தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
ஐ.நா. வில் அமெரிக்காவும் ஈரானும் சந்திக்கவுள்ளன
By Bill Van
Auken Use this version to print| Send feedback அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, ஈரானிய வெளியுறவு மந்திரி மகம்மத் ஜவாட் சரிஃபை இந்த வாரம் சந்திக்கவுள்ளார் என்று ஒபாமா நிர்வாகம் திங்களன்று உறுதிப்படுத்தியது. இரு அரசாங்கங்களுக்கும் இடையே இத்தகைய உயர்மட்ட தொடர்பு 1979 ஈரானிய புரட்சிக்கு பின் முதல் தடவையாகும், அப்புரட்சிதான் அமெரிக்க ஆதரவு கொண்டிருந்த சர்வாதிகாரி ஷாவை தூக்கியெறிந்தது. நியூ யோர்க் நகரத்தின் ஐ.நா. பொதுச் சபை தொடக்கத்தின் போது இணைந்த முறையில் நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில் P5+1 எனப்படும் பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜேர்மனியின் உறுப்பு நாடுகளும் அடங்கியிருக்கும்; இந்நாடுகளின் குழு, ஈரானுடன் அதனுடைய அணுத்திட்டம் பற்றிய இராஜதந்திர பேச்சுக்களை நடத்தியிருந்தது. திங்களன்று வெள்ளை மாளிகையானது ஜனாதிபதி பராக் ஒபாமா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹணியுடன் அடையாள நட்பை காட்டுவார் என்ற ஊகத்தை பற்றி அதிகம் பேசவில்லை; இவர்கள் இருவருமே ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இன்று பேசவுள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே செய்தியாளர்களிடம் திங்கன்று அமெரிக்கா, ஈரானுடன் பேச்சுக்களை நடத்த தயார், “ஈரான் அதன் அணு ஆயுதத் திட்டங்கள் பற்றி தீவிரமாகப் பேசும் என்றால்” என்றார். ஈரானிய அரசாங்கம் தொடர்ச்சியாக அத்தகைய திட்டம் இல்லை என்று மறுத்துவருவதுடன், அதன் அணு நடவடிக்கைகள் சமாதான நோக்கங்களைத்தான் கொண்டவை எனக் கூறுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகள் ஈரானிடம் தற்பொழுது அணுவாயுதத் திட்டம் இல்லை என்று ஆதாரத்துடன் கூறுகிறது. துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் இதேபோன்ற வகையை ஏற்று, வாஷிங்டனும் அதனுடைய நட்பு நாடுகளும் சுமத்தியுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் “ஈரான் அணுவாயுதத்தை பெறுவதைத் தடுக்கத் தேவை” ஆனால் ஒபாமா நிர்வாகமும் “இராஜதந்திரத் தீர்விற்கான கதவைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது, அதையொட்டி நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்; அது ஈரான் அணுவாயுதத்தைப் பெறுவதைத் தடுக்கும், அதே நேரத்தில் சமாதான அணு சக்தி பரவாத்தன்மை கட்டுப்பாட்டிற்கு இயைந்து பெற முடியும்” என்றார். சமாதான முறையில் அணுச்சக்தி தொழில்நுட்ப வளர்ச்சியை சர்வதேச உடன்பாடுகளுக்கு இணங்கத்தான் ஈரான் நடத்துகிறது என்பதைத் தவிர வேறு சான்று ஏதும் இல்லாத நிலையிலும், வாஷிங்டனும் அமெரிக்க பெருநிறுவனச் செய்தி ஊடகமும் அணுவாயுதம் கொண்ட ஈரான் ஒரு உடனடி அச்சுறுத்தல் என்று காட்டுகிறது -- இது 76 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக இருக்கும் நாட்டை பொருளாதாரத் தடைகள் மூலம் தண்டிப்பதை நியாப்படுத்துவதுடன் நேரடி இராணுவத் தாக்குதலையும் நியாயப்படுத்துகிறது. முன்னதாக ரோட்ஸ், “நாங்கள் முடிவிலா இராஜதந்திர ஜன்னல் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்” என எச்சரித்திருந்தார். இது தெஹ்ரான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரிக்கைகளுக்கு தலைவணங்காவிடின் இராணுவ ஆக்கிரோஷத்தை