US Congress to debate and vote on Syria war
அமெரிக்கக் காங்கிரஸ் சிரியா மீதான போர் பற்றி விவாதம் நடத்தி வாக்களிக்க உள்ளது
By Patrick Martin
2 September 2013
சிரியா மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு காங்கிரசின் அங்கீகாரத்தை பெற இருப்பதாக ஜனாதிபதி ஒபாமா சனிக்கிழமை அறிவித்துள்ளது, இர்ண்டு வார கால செய்தி ஊடக பிரச்சாரத்திற்கும் மற்றும் அரசியல் மிரட்டலுக்கும் அரங்கமைக்கிறது. இதன் இலக்கு அமெரிக்க மக்களை எப்படியும் மத்திய கிழக்கில் மற்றொரு ஏகாதிபத்தியப் போரை ஏற்க அடிபணிய வைப்பதாகும்.
ஆகஸ்ட் 21 இல் டமாஸ்கஸ் புறநகர்ப்பகுதியில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்னும் போலிக் காரணத்தை கூறி, ஒரு வார காலமாக அமெரிக்க அதிகாரிகள் ஓர் ஒருதலைப்பட்ச சிரியா மீதான அமெரிக்க தாக்குதல் தவிர்க்க முடியாது எனக் கூறிவந்தபின், ஒபாமாவின் அறிவிப்பு ஒரு திடீர் திருப்பமாகும்.
அந்த அறிவிப்பு இரண்டு தனித்தனி முடிவுகள் என ஒபாமா விவரித்திருந்தவற்றை ஒருங்கே இணைத்திருந்தது: “சிரிய ஆட்சி இலக்குகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது”, அத்தகைய நடவடிக்கைக்கு முன்கூட்டியே காங்கிரசில் இருந்து அங்கீகாரம் பெறுதல்.
ஒபாமாவின் சொல்லாட்சி கவனத்துடன் கட்டமைக்கப்பட்டு இராணுவ நடவடிக்கையை விரிவாக்குவதில் மிக அதிக வளைந்து கொடுக்கும் தன்மையை அனுமதிக்கிறது. “சிரிய ஆட்சி இலக்குகள்” என்பது குறிப்பாக சிரிய இராணுவத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை; ஆனால் அரசியல் தலைமை உட்பட ஜனாதிபதி பஷர் அல்-அசாத் வரை செல்கிறது; ஏற்கனவே சிரிய வானில் தீவிரமாக இருக்கும் அமெரிக்க டிரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளால் அசாத் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
காங்கிரசின் அங்கீகாரத்தை பெறுதல் என்பதை பொறுத்தவரை, ஒபாமா தனது பார்வையில், அவர் காங்கிரஸ் வாக்கின் முடிவுகளைப் பின்பற்றத் தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை காங்கிரஸ் நிராகரித்தாலும், ஏவுகணைத் தாக்குதல்களையும் குண்டு வீச்சுக்களையும் அவர் செய்ய முடியும். சிரியா மீதான தாக்குதல் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெறாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
வேறுவகையாகக் கூறினால், தன்னுடைய விருப்பங்களை நிதானமான சொல்லாட்சியால் மறைத்து —தலைமைத் தளபதி மட்டுமில்லாமல், அவர் “உலகின் மிகப்பழைய அரசியலமைப்பு முறை ஜனநாயகத்தின் தலைவர்” என்பதைக் குறிப்பிட்டு— ஒபாமா எந்த நாட்டையும், எந்த நேரத்திலும், அமெரிக்க, சர்வதேசச் சட்டத்தை பொருட்படுத்தாமல் தாக்கும் தடையற்ற அடிப்படை அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார்.
சிரிய ஜனாதிபதி தாக்குதலுக்கு உத்திரவிட்டார் என்னும் அமெரிக்கக் கூற்றிற்கு எந்தச் சான்றும் அளிக்கப்படவில்லை; அதே நேரத்தில் நம்பகத்தன்மை உடைய அறிக்கைகள் இப்பொழுது சிரிய எழுச்சியாளர்கள்தான் பொறுப்பு என்று தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சனிக்கிழமை அன்று ஒரு அமெரிக்க தாக்குதலைக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்புச் சக்திகள் இக் கொடூரத்தைச் செய்திருக்க வேண்டும் என்று அப்பட்டமாக வலியுறுத்தினார். “சிரிய மோதலில் மற்ற நாடுகளையும் இழுப்பதற்கு இதைவிடப் பெரிய ஆத்திரமூட்டல் வேறொன்றுமில்லை என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
அசாத் ஆட்சி ஒரு இரசாயன ஆயுதங்கள் தாக்குதலை நடத்தியிருந்தாலும் கூட, சர்வதேச சட்டத்தின்படி, அமெரிக்க அரசாங்கம் ஒரு நீதிபதியாக, நடுவராக, தூக்கிலிடுபவராக செயல்படும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை. வாஷிங்டனே பேரழிவு ஆயுதங்களின் பயன்பாட்டாளராகும், இதில் இரசாயன ஆயுதங்கள் உட்பட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் குறை அடர்த்தி உடைய யுரேனியக் குண்டுகளும் அடங்கும்; இவை ஆயிரக்கணக்கான மக்களை ஈராக்கில் கொன்றுள்ளன, தவிரவும் பிறவிக் குறைபாடுகள் என்பதையும் அழிவுகரமான வகையில் ஏற்படுத்தியுள்ளன.
