Sri Lankan plantation unions violently clash to win seats in provincial election
மாகாண சபைத் தேர்தலில் ஆசனங்களை வெல்வதற்காக பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மூர்க்கதனமாக மோதிக் கொண்டன
By A. Shanthakumar
2 September 2013
மத்திய மாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபை தோர்தலில் முன்னணி இடத்தை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரசும் (இ.தொ.கா) தேசிய தொழிலாளர் சங்கமும் (NUW) மூர்க்கதனமான மோதலிலும் வாய்ச் சண்டையிலும் ஈடுபட்டுள்ளன. செல்வாக்கிழந்த இந்த தொழிற் சங்கங்களுக்கும் வறுமையில் வாடும் தோட்ட தொழிலாளார்களின் நலனுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
இவ்விரு தொழிற்சங்களும் அரசியல் கட்சியாகவும் செயற்படும் அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய சுதந்தர முன்னணியின் பங்காளிகளுமாகும். இத் தொழிற்சங்கங்கள் இரண்டும் மத்திய மாகாணசபைத் தோர்தலில் வேறு வேறாக ஆளும் கூட்டில் வேட்பாளார்களை நிறுத்தியுள்ளன. அரசாங்கம் தோட்டத்தொழிலாளார் உட்பட தொழிலாளார்களின் வாழ்கைத் தரத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் மேற்கொண்டுவரும் தாக்குதலினால் செல்வாக்கிழந்துள்ள சூழ்நிலையில், இத் தொழிற்சங்கங்கள் அதில் இருந்து தூர நிற்பதாக காட்டிக் கொள்ள முற்படுகின்றன. இவை போலி வாக்குறுத்திகளூடாக வாக்குகளை பெற்றுக்கொள்ள முற்படுகின்றன.
இந்த மோதல்கள் தோட்டத் தொழிலாளார்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலிய மாவட்டத்தில் நடந்துள்ளன. தேர்தல் மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெறுகின்றன.
பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா.வின் தலைவார் ஆறுமுகன் தொண்டமான் ஒரு அமைச்சரவை அமைச்சராவர். தே.தொ.ச தலைவர் பீ. திகாம்பரம், ஒரு பாராளுமன்ற உறுப்பினாராவார். இவர் 2010ல் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு தேர்தலின் பின் அரசாங்கத்தின் பக்கம் தாவிக்கொண்டவர்.
இவ்விரு கட்சிகளினதும் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் 19ம் திகதி நுவரெலிய மாவட்டத்தில் கொட்டகலை நகரிலும் மோதிக்கொண்டனார். இதில் டசின் கணக்கான வாகனங்களும் சேதமடைந்நதோடு பலர் காயமுற்றனர். தே.தொ.ச. தலைவார் திகாம்பரமும் பீ. ராஜதுரையும் நுவரெலியாவில் இருந்து பயணம் செய்த வாகனத் தொடாரின் மீது தாக்குதல் நடந்ததை தொடார்ந்து இந்த மோதல்கள் நடந்ததாக கூறப்பட்டது. இ.தோ.கா தலைவர் தொண்டமான் இந்த குற்றசாட்டினை நிராகாரித்தார்.
இரு கட்சிகளையும் சார்ந்த பலரை பொலிசார் முறைப்படுத்தினர். அவர்களில் இ.தொ.கா. நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எம். மலர்வாசன் மற்றும் தே.தொ.ச.வின் திகாம்பரம் மற்றும் இராஜதுரையும் அடங்குவர். ஆகஸ்ட் 27 அன்று, நீதிமன்றம் 2ம் திகதி வரை மலர்வாசனை விளக்கமறியலில் வைக்ககுமாறு உத்தரவிட்ட அதேவேளை, மற்றவர்களை பிணையில் விடுதலை செய்தது.
மற்றுமொரு சம்பவத்தில், தே.தொ.ச.வின் கொட்டகலை அமைப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்து விட்டு திரும்பும்போது, அட்டன் நகரத்தில் வைத்து இ.தோ.கா ஆதரவாளரால் கத்தியால் குத்தப்பட்டார். அவர் கடும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை ஆரம்பித்ததாக குற்றம் சாட்டுகின்றனார்.