எதிர்பார்க்கலாம் என்னும் உட்குறிப்பைக் கொண்டது. கடந்த மாதம் பதவியேற்ற ருஹானியின் தேர்தல், ஆட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற ஈரானியர்களின் விருப்பத்தினால் பெரும் உந்துதல் பெற்றது. பொருளாதாரத் தடைகள் வேலையின்மையை தீவிரமாக தாக்கியுள்ளது, ஈரானை 40% பணவீக்கத்திற்கு உட்படுத்தியுள்ளது, எண்ணெய் வருவாயை பாதியாகக் குறைத்துவிட்டது. முன்பு பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பில் இரண்டாவது பெரிய உற்பத்தி நாடாக இருந்த ஈரான் இப்பொழுது 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது. பொருளாதாரத் தடைகளிலிருந்து மருந்துகளுக்கு விலக்கு என்றாலும், வங்கிகளுக்கு அச்சுறுத்தல், கப்பல் உரிமையாளர்களுக்கு ஈரானுடன் தொடர்பு இருந்தால் அச்சுறுத்தல் என்பவை ஏற்றுமதியை திறமையுடன் குறைத்துவிட்டன. இது பரந்த பற்றாக்குறைகளையும் கணிசமான இறப்புக்களையும் ஏற்படுத்திவிட்டது. ஐ.நா. கூட்டத்திற்கு புறப்படுமுன், ருஹானி தெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறினார்: “இம்முறை ஈரானின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உலகிற்கு அளிப்பேன், பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை, ஏற்கமுடியாத பாதை என்றும் நாம் கூறவேண்டும்.” ஈரானிய முதலாளித்துவத்தின் முயற்சி அமெரிக்க ஏகாதிபத்தியம் அதனுடைய நட்பு நாடுகளுடனான உறவுகளை மாற்றுதல் என்பதை அடையாளம் காட்டும் வகையில், மகம்மது கட்டாமி ஈரானின் ஜனாதிபதியாக 1997 இலிருந்து 2005 வரை இருந்தவர், ஈரானிய ஆட்சியின் “சீர்திருத்த” பிரிவில் முக்கிய நபராக இருப்பவர், பிரித்தானிய நாளேடு கார்டியனில் திங்களன்று தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரையில் ருஹானி நியூ யோர்க்கிற்கு “மாற்றத்திற்கான செயற்பட்டியலுடன்” வருகிறார், “ஈரான், மேற்கு அனைத்து உள்ளூர், பிராந்திய சக்திகளுக்கும் இது எதிர்ப்பில்லாத, அநேகமாக மீண்டும் வராத வாய்ப்பு” என எழுதியுள்ளார். ருஹானி “வெளிப்படையான பகிரங்க ஆதரவை” ஈரானின் அதிஉயர் தலைவர் அயோதுல்லா அலி ஹொசீனி காமெனீயிடம் கொண்டுள்ளார், “மேற்குடன் பல வெளியுறவுக் கொள்கைப் பிரச்சினைகளுக்கான ஒரு இராஜதந்திர தீர்வு தேவை, அணு பிரச்சினைக்கு மட்டுமல்ல” என்று அவர் கூறினார். ஆனால் ஈரானிய ஆட்சிக்குள் பிளவுகளுக்கான தெளிவான அடையாளங்கள் உள்ளன. நியூ யோர்க்கிற்கு ருஹானி புறப்படு முன், ஈரானின் அரசியலில் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகரப் படைப்பிரிவு, “வரலாற்று அனுபவங்கள் நம் நாட்டின் இராஜதந்திரக் கருவிகள் கவனத்துடன், அக்கறையுடன் வெள்ளை மாளிகை அதிகாரிகளின் நடத்தையை கண்காணிப்பது தேவை, அதையொட்டி நம் நாட்டின் சரியான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டு இடைத்தொடர்பு வேண்டும் என்பவர்களால் மதிக்கப்பட வேண்டும்.” என எச்சரித்தது. அணு சக்தி குறித்த பெரும் உலக சக்திகளுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுக்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன; கடைசிப் பேச்சுக்கள் ஏப்ரல் மாதம் காஜகஸ்தானில் நடைபெற்றன. முந்தைய தொடர்களைப் போலவே இதுவும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ஈரானுக்கு யுரேனிய அடர்த்தி நடவடிக்கைகளை, அணு பரவா உடன்படிக்கையை ஒட்டி இல்லாதவற்றை நிறுத்தும்படி இறுதி எச்சரிக்கை அளித்தவுடன் முறிந்தன; ஈரான் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடு, நாட்டில் பொருளாதாரத் தடை