சிரியாவில் யுத்தம் செய்வதற்காக பொய்கள் மீது புனையப்பட்ட உளவுத்துறை வாதத்தை பிரான்ஸ் வெளியிடுகிறது
By Alex Lantier
3 September 2013
நேற்று பிரான்சின் உளவுத்துறை ஒரு சிரத்தையில்லாத எட்டு பக்க அறிக்கையை சிரியவுடன் யுத்தம் செய்வதற்காக வெளியிட்டது; அதே நேரத்தில் சோசலிஸ்ட் கட்சி (PS) பிரதம மந்திரியான Jean-Mark Ayrault பிரான்சின் வலதுசாரி எதிர்க் கட்சிகளுடன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் போர் முனைப்பிற்கு ஆதரவு பெற அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப் பேச்சுக்களை நடத்தினார்.
ஹாலண்டின் உளவுத்துறை வாதம் ஏற்கனவே சிறுமைப்பட்டுவிட்ட பொய்கள், பொருத்தமற்ற வாத முடிவுகள் மற்றும் ஆதாரமற்ற கூற்றுக்கள் இவைகளின் தொகுப்பாகும். இதை ஆராய்வது என்பது ஹாலண்டின் சிரிய ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோனுடையதைப் போல் ஆதாரமற்றவை என்பதைத் தெளிவுபடுத்துகிறது; காமெரொன் கடந்த வாரம் சிரியாவிற்கு எதிராக போரை நடத்த பாராளுமன்றத்தின் இசைவைக் கேட்டபோது அவமானகரமான தோல்வியொன்றை அடைந்தார்.
இந்த ஆவணத்தின் மத்திய கூற்று “குறிப்பாக சரின் வாயுவை, தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராகவே மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களில், குறிப்பாக ஏப்ரல் 2013ல் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார். இன்று எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத்துறைத் தகவல்கள் ஆகஸ்ட் 21, 2013 அன்று சிரிய ஆட்சி தாக்குதல்களை டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதிகள் சிலவற்றில், எதிர்த்தரப்பினர் வசமிருக்கும் இடங்களில், மரபார்ந்த ஆயுதங்கள் மற்றும் பாரிய இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தியது என்பதுதான்.”
அசாத் ஆட்சி இரசாயன ஆயுதங்களை சரகெப், ஜோபரில் ஏப்ரல் மாதம் பயன்படுத்தியது என்பது ஏற்கனவே ஐ.நா. ஆய்வாளர் கார்லா டெல் போன்டேயினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மே மாதம், சிரியத் தளத்தில் ஐ.நா. நடத்திய விசாரணைகளை ஒட்டி அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்புத்தான் இரசாயன ஆயுதப் பயன்பாட்டிற்குப் பொறுப்பு என்று அவர் கூறினார். (பார்க்கவும்: “UN says US-backed opposition, not Syrian regime, used poison gas”). ஒரு தனி நிகழ்வில், துருக்கிய அதிகாரிகள் சிரிய எதிர்த்தரப்புப் போராளிகள் துருக்கியின் சரின் வாயுத் தொகுப்பை வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
பிரெஞ்சு வாதம் இந்த கண்டறிதல்களைக் குறிப்பிடவும் இல்லை, மறுக்கவும் இல்லை; வெறுமனே அல் குவேடா பிணைப்புடைய சக்திகள், அதனுடைய பினாமிகளிடையே உள்ளவைதான் ஏப்ரல் மாதமும் ஆகஸ்ட் மாதமும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்னும் சான்றை மூடி மறைக்கிறது.
சிரிய இரசாயன ஆயுதப் பிரிவுகளின் கட்டளை கட்டமைப்பு மற்றும் சேர்கை குறித்த நான்கு பக்க விவரங்களை கொடுத்தபின் —இது அசாத் உண்மையில் அவற்றைப் பயன்படுத்தினார் என்பதைக் காட்ட எதையும் கொண்டிருக்கவில்லை— அந்த வாதம் கூத்தாவில் ஆகஸ்ட் 21 நடைபெற்றதாக கூறப்படும் தாக்குதலுக்கு திரும்புகிறது. “47 மூல காணொளிகள்” இன்னும் “பிற சுயாதின மதீப்பீடுகள், அதாவது எல்லையற்ற மருத்துவர்கள் அமைப்பு” ஆகியவற்றை மேற்கோளிட்டு, அது கூத்தா நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சிரிய இரசாயனத் தாக்குதலுடன் இயைந்துள்ளதாக தெரிவிக்கிறது. “பல பங்காளிகளிடமிருந்து வந்துள்ள நம்பிக்கைக்கு உரிய உளவுத்துறை தகவல்கள்” இரசாயன ஆயுதங்கள் சிரிய ஆட்சித் தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதி என்பதையும் மேற்கோளிடுகிறது.
