சிரிய இரசாயன ஆயுத குற்றச்சாட்டுக்கள் மீதான ரஷ்ய-பிரான்ஸ் பேச்சுவார்த்தை மோதலில் முடிகின்றன
By Alex Lantier
18 September 2013
மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யா மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு இடையேயான நேற்றைய பேச்சக்கள், பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி லோரென்ட் ஃபாபியுஸ் அமெரிக்க தலைமையிலான சிரியாவிற்கு எதிரான போருக்கு நிகழ்வை தயார் செய்கையில் முறிந்தன.
ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானம் ஒன்று, சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் அழிப்பை மேற்பார்வையிட வேண்டும் என்னும் விவாத்திற்கு முன், ஃபாபியுஸ் நேற்று மாஸ்கோவிற்கு பயணித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவேச் சந்தித்தார்.
பிரெஞ்சு அரசாங்கம் – தன் முன்னாள் காலனியான சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போருக்கு பெரும் துடிப்புடன் நிற்கிறது – கிரெம்ளினிடம் வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவின் நட்பு நாடான சிரியாவிற்கு எதிராகப் போருக்குச் செல்ல போலிக் காரணத்தை தோற்றுவிக்க அனுமதிக்கும் ஐ.நா. தீர்மனத்தை ஏற்க வைக்க அழுத்தம் கொடுத்தது. எனினும் பாரிஸ் ஒரு துல்லியமான எதிர்ப்பை சந்தித்தது.
கூட்டம் முடிந்தபின் ஃபாபியுஸ், மாஸ்கோவிற்கும் பாரிஸுக்கும் இடையே “அணுகும் முறைகளில் வேறுபாடு” உண்டு என்பதை ஒப்புக் கொண்டார்; ஆனால் தன்னுடைய அரசாங்கத்தின் அழைப்பான சிரிய ஆட்சி ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்காவிட்டால், “உறுதியான மற்றும் கட்டுப்படுத்தும்” தீர்மானம், சிரிய ஆட்சிக்கு “விளைவுகளை” தரக்கூடிது வரும் என்று உறுதிப்படக் கூறினார். ஐ.நா. விசாரணை எவர் தாக்குதலை நடத்தினார் என்பதை அறிய முடியாத வகையில் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டபோதிலும்கூட, சமீபத்திய ஐ.நா. அறிக்கையான, சிரிய ஆட்சி ஆகஸ்ட் 21 இரசாயன ஆயுதத் தாக்குதலை கூத்தாவில் நடத்தியது என்ற கூற்றை அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.
“சரின் வாயு பயன்படுத்தப்பட்டிருக்கும் அளவை நீங்கள் பார்த்தால், அத்தகைய தாக்குதலுக்குப் பின் உள்ள உத்திகள் இன்னும்பிற கூறுபாடுகளைக் காணும்போது, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிதான் இதன்பின் உள்ளது என்பது தெரியவரும் என்றார் ஃபாபியுஸ். ஆனால் தன்னடைய கூற்றுக்கு சான்றையோ அல்லது விரிவான வாதத்தையோ அவர் முன்வைக்கவில்லை.
உண்மையில் பல சுயாதீன அறிக்கைகள் மற்றும் நோக்கர்கள் அமெரிக்க ஆதரவுடைய சிரிய எதிர்த்தரப்பினர்தான் கூத்தாவில் நச்சு வாயுவை பயன்படுத்தினர் என்பதை தெளிவாக்கியுள்ளனர். இதையொட்டி, வாஷிங்டன் தாக்குதல் நடத்த, “சிவப்புக் கோட்டை” அசாத் கடந்துவிட்டார் என குற்றம் சாட்டப்படலாம். சௌதி உளவுத்துறை, கூத்தா அருகே தாக்குதலுக்கு சற்று முன் எதிர்த்தரப்பு போராளிகளுக்கு இரசாயன ஆயுதங்களை அளித்தது.
அல் குவேடா பிணைப்புடைய சிரிய எதிர்த்தரப்பினரால் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தியாளர்கள் Domenico Quirico, Pierro Piccinin, இஸ்லாமியவாத போராளிகள் அமெரிக்கத் தலையீடு தங்கள் பக்கம் வரவேண்டும் என்பதற்காக இரசாயனத் தாக்குதலை எதிர்த்தரப்பினர் நடத்தியதாக தங்களுக்குள் பேசினர் என்றனர்.
