சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Chile’s September 11, 40 years on

சிலியின் செப்டம்பர் 11 நாற்பது ஆண்டுகளுக்குப் பின்

By Bill Van Auken
11 September 2013

Use this version to printSend feedback

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மிக சோகமான நிகழ்வுகளில் ஒன்றான செப்டம்பர் 11, 1973  சிலியில் நடந்த இராணுவ சதியின் 40வது ஆண்டு முடிவை இன்று குறிக்கின்றது. சிலியின் பாசிச இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது இலத்தின் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேசரீதியான தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முக்கிய தோல்வி ஆகும். இது பாரிய புரட்சிகர சாத்தியப்பாட்டிற்கான ஒரு சூழ்நிலைமையை, கொலையும் அடக்குமுறையும் உள்ள ஒரு   பெருந்துயராக மாற்றியது.

இந்த சதி வாஷிங்டனின் நிக்சன் நிர்வாகத்தால் தூண்டப்பட்டு CIA  மற்றும் பென்டகனின் மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் ஒழுங்குபடுத்தப்பட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் இராணுவ உளவுத்துறை அமைப்பும் இராணுவ சதிக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்ததோடு மட்டும் இல்லாமல் அதை தொடர்ந்து உடனடியாக பல்லாயிரக்கணக்கான சிலி தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகளைக் கைது செய்தல், சித்திரவதை செய்தல், படுகொலை செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்க அதிகாரிகள், இரண்டு அமெரிக்க குடிமக்களான சார்ல்ஸ் ஹோமன் மற்றும் பிராங்க் டெருக்கி கொலை செய்யப்பட்டதையும் மேற்பார்வையிட்டனர்.

சிலியின் இரத்தக்களரியில் முக்கிய ஏற்பாடு செய்தவர்களுள் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசரகரும், வெளிவிவகார செயலரும், உலகின் மிக வயதான, இழிந்தப் போர்க் குற்றவாளியுமான ஹென்ரி கிசிஞ்சர் இருந்தார். அவர் நிக்சனுக்குப்பின் பதவிக்கு வந்த ஜேரால்ட் போர்டால் “தேசிய சொத்து” என்று புகழப்பட்டதுடன், பராக் ஒபாமாவால், “கடின மதி படைத்த, அமெரிக்க நலன்களையும், அமெரிக்க கடுமையாக பாதுகாத்தவர்” என்றும் புகழப்பட்டார்.

சிலியை பொறுத்தவரை புகழ்பெற்ற வகையில் கிசிஞ்சர் அறிவித்தார்: “ஒரு நாடு அதன் மக்களின் பொறுப்பற்ற தன்மையினால் கம்யூனிஸ்ட் நாடாக ஆவதைப் நாம் ஏன் பேசாமல் பார்க்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை” என்றார்.  சிலியப் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கம் உடைய ஆக்கிரமிக்கும் திட்டத்தை அவர் மேற்பார்வையிட்டதுடன், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு ஊக்கமளித்து இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சல்வடோர் அலெண்டேயை இராணுவம் அகற்றுவதையும் பின்னின்று ஊக்குவித்தார். பின்னர் அவர் ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் இராணுவ ஆட்சிக்குழு நடத்திய கொடூரங்களுக்கு ஆதரவு கொடுத்தார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் “முதுபெரும் அறிஞர்” என்று கிசிஞ்சர் இன்று போற்றப்படுகிறார். அவருடைய ஆலோசனை இன்னமும் வெள்ளை மாளிகையால் கோரப்படுகிறது. அவருடைய குற்றங்களுக்கு விசாரணைக்கு உட்படுவது ஒருபுறம் இருக்க அவர் மீது குற்றச்சாட்டுக்கள் கூட வைக்கப்படவில்லை.

வாஷிங்டன் பிரத்தியேகமாக மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் மற்றும் “சர்வதேச நெறிகளை” உலக அரங்கில் செயல்படுத்த தனிச்சிறப்புடன் திட்டமிடுகின்றது என்ற இன்னைய கூற்றுக்களுக்கு நம்பகத்தன்மை வழங்க முற்படும் கபடமற்றவர்களுக்கு “சிலியை பாருங்கள்” என்று கட்டாயம் கூறவேண்டும்.

