ஆபத்தில் இருக்கும் எதிர்கால புயல் ஆயாய்ச்சி
By Bryan Dyne
6 November 2012
வானிலை மற்றும் சுற்றுச்சூழல் செயற்கைக்கோள்களின் தற்போதைய தலைமுறையின் முடிவினை அடுத்து, போதுமான செயற்கைக்கோள் காலநிலை காலநிலைப்பதிவுக்கு 10 முதல் 53 மாதங்கள் வரையிலான ஒரு இடைவெளி இருக்க சாத்தியமுள்ளதாக அரசாங்க கணக்கெடுப்பு வாரியம் மற்றும் வர்த்தகத் துறை இன் பொது மேற்பார்வையாளர் சமீபத்திய மாதங்களில் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூறாவளியின் பாதையை முன்கணிப்பதிலும் மற்றும் எங்கு மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டுமென்பதை முன்கணிப்பதிலும் சாண்டி சூறாவளி குறித்த செயற்கைக்கோள் கண்காணிப்புகள் முக்கியமாக இருந்த பட்சத்தில், இத்தகவல்கள் கடந்த இரு வாரங்களில் புதிய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
முதல் காலநிலை செயற்கைக்கோளான, பயன்பாட்டு தொழில்நுட்ப செயற்கைக்கோள் 1966இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் Verner E. Suomi இன் மின்காந்தவியல் (radiometry) ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் பின்னர், தேசிய கடல் மட்டும் வளிமண்டல நிர்வாகமான NOAA, வளிமண்டல கண்காணிப்பு தளம்போல வடிவமைக்கப்பட்ட, துருவ-சுற்றுவட்டப் பாதை செயல்பாட்டு சுற்றுச்சூழல் செயற்கைக்கோளை (Polar-orbiting Operational Environmental Satellite –POES-) அனுப்பியது.
வானிலை கணிப்புகளுக்காக மட்டுமல்லாமல், வறட்சிகளை கண்காணிப்பது, தாவரங்களின் வளர்ச்சி நிலைகளை கவனிப்பது, ஓஸோன் மட்டத்தை அளவிடுவது மற்றும் புவி வெப்பமயமாதலின் தாக்கங்களை கண்காணிப்பது உள்ளிட்ட, பூமியின் சுற்றுப்புறத்தின் நிலைமையை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காகவும் இது உடனடியாக அத்தியாவசியமான ஒன்றானது.
வெப்பமண்டல புயல்கள் மற்றும் சூறாவளிகள் போன்ற நீண்ட-கால காலநிலை அமைப்புகள் குறித்த தகவல், அடிப்படையில் துருவ செயற்கைக்கோள்களை பயன்படுத்தி சேகரிக்கப்படுகிறது. சிறிய புயல்கள் குறிப்பாக உள்ளூர் காலநிலை வடிவமைப்புகள் மற்றும் நிலப்பரப்பால் தீர்மானிக்கப்படுவதுடன், நிலம்-சார்ந்த வானிலை ஆராய்ச்சி நிலையங்களைப் பயன்படுத்தியே அவற்றைக் கண்காணிக்க முடியும். மாறாக, சூறாவளிகளின் தீவிரம், திசை மற்றும் ஆரம்பம் போன்றவை, பெருமளவு கடலின் அடிப்பரப்பு நீரின் ஓட்டம், புவி சுழற்சியால் உருவாகும் வளியோட்டங்கள், உலக காற்றோட்டத்தில் றொக்கி மலைத்தொடர்களின் தாக்கங்கள் மற்றும் உலக காலநிலையால் நிலையான உருவாக்கப்படும் இயக்கசக்தி போன்ற நீண்டகால காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
இந்த அம்சங்கள் அனைத்துக்கும் காரணமான துல்லியமான தகவல்களை பெற துருவ செயற்கைக்கோளிலிருந்து தொடர்ச்சியான தகவல்கள் தேவை. அவை 14 சுற்றுப்பாதைகளில் ஒரு நாளைக்கு இருமுறை பூமியின் ஒட்டுமொத்த மேற்பரப்பையும் கண்காணிக்கின்றன. இது சூறாவளியின் போக்கு திசை மற்றும் ஆற்றலைக் முன்கூட்டி கணிப்பதற்கு தேவைப்படும் தரவுகளைக் கொடுகிறது.
சேண்டி புயல் விஷயத்தில், அதைத் தொடர்வதற்காக பயன்படுத்தப்பட்ட சான்டி சூறாவளியை பொறுத்தவரையில் அதை கண்டுகொள்ள தேவையான தகவல்களில் 84 சதவீதம் துருவ செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டது.