கூத்தா தாக்குதல் பற்றிய சான்றுகள் கவனமாக ஆராயப்படும் வரை எந்த இராணுவத் தலையீடு பற்றிய முடிவும் எடுக்கப்பட முடியாது என்றார் லாவ்ரோவ். “எமக்கு ஆகஸ்ட் 21 நிகழ்வுகள் பற்றிய குறிக்கோள் மற்றும் தொழில் நேர்த்தியுடைய மதிப்பீடு தேவை. இது ஆத்திரமூட்டலுக்காக நடத்தப்பட்டது என்பதற்கு எங்களிடம் காத்திரமான அடித்தளங்கள் உள்ளன. .... பாதுகாப்புக் குழுவின் வருங்காலப் பணிக்கு இது ஒரு சோதனையாக இருக்கும்” என்றார் லாவ்ரோவ்.
சிரியாவிற்குள் அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு சக்திகளின் ஆத்திமூட்டல்தான் இத்தாக்குதல் என நம்புவதற்கு ரஷ்யாவிடம் “காத்திரமான அடித்தளங்கள்” உள்ளன என்றும் அவர் கூறினார்.
கூத்தாவில் சிரிய எதிர்ப்புப் போராளிகள் ஏன் இறக்கவில்லை, அவர்கள் உண்மயிலேயே ஆட்சியால் இரசாயன ஆயுதங்கள் தாக்குதலுக்கு இலக்கு வைக்கப்பட்டால் என்றும் ரஷ்ய அதிகாரிகள் கேட்டனர்.
சிரியாவிற்குள் எதிர்த்தரப்பு சக்திகள் நடத்தியுள்ள “பல ஆத்திரமூட்டல்களை” குறிப்பிட்ட லாவ்ரோவ் கூறினார்: “இவை அனைத்துமே கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டுத் தலையீட்டை தூண்டும் நோக்கத்தை கொண்டவை.”
ரஷ்ய அதிகாரிகள், இத்தகைய அறிக்கைகளின் உட்குறிப்புக்களை விவரமாகக் கூறவில்லை. ஆனால் வாஷிங்டனும் பாரிசும் ஹிட்லரிச விகிதாசாரத்தில் ஒரு குற்றத்தில் ஈடுபட்டுள்ளன என்பது தெளிவு: எதிர்த்தரப்பில் இருக்கும் பயங்கரவாதிகள் குழுக்களுடன் ஒத்துழைத்து ஆக்கிரமிப்புப் போர் ஒன்றிற்கு நிகழ்வை தயார் செய்தல்.
பொதுமக்களின் முன்னே ஒரு தொழில்நேர்த்திக் குரலைக் கொண்டாலும், ரஷ்ய அதிகாரிகள், மூடிய கதவுகளுக்குப் பின்னே, அமெரிக்காவால் தவறான காரணங்களுக்காக நடத்தப்படும் போரில் பாரிசை தாங்கள் இளைய பங்காளியாக காண்பதை தெளிவுபடுத்தினர். ரஷ்யாவில் இருக்கும் பிரெஞ்சு தூதர் Gérard Araud தான் பிரெஞ்சு உளவுத்துறையில் இருந்து அசாத் இரசாயன ஆயுத தாக்குதல்களை இந்த வசந்த காலத்தில் பயன்படுத்தினர் என்பதற்கான நிரூப்பணத்தை வெளியிடப் போவதாகக் கூறியபோது, ரஷ்ய தூதர் ஒருவர் சிரித்துக் கொண்டே “ஜெரார்ட், அமெரிக்கர்களை சங்கடப்படுத்தாதீர்கள்” என்றார்.
சிரியா மீதான போருக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பு இருப்பது குறித்து அதிர்ச்சியுற்றநிலையில், ஈரான் ரஷ்யாவுடன் பரந்த போர் துவக்குதல் என்னும் இடரில் உள்ள ஒபாமா நிர்வாகமும் அதன் நட்பு நாடுகளும் உடனடித் தாக்குதலுக்கான திட்டங்களைத் தள்ளி வைத்துள்ளன. எப்படி அசாத் ஆட்சியின் மீது அழுத்தம் முடுக்கவிடப்படலாம், எவ்வளவு விரைவில் சிரியாவுடன் போர் தொடங்கலாம் என்ற வேறுபாடுகளை ஒட்டி நேட்டோ தலைநகரங்களுக்குள் கடுமையான விவாதங்கள் வந்துள்ளன.