1973 சதியின் முக்கிய ஆண்டு நிறைவைப்போல், செய்தி ஊடகமும் போலி இடதும் அவற்றின் முக்கிய கவனத்தை லா மோனெடா ஜனாதிபதி அரண்மனை, சிலியின் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டு, குண்டுத்தாக்குதலுக்கு உட்படுகையில் இறந்துபோன சல்வடோர் அலெண்டேயின் விதி குறித்து முக்கிய கவனம் செலுத்துகின்றன.

ஆனால் அலெண்டேயை இன்பநிலையில் இருத்தும் முயற்சி, சிலிய பேரழிவு, அவருடைய மக்கள் ஐக்கிய அரசாங்கத்தின் பங்கு இல்லாமல் நடைபெற்றிருக்காது என்ற உண்மையை மறைப்பதாகும். இக்கூட்டரசாங்கம் அலெண்டேயின் சோசலிச கட்சிக்கும், ஸ்ராலிச சிலி கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் ஒரு பிரிவிற்கும் இடையேயான கூட்டாகும்.

அலெண்டே ஒரு சோசலிசவாதியோ அல்லது புரட்சியாளரோ அல்ல. அவருடைய அடிப்படை அரசியல் பங்கு சிலியில் சோசலிச புரட்சி நடைபெறாது நிறுத்தி வைத்து, சிலியத் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த எதிர்ப்பை அடக்கி வைத்து “சமூக அமைதியை” சுமத்தியதாகும். இது அமெரிக்கப் பயிற்சி பெற்ற சிலிய அதிகாரிகள் பிரிவின் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அலெண்டேயால் இராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட தளபதி பினோசே உட்பட அதன் தலைவர்கள் வெகுஜன தொழிலாளர் இயக்கத்தை ஒடுக்குவதை திறமையாக ஒழுங்கமைக்க ஜனாதிபதியின் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டனர்.

தொழிற்துறை மையங்கள் எனப்பட்டவற்றில் தொழிலாளர்களால் கையேற்கப்பட்ட ஆலைகள் மீண்டும் அவற்றின் வலதுசாரி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் மிகவும் போராளித்தனம் உடைய தொழிலாளர்களை பலியெடுத்தனர். அலெண்டே அரசாங்கத்தால் ஒப்புதல் கொடுக்கப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் ஆலைகளிலும் தொழிலாளர் புறநகரங்களிலும் பொலிஸ்-அரச மாதிரியான சோதனைகளை நடத்தப் பயன்பட்டது. இது வரவிருக்கும் இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஒத்திகை ஆகும். அதே நேரத்தில் இராணுவம் பாசிச பயங்கரவாதிகள் குழுக்களை ஆயுதமயமாக்கியது.

தொழிலாளர்களின் போராட்டங்களை மூலதனத்தின் தேவைகளுக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கும் அடிபணிய செய்த தங்கள் முயற்சிகளில் தம்மை அடிமைகளைப்போல் காட்டியது கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். இதுதான் இராணுவத்தை “சீருடையில் உள்ள மக்கள்” என்றும் பாராட்டியது.
இந்தக் காட்டிக் கொடுப்பிற்கு உதவியது பப்லோவாத திருத்தவாத அமைப்புக்களாகும். இவை பிடெல் காஸ்ட்ரோ, சே குவாரா போன்றோரின் குட்டி முதலாளித்துவ தேசியவாத கெரில்லா தந்திரோபாயங்களுக்கு மாறாக சுயாதீன புரட்சிகரத் தொழிலாள வர்க்க அணிதிரள்விற்கு போராடவேண்டும் என்ற ட்ரொட்ஸ்கிச முன்னோக்குடன் முறித்துக் கொண்டவர்களாவர்.

