தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Protests continue against social cuts and fascist terror in Greece கிரேக்கத்தில் சமூகநல வெட்டுக்கள் மற்றும் பாசிச பயங்கரம் இவைகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள் தொடர்கின்றன
By Christoph
Dreier and Katerina Selin Use this version to print| Send feedback கிரேக்கத்தில் சமூகநல வெட்டுக்கள் மற்றும் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. நவ-நாசிச கோல்டன் டோன் அமைப்பிற்கு அரசாங்க ஆதரவு குறித்த புதிய சான்றுகள் வெளிப்படுகையில், தொழிற்சங்கங்களும் போலி இடது அமைப்புக்களும் எதிர்ப்புக்களை தடுத்து அவற்றை அரசியல் ரீதியாக அரசுக்கு கீழ்ப்படுத்த முற்படுகின்றன. ஆசிரியர்கள் சங்கம் கடந்த வாரம் அது தொடக்கிய வேலைநிறுத்தத்தை புதன்கிழமை வரை விரிவாக்கியுள்ளது. பொதுத்துறை சேவைப் பணியாளர்களும் செவ்வாயன்று 48 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நாடு முழுவதும் மாணவர்கள் ஆசிரியர்களுடன் ஒற்றுமை உணர்வைக் காட்ட டஜன் கணக்கான பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளனர். வாரத்தில் எஞ்சியுள்ள நாட்களில் பல பல்கலைக்கழகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். செவ்வாயன்று, ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் அரசாங்கத்தின் பரந்த பணிநீக்கங்களுக்கான திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். “மனிதர்களை தியாகம் செய்யாதீர்”, “முதலாளிகள் ஒழிக” என்ற கோஷங்களை கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்தி நின்றனர். சமீபத்திய பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிராகவும் கோல்டன் டோனுக்கு போலிஸ் மற்றும் இராணுவம் கொடுக்கும் ஆதரவிற்கு எதிராகவும் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான துறைமுகத் தொழிலாளர்கள் பைரீயஸுக்கு அணிவகுத்துச் சென்றனர்; அங்கு பாசிச எதிர்ப்பு hip-hop பாடகர் பாவ்லோஸ் பைசஸ் கடந்த புதனன்று நவ-நாசிகளால் கொல்லப்பட்டார். கூடுதல் ஆர்ப்பாட்டங்கள் துறைமுக நகரில் திங்களன்று நடைபெற்றன. நாட்டின் இரு பெரும் வணிகத் தொழிற்சங்க கூட்டமைப்புக்களான ADEDY மற்றும் GSSE இரண்டும் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை புதன் மாலை சின்டக்மா சதுக்கத்தில் கூட்டுகின்றன. அரசாங்கம் இந்த எதிர்ப்புக்களை மிருகத்தன பதிலடியுடன் முகங்கொடுக்கிறது. பலமுறை பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர், கோல்டன் டோனின் அலுவலகங்களை பாதுகாத்தனர். கடந்த வெள்ளியன்று சீருடைய அணியாத ஒரு பொலிஸ் ஏதென்ஸ் புறநகர் டப்னியில் ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து தன்னுடைய கைத்துப்பாக்கியால் சுட்டார். வன்முறையை தூண்டிவிடுபவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைக்க முற்பட்டபோது அவர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டனர்; சாட்சியங்களின்படி தங்களுடைய சக ஊழியரை மக்கள் கூட்டத்திலிருந்து விடுவிக்க கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன் கை எறிகுண்டுகளை பொலிசார் பயன்படுத்தினர். புதிய வெட்டுக்கள் செயற்படுத்தப்படுகையில், சமூக நிலைமைகள் மோசமடைந்து