பிரான்சில் எதிர்க்கட்சியான UMP (Union for a Popular Movement) இன் விமர்சனங்கள், ஒபாமாவையும் குறைகூறுவதோடு, சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை விரைவான போர் உந்துதலுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில், கடந்த ஆண்டு ஜனாதிபதியாக இருந்து தேர்தல்களின்போது தோற்கடிக்கப்பட்ட நிக்கோலோ சார்க்கோசியும் அடங்குவார்; மீண்டும் UMP உயர்மட்டத் தலைமைக்குள் கசப்பான நெருக்கடி வந்திருக்கையில் அவர் அரசியல் வாழ்வில் வந்துள்ளார். நவ பாசிச தேசிய முன்னணியுடன் UMP க்கு பெருகும் உறவுகளை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து அந்த நெருக்கடி வந்தள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவரது தோல்வியின் சில மாதங்களின் பின்னர், சார்க்கோசி, சிரியாவில் சர்வதேச தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து, அசாதாரண பொது அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க ஹாலண்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, சிரிய தேசிய கவுன்சில் தலைவர் அப்துல் பசித் சீய்டாவுடன் நீண்ட தொலைபேசி உரையாடலையும் நடத்தினார்.
“துரதிருஷ்டவசமாக, நான் சரி என்பதை நான் கவனிக்கிறேன், நாம் நேரத்தை இழந்து விட்டோம்” என்றார் சார்க்கோசி. இது அவருடைய ஆகஸ்ட் 2012 அறிக்கையை குறிக்கிறது. ஒரு பரந்த போர் ஆதரவுக் கூட்டணியை சேர்க்காததற்காக அவர் ஹாலண்டை விமர்சித்தார்.” ஐ.நா. அல்லது நேட்டோ ஆணை இல்லை, பிரித்தானியர்கள் முறையாக இல்லாமல் லீவு எடுத்து விட்டனர். ஐரோப்பியர்களும்தான். நாம் ரஷ்யர்களிடம் பேசி அவர்களை நம்பவைத்திருக்க வேண்டும். எப்பொழுதும் புட்டினுடன் பேசமுடியும். கடந்த காலத்தில் ஜோர்ஜியா அல்லது லிபியப் போர்களின் போது அவ்வாறு நடந்தள்ளது.”
அமெரிக்க ஜனாதிபதியின் “நிலையான தயக்கம்” பற்றியும் அவர் விமர்சித்து, “இப்பிரச்சினையில் தலைமை இல்லை” என்றார்.
சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், ஒரு விமர்சகரும் மற்றும் ஹாலண்டின் முன்னாள் வாழ்க்கை துணையுமான செகோலின் ரோயால், சிரியாவிற்கு எதிரான போர் உந்துதல் உலகப் போர் ஒன்றை தொடக்கலாம், இராஜதந்திர நடவடிக்கை அவசியம் என எச்சரித்தார். எனினும் இராஜதந்திரம்தான் “தடுத்து நிறுத்துவதற்கு” முன்னிற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியபோதும் -- உலகை பெரும் போரின் விளிம்பில் கொண்டு வந்த, துல்லியமாக இராணுவ அச்சுறுத்தல் வகை தேவை என்றார்.
“ஆம். நாம் ஒரு உலகப் போரைத் தொடங்கலாம். நாம் தலையீட்டால் அத்தகைய அபாயம் இருக்கிறது; ஆனால் தலையிடாமல் இருந்தாலும் அபாயம் உள்ளது. எனவேதான் இராஜதந்திர தீர்வு சிறந்ததாகும். ஆனால், கொடுங்கோலாட்சிகள் அணுவாயுதங்கள் மற்றும் இரசாயன ஆயுதங்களைக் கைவிடும் அளவிற்கு தடுத்து நிறுத்துவது என்பதில் போதுமான உறுதியாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். |