ஞாயிறன்று பல தொலைக்காட்சிப் பேட்டிகளில் தோன்றிய அமெரிக்க வெளி விவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, சிரியப் போருக்கு அமெரிக்கா கொடுத்துள்ள போலிக்காரணம் பற்றிய புட்டின் உடைய விமர்சனத்திற்கு விடை அளிக்க மறுத்துவிட்டார். அவருக்கு இயைந்து நடக்கும் செய்தி ஊடகப் பேட்டியாளர்கள் அமெரிக்க ஆதரவுடய “எழுச்சியாளர்கள்” நச்சு வாயுவைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பது பற்றி அவரை அழுத்தம் கொடுத்து வினவவும் இல்லை.
சிரியாவிற்கு எதிராகப் போருக்குச் செல்வதில் உள்ள உத்தியோகபூர்வ விவாதத்தில் ஜனநாயக உள்ளடக்கம் ஏதும் இல்லை. முழுக் காங்கிரசும் —ஜனநாயக, குடியரசுக் கட்சியினர், பிரதிநிதிகள் மற்றும் மற்றும் செனட்— அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் அரசியல் கருவியாகும். ஒவ்வொரு உறுப்பினரும் அடிப்படைக் கருத்தாக, தேசிய இறைமை அல்லது சர்வதேச சட்டத்தை பற்றி பொருட்படுத்தாமல் அமெரிக்க அரசாங்கம் அது தேர்வு செய்யும் எந்த நாட்டின் மீதும் படையெடுக்கும் உரிமையை கொண்டுள்ளது என ஏற்றுக்கொள்கிறனர்.
ஒபாமாவே, காங்கிரஸ் இதற்கு எதிராக வாக்களித்தாலும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தன்னிடம் அதிகாரம் உள்ளது எனக் கூறுகிறார். நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர்களும் காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினரும் 1999 கொசோவோ போரை முன்னோடியாக மேற்கோளிடுகின்றனர். அப்பொழுது குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த பிரதிநிதிகள் மன்றம் அமெரிக்க வான் தாக்குதல்களுக்கு இசைவு கொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்; ஆனால் கிளின்டன் நிர்வாகம் வாக்களிப்பை புறக்கணித்து குண்டுத்தாக்குதலை தொடர்ந்தது.
பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குள் உள்ள செய்தி ஊடகம், 11 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையும் விட இன்னும் வெட்கங்கெட்ட தனமாக இரசாயன ஆயுதங்கள் குறித்த நிர்வாகத்தின் பொய்களை எதிரொலிக்கிறது. அப்பொழுது புஷ் நிர்வாகம் இதே போல் “பேரழிவு ஆயுதங்கள்” குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு படையெடுப்பு, ஈராக்கை வெற்றியடைய தயாரிப்புக்களை கொண்டிருந்தது.
முக்கிய ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்கள் சிரியாவுடனான போருக்குத் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர், செப்டம்பர் 9ல் உத்தியோகபூர்வ விவாதம் தொடங்கு முன்னரே. செனட்டின் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ரீட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிரியாவில் “குறைந்தப்பட்ச அமெரிக்கப் படைகளின் பயன்பாட்டிற்கு” ஆதரவைக் கொடுத்துள்ளார். வெளியுறவுக்குழுவின் தலைவர் செனட்டர் ராபேர்ட் மெனென்டெஸ், பெரும்பான்மை விப் டிக் டர்பின் மற்றும் செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமெர் அனைவரும் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மன்றத்தில் சிறுபான்மைத் தலைவர் நான்ஸி பெலோசி தன் ஆதரவை கடந்த வியாழன் அன்று சிரியாவில் அமெரிக்கத் தாக்குதலுக்கு கொடுத்தார். இது ஒபாமா நிர்வாக அதிகாரிகளுக்கும் 26 உயர்மட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்களுக்கும் இடையே மாநாட்டிற்குப் பின் வந்தது. “அமெரிக்க மக்கள் போர் குறித்துக் களைப்பு என்பது தெளிவு. ஆனால் அசாத் தன் மக்கள் மீதே நரம்பு எரிவாயுவைப் பயன்படுத்துவது நம் தேசிய பாதுகாப்பு பிரச்சினையும் கூட, பிராந்திய மற்றும் உலகப் பாதுகாப்புப் பிரச்சினையும் கூட.” என்றார் அவர்.
