சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு 

Kerry’s “blunder” delays, but does not end, Obama's drive to war

கெர்ரியின் பெரும் தவறு ஒபாமாவின் போர் முன்னெடுப்பை நிறுத்திவிடாது தாமதப்படுத்த மட்டுமே செய்யும்.

By Bill Van Auken 
10 September 2013

Use this version to printSend feedback

திங்களன்று ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள், சிரியாவுடனான போருக்கு வாஷிங்டனின் போலிக்காரணத்தை தக்க வைக்க பரபரப்புடன் முயன்றனர்; இது மாஸ்கோ மற்றும் டமாஸ்கஸ் இரண்டும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி மூலம் வெளிப்பட்ட தற்செயல் கருத்தான, ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி அதன் இரசாயன ஆயுதங்களை கையளித்தால் அமெரிக்க ஆக்கிரமிப்பை தவிர்க்க முடியும் என்ற கருத்தை வரவேற்றபின் நடந்துள்ளது.

திங்களன்று பிரித்தானிய வெளியுறவு செயலர் வில்லியம் ஹேக்குடன் லண்டனில் ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் CBS நிருபர் ஒருவரால், அமெரிக்கா சிரியா மீது திட்டமிட்டுள்ள போரை ஏதேனும் ஒருவகையில் நிறுத்த முடியுமா என்று கேட்டதற்கு கெர்ரி கூறினார்: “நிச்சயமாக. அவர் அவருடைய இரசாயன ஆயுதங்களை ஒன்றுவிடமால் சர்வதேச சமூகத்திடம் அடுத்த வாரம் ஒப்படைக்க வேண்டும். அனைத்தையும் தாமதமின்றி ஒப்படைக்கவுடம், முழுமையாக கணக்குக் கொடுக்கவும் வேண்டும். ஆனால் அவர் அதை செய்யப் போவதில்லை, அது நடக்கப்போவதில்லை என்பது வெளிப்படை.”

இத்திட்டத்தை கெர்ரி முற்றிலுமாக கைவிட்டபோதிலும், இது விரைவில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆல் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் சிரிய வெளியுறவு மந்திரி வலிட் அல் மொவல்லத்துடன் கூடிப்பேசிய பின்னர், “இரசாயன ஆயுதங்கள் மீது சர்வதேச கட்டுப்பாடு நிறுவப்படுவதால் அந்நாட்டின் மீது தாக்குதல்களை தவிர்க்க முடியும் என்றால், நாங்கள் உடனடியாக டமாஸ்கஸுடன் வேலைகளை ஆரம்பிப்போம்.” அவர், மாஸ்கோ அதன் சிரிய கூட்டாளிகளை, அனைத்து இரசாயன ஆயுதங்களையும் சர்வதேசக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்குமாறும், அவை அழிக்கப்படுவதற்கு உடன்படுமாறும், ஆயுதங்கள் தடை என்னும் சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்து இடுமாறும் கேட்கும் என்றார்.

இந்த முன்மொழிவு பின்னர் மோவல்லம் மற்றும் சிரிய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டது. “சிரியா, ரஷ்ய முன்மொழிவை சிரிய மக்களுடைய உயிர்கள் மீது கொண்டுள்ள அக்கறையினால், எங்கள் நாட்டின் பாதுகாப்பை ஒட்டி வரவேற்கிறது; ஏனெனில் அது ரஷ்ய தலைமையின் அறிவுடைமையை நம்புகிறது, ரஷ்யா எங்கள் மக்கள்மீது அமெரிக்க தாக்குதலை தவிர்க்க முயல்கிறது” என்று சிரிய வெளியுறவு மந்திரி ஓர் அறிக்கையில் கூறினார். இந்நிலைப்பாடு விரைவில் டமாஸ்கஸின் செய்தி நிறுவனமான SANA வில் எதிரொலித்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கி-மூனும் இத்திட்டத்தை அன்று பிற்பகலில் தான் திட்டமிடப்பட்டுள்ள இரசாயன ஆயுதங்கள் ஒப்புடைப்பு, அழிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்த திட்டங்கள் இயற்றிவருவதாகவும் பாதுகாப்புக் குழுவை அவற்றிற்கு ஒப்புதல் தருவதற்கு கூட்டுவதாகவும் அறிவித்தார்.
இத்தகைய வெளிப்படையான திருப்புமுனை, போரை தவிர்க்கும் வாய்ப்பு, குறைந்தது அமெரிக்க மக்களில் மூன்றில் இருவராவது போரை எதிர்ப்பது, உலகம் முழுவதும் மிகப்பெரிய பெரும்பான்மை போரை எதிர்க்கிறது என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுவது, ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் நடைமுறையால் ஒரு பேரழிவு எனத் தெளிவாகக் காணப்பட்டது.

ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி CNN இடம், கெர்ரியின் கருத்துக்கள் “ஒரு நினைவுச் சின்ன தவறினை” பிரதிபலிக்கிறது, “விவாதிக்கப்பட்டதில் இருந்து வெளியே உள்ளது”, அதுவும் ஜனாதிபதி பாரக் ஒபாமா காங்கிரசை பெரும் செய்தி ஊடக அழுத்தத்தின் மூலம் இராணுவ வலிமை பயன்பாட்டு தீர்மானத்திற்கு ஒப்புதல் பெற முயலுகையில் என்றார்.

வெளிவிவகாரச் செய்தித் தொடர்பாளர், கெர்ரி “வனப்புரையாக” மட்டுமே பேசினார் என்று வலியுறுத்தினார். ரஷ்யா மற்றும் சிரியா இதை எதிர்கொண்ட விதம் “தாமதப்படுத்தும் தந்திர உத்தி” என்று அவர் உதறித்தள்ளி; இது “ஆழ்ந்த அவநம்பிக்கையுடன்” கருதப்பட வேண்டும் என்றும், “அதையும் விட முக்கியமானது, சிரிய ஆட்சி இலக்குகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை பயன்படுத்த ஜனாதிபதிக்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுப்பதுதான்” என்றார்.
இந்த விடையிறுப்பு நிருபர்களிடம் இருந்து வினாக்களை, சிரியாவின் மீதான போர் என்பது அசாத் ஆட்சி என்ன செய்தாலும் “நடந்தே தீரும்” என்ற பொருளைத்தருமா, அமெரிக்கா “சிரியர்கள் அவர்கள் என்ன செய்தாலும் தண்டிக்குமா” எனக் கேட்க வைத்தது. மற்றொரு நிருபர் கெர்ரி “வெறுமே வெற்றுத்தனமாக பேசுகிறாரா, ரஷ்யர்களும் சிரியர்களும் வெற்றுத்தனத்தை வெளிப்படுத்தினரா” என்று கேட்டார்.
கெர்ரியின் “வனப்புரை திட்டமற்ற கருத்து” என்று நிருபர்கள் அவநம்பிக்கையுடன் விளக்கத் தொடங்கியதற்கு உத்தியோகபூர்வ ஆரம்ப விடையிறுப்பு இரசாயன ஆயுதங்கள் மற்றும் சிரிய ஆட்சி ஆகஸ்ட் 21 அன்று அவற்றைப் பயன்படுத்தியது என்பது ஆத்திமூட்டலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சொந்த கொள்ளையடிக்கும் போரை தொடர ஒரு போலிக்காரணம்தான் என்பதை அம்பலப்படுத்தியது.