பத்திரிகையாளார் மாநாட்டில் உரையாற்றிய இராஜதுரை, தான் இ.தொ.கா.வில் இருந்து தே.தொ.ச.வில் இனைந்ததன் விளைவாகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பட்டார். எவ்வாறெனினும் இ.தொ.கா.வில் இருந்து தான் ஒரங்கட்டபட்டதாக இராஜதுரை குறிப்பிட்டமையின் அர்த்தம், அவர் எதிர்பார்த்த சிறப்புரிமைகள் அவரது கட்சியில் இருந்து அவருக்கு கிடைக்கவில்லை என்பதே ஆகும். அவர் கட்சி மாறுவதற்கு பெருந்தொகையான லஞ்சம் பெற்றதாக இ.தொ.கா. குற்றம் சாட்டுகின்றது.
இந்த தொழிற்சங்களுக்கிடையில் அரசியல் வேறுபாடு எதுவும் இல்லை. இந்த எல்லா தொழிற்சங்கங்களின் தலைவார்களும் சொத்து அதிபதிகளும் வியாபாரிகளுமாவர். அவர்களின் முக்கிய குறிக்கோள் பதவிகளும் சிறப்புரிமைகளுமாகும். அவர்கள் தமது தேர்தல் வெற்றியை, தங்களது சொந்த நலனுக்காக அரசாங்கத்திடம் பேரம் பேசும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் தேர்தல் வெற்றிக்காக இனவாதத்திலிருந்து வன்முறைவரை எல்லாவற்றையும் பயன்படுத்துவர். கடந்த வருடம் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலின் போது இ.தொ.கா. மலையக மக்கள் முன்னணியுடனும் ஜனநாயக மக்கள் முன்னணியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அவர்கள் “தமிழ் பிரதிநிதியை தெரிவுசெய்வது” தமிழ் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் என தோட்டத் தொழிலாளர்களுக்கு கூறினர். இந்த மாகாணத்தில் குறிப்பிட தகுந்த தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்த போதிலும் தமக்கு ஆசனம் கிடைக்காது என்ற பயத்தில் கூட்டாக இணைந்து இனவாத பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்த தொழிற்சங்கங்கள் ஒருவரது குரல்வளையை இன்னொருவர் நெரித்துக்கொண்ட போதிலும், இவ்வருடத்தின் முற்பகுதியில் கம்பனிகளால் தயாரிக்கபட்ட சம்பள உயர்வினை தொழிலாளர்களின் மீது திணிப்பதற்கு ஐக்கியப்பட்டு செயற்பட்டனர். இ.தொ.கா. உடன் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் எதிர்கட்சியான ஐ.தே.க.யின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் 2013 ஜனவரியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 70 ரூபா அற்ப சம்பள உயர்வை ஏற்றுக்கொண்டு இரண்டு வருட கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.
அரசை ஆதரிக்கும் தொ.தே.ச. மற்றும் ம.ம.மு.வும் எதிர்க் கட்சிகளை சார்ந்த ஜனநாயக தொழிலாளர் முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணி சார்ந்த அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமும் கூட்டு ஒப்பந்ததை போலியாக “விமர்சித்து” தொழிலாளர்களின் எதிர்ப்பினை மழுங்கடித்து ஒப்பந்ததை எற்றுக்கொண்டன. தொழிலாளர்களை வறிய மட்ட சம்பளத்தில் வைத்துக்கொள்வதற்கு கடந்த காலங்களிலும் இந்த தொழிற்சங்கங்கள் இதே குற்றவியல் பாத்திரத்தை ஆற்றியுள்ளன.