“சிரிய எதிர்த்தரப்பில் எந்தக் குழுவிற்கும் தற்பொழுது இத்தகைய ஆயுதங்களை சேகரித்துப் பயன்படுத்தும் திறனில்லை; அதுவும் டமாஸ்கஸில் ஆகஸ்ட் 21, 2013 இரவில் பயன்படுத்தப்பட்ட அளவுகளில்” என்று உறுதியாகக் கூறுகிறது.
இக்கூற்றுக்கள் எவற்றிலும் நம்பகத்தன்மை இல்லை. ஆகஸ்ட்டில் முதலில் இந்த வாதம் எதிர்த்தரப்பு படைகள், இரசாயனத் தாக்குதலுக்கு டமாஸ்கஸ்தான் பொறுப்பு என்ற கூற்றுக்கள் வந்தபின் வெளியிடப்பட்டன. அவற்றைப் பற்றி வாதம் குறிப்பிடவும் இல்லை. (பார்க்கவும்: “Report links US-backed Syrian opposition to Ghouta gas attack”) இதே போல் இந்தக் காணொளிகள் அல்லது இவற்றைக் கொடுத்த “பங்காளிகள்” குறித்த ஆதாரங்களை பற்றிய தகவல்களையும் கொடுக்கவில்லை.
இந்தப் “பங்காளிகள்”, CIA மற்றும் சௌதி ஆட்சி அல்லது அல் குவேடாவுடன் பிணைந்துள்ள சிரிய சக்திகளாக இருக்கலாம்—இவைகள் அனைத்தும் சிரியாவுடன் போரைத் தூண்டும் சொந்த நலனைக் கொண்டவை, பெரும் நிகழ்வுகள் குறித்து பொய்கள் கூறிய வரலாறும் உண்டு.
எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பைப் பொறுத்தவரை, அது ஒரு “சுயாதீனமான ஆதாரம்” எனக் கூறப்படுவதற்கில்லை. அமெரிக்க உளவுத்துறையுடன் அது ஒரு நீண்ட வரலாற்றை கொண்டது—குறிப்பாக 1980களில் அது அமெரிக்க நிதிகளைப் பெற்று ஆப்கானிய முஜாஹிதீனை வளர்க்க உதவியது; அது சோவியத் ஒன்றியத்தை எதிர்த்து அல் குவேடாவின் முன்னோடிகளுடன் இணைந்து போராடியது. இதன் முன்னாள் தலைவர் ரோனி ப்ரௌமன், இன்னும் மேற்பார்வைக் குழுவில் இருப்பவர், சிரிய வான் தாக்குதல்கள் குறித்து Le Monde இல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
Ayrault உடன் நேற்று வலதுசாரி அரசியல்வாதிகள் நடத்திய பேச்சு பற்றிய குறிப்புக்கள், பாரிஸ் அதனுடைய முன்னாள் காலனிக்கு எதிரான போர்ப் பிரச்சாரத்தை பொய்கள், மற்றும் இல்லாதை உருவாக்குவதை அடித்தளமாக கொண்டு நடத்துகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Ayrault உடன் பேசியபோது இரகசிய உளவுத்துறைத் தகவல்களை கேட்டபின் அரசாங்கத்தின் போருக்கான வாதத்தை விளக்கிய வலதுசாரியான Jean Lous Borloo கூறினார்: “இது ஒரு விதண்டாவாதம்தான், சான்று அல்ல”. ஹாலண்ட் நிர்வாகம் போருக்குத் தக்க காரணத்தைக் கொண்டிருக்கவில்லை என்று வனப்புரையாக ஒப்புக் கொண்டாலும், போர்லூ ஹாலண்டின் போர் முனைப்பை எப்படியும் காப்பாற்றி சமாளிக்கும் வகையில், “ஐ.நா. உத்தரவு ஒன்று அல்லது பாராளுமன்றத்தில் வாக்கு” என்பது சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய போரை நெறிப்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்தார்.
PS உடைய போர் முனைப்பு முழு அரசியல் ஸ்தாபனத்தின் திவால்தன்மையை நிரூபிக்கின்றது. ஹாலண்ட் நிர்வாகம் மட்டுமில்லாமல், பிற்போக்குத்தன குட்டி முதலாளித்துவ “இடது” குழுக்களான இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவையும் இப்பெரும் குற்றங்களில் பங்கு கொண்டவைகள். இக்கட்சிகள் ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட ஆதரவு கொடுத்தவைகள், “புரட்சியின்” ஒரு பகுதியாக சிரிய எதிர்த்தரப்பு சக்திகளை CIA மற்றும் பிரெஞ்சு உளவுத்துறையுடன் இணைந்து செயல்படவும் ஆதரவு கொடுத்தன. (பார்க்கவும்: “Gilbert Achcar seeks to cover up his support for Middle East wars”).