ஒபாமா நிர்வாகம், ஆகஸ்ட் 21 தாக்குதல்கள் ஆட்சியுடன் பிணைந்துள்ளது என்பது குறித்து உறுதிப்பாடுகளையும் குற்றச்சாட்டுக்களையும்தான் கொடுத்துள்ளன. ரஷ்யா தன் சொந்த சான்றை, ஒரு முந்தைய இரசாயன தாக்குதல் மேற்கத்தைய ஆதரவுடைய மற்றும் அல்குவேடா தலைமையிலான சிரியாவை தாக்கும் போராளிகளான “எழுச்சியாளர்கள்” எனப்படுவோரால் நடத்தப்பட்டது என்பதற்கு அளித்தது; கடந்த மாத நிகழ்விற்கு இணையானவற்றையும் கூறியுள்ளது.

சமீபத்திய மாதங்களில் தொடர்ந்து இராணுவத் தோல்விகளை அடைந்த இந்த ஆட்சி எதிர்ப்புக் கூறுபாடுகள்தான் இத் தாக்குதலில் இருந்து ஆதாயம் பெறும்—இது ஒரு தூண்டுதலின் அடையாளங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது, தங்கள் சார்பில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு போலிக்காரணம் அளிக்க துல்லியமாக நடத்தப்படுவது.

திங்கள் இரவு PBS தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சார்லி ரோஸுடனான பேட்டியில், ஒபாமா நிர்வாகம் போருக்கு ஆதரவாக உள்ள அதன் கூற்றிற்கு “ஒரு சிறு சான்றுகூட அளிக்க” இயலவில்லை, ஆனால் சிரிய அரசாங்கத்தின் சொந்த படையினர்கள் இரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்று அசாத் வலியுறுத்தியுள்ளார்.

அவர், ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுக்களை, “கோலின் பவல் போருக்குச் செல்லுமுன் உலகின் முன் துணைக்கோள்கள் வழியே ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் பற்றி கூறிய பெரிய பொய்யுடன்” ஒப்பிட்டார்.  குறைந்தப்பட்சம் பவல் “பொய்யான ஆதாரங்களையாவது கொடுத்தார்”, கெர்ரியும் ஒபாமாவும் எதையும் கொடுக்கவில்லை.

திங்கள் பிற்பகுதியில், ஒபாமா தொலைக்காட்சி பேட்டிகளை முக்கிய அமெரிக்க தொலைக்காட்சி இணையங்களுக்கும் கேபிள் செய்தி நிலையங்களுக்கும் கொடுத்தபோது நிர்வாகம் அதன் வழியை மாற்றிக் கூறியது. போருக்கு பெரும்பாலான மக்களுடைய எதிர்ப்பு உள்ள நிலையில், அதன் சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்,  வெள்ளை மாளிகை AUMF ஐ காங்கிரஸ் மூலம் திணிக்க எதிர்கொண்டிருக்கும் கடின நிலையில், ரஷ்யா மற்றும் சிரியா, கெர்ரியின் “திட்டம் இல்லா தன்மையை” ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக அது இராணுவ ஆக்கிரமிப்பு என்னும் அச்சுறுத்தல் மூலம் அடையப்பட்ட போக்கு என்று அளிக்கப்பட வேண்டும்.

CNN இடம் பேசிய ஒபாமா, இரசாயன ஆயுதங்கள் பிரச்சினை சர்வதேச உடன்பாட்டின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் “என்பது என் விருப்பம்” என்றார். ஆனால் விரைவில் சேர்த்துக் கொண்டார்: “மாறாக, இராணுவ அழுத்தம் என்னும் நம்பிக்கைக்கு உரிய அழுத்தத்தை கொண்டு முன்னேறாவிட்டால், நான் காணவிரும்பும் உடன்பாட்டை உண்மையில் பெற முடியாது என்று கருதுகிறேன்” என்றார்.

இதேபோல் அவர் இப்பொழுது சிரியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கான அங்கீகாரத்தை காங்கிரஸ் கொடுப்பது இன்னும் முக்கியம் என Fox News  இடம் கூறினார். “உலோகத்தில் இருந்து மிதிப்பதை இப்பொழுது நிறுத்துவது கூடாது என்பது முக்கியம் என நினைக்கிறேன், அதுவும் நாம் கூறுபவற்றை அவர்கள் பொருள் உணர்ந்துள்ள நிலையில்” என்றார் ஒபாமா.