மற்றைய தொழிற்சங்கங்கள் போலவே இ.தொ.கா.வும் தே.தொ.ச.வும் தோட்ட தொழிலாளர் மத்தியில் அபகீர்த்தி அடைந்துள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர இனவாத யுத்ததிற்கும், வாழ்நிலை, தொழில் மற்றும் ஐனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களுக்கும் ஆதரவளித்தன. இந்த தொழிற்சங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கதின் சிக்கன நடவடிக்கைகளையும் ஐனநாயக உரிமைகள் மீதான தாக்குதலையும் ஆதரித்தனர்.
தோட்ட தொழிலளர்களின் பொதுவான மனப்பாங்கினை வெளிப்படுத்தி நோர்வுட் தோட்டதை சேர்ந்த 24 வயது தனபாலன் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கூறியதாவது: “2000க்கு பின்னர் நான் எந்த கட்சிக்கும் வாக்களிப்பதில்லை. வாக்குச் சிட்டுகளை கிழித்தெறிவேன். தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதில் இந்த தொழிற்சங்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை. இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த நலன்களுக்காக அரசாங்கத்துடன் இருக்கின்றனர். தேர்தல் வரும்போது வெவ்வேறு கூட்டணிகளாகவும் வெவ்வேறு நிறங்களிலும் கவர்ச்சியான வசனங்களுடனும் போலி வாக்குறுதிகளுடனும் தொழிலாளர்களை எமாற்றுவதற்கு வருகின்றனர். ஏனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது தோட்ட தொழிலாளர்கள் எண்ணெய் விலை உயர்விற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யும்போது திகாம்பரம் வேலை நிறுத்தம் செய்தால் தொழிலாளர்கள் வருமானத்தை இழப்பார்கள் எனக் குறிப்பிடடடர்.”
இந்த தொழிற்சங்கங்கள் தோட்ட தொழிலாளர் மத்தியில் தமது தளத்தினை இழந்துள்ளன. எனவே தமது ஆதிக்கதத்தினை அவர்கள் மீது நிலை நிறுத்தி தேர்தலை வெற்றிக்கொள்ள கலவரம் மற்றும் பயமுறுத்தும் பாணியிலான பிரச்சாரத்தை ஏக்கத்துடன் மேற்கொள்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இன்னுமொரு குறிக்கோள், குறிப்பாக தே.தொ.ச.வுக்கு, இருக்கின்றது. மாகாண சபை தேர்தலில் செல்வாக்கினை அதிகரித்துக்கொள்வதன் ஊடாக, இ.தொ.கா.வை ஓரங்கட்டி, ராஜபக்ஷ அரசாங்கத்துடன் மேலும் சலுகைகளுக்காக பேரம் பேசுவதே அது.
இந்த மாகாணசபைத் தேர்தல், ஏகாதிபத்திய யுத்த அபாயத்துக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளால் வாழ்க்கைத் தரத்தின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் ராஜபக்ஷ அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள் அதிகரித்துவருகின்ற சூழ்நிலையிலுமே இது நடத்தப்படுகிறது. முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தோடும் அரசோடும் இணைந்துள்ள இந்த தொழிற்சங்கங்களால், உழைக்கும் மக்களின் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது.
தொழிலாள வர்க்கத்தால் இந்த அமைப்புகளை நம்பமுடியாது. சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் சோசலிச கொள்கைகளுக்கான ஒரு சுயாதீன அரசியல் இயக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியம். தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான மாதச் சம்பளம், உரிய சுகாதார வசதிகள், சகல வசதிகளையும் கொண்ட வீடுகள், கல்வி மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டம் ஆகும். சோசலிச கொள்கைகளுக்கும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக ஐக்கியபட்ட போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை குழுக்களை ஒவ்வொரு தோட்டங்களிலும் அமைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த முன்னோக்கிற்கும் வேலைத்திட்டத்திற்கும் போராட புரட்சிகர தலமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி வட மாகாணத்தில் யாழ்பாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறது. எமது தேர்தல் விஞ்ஞாபனம் வட மாகாணத்தை மாத்திரம் மையப்படுத்தப்பட்டதன்றி முழு தொழிலாள வர்க்கத்திற்குமானதாகும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்து அரசியல் கலந்துரையாடல்களை எற்படுத்தி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
|