சிரியாவில் ஒரு ஏகாதிபத்திய பினாமிப் போருக்கு இவைகள் ஆதரவு கொடுத்தன; அது இப்பொழுது நேரடி பிரெஞ்சு-அமெரிக்க தலையீடாக விரிவடையும் அச்சுறுத்தலையும், ஒரு பரந்த பிராந்தியப்போராகும் தன்மையையும் அச்சுறுத்துகிறது. அத்தகைய போர் —இதற்கு முன் ஆப்கானிய, ஈராக் போர்களைப் போல்— நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்களைப் பறிக்கும். போருக்கான பிரச்சாரம் மக்களுடைய பரந்த எதிர்ப்பை மீறி நடக்கிறது. திங்கன்று நடந்த கருத்துக் கணிப்புக்கள் பிரான்சில் 64 சதவிகித மக்கள் போரை எதிர்க்கின்றனர், இது வியாழனிலிருந்து 5% வரை அதிகமாகி உள்ளது என்பதைக் காட்டுகிறது.
Ayrault நேற்று மாலை பிரெஞ்சுப் பாராளுமன்றம் புதனன்று கூடுகையில் போர் குறித்து வாக்களிக்காது என்று குறிப்பிட்டார். “வாக்கு தேவையா என்பதை முடிவெடுப்பது குடியரசின் ஜனாதிபதியின் பொறுப்பு... புதனன்று விவாதம் இருக்கும், ஆனால் வாக்களிப்பு இருக்காது” என்றார் அவர்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் அதிர்ச்சிதரும் வகையில் காமெரோன் தோல்வியுற்றது போல் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்னும் அச்சத்தைத்தான் பிரதிபலிக்கிறது. அமெரிக்க காங்கிரஸில் என்ன நடக்குமோ என்னும் கவலையும் உள்ளது. ஒபாமா, போருக்கு காங்கிரஸ் ஒப்புதலை பெறுதல் என்று மாற்றிக் கொண்ட நிலை, திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு பாராளுமன்ற விவாதத்திற்குப் பின் என்பது பாரிசை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனிடம் தனியே சிரியாவைத் தாக்கும் திறன் இல்லை.
செய்தி ஊடக வர்ணனையாளர்கள் ஹாலண்டை கடுமையாக ஒபாமாவால் “பொறியில் தள்ளப்பட்டுள்ளவர்” என்று விவரிக்கின்றனர்; Le Republicain Lorrain அவரை “சிறப்பான நடத்தைகெட்டவர்” இவருடைய போர்த் திட்டங்கள் அமெரிக்க பங்காளியால் தகர்க்கப்பட்டவை என்கிறது.
ஹாலண்ட் நிர்வாகம் இப்பொழுது பாராளுமன்ற வாக்கை விலத்திவைக்கலாம்; ஆனால் பிரான்சின் 1958 அரசியலமைப்பின் ஜனநாயக விரோத விதிகளின்படி, ஜனாதிபதிக்கு அசாதாரண அதிகாரங்கள் வெளியுறவுக் கொள்கையில் கொடுக்கிறது. இது சார்ல் டு கோலுக்காக அல்ஜீரியப் போரின்போது இயற்றப்பட்டது; அவர் அதிகாரத்தை பாரச்சூட் படைகள், உளவுத்துறைச் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கைகளால் அல்ஜீரிய மக்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்கும் போக்குடைய அரசாங்கம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது இயற்றப்பட்டது. இது பிராஞ்சு ஜனாதிபதி பாராளுமன்ற அங்கீரமில்லாமல் நான்கு மாதத்திற்கு போரை நடத்தலாம் என்று குறிப்பிடுகிறது.
இன்றைய சிரியப் போரானது தொழிலாள வர்க்கத்திற்கும் முழு அரசியல் ஸ்தாபன முறைக்கும் இடையே விரிவாகும் சமூக அழுத்தங்கள், ஆழமடையும் வர்க்கப் பிளவுகள் இவைகளிற்கு சாட்சியங்களாகும். 1958ம் ஆண்டு இராணுவச்சதி மூலமான ஆட்சிக் கவிழ்ப்பிற்கு 55 ஆண்டுகளுக்குப் பின், உளவுத்துறை அமைப்புக்கள் பொய்யான வாதம் ஒன்றை மற்றொரு முன்னாள் பிரெஞ்சுக் காலனிக்கு எதிரான போருக்காக இயற்றியுள்ளனர்; இப்பொழுது இது போலி இடது கட்சிகளின் நேரடி உதவியுடன். இச்சக்திகள் வெளிநாட்டில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் போர் எதிர்ப்பு உணர்விற்கும் விரோதப் போக்கைக்காட்டுவதில் ஐக்கியப்பட்டுள்ளன.
The author also recommends:
How Le Monde fed pro-war propaganda over chemical weapons in Syria
[5 June 2013]
|