World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French parliament debates war against Syria

சிரியாவிற்கு எதிரான போர் குறித்து பிரெஞ்சுப் பாராளுமன்றம் விவாதிக்கிறது

By Alex Lantier 
5 September 2013

Back to screen version

சிரியா மீதான அமெரிக்க தலைமையிலான போர் திட்டங்களை விவாதிக்க, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS)  பிரதம மந்திரி Jean Marc Ayrault தலைமையில் புதன் அன்று செனட் மற்றும் தேசிய பாராளுமன்றம் ஒரு கூட்டு அமர்வை நடத்தியது. சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்திற்குப்பின் வாக்களிக்கவில்லை; இது முற்றிலும் ஆலோசனைக் கூட்டம் ஆகும்; பிரெஞ்சு ஜனாதிபதி பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் போருக்குச் செல்லும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் நடைபெற்றது போல் பிரெஞ்சுப் பாராளுமன்றமும் சிரியப் போர் குறித்து வாக்களிப்பதற்கு மீண்டும் அழைக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை.

90 நிமிட குறுகிய பாராளுமன்ற விவாதத்தில்கூட, சிரியா மீதான இரண்டு ஆண்டுகால பினாமிப் போரில் பிரான்சின் பங்கை ஆதரிக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் இடையே கூட, பாரிசின் போர் பற்றிய வாதத்தில் இருந்த பெரும் முரண்பாடுகள் வெளிப்பட்டன. இது போரை, கூறப்படும் இரசாயனத் தாக்குதல்கள் எனப்படுவதற்காக ஒரு சில தாக்குதல்கள் உள்ள போர் மூலம்  “தண்டித்தல்” எனச் சித்தரிக்கப்பட்டாலும், பொய்களை அடிப்படையாக அமெரிக்கத் தலைமையிலான பெரிய அளவுப் போரில் இளைய பங்காளியாக பாரிஸ் கையெழுத்திட்டுள்ளது, இது சர்வதேச சட்டம் மற்றும் பொதுமக்கள் கருத்தை மீறி தொடக்கப்பட உள்ளது. மக்களில் முற்றிலும் 64% முன்னாள் காலனியான சிரியா மீது பிரெஞ்சு தாக்குதலை எதிர்க்கின்றனர்.

விவாதத்தை தொடக்கிய Ayrault அறிவித்தார்: “நாம் பரிசீலித்து வருகின்றன நடவடிக்கை கூட்டு முறையில் நன்கு சிந்திக்கப்பட்டது. இது தொடரும் கணிசமாக இலக்கு வைக்கப்பட்டுள்ள நோக்கங்களுடன் உறுதியாகவும், விகிதத்திற்குட்பட்டும் இருக்கும். தரையில் பூட்ஸ்களை வைக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. [சிரிய ஜனாதிபதி பஷர்] அவர் பிரான்ஸை நேரடியாக அச்சுறுத்த தயக்கம் காட்டாததால், அசாத் நீங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

போருக்கு உந்துதல் குறித்த கூடுதல் போக்குகள் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறுவதாக உறுதியளித்து அவர் கூறினார்: “எப்படியும் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டபின்தான் இறுதி முடிவு எடுக்கப்பட முடியும்.”

Ayrault அரசாங்கத்தின் போரை நடத்த கையாளும் முயற்சி, இரசாயன ஆயுதங்கள் பயன்பாட்டின் மீதான தடையை செயல்படுத்துவதற்காக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்பது முற்றிலும் மோசடித்தனமான பேச்சாகும். பிரான்ஸ் ஒரு “தொடர்ச்சியான”, பாரிய வான் தாக்குதல்களுக்கு திட்டம் இட்டுள்ளது; அதன் இலக்கு சிரியாவில் ஆட்சி மாற்றம் ஆகும். அமெரிக்க காங்கிரசில் வரவிருக்கும் வாக்கு வரை போரைத் தொடக்க அது காத்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் இப்போர் பிரெஞ்சு இராணுவத் திறன்களுக்கு அப்பாற்பட்டதாகும். பென்டகன் ஒன்றுதான் சிரிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடக்கூடிய இராணுவ வலிமையை கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் போருக்கு மக்கள் எதிர்ப்பு, குறிப்பாக பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் பாராளுமன்றத்தில் ஒரு ஆதரவுத் தீர்மானத்தை இயற்றுவதில் தோல்வி அடைந்த பின்னரும், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா காங்கிரசில் வாக்கு பெறுவது குறித்து மனத்தை மாற்றிக் கொண்டதை அடுத்தும், பிரெஞ்சு அரசியல் நடைமுறையை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கன்சர்வேடிவ் எதிர்க்கட்சியும், ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) தலைமையிலான இடது முன்னணியும் சோசலிஸ்ட் கட்சி (PS) இன் போர்க்கொள்கைகள் குறித்து தந்திரோபாய ரீதியான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

UMP எனப்படும் மக்கள் பெரும்பான்மைக்கான ஒன்றியத் தலைவர் Jean-François Copé இன் நெருக்கமான நண்பரான கிறிஸ்டியான் ஜாக்கோப், ஐ.நா. ஆணை மற்றும் பாராளுமன்ற வாக்கு போருக்கு தேவை என்று அழைப்புக் கொடுத்து, பிரான்ஸ் “ஒரு இராஜதந்திர, இராணுவ இடர்பாட்டில் மேலே செல்ல முடியாத நிலையில் இருப்பதாக” கூறினார்.

