சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australian Labor Party thrown out of office

ஆஸ்திரேலிய தொழிற் கட்சி பதவியிலிருந்து அகற்றப்படுகிறது

By Patrick O’Connor 
9 September 2013

Use this version to printSend feedback

சனிக்கிழமை தேசியத் தேர்தலில் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி பதவியை இழந்தது, 1903க்குப் பின் இதனுடைய முதன்மை வாக்கு பதிவில் (primary vote) மிகக் குறைவாக வெறும் 33.8 வீதத்தைத்தான் பெற்றுக்கொண்டது. இந்த முடிவு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுடைய பரந்த பிரிவுகள் ரூட் மற்றும் கில்லார்ட்டின் தொழிற் கட்சி அரசாங்கங்கள் மீது  கொண்டுள்ள வெறுப்புணர்வையும் விரோதப் போக்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இவைகள் கடந்த 6 ஆண்டுகளாக பெரு வணிகம் மற்றும் நிதிய மூலதனத்தின் செயற்பட்டியலைத்தான் செயற்படுத்தி வந்தன.

2007ம் ஆண்டு முன்னாள் ஹோவர்ட் அரசாங்கம் பெரும் தோல்வி கண்டபோது, 5.4 மில்லியன் மக்கள் தொழிற் கட்சிக்கு வாக்களித்தனர்; கட்சி முதன்மை வாக்கு பதிவில் 43.4% பெற்று வெற்றியடைந்தது. இத்தேர்தலில் 3.6 மில்லியன் மக்கள் மட்டுமே இதற்கு வாக்களித்துள்ளனர்—இது கிட்டத்தட்ட தொழிற் கட்சியின் முந்தைய ஆதரவாளர்களில் நான்கில் ஒருவரை இழந்து விட்டதை இது குறிக்கும்.

தாரளவாத-தேசிய கூட்டணி அமெரிக்கத் தலைமையிலான மத்திய கிழக்குப் போர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்கும், அக்கூட்டணி மிருகத்தனமாக அகதிகளையும் பழங்குடி மக்களையும் நடத்தியமைக்கும்,  சுற்றுச்சூழல் மாற்றத்தில் அதனுடைய செயலின்மையும், தொழிலாளர்களின் ஊதியங்கள், பணி நிலைமைகள் ஆகியவைகளை அது தாக்கியமை குறித்து மக்கள் கொண்டிருந்த கடுமையான சீற்றத்தை ரூட் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு பகுதியிலும் தொழிற் கட்சி அரசாங்கம் இன்னும் அதிக வலதை நோக்கித்தான் அதனுடைய இரு பதவிக் காலங்களிலும் நகர்ந்துள்ளது.

1990களில் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து பசுமைவாதிகள் முதல் தடவையாக தங்களுடைய தேசிய வாக்குகள் சரிவுற்றதைக் கண்டனர்; அவர்கள் முதன்மை வாக்கு பதிவில் 8.4% தான் பெற்றனர்,  இது 2010 கடந்த கூட்டாட்சித் தேர்தலில் பெற்ற 11.7% ஐ விடக் குறைவாகும். இந்த விளைவு, பாராளுமன்றத்தில் சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக முட்டுக் கொடுக்கும் பங்கை பசுமைவாதிகள் கொண்டதற்கு பரந்த விரோதப் போக்கின் வெளிப்பாடாகும்—இந்த அனுபவம் முக்கிய கட்சிகளுக்கு அது ஒரு “முற்போக்கு மாற்றீடு” என்று காட்டிக் கொள்ளும் முயற்சிகளை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது. குறிப்பாக டஸ்மானியாவில், தொழிற்கட்சி-பசுமைவாதிகள் கூட்டணி மாநில அரசாங்கம் பொதுக் கல்வி நிதியைப் பெரிதும் குறைத்து ஆயிரக்கணக்கான பொதுத்துறை தொழிலாளர்களையும் பதவியிலிருந்து நீக்கியதால், பசுமைவாதிகள் பெற்ற வாக்கு 2010ல் கட்சி பெற்ற 16.9%ல் பாதியைவிடக் குறைவாகும்.

