பதையும் மீண்டும் கூறுகிறது; அசாத் முன்னரும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது (ஐ.நா. குற்றச்சாட்டான எதிர்த்தரப்பினர்தான் அத்தாக்குதல்களுக்குப் பொறுப்பு என்பதைப் புறக்கணித்து). சிரிய அரசாங்கத்தை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் வாஷிங்டன் தூண்டிவிட்டு நடக்கும் உள்நாட்டுப் போரில் பெரும் இறப்பு எண்ணிக்கை அழிப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டுகிறது.
செனட்டர் மக்கெயின் தீர்மானத்தை இயற்றுவதில் கொண்டுள்ள முக்கியப் பங்கு போர் உந்துதலின் உண்மையான பின்னணி, நோக்கம் குறித்து புலப்படுத்துகிறது. மக்கெயினும் அவருடைய செனட்டில் முக்கிய நண்பருமான லிண்டே கிரகாமும் பல மாதங்களாக ஒரு பெரிய அமெரிக்கப் போர் சிரியாவில் விரிவடைய வேண்டும் என்பதற்குப் போராடி வருகின்றனர். ஒபாமா வார இறுதியில தனியே மக்கெயின் மற்றும் கிரகாமைச் சந்தித்தார்; வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தீர்மானம் இயற்றப்பட்டதையும் மக்கெயினின் ஆட்சி மாற்றம் பற்றிய சொல்லாட்சியையும் குழுவின் வாக்கிற்குப் பின் வரவேற்றார்.
மே மாத இறுதியில், மக்கெயின் சிரியாவிற்குத் திடீர் வருகை புரிந்து எதிர்த்தரப்புப் போராளிகளுடைய தலைவர்களை சந்தித்தார். அரசாங்க இராணுவத் தாக்குதல் அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பை தோல்வியின் விளிம்பில் நிறுத்தியபோது அவருடைய வருகை இருந்தது. அந்த நேரத்தில் அவர் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு போலிக் காரணத்தை தோற்றுவிக்க பெரும் தூண்டுதலுக்கான திட்டங்களை அநேகமாக விவாதித்திருக்கக் கூடும்.
ஆகஸ்ட் மாத நடுவில் அமெரிக்க, ஜோர்டானிய மற்றும் இஸ்ரேலிய சிறப்புப் படைத் துருப்புக்கள் நூற்றுக்கணக்கான எழுச்சியாளர்களுக்கு தலைமை தாங்கி அவர்கள் ஜோர்டானிய எல்லையைக் கடந்து சிரியாவிற்குள் டமாஸ்கஸை தாக்க வழிநடத்தினர் என்று பரந்த அளவில் தகவல்கள் வந்தன. சிரிய அதிகாரிகள் கருத்துப்படி, அரசாங்கம் தவிர்க்கமுடியாத இராணுவத் தாக்குதலை தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் டமாஸ்கஸ் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு நடத்தியது. இதில் ஆகஸ்ட் 21ல் இராசயன ஆயுதத் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் இடங்களும் உள்ளன.
இது இரசாயன ஆயுதத் தாக்குதல் என குற்றம்சாட்டப்படுவதற்கு அரங்கு அமைத்தது; அதை ஆட்சி மாற்றத்திற்குப் போர் என்ற போலிக் காரணமாகப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது – இது சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகும், ஏனெனில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அனுமதி அதற்குத் தேவை.
ஆகஸ்ட் 21ல் என்ன நடந்திருந்தாலும், அது அமெரிக்காவால் அதனுடைய பினாமிப் படைகளைத் தோல்வியிலிருந்து காப்பாற்றவும் தன்னுடைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை இப்பிராந்தியத்தில் விரிவாக்கவும் தொடரப்பட்டது என்பது தெளிவு.
இத்தகைய தூண்டுதலை நடத்தி, பெரும் பொய் உத்தியையும் கையாண்ட வகையில், ஒபாமா நிர்வாகம் ஹிட்லர் ஆட்சியிலிருந்து புத்தகப் பக்கம் ஒன்றை உத்தியை கையாள எடுத்துள்ளது. ஒவ்வொரு நாஜி ஆக்கிரமிப்பும்—செக்கோஸ்லோவாக்கியா இணைப்பில் இருந்து போலந்து கற்பழிப்பு வரை—ஜேர்மனி மக்களின் மனித உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் அல்லது வெளி ஆக்கிரமிப்பிற்கும் ஒரு அறநெறி உந்துதல் கொண்ட விடையிறுப்பு என்று நியாயப்படுத்தப்பட்டது.
மேலும் சிரியாவிற்கு எதிரான போர் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என அழைக்கப்படுவதின் மோசடியையும் அம்பலப்படுத்துகிறது. நன்கு அறிந்துள்ளபடி, வாஷிங்டனின் முக்கிய கூட்டுக்கள் சிரிய மண்ணில் இருப்பவைகள்—அமெரிக்கத் தலையீட்டால் மிகவும் நேரடியாக ஆதாயம் பெறும் சக்திகள்— அல் குவேடாவுடன் தொடர்புடைய இஸ்லாமியவாதப் போராளிகளான அல் நுஸ்ரா முன்னணி போன்றவையாகும்.
ஆனால் அல் குவேடாவுடனான வாஷிங்டனின் கூட்டு ஒன்றும் புதிதல்ல. 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் போருக்கு எதிரான அமெரிக்க ஆதரவு பெற்று நடந்த போரின் போதே CIA ஆனது ஒசாமா பின் லேடனுக்கு நடவடிக்கைக்கான ஆதரவு மற்றும் நிதியை கொடுத்த நாளிலேயே இந்தக் கூட்டு இருந்தது. மேலும் லிபியாவில் 2011ல் ஆட்சி மாற்றத்திற்காக நடத்தப்பட்ட போரில் அல் குவேடா பிணைப்புடைய சக்திகளுக்கு ஆதரவு என்பதிலும் இந்தக் கூட்டு உள்ளடங்கியிருந்தது.
|