கொண்டுவருகின்றன, சீற்றம் பெருகுகிறது. ஞாயிறன்று முக்கூட்டின் பிரதிநிதிகள் –சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் (EU Commission)—ஏதென்ஸுக்குப் பயணித்து உடன்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவும், அடுத்த உதவிக் கடன் தொகையான 1 பில்லியன் டாலர்களைக் கொடுக்க நிபந்தனைகளை பேசவும் பயணித்தனர். வேலைநிறுத்தங்கள் 12,500 தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் ஒரு 12,500 வேலை வெட்டுக்கள் இந்த ஆண்டு பிற்பகுதியில் அகற்றுவதற்கான திட்டம் ஆகியவற்றிற்கு எதிராக இயக்கப்படுகின்றன. இதைத்தவிர, மூன்று அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. இன்னமும் தீவிர தாக்குதல்கள் 2014க்கு திட்டமிடப்படுகின்றன; 150,000 பொதுத்துறை ஊழியர்கள் ஆண்டு இறுதிக்குள் பணிநீக்கத்தை எதிர்பார்க்கின்றனர். பைசஸின் கொலையிலிருந்து பல அறிக்கைகள் வந்துள்ளன; இவைகள் அரச கருவிக்கும் பாசிஸ்ட்டுக்களுக்கும் இடையேயுள்ள பிணைப்புக்களை சுட்டிக்காட்டுகின்றன. புதிய வெளிப்பாடுகள், கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உட்பட கோல்டன் டோன் வேண்டுமென்றே அரச படைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது, தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு என்று நிரூபிக்கின்றனர் Ethnos நாளேடு புகைப்படச் சான்றுகளை வெளியிட்டுள்ளது; அவை கோல்டன் டோனுக்கும் EKAM க்கும் நாட்டின் “சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவிற்கும்” இடையேயுள்ள ஒத்தழைப்பு பற்றியவை. மற்றய புகைப்படங்கள் கோல்டன் டோனின் உறுப்பினர்கள் எதிர்ப்பாளர்களை பொலிஸ் பிரிவுகள் தாக்கும்போது அருகில் நிற்பதைக் காட்டுகின்றன. பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டு, தடிகள் இவற்றைப் பயன்படுத்துகையில், பாசிஸ்ட்டுக்கள் கற்களையும் பாட்டில்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசி அவர்களை தடியாலும் தாக்குகின்றனர். ஞாயிறன்று செய்தித்தாள் To Vima வும் கோல்டன் டோனின் உறுப்பினர்கள் கிரேக்க இராணுவத்தின் சிறப்புப் பிரிவுகளால் பயிற்சி கொடுக்கப்படுகின்றனர் என்ற தகவலை கொடுத்துள்ளது. Alpha News ல் ஒரு காணொளியில் கோல்டன் டோனின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அறிக்கையை உறுதிப்படுத்தினார். கட்சிக் குண்டர்கள் இராணுவப் பிரிவுகளுடன் ஒன்றாகப் பயிற்சி பெறுகின்றனர் என்று அவர் விளக்கினார். “தலைமையிலிருந்து உதவ எங்களுக்கு எப்பொழுதும் அங்கு உள்ளனர், எனவே அவர்கள் எங்களைப் பயிற்சி மையத்தில் விடுகின்றனர்” என்றார் அவர். பயிற்சியாளர்கள் இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; அவர்கள் கோல்டன் டோனில் தீவிர உறுப்பினர்களாக உள்ளனர். பைசஸின் கொலை பிராந்தியக் கட்சித் தலைமையின் நெருக்கமான ஆலோசனையுடன் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் Girogos Roupakias, “கோல்டன் டோனினால் பணம் கொடுக்கப்பட்டது”, தாக்குதல் படைகளின் உறுப்பினர், அது ஓர் உயர் கட்சிப் பிரிவாகும். பேட்டியில் முன்னாள் உறுப்பினர் வேலையில்லாத நபர்கள் பலநேரமும் இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறினார். அவர்கள் பொலிசிடமிருந்து அஞ்சத் தேவையில்லை: “பொலிசார் ஒருபொழுதும் தலையிடுவதில்லை.” கோல