POES தலைமுறை செயற்கைக் கோள்களில் சமீபத்தியது, எதிர்பார்க்கப்படும் மூன்று வருட வாழ்க்கைக்காலத்துடன் 2009 பிப்ரவரியில் ஏவப்பட்டது. NOAA மற்றும் பாதுகப்புத்துறையின் ஒருங்கிணைந்த திட்டமான, தேசிய துருவ-சுற்றுவட்ட பாதை செயல்பாட்டு சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் அமைப்பு (NPOESS) என்று சொல்லப்படும் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்கள், 2002ல் அபிவிருத்திசெய்யப்பட ஆரம்பித்தன. ஆயினும், ஆரம்பகட்ட தாமதம் மற்றும் திட்ட செலவினை 15 பில்லியன் டாலர்களைவிட இரட்டிப்பாகும் கூடுதல் செலவுகளாலும் அம்முயற்சி 2010ல் கைவிடப்பட்டது.
பின்னர், இணை-துருவ செயற்கைக்கோள் அமைப்பு (JPSS) எனும் இன்னொரு துருவ செயற்கைக்கோளுக்கு NOAA முயற்சிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இவ்வாண்டு தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை தன் சொந்த அமைப்புக்காக வைத்திருந்த எந்த திட்டத்தையும் நிராகரித்தது. ஆயினும், புதிய திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முந்தைய இடைவெளியின் விளைவாக, NOAA விற்கு தரவுகளை சேகரிப்பதற்கான முதல் JPSS செயற்கைக்கோள் 2018 மார்ச்சில் தயாராக இருக்கும். இதில் மேலும் தாமதம் இருக்காது என்று கருதப்படுகிறது.
ஒரு இடைவெளியை ஈடுசெய்யும் நடவடிக்கையாக, ஆரம்பத்தில் NPOESS இற்கான ஒரு பரிசோதனைத் திட்டமாக இருந்த, Suomi தேசிய துருவ-சுற்றுவட்ட பாதை கூட்டினை (Suomi NPP) NOAA தொடக்கியது. பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களால் குறிக்கப்பட்ட காலநிலை அளவீடுகளின் தொடர்ச்சியினை ஊர்ஜிதம் செய்வதே அதன் பணிநோக்கமாகும். ஆரம்பித்த பின்னர் அதன் அளவீட்டுகருவிகளில் மாறுபாடுகள் கண்டறியப்பட்டதாலும் சூறாவளிகளை தடம்காண்பதற்கு பயன்படும் NPP சேகரிக்கப்பட்ட தகவல்களை முழுமையாக மதிப்பாராய்வது 2013இன் பிற்பகுதி வரையில் எதிர்பார்க்கப்படவில்லை.
ஆயினும், JPSS-1 ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ள முழுமையான ஐந்து மாதங்களுக்கு முன்னதாக மற்றும் அது தகவல்களை மதிப்பாராய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள ஏழிலிருந்து பத்து மாதங்களுக்கு முன்னதாக, 2016 அக்டோபர் வரை மட்டுமே Suomi NPP செயல்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் மற்றும் மிகவும் பழைய செயற்கைக்கோள்களின் தளத்தினால் செயல்படுத்த முடியாது என்று NOAA மற்றும் NASA ஏற்கெனவே தீர்மானித்திருக்கும் செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்புறத்தினை கண்காணிப்பதிலும் ஒரு இடைவெளி ஏற்படுவதற்கும் இது காரணமாகும். Suomi NPP தோல்வியுற்றாலோ மற்றும் / அல்லது JPSS-1 யின் துவக்கம் தாமதமானாலோ, செயற்கைக்கோள்கள் பூமியைக் கண்காணிக்கமுடியாத காலத்தின் அளவு 53 மாதங்களாக அதிகரிக்கக்கூடும் என்கிற கவலையும் இருக்கிறது.
துருவ செயற்கைக்கோள் பதிவுகளின்றி, சாண்டி புயலின் தாக்கம் குறித்து துல்லியமாக முன்கணிக்கப்பட்டு மாநில மட்டும் உள்ளூர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடப்பட்ட, நான்கு நாள் முன்கணிப்பு இருந்திருக்காது. மேலும் ஆர்க்டிக் காற்று, உயர்மட்ட கடல் வெப்பநிலை மற்றும் மேற்கிலிருந்து சூறாவளி – போன்ற காலநிலை அமைப்புக்களின் சங்கமத்தை சரியாக கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க முடியாது.