இருக்கையில் குறைந்த மாறுதல்களையே கொடுக்கிறது. இரு கட்சிகளையும் சேர்ந்த அமெரிக்க செனட்டர்கள் திங்களன்று ஒபாமாவிற்கு கடிதம் எழுதி இக்கொள்கையில் மாற்றம் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். “ஈரான் முறையான இராஜதந்திர தீர்வை அடைய தீவிரத்தன்மையைக் காட்ட வேண்டும்; அத்துடன் முழு, சரிபார்க்கக்கூடிய இணக்கமும் தேவை. ஈரான் யுரேனிய அடர்த்தியை ஆக்கிரோஷத்துடன் முன்னோக்கி நடத்துகையில் பேச்சுக்கள், தாமதப்படுத்தும் உத்தியாக இருக்கக் கூடாது” என்று செனட்டர்கள் நியூ யோர்க் ஜனநாயகக் கட்சி சார்ல்ஸ் ஷ்யூமரும் அரிசோனா குடியரசு ஜோன் மக்கெயினும் ஒபாமாவிற்கு எழுதியுள்ளனர். அவர்கள் பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். “அழுத்தத்தை கைவிட இது நேரம் இல்லை” என்று ஷ்யூமரும் மக்கெயினும் எழுதியுள்ளனர். “இருக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றுவது ஈரானின் அணுத் திட்டத்தை நிறுத்துவதை பொறுத்தது. எதிர்மறையாக, அணு நடவடிக்கைகளை தொடர்வது அல்லது விரிவாக்குவது, அமெரிக்கா அதனுடைய நட்பு நாடுகளின் தலைமையில் இன்னும் தடைகளுக்குத்தான் வழிவகுக்கும்.” இதேபோல் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர் ரோபர்ட் மெனென்டெஸ், செனட் வெளியுறவுகள் குழுவின் தலைவர், குடியரசுக் கட்சியின் லிண்சே கிரஹாம் இருவரும் பகிரங்கக் கடிதம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பி “ஆனால், ருஹானியிடம் இருந்து எத்தகைய நல்ல சொற்களை நாம் கேட்டாலும், ஈரானின் நடவடிக்கைதான் கவனிக்கப்பட வேண்டும்” என்று எச்சரித்தனர். இந்த ஆண்டு முன்னதாக மெனென்டெஸும் கிரகாமும் செனட்டில் ஒரு தீர்மானத்தை, ஈரான் மீது இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு பச்சை விளக்கை வாஷிங்டன் காட்டவும் அமெரிக்கா “இராஜதந்திர, இராணுவ, பொருளாதார ஆதரவை” இஸ்ரேலிய ஆட்சிக்கு அத்தகைய தாக்குதல் நடந்தால் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கொண்டு வந்தனர். ருஹானியின் வேண்டுகோள்களுக்கு அவர்களுடைய விடையிறுப்பு இஸ்ரேலுடையது போல்தான் உள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகு, ருஹானியின் பேச்சுவார்த்தைகளுக்கான அறிக்கையை உதறித்தள்ளி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “உண்மையான சோதனை ருஹானியின் சொற்கள் அல்ல, ஈரானிய ஆட்சியின் செயல்கள்; அவைகள் ஆக்கிரோஷத்துடன் அதனுடைய அணுத் திட்டத்தை முன்னேற்றுவிக்கின்றன, அதே நேரத்தில் ருஹானி பேட்டிகளைக் கொடுக்கிறார்.” சிரியா, தனது மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறது என்னும் ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் போலவே, ஈரானிய அணுத் திட்டம் பற்றிய குற்றச்சாட்டுகளும் ஈரான் மீது படையெடுப்பிற்கான போலிக் காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை; அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கம் எண்ணெய் வளமுடைய, மூலோபாயம் நிறைந்த முக்கிய பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொள்வதற்கு இந்நாடு ஒரு தடை எனக் கருதப்படுகிறது. வாஷிங்டன் எத்தகைய பேச்சுக்கள் நடத்தினாலும், அவை மேலும் சலுகைகளை பறிப்பதாகவே இருக்கும்; அவைகள் ஈரானை முடக்கும்—வருங்கால அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கு அதை இன்னும் ஆபத்தான நிலையில் தள்ளும். |
|
|