திங்கள்று வெளிப்பட்ட நிகழ்வுகள், அமெரிக்க படையெடுப்பை தவிர்ப்பதற்கு 2002 இறுதியிலும் 2003 தொடக்கத்திலும் அமெரிக்க எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக சதாம் ஹுசைன் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களை ஈராக்கிற்குள் அனுமதித்து இன்னும் கடுமையான ஆய்விற்கும் அனுமதித்தார், அந்த புஷ் நிர்வாகத்தின் உத்திகளைத்தான் இவை நினைவுபடுத்துகின்றன.

இறுதியில், ஆய்வாளர்களின் அறிக்கைகளான அவர்கள் பெரும் ஒத்துழைப்பை பெற்றனர் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதற்கான சான்றுகளைக் காணமுடியவில்லை என்பது உட்பட, அனைத்தையும் புஷ் நிர்வாகம் ஒதுக்கி வைத்தது. பேரழிவு ஆயுதங்களோ, பயங்கரவாதத்துடனோ எத்தொடர்பும் அற்ற நோக்கங்களை தொடர படையெடுத்தார்.

பொய்களை அடிப்படையாக கொண்ட போருக்கு அமெரிக்க மக்களின் பெரும் விரோதப்போக்கினால் அதிக அளவிற்கு பாதிப்புற்ற நிலையில் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆனால் ஏற்கனவே அதே பாதையில்தான் அதிகம் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு முன் பதவியில் இருந்தவரைப் போலவே, மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம் கொழிக்கும் மூலோபாய முக்கிய பிராந்தியங்கள், பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் இருப்பவற்றில் அமெரிக்க மேலாதிக்கம் என்னும் ஏகாதிபத்திய மூலோபாயத்தை தொடர பாசாங்குக் காரணங்களை கொண்டு போரைத் தூண்ட உறுதியாக உள்ளார். ஈராக்கையும்விட அதிக அளவில், சிரியாவிற்கு எதிரான போரில், ஈரான் மற்றும் ரஷ்யா என்னும் சிரியாவின் நட்பு நாடுகளுக்கும் எதிராக நோக்கம் கொண்டுள்ள இப்போர் பிராந்திய, ஏன் உலக இராணுவ மோதல் என்னும் அச்சுறுத்தலைக்கூட கொண்டுள்ளது.

ரஷ்ய-சிரிய இரசாயன ஆயுதக் களைதல் வாய்ப்பு மற்றும் அமெரிக்காவின் விடையிறுப்பு போர் அச்சுறுத்தலை குறைத்துவிடவில்லை. வரவிருக்கும் வாரங்கள், எத்தகைய சமாதான உடன்பாட்டையும் நெரித்துவிடும் அமெரிக்க முயற்சிகளைத்தான் காணும்; தேவையானால் மற்றொரு ஆத்திரமூட்டல், அல்குவேடா “எழுச்சியாளர்களால்” இராணுவ நடவடிக்கையை விரைவுபடுத்த எடுக்கப்படும்.

மற்றொரு இன்னும் பேரழிவு தரும் மத்திய கிழக்குப் போருக்கு எதிரான உண்மையான போர் எதிர்ப்பு இயக்கம், இரு பெரும் கட்சிகள் மற்றும் காங்கிரஸில் இருந்து சுயாதீனமாகவும் ஒபாமா நிர்வாகம், மற்றும் இராணுவ வாதம், சமுக சமத்துவமின்மை மற்றும் இடைவிடாத ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு ஆதாரமான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம், மாணவர்கள், இளைஞர்களை அணிதிரட்டி புத்துயிர்ப்படையச் செய்வதன் மூலமே நிறுத்தப்பட முடியும்.