காங்கிரசின் குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு அல்லது ஆதரவு குறித்த தங்கள் வெளிப்பாடுகளில் பிளவுற்றுள்ளனர்; பலரும் நிர்வாகம் அதன் உண்மையான தாக்குதல் போர்த்திட்டத்தை அறிவிக்கும் வரை கருத்துக்கூற மறுத்துவிட்டனர். மன்றக் குடியரசுத் தலைவர்களில் உயர்மட்டத்தில் உள்ள நான்கு பேர் ஒரு கூட்டறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டு ஒபாமா காங்கிரசின் ஆதரவை நாடுவதற்கு புகழ்ந்துள்ளனர்; ஆனால் பிரச்சினையின் பொருள் பற்றி நிலைப்பாடு எடுக்கவில்லை.
மன்ற உளவுத்துறைக் குழுத் தலைவர் மைக் ரோஜெர்ஸ், எட்வார்ட் ஸ்னோவ்டென் மற்றும் பிற செய்தி வெளியிடுபவர்களை, அரசாங்கத்தின் கண்காணிப்பு மற்றும் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துபவர்களை சூனிய வேட்டையாடுபவர், சிரியாவுடனான போர்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; “ஜனாதிபதிக்கு இராணுவ சக்தியுடன் இதை எதிர்கொள்ள மறுப்பு விடுதல்” உலகத்தில் அமெரிக்காவின் அந்தஸ்த்தை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்றார்.
ஒபாமா தன் போக்கை மாற்றிக் கொள்வதன் பின்னணியில் உள்ள கணக்கீடுகள், காங்கிரஸின் அங்கீகாரத்தை கேட்கும் முடிவு, நியூ யோர்க் டைம்ஸில் ஒரு முதல் பக்க பகுப்பாயைவுக் கட்டுரையில் வந்துள்ளது; இதில் ஒபாமா பல செல்வாக்கற்ற, பெரிய போர்களை மத்திய கிழக்கில் நடத்தத் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. இது வெள்ளை மாளிகையில் ஒபாமா தன் முடிவை வெள்ளி இரவன்று அறிவித்த கூட்டத்தில் இருந்த ஒரு பெயரிடப்படாத உதவியாளரை மேற்கோளிட்டுள்ளது.
“தன்னிடம் பல காரணங்கள் உள்ளன என்று அவர் அவர்களிடம் கூறினார்; அதில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பயங்கரமான பின்னடைவிற்குப் பின் இருந்த தனிமை உணர்வும் அடங்கும். ஆனால் மிகவும் நிர்ப்பந்திக்கும் காரணம் என்னவென்றால், தனியே செயல்படுவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரைப் பாதிக்குமாதலால், தன் அடுத்த இராணுவ மோதல் மத்திய கிழக்கில், ஒருவேளை ஈரானுடன் செல்ல அவருக்கு காங்கிரசின் அதிகாரம் தேவையாயிருக்கும்.
“காங்கிரசை மீறி சிரியா மீது தாக்குதலை நடத்த இப்பொழுது முடிவெடுத்தால், தனக்கு தேவைப்படும்போது காங்கிரஸ் அனுமதி கொடுக்குமா?” என தெரிவித்தார்.
சிரியா மீது தாக்குதலுக்கு அமெரிக்க காங்கிரஸ் வாக்களித்தால், பிரித்தானிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் இரண்டாம் வாக்கை கேட்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. “இது ஒரு முக்கியமான புதிய வாய்ப்பை திறக்கிறது” என பாராளுமன்ற உளவுத்துறைக் குழு தலைவரும் முன்னாள் பாதுகாப்பு செயலருமான மால்கம் ரிப்கைண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.
அசாத் ஆட்சியை 24மணி நேர வான் தாக்குதல்களுக்குள் சரிய வைப்பதற்கு அமெரிக்கா, துருக்கி, ஜோர்டான், சிரிய எழுச்சியாளர்களுக்கு இடையே தீவிர அவசரகாலத் திட்டம் நடைபெறுகிறது, இது தாக்குதல் இன்னும் தீவிரமாகவும் தொலைவிளைவு உடையதாகவும் இப்பொழுது வெள்ளை மாளிகை தெரிவித்திருப்பதை விட நீண்டதாகவும் இருக்கும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
|