ஜாக்கோப்பின் குறைகூறல்கள், பிரான்ஸ் வாஷிங்டனுக்குப் பின்னே செல்கிறது என்பதை எதிரொலித்து, “அமெரிக்க காங்கிரஸ் வாக்களிக்கும் வரை ஆயுதங்களை தொடமால் காத்திருப்பது ஒன்றும் பிரான்சின் பங்கு அல்ல” என்றார்.
சிரிய இரசாயனத் தாக்குதல்கள் எனக் கூறப்படும் உளவுத்துறை வாத நிகழ்வில் பங்கு பெற்ற UDI இன் Jea-Louis Borloo கூறினார்: “நிரூபணம் இல்லாமல் தலையீடு செய்வதை நாம் பரிசிலக்கலாமா? கூடாது! உங்களுக்கு நம்பிக்கை வேண்டும் என்றால், மறுக்க முடியாத நிரூபணம் தேவை.”

போர்லோவின் கருத்து, பாரிஸ், சிரிய ஆட்சிக்கு எதிரான அதன் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்க சான்றுகளை கொண்டிருக்கவில்லை, பொய்களின் அடிப்படையில் சட்டவிரோதப் போரை தொடக்க தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனினும், போர்லோ அத்தகைய போருக்கு ஐ.நா. வின் உத்தரவைப்பெற இயலும் என்றும் தெரிவிக்கிறார்; அதேபோல் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் முடிவைக் கடக்கும் வகையில் ஐ.நா. பொது மன்றத்திலும் வாக்குப் பெறலாம். அங்கு ரஷ்யா, சீனா என்னும் சிரியாவின் நட்பு நாடுகள் தடுப்பதிகாரத்தைக் கொண்டுள்ளன.

இடது முன்னணிக்காக பேசிய, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) பிரதிநிதி André Chassaigne, PS உடைய போர்க் கொள்கையை, பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் முழு இழிந்தன தன்மை மற்றும் ஏமாற்றுத்தனத்தில் வெளிப்படுத்திக் காட்டினார். Chassaigne, PS ஐயும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டையும் சிரியாவில் உள்ள “அவசரமான மனிதாபிமானத் தேவை நிலைமை மற்றும் மாற்று விருப்பங்கள்” கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தலையீட்டைத் தான் எதிர்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய Chassaigne, “ஆம், பிரான்சிற்குச் செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால் மக்களுடைய நலன்களின் பேரில்தான்! போர் என்னும் பெரும் குழப்பம் மக்களுடைய நலன்களில் இல்லை. அது ஜிஹாதிஸ்ட்டுக்களிடம்தான் என்று உள்ளது” என்றார்.

அவர் மேலும் கூறினார்: “சமாதானத்திற்கு நாம் கொண்டுள்ள ஈடுபாடு, நம்முடைய பொறுப்புணர்வை நீக்கிவிடச் சொல்லவில்லை. இப்படித்தான் சிரிய மக்களுடனான நம் ஒற்றுமை உணர்வு வெளிப்பாட்டைக் காண வேண்டும்.... “நம் பொறுப்பு குடிமக்களைக் காத்தல் ஆகும்.”, சிரிய மக்களுடனான நம் ஒற்றுமை உணர்வு முதலில் மனிதாபிமான உதவிக்கு கணிசமாக பங்கைக் கொடுப்பதில் வழிநடத்துவதாக இருக்க வேண்டும்.”
ஜிஹாத்திசத்திம், வன்முறை மற்றும் இராணுவத் தலையீட்டிற்கு Chassaigne உடைய பாசாங்குத்தன எதிர்ப்பு ஒரு மோசடி ஆகும்; இது சிரியப் போரில் பாரிஸ் தலையீட்டிற்கு PCF உடைய ஆதரவை மறைக்கும் வடிவமைப்பை கொண்டது. பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் PCF ம் சிரிய இராணுவத்திற்கு எதிராக, சிரிய ஜிஹாத்திச போராளிகளுக்கு “மனிதாபிமான உதவி” என்ற மறைப்பில் ஆயுதங்களை வழங்க குறிப்பாக அரசியல் ரீதியாக ஆதரவைக் கொடுத்துள்ளன.

பாரிஸில் வசிக்கும் ஒரு சிரிய ஸ்ராலினிஸ்ட்டான மிசேல் கிலோ ஊடாக பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF), சிரியாவில் உள்ள ஏகாதிபத்திய ஆதரவுடய ஜிஹாத்திஸ்ட்டுக்களுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டுள்ளது, PCF  இன் நாளேடான L’Humanaite  இல் முறையாக பேட்டி காணப்பட்டு, சிரியாவின் “வரலாற்று ரீதியான எதிர்ப்பாளர்” என்று பாராட்டப்படுகிறார்.  அல் குவேடா பிணைப்புடைய போராளிக்குழுவான, அல் நுஸ்ரா முன்னணியுடன் கிலோ நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார், இது பிரான்சின் அரபு கூட்டாளிகள் மூலம் நிதி பெறுகிறது; இதன் கொலை படைகள் வட-கிழக்கு சிரியாவை அதிகம் கட்டுப்படுத்துகின்றது.

பிரான்ஸ் 24 இல் பெப்ருவரி மாதம் நடந்த பேட்டி ஒன்றில், அவர் இன்னும் கூடுதலான ஆதரவு அல் நுஸ்ராவிற்குக் கொடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். “தீவிர வாதிகளைப் பற்றிப்பேசி மக்களை அச்சுறுத்தல் செய்யும் தவறான செயல்களை நிறுத்தங்கள். “நான் சிரியா சென்றிருந்தேன். அல்நுஸ்ரா முன்னணியினர், Brigage of Free Syrian Men அமைப்பினரையும், நீங்கள் அடிப்படைவாதிகள் என்று கூறுவோரையும் பார்த்தேன். ஆனால் நான் ஒரு கிறிஸ்துவன், அவர்கள் என்னுடன் தோள்மீது கைபோட்டனர், கட்டிக்கொண்டனர், கெளரவித்தனர்.”