இந்த அரசியல் பிரிவுகளால் மிகப்பெரிய அளவில் துதிபாடப்பட்ட காஸ்ட்ரோ, சிலிக்கு மூன்று வார வருகை புரிந்து, அலெண்டேயின் “சோசலிசத்திற்கு சிலிய பாதையை” தழுவி, சிலியின் புரட்சி “அலெண்டேயால் மட்டுமே செய்யப்படும் வேறு எவராலும் இல்லை” என்று வலியுறுத்தினார். இதன் விளைவு தொழிலாள வர்க்கத்தை 1973 இராணுவ சதிக்கு முன் அரசியல்ரீதியாக இன்னும் நிராயுதபாணியாக்கியதுதான்.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சிலியில் நடக்கும் எதிர்ப்புரட்சி குறித்து நேரடியாக எச்சரித்து, சிலிய தொழிலாளர்களை தங்கள் நம்பிக்கையை சமூக ஜனநாயகவாதிகளினதும் ஸ்ராலினிஸ்ட்டுக்களினதும் மக்கள் முன்னணியில் வைக்க வேண்டாம் என்று கூறி, தங்கள் சொந்த சுயாதீன புரட்சிகர போராட்டத்தில் வைக்க வேண்டும் என்றும் கூறியது.

பலரும், குறிப்பாக ஸ்ராலினிஸ்ட்டுக்கள், இத்தகைய எச்சரிக்கைகளை உதறித்தள்ளி சிலியின் கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் நடைபெற்றுவந்த பாராளுமன்ற ஜனநாயகத்தை புகழ்ந்து “இது இங்கு நடக்காது” என வலியுறுத்தினர். அது முடியும், முடிந்தது என்பதுதான் வெளிப்படையாயிற்று.

சிலியின் கசப்பான படிப்பினைகள் இன்று சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு புதிய புரட்சிகரப் போராட்டக்காலத்தில் நுழைகையில் மிக முக்கியமாகிறது. முதலாளித்துவ ஆளும் வட்டங்களுக்குள் இது நன்கு அறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் எகிப்தில் இராணுவ ஆட்சி மாற்றத்திற்குப்பின், இரண்டரை ஆண்டுகால புரட்சிக் கொந்தளிப்பிற்கு பின், வோல்ஸ்ட்ரீட்ஜேர்னல் ஒரு தலையங்கத்தில் அதன் தீவிர  நம்பிக்கையாக “புதிய ஆளும் தளபதிகள் சிலியின் அகஸ்டோ பினோசேயின் வார்ப்பில் இருப்பர் என்று நம்புகிறோம்” என எழுதியது.

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் படிப்படியாக ஒரு பொலிஸ் அரசின் வடிவமைப்பை கட்டமைக்கிறது. அது அமெரிக்க குடிமக்களை காலவரையின்றி இராணுவக்காவலில் வைக்க, இலக்கு வைக்கப்படும் விரோதிகளை ஆளில்லா டிரோன் விமானதாக்குதல் மூலம் கொலை செய்யும் அதிகாரத்தை தனக்குதானே எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் இணைய தள தேடுதலிலும் பரந்துள்ள பாரிய NSA உள்நாட்டு ஒற்றாடல் செயல்முறைக்கும் தலைமை தாங்குகிறது. அமெரிக்க அரசாங்கம்தான் உலகெங்கிலும் இருக்கும் ஜனநாயக உரிமைகளின் முக்கிய விரோதி ஆகும். சிலியை போன்றே இங்கு “இங்கு இது நடக்காது” என்று கூறிக்கொள்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களாவர்.

இன்று உறுதியாகச் செய்ய வேண்டிய பணி, சிலியில் நான்கு தசாப்தங்களுக்கு முன் இருந்ததை செய்ய வேண்டியதே. அதாவது  தொழிலாள வர்க்கத்தினுள் உள்ள புரட்சிகர தலைமை நெருக்கடியை தீர்ப்பது என்பதே அது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம், போருக்கு எதிரான போராட்டம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சோசலிச தலைமையை ஒவ்வொரு நாட்டிலும் உருவாகவேண்டும் என்பதுடன் இணைந்துள்ளது. இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒவ்வொரு நாட்டிலும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதுதான்.