சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Five years since the collapse of Lehman Brothers

லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்

By Nick Beams
14 September 2013

Use this version to printSend feedback

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் செப்டம்பர் 15, 2008 ல் சரிந்தமை ஒரு உலக நிதிய நெருக்கடியின் ஆரம்பத்தை விட அதிகமான விடயமாகும். அது ஒரு தொடர் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. இந்நிகழ்வுகள் உலக முதலாளித்துவத்தின் முக்கிய பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேற்ப்பரப்பிற்கு கொண்டு வந்தன.

நிதிய நெருக்கடியின் வரலாற்றுத் தன்மை எல்லாவற்றிற்கும் மேலாக மேலதிக நிதிய கரைப்பு என்னும் அச்சத்தை அகற்றுவதற்கு பதிலாக, அரசாங்கங்களும் நிதிய அதிகாரிகளும் மிகவும் மலிவான பணத்தை நிதிய ஊகத்திற்கு வழங்குவதை அடித்தளமாக கொண்டு எடுத்த நடவடிக்கைகளினால் இன்னமும் ஒரு புதிய பேரழிவிற்கான சூழலைத் தோற்றுவித்தன.

2008 நிகழ்ச்சிகளின் விளைவாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 8.8 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டதுடன், 19.6 டிரில்லியன் டாலர்கள் பெறுமதியான வீடுகளின் செல்வங்கள் இழக்கப்பட்டன. நெருக்கடியின் தீவிரம் வங்கி முறைக்கு அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு வழங்கிய அவசரகால வசதிகளின் அளவில் இருந்து அறியப்படலாம். மொத்தம் 17.7 டிரில்லியன் டாலர்கள்  கொடுக்கப்பட்டன. சிட்டிகுரூப், மோர்கன் ஸ்ரான்லி, மெரில் லின்ச் உட்பட எட்டு உயர்மட்ட கடன் வாங்கிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 11.5 டிரில்லியன் டாலர்களை பெற்றன. இது சொத்துக்களை விற்க, வாங்க முடியாத நெருக்கடி அல்ல, திவாலாகும் நெருக்கடியாகும்.

பெரும் வங்கிகளையும் நிதிய நிறுவனங்களையும் மீட்டபின், மத்திய வங்கி அதன் திட்டமான “அதிக பணத்தை புழக்கத்தில் விடுவதில்” இறங்கியது. தற்போதைய பணத்தை அச்சடிக்கும் நடவடிக்கை சுற்றில் ஒரு மாதத்திற்கு 85 பில்லியன் டாலர்கள் என்று நிதியச் சந்தைகளில் உட்செலுத்தி 2008 நெருக்கடிக்கு வழிவகுத்த  ஊகத்திற்கே வகை செய்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துப்படி மொத்த பெருநிறுவனப் பத்திரக் கடன் இப்பொழுது கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்கள் என்று 2007ல் இருந்து 57% வளர்ந்துவிட்டது. பெரு நிறுவனங்களின் பத்திரங்களில் சரிவிற்கு முன் 17% என்று இருந்த மதிப்புகுறைந்த பத்திரங்கள் இப்பொழுது 25% என்று உள்ளன.

பங்குச் சந்தைகள் புதிய உயர்ந்த மட்டத்தை அடைந்துவிட்டன. அமெரிக்க பொருளாதாரமோ 2%க்கு சற்றே கூடுதலாகத்தான் வளர்ந்துள்ளது. இது தொழிலாளர் பிரிவின் வளர்ச்சியுடன் ஒத்துப்போவதற்கான அளவைவிட மிகவும் குறைவாகும். இது ஒரு பாரிய வேலையின்மையின் தொடர்ச்சியைத்தான் உறுதிப்படுத்தும்.

பிரித்தானியாவிலும் யூரோப்பகுதியிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007ல் அடையப்பட்ட அளவுகளுக்கு இன்னும் மீளவில்லை.

“எழுச்சி பெறும் சந்தைகள்” முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில் இருந்து விலகி உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய அடிப்படையை வழங்கும் என்று மிகவும் கருதப்பட்ட உறுதிப்பாடு சிதைந்துவிட்டது. உண்மையில், இப்பொருளாதாரங்கள் ஒரு புதிய நிதியக் கரைப்பிற்கான ஊக்கத்தைத்தான் கொடுக்கும். அவற்றுள் குவிக்கப்பட்ட மலிவான நிதி, தொடர்ச்சியான ஊகக்குமிழிகளை ஊதிப்பெருகச் செய்ததுடன், இந்நிதி மத்திய வங்கிக்கூட்டமைப்பால் அதன் சொத்து வாங்கும் திட்டத்தை கைவிட்டபின் திரும்பப் பெறப்படுகின்றன.

நெருக்கடி வெடித்தபோது, இது வங்கிமுறை சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் வங்கிகளின் மீது மேலாதிக்கம் செலுத்தும் நிதிய பெருநிறுவனங்கள் முறியும் என்றும் கருதப்பட்டது. மாறாக, ஐந்து ஆண்டுகளுக்குப்பின், அமெரிக்க வங்கி மற்றும் நிதிய முறை நெருக்கடிக்கு முன்பு இருந்த நிலையை விட மிகவும் ஒன்றுகுவிக்கப்பட்டு உள்ளது. இது ஐரோப்பா, பிரித்தானியா, ஆஸ்திரேலியா இன்னும் நாடுகளிலும் உண்மையாகத்தான் உள்ளது.