தாரளவாத கட்சித் தலைவர் டோனி அபோட் இப்பொழுது பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்குகள் இன்னும் சரிபார்க்கப்படுகின்றன, சில தொகுதிகளில் சந்தேகம் உண்டு என்றாலும், தாரளவாத-தேசிய கூட்டணி 150 பிரதிநிதிகள் கொண்ட கீழ்மன்றத்தில் 89 இடங்களைப் பெறுவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது; தொழிற் கட்சி 2007 தேர்தலில் அது கொண்டிருந்த 88 இடங்களிலிருந்தும், 2010ல் அது கொண்டிருந்த 72 இடங்களிலிருந்தும் குறைந்து 57 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற் கட்சியின் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தபோதிலும், கூட்டணியும் ஒரு குறுகிய வெற்றியை மட்டுமே கண்டது; இது இரு முக்கிய கட்சிகள் மீதும் பரந்த எதிர்ப்பு உள்ளதை பிரதிபலிக்கிறது. தாரளவாத மற்றும் தேசிய கட்சிகள் முதன்மை வாக்கு பதிவில் 45.4% ஐ பெற்றன; இது கடந்த 2010 தேர்தலில் அவர்களுடைய தேர்தல் முடிவிலிருந்து 1.7% தான் அதிகமாகும்.

ஐந்தில் ஒரு பகுதியை விட அதிக அளவான 20.8% முதன்மை வாக்குகள், தொழிற் கட்சி, தாரளவாத-தேசிய வேட்பாளர்களை தவிர மற்றவைகளுக்கு சென்றன. இந்த எண்ணிக்கை எந்த அளவிற்கு முழுப் பாராளுமன்ற முறையின் மீதும் மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்துள்ளனர் என்பதற்கு ஒரு அடையாளமாகும்.

