Réunion publique à Paris : Les 15 ans du World Socialist Web Site
பாரிஸில் பொதுக் கூட்டம்
உலக சோசலிச வலைத் தளத்தின் 15 ஆண்டுகள்
Back to screen version
இந்த ஆண்டு, இணையத்தில் மிக அதிகமாய் வாசிக்கப்படும் சோசலிச வெளியிடான உலக சோசலிச வலைத் தளத்தின் 15வது ஆண்டு ஆகும். முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த இதன் அன்றாட அரசியல் ஆய்வுகளும், வருணனைகளும், விவாதங்களும் நாள்தோறும் உலகெங்கும் பத்தாயிரக்கணக்கிலான வாசகர்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. இத்தளம், பிரெஞ்சு மொழி உள்ளிட்ட 15க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாள வர்க்கத்துள் ஒரு மார்க்சிச, சோசலிச கலாச்சாரத்தை மறுஸ்தாபகம் செய்வதும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதுமே உலக சோசலிச வலைத் தளத்தின் நோக்கமாகும். 75 ஆண்டுகளுக்கு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் பாரம்பரியங்களின் உருவடிவமாகும் இது. 1953 ஆம் ஆண்டில் இருந்து ஸ்ராலினிசம், சீர்திருத்தவாதம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் போலி-ட்ரொட்ஸ்கிசசத்தின் பல்வேறு வடிவங்கள் ஆகியவற்றில் இருந்து நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளை பாதுகாப்பதற்கான ஒரு நெடிய போராட்டத்தை நடத்தி வந்திருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் குரல் இது. இந்தப் போராட்டத்தின் செறிவான அரசியல் மற்றும் தத்துவார்த்த மரபுதான் உலக சோசலிச வலைத் தளத்திற்கு நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்த அதன் ஆழமான உட்பார்வையை வழங்குவதுடன், ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அத்தனை அரசியல் முகமைகளுக்கும் சமரசமற்ற குரோதத்தையும் தெரியப்படுத்துகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் முதல் இதழ் வெளியாகியதற்கு பிந்தைய இந்த 15 ஆண்டுகளில் சர்வதேச சூழ்நிலை அடிப்படையான மாற்றங்களைக் கண்டிருக்கிறது. உலக முதலாளித்துவம் 1930களுக்குப் பின் தனது ஆழமான நெருக்கடிக்குள் நுழைந்திருக்கிறது; சமூக சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது; ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் இப்போது சிரியா போர்களுக்குப் பின்னர் ஒரு புதிய உலகப் போருக்கும் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது; ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆட்படுகின்றன; விழிப்பூட்டியான எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியதைப் போல ஒரு ஓர்வெலிய வகை போலிஸ் அரசு நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது; அத்துடன் துனிசியா மற்றும் எகிப்தில் தொடங்கி, தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக மீண்டும் கால் வைத்திருக்கிறது.
முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடி ஒவ்வொரு அரசியல் போக்கினதும் உண்மையான நிறங்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. பல தசாப்தங்களாக போலி இடதுகளாகவோ அல்லது போலி-ட்ரொட்ஸ்கிசவாதிகளாகவோ காட்டிக் கொண்டு வந்திருந்த பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrière) போன்ற குட்டி முதலாளித்துவக் குழுக்கள் எல்லாம் இப்போது லிபியாவிலும் சிரியாவிலும் ஏகாதிபத்திய போருக்கான ஊக்குவிப்புக் கூட்டமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் மையமான பாத்திரத்தை நிராகரிப்பதில் இந்த அத்தனை போக்குகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. வர்க்கப் பதட்டங்கள் அதிகரிக்கும்போது வலது நோக்கி நகர்கின்ற நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளுக்காக அவை பேசுகின்றன.
பீட்டர் சுவார்ட்ஸ் கடந்த 15 ஆண்டுகளின் அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசுவார், அத்துடன் உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களை திறனாய்வு செய்வார். இவ்வாறு வரலாற்றை திறனாய்வு செய்கையில், ’போர் மற்றும் புரட்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டம்’ என்ற சமகால அரசியலின் மிக அடிப்படையான பிரச்சினை குறித்து அவர் பேசுவார்.
பிரதம பேச்சாளர்: பீட்டர் சுவார்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலர் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் அங்கத்தினர்.
ஞாயிறு, செப்டம்பர் 29,
பிற்பகல் 3 மணி
AGECA 177 rue de Charonne 75011 Paris
Métro : Alexandre Dumas (ligne 2), Charonne (ligne 9)
Bus : 76
Google maps
Agrandir le plan
|