உடைவிற்கு காரணமான நிதிய நடைமுறைகளின் குற்றம் சார்ந்த தன்மை ஒருபுறம் இருக்க, ஒரு முக்கிய நிர்வாகியை சிறையில் போடுவது கூட ஒருபுறம் இருக்க, எவருக்கும் எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கூட கொண்டுவரப்படவில்லை. அமெரிக்க தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர் விளக்கியபடி, உலகளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் நெருக்கடியை அது தொடக்கிவிடும் என்ற அச்சத்தினால், ஒபாமா நிர்வாகம் முக்கிய வங்கிகளையோ அவற்றின் உயர்மட்ட அதிகாரிகளையோ குற்றச்சாட்டிற்கு உட்படுத்த விரும்பவில்லை.

அமெரிக்க “மீட்பின்” சாராம்சம் வருமான வகையில் செல்வத்தின் மறுபங்கீடு ஆகும். 2009ல் இருந்து 2012க்குள், “மீட்புக்காலம்” எனக்கூறப்படுவதில், மொத்த அமெரிக்க வருமானம் 6 வீதம் அதிகரித்தது. ஆனால் 95 வீதம் உயர்மட்ட 1 வீதத்தினருக்கு சென்றது. பெரும்பாலான மக்களுடைய உண்மை வருமானங்கள் சரிந்துவிட்டன.

தேசிய வருமானத்தில் தொழிலாளர் பங்கு நிதிய நெருக்கடிக்கு முன் இருந்த 62 வீதத்தில் இருந்து இன்று 59 வீதம் எனக் குறைந்துவிட்டது. அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 டிரில்லியன் டாலர்கள் என்று இருக்கையில் இதன் பொருள் கிட்டத்தட்ட 450 பில்லியன் டாலர்கள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து நிதியப் பிரபுத்துவம் தன்னை மேலும் செழிக்கவைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதுதான்.

பல தசாப்தங்களாக அனைத்துவகை சீர்திருத்தவாதிகளும் கார்ல் மார்க்சின் முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிய ஆய்வின் தர்க்கவியலான செல்வம் ஒரு முனையில் திரளுகையில்  மறுமுனையில் வறுமையும் இழிசரிவும்தான் மிஞ்சுகிறது என்பதை எள்ளி நகையாடினர். இத்தகைய ஒரு குணாதிசயப்படுத்தல் 19ம் நூற்றாண்டிற்குத்தான் பொருத்தமானது அல்லது ஒருவேளை 1930களுக்குத்தான் என்று அவர்கள் கூறினர்.

ஆனால் 2008 சரிவிற்குப்பின் சமூக சமத்துவமின்மை படர்கையில், அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்குகளுடைய முக்கிய கோரிக்கைகள் தொழிலாள வர்க்கம் முந்தைய நூற்றாண்டில் அடைந்த அனைத்து சமூக நலன்களையும் அகற்ற வேண்டும் அல்லது மொத்தமாக அழிக்க வேண்டும் என்றுதான் உள்ளன. ஒரு சமூக எதிர்ப்புரட்சிதான் இப்பொழுது நடைபெறுகிறது.

நிதியத்துறையில், குற்றத்தன்மை, ஒட்டுண்ணித்தனம் மற்றும் கொள்ளைமுறை என்பவை அவற்றின் மறுபக்கத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இன்னும் பிற முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் வெளியுறவுக் கொள்கைகளில் சென்றடைந்துவிட்டன. இப்பொழுது போர், வெளிப்படையாக மூலோபாய அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைய பயன்படுத்தப்படுகிறது. இப்பிரச்சினைகள்தான் நூரெம்பேர்க் வழக்குகளின் போது நாஜிக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான சட்ட அடித்தளங்களாக இருந்தன.

போரும் சமூக எதிர்ப்புரட்சியும், சமாதான முறையிலோ அல்லது ஜனநாயக வடிவமைப்புக்கள் மூலமோ சுமத்தப்பட முடியாது. இதுதான் அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பொலிஸ் அரச கருவிகளை நிறுத்துவதற்கான உந்துசக்தியாகும். இது பரந்த ஒற்று வலைப்பின்னலில் மையம் கொண்டுள்ளது. ஆளும் வர்க்கங்கள் உலக நிதிய அமைப்பு முறையில் மற்றொரு வெடிப்பு, சமூக எழுச்சிகளை தூண்டி அவை புரட்சிகர பரிமாணங்களை அடையும் என்று அஞ்சுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பரந்த வெகுஜனப் போராட்டங்கள் எழுச்சி கண்டுள்ளன. அவ்வெழுச்சிகளின் உச்சப்புள்ளி எகிப்திய புரட்சியில் அடையப்பட்டது. ஆனால் இப்போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் தலைமை மற்றும் முன்னோக்கில் உள்ள நெருக்கடியைத்தான் வெளிப்படுத்தியுள்ளன.

ஆளும் வர்க்கங்கள் பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கு எனத் தாங்கள் தலைமை தாங்குபவற்றின் “மீட்பில்” நம்பிக்கை கொள்ளவில்லை. எனவேதான் அவை தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி, சர்வாதிகார ஆட்சிமுறைக்கு தயாரிப்புக்களை செய்கின்றன.

தொழிலாள வர்க்கமும் கடந்த ஐந்து ஆண்டுகளின் படிப்பினைகளை எடுத்துக்கொண்டு சிறிதும் குறையாத நனவுடன் தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். முதலாளித்துவ அமைப்புமுறை தோல்வி அடைந்துள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கும் மனிதகுலம் முழுவதற்கும் மீண்டும் போரையும், சர்வாதிகாரம், வெகுஜன வேலையின்மையும் தவிர அதனால் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்க இயலாது. சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையை கட்டமைப்பதுதான் இப்பொழுதுள்ள அவசியமான பிரச்சினை ஆகும்.