ஆஸ்திரேலியாவில் கட்டாயமாகப் பதிவு செய்து வாக்களிக்க வேண்டும் என்ற சட்டங்கள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான மக்கள் தேர்தலில் பங்கு பெறாமல் அபராதம் கட்டும் இடருக்கு உட்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் கருத்துப்படி, கிட்டத்தட்ட 1.4 மில்லியன் தகுதியுடைய வாக்காளர்கள் பதிவு செய்யவில்லை. ஆரம்ப வாக்கெடுப்பு  விவரங்கள் தகுதியுடைய வாக்காளர்கள் வாக்களிப்பிலிருந்து பங்கு பெறாமல் இருப்பது முந்தையத் தேர்தல்களைவிட மிகவும் அதிகமாகும். மேலும் 11.2 மில்லியன் வாக்குகள் என இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதில், கிட்டத்தட்ட 6%  முறைசாராதவை அதாவது செல்லுபடியற்ற வாக்குகளாகும். இவற்றில் பலவற்றில் மக்கள் வெற்றுச் சீட்டு அல்லது “மேற்கூறியவர்களில் எவருக்கும் இல்லை” வாக்குச் சீட்டுக்களை வேட்பாளர்களுக்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு தொடர்ந்து அரசியல் நெருக்கடிப் பாதிப்பைச் சந்திப்பதை தேர்தல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதோடு, தொழிலாள வர்க்கத்திற்குள் முன்னோக்கு பற்றிய நெருக்கடியையும் இது சுட்டிக்காட்டுகிறது.
தொழிற் கட்சியின் சரிவில் முக்கிய நலன் பெற்றவைகள் வலதுசாரி தேசியவாதத்தின் ஒரு தொடர் கட்சிகளாகும்; இவைகள் மக்களை ஈர்க்கும் பிரச்சாரங்களை நடத்தி பிரதான கட்சிகளுக்கான எதிர்ப்பை பயன்படுத்தி அவற்றை பிற்போக்குத்தன திசைகளில் தள்ளிவிட முயன்றன. பில்லியனரும், சுரங்கத் தொழில் அதிபருமான பாமர், பாமர் ஐக்கியக் கட்சி (Palmer United Party - PUP) என்பதை இந்த ஆண்டு முன்னதாக நிறுவி, மாபெரும் பணத்தைச் செலவழித்து வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்திவைத்து, கணக்கிலடங்கா விலையுயர்ந்த தொலைக்காட்சி, செய்தித்தாள் விளம்பரங்களையும் செய்தார். இது ஆஸ்திரேலியாவிற்கு ஒரு “புரட்சி” தேவை என்பதை அறிவித்து, குறைந்த வருமான வரிகள், ஓய்வுதியங்கள் அதிகம், பெரும் நிதி சுகாதாரத்திற்கும் கல்விக்கும் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தன. PUP தேசிய வாக்குகளில் 5.5% ஐப் பெற்றது; இது பாமரின் சொந்த மாநிலமான க்வீன்ஸ்லாந்தில் இரு மடங்காயிற்று. மிகத் தீவிர வலதுசாரி பில்லியனர் இந்த வாக்கு எண்ணிக்கை கட்டிடத்தில், கீழ் மன்றத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்; அவருடைய PUPயின் குறைந்தப்பட்சம் இரு  உறுப்பினர்கள் செனட்டில் நுழைவர்; அங்கு அவர்களும் பிற வலதுசாரி சிறுபான்மைக் கட்சி நபர்களும் சமநிலைச் சக்தியை வைத்திருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்திற்குள் வந்துவிட்டால், இந்த அடுக்குகள் அபோட் அரசாங்கத்துடன் அது இரக்கமற்ற சிக்கன நடவடிக்கை செயற்பட்டியலை செயல்படுத்துகையில் ஒத்துழைக்கும்; அந்நடவடிக்கை தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் குறைக்கும் நோக்கமுடையது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, அபோட் தன்னுடைய கொள்கை நோக்கங்களைப் பற்றி மிகவும் குறைவாகத்தான் பேசினார். அவரும் அவருடைய ஆலோசகர்களும் தாரளவாதிகளின் “சிறு இலக்கு” பிரச்சினையை குறிவைத்தனர்; சாதாரண மக்கள் ஐரோப்பிய மாதிரி வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு கொண்டுள்ள ஆழமான எதிர்ப்பை கருத்திற்கொண்டு, அபோட்டின் அரசாங்கம் ஒரு கடுமையான வணிக சார்பு செயற்பட்டியலை செயல்படுத்த தயாராகவுள்ளது. இன்று தேர்தல் முடிந்து 48 மணி நேரத்திற்குள் மர்டோக்கும் நிதியச் செய்தி ஊடகமும் அபோட்டை அவருடைய தேர்தலுக்கு முந்தைய பாசாங்குத்தனத்தை கைவிடுமாறு கோருகின்றனர். Business Spectator  வலைத் தளத்தில், ஸ்டீபன் கௌகுலஸ், “அபோட்டிற்கு கத்தியுடன் நிற்க நேரமில்லை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், “டோனி அபோட் தன்னுடைய பிரதம மந்திரி பதவியை வலுவாகத் தொடங்க வேண்டும் என்றால், அவரும் நிதிப் பொறுப்பாளர் ஜோ ஹாக்கியும் ஒரு பொருளாதார அறிக்கை அல்லது சிறு வரவு-செலவுத் திட்டத்தை ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும்... அது சரியான பகுதிகளில் அரசாங்கச் செலவுகள் சில வெட்டப்படுவதை செயல்படுத்தி, ஆஸ்திரேலியாவின் மூன்று A நிதிய நிலைமையை வலுப்படுத்தும், தேவையானால் நிதியச் சுதந்திரம் சிலவற்றை செயல்படுத்தும்”என்று எழுதியுள்ளார்.

தேர்தல் முடிவு பாராளுமன்ற ஜனநாயகத்தின் மோசடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ரூட் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், அவர் வாஷிங்டனுக்கு அது சிரியா மீது ஆக்கிரமிப்பு, கொள்ளை முறைப் போருக்குத் தயாரிப்பதற்கு ராஜதந்திர, இராணுவ ஆதரவை முழுமையாகக் கொடுத்திருப்பார்; அதே நேரம் அவருடைய வணிக சார்பு “போட்டித்தன்மை” திட்டத்தை தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பின் மூலம் விரைவுபடுத்தியிருப்பார். இப்பொழுது டோனி அபோட் மற்றும் தாரளவாத-தேசிய கூட்டணி அதே செயற்பட்டியலைத்தான் துல்லியமாகச் செயற்படுத்தத் தயாராகவுள்ளது.

தொழிலாள வர்க்கம் அதனுடைய நலன்களை முன்னேற்ற, இருக்கும் அரசியல் வடிவமைப்பிற்குள் எந்த வாய்ப்பும் இல்லை. பெரும் சமூக மற்றும் அரசியல் அதிர்ச்சிகள் உடனடி வருங்காலத்தில் காத்துள்ளன. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைந்து போகையில், ஆஸ்திரேலியா விரைவாக அதனுடைய ஆழமான செல்வாக்கற்ற போர், வெளிநாடுகளில் இராணுவவாதம், உள்நாட்டில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் வெட்டுகளை செயற்படுத்துவதற்கு ஆளும் வர்க்கம் புதிய சர்வாதிகார வழிவகைகளை தயாரிக்கிறது. தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் பணியானது அதனுடைய சொந்த சுயாதீன வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கு, சோசலிச கொள்கைகளை செயற்படுத்தும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு ஒரு அரசியல் நனவான அடிப்படையில் இந்த நெருக்கடியில் தலையிட வேண்டும்.

இங்குதான் சோசலிச சமத்துவக் கட்சியின் 2013 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் உள்ளது; இது மட்டுமே தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியலில் ஒதுங்கியிருப்பதிலிருந்து வெளியேவந்து ஒரு சோசலிச சர்வதேசிய முன்னோக்கிற்காக போராட அழைப்பு விடுத்துள்ளது; அதுதான் ஒரு புதிய புரட்சிகரத் தொழிலாளர் கட்சியை கட்டமைக்க தேவையான முன்னோக்காகும். சோசலிச சமத்துவக் கட்சியின் செனட் வேட்பாளர்கள் ஐந்து முக்கிய மாநிலங்களில் சிறிய, ஆனால் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். வாக்கெடுப்பு இன்னும் சரிபார்க்கப்படுகையில் உலக சோசலிச வலைத்தளம் வரவிருக்கும் நாட்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் வாக்குகளைப் பற்றி தகவல்களை வெளியிடும், அதனுடைய பிரச்சாரத்தின் தன்மை, முக்கியத்துவம் பற்றியும் தகவல்களை வெளியிடும்.

கட்சியின் தேசிய செயலாளரும் நியூ சௌத் வேல்ஸின் முக்கிய செனட் வேட்பாளருமான நிக் பீம்ஸ் இன்று அறிவித்தார்: “தொழிலாளர் வர்க்கத்திற்கு இத்தேர்தலில் வெளிப்பட்டுள்ள பெரும் படிப்பினை அதனுடைய சுயாதீன நலன்கள் இருக்கும் பாராளுமன்ற அமைப்பு முறைக்குள் வெளிப்பாட்டை காணமுடியாது என்பதுதான். தொழிற் கட்சியின் மீது தொழிலாள வர்க்கத்திற்குள் இருக்கும் விரோதப் போக்கு தாரளவாதிகள் திரும்பிவந்ததில் வெளிப்பாட்டைக் கண்டதுடன், வலதுசாரி ஜனரஞ்சக கட்சிகளின் ஒரு தொடர் வெளிப்பட்டையும், மிகவும் குறிப்பாக பில்லியனரான கிளைவ் பாமரின் PUP கட்சியின் வெளிப்பாட்டையும் கண்டது. தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த முட்டுச் சந்திலிருந்து வெளியேற ஒரு வழியைக் காண வேண்டும், ஒரு புதிய பாதையை அமைக்க வேண்டும்.

அமெரிக்கத் தலைமையிலான போர் முனைப்பு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் சிக்கன நடவடிக்கைத் திட்டம் என்று இப்பொழுது அபோட் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட இருப்பவைகளை எதிர்த்த சோசலிச சமத்துவ கட்சி முன்னெடுத்த தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் இதுதான். சோசலிச சர்வதேசியம், ஆஸ்திரேலிய தொழிலாளர்களை ஆசிய பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்தவும், முதலாளித்துவ இலாப அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் போராட சாத்தியமான ஒரேயோரு வேலைத்திட்டம் இதுவேயாகும்.