மிகச்சிறப்பாக, சாண்டி சூறாவளி தரைத் தளத்திலிருக்கு காலநிலை அவதான நிலையங்களினால் மட்டுமே கண்காணித்திருந்தால், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு தயாராவதற்கு ஒரு நாள் அவகாசம் மட்டுமே கிடைத்திருக்கும். முன்கணிப்பாளர்களால் உதாரணமாக, பேட்டரி பார்க்கில் நிகழ்ந்த பெரும் புயல்காற்று போன்றவற்றை முன்கணித்திருக்க முடியாது. மணல் மூட்டையை அடுக்குவது மற்றும் மக்களை வெளியேறுவது போன்ற ஆயத்தங்களை முறையாக செயல்படுத்துவதற்கு தேவையான நாட்கள் பயனின்றி விடப்பட்டிருக்கும்.
காலநிலை மண்டலத்தில் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தினை எடுத்துக் கொண்டால், சூறாவளிகளை செயற்கைக்கோள் மூலமாக கவனிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. Oceanography இதழில் ஒரு கட்டுரை, ஆர்க்டிக் பனி அதிகளவில் உருகுவது அட்லாண்டிக் வேகமான காற்றோடைகள் எப்படி தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதை விவாதிக்கிறது. இந்த உருகலின் காரணமாக ஆர்க்டிக் காற்று ஒரு சூறாவளியின் போது கீழிறங்கி வந்து வீசுகிறது என்றால், அது உண்மையில் சூறாவளியின் ஆற்றலை அதிகரிக்கிறது, அதுதான் சாண்டி சூறாவளியிலும் நிகழ்ந்தது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் வழக்கமான நிகழ்வாவதை அனைத்து ஆதாரங்களும் விளக்குகின்றன.
பூமியின் காலனிலை-சார்ந்த நிகழ்வின் அதிக பரந்தளவிலான தோற்றத்தையும் துருவ செயற்கைக்கோள்கள் கண்காணிக்கின்றன: அவற்றுள் சில… துருவ கடல் பனி மட்டம், காட்டுத்தீ, ஓஸோன் குறைவு, கடல் வெப்பநிலை, வறட்சி நிலைமைகள், கடல் அலை உயரம், உலக அளவிலான வளிமண்டல ஓட்டம் மற்றும் உலக தாவர வளர்ச்சி மற்றும் நிலப் பயன்பாடு போன்றவை. புவி வெப்பமயமாதலின் நீண்டகால தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவை முக்கியமாக உள்ளன.
பூமியின் காலநிலையை கண்காணிப்பதற்காக, முழுமையாக செயல்படும் ஒரு செயற்கைக்கோள் அமைப்பினை ஆரம்பிப்பதில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அரசியல்ரீதியானவையே அல்லாது விஞ்ஞான அல்லது தொழில்நுட்ப பிரச்சனைகளல்ல. சோவியத் யூனியனின் வீழ்ச்சியிலிருந்து, அடிப்படை விஞ்ஞான ஆரய்ச்சிக்கான பொது நிதியின் மெதுவான அரிப்புக்கு ஏற்ப, அமெரிக்க பாதுகாப்புத்துறை வரவு-செலவு மற்றும் வோல் ஸ்ட்ரீட் சம்பளங்களை ஊதிப்பெரிதாக்குவதற்காக துருவ காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயற்கைக்கோள்கள் முக்கியத்துவத்தினை இழந்துள்ளன.
ஆரம்பத்திலிருந்தே, பூமியின் உயிரின கோளத்தை ஆராய்ச்சி செய்வதற்கான சிறந்த கருவிகளாக துருவ செயற்கைக்கோள்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முழுமையாக செயல்படும் துருவ-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள், புயலுக்கு தயாராவது மற்றும் ஓசோன் குறைவினை கவனிப்பது முதல் புவி வெப்பமயமாதலை கண்காணித்து வருவது வரையில், பூமியின் காலநிலையின் அனைத்து கோணத்தையும் புரிந்துகொள்வதில் முற்றிலும் அவசியம். இதுபோன்ற சமூகரீதியில் முக்கியமான திட்டங்கள் கவனத்திற்கெடுக்கப்படாதது முதலாளித்துவ சமூகத்தில் பிற்போக்குத்தனத்தை மட்டுமல்லாது ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான தேவையையும் எடுத்துக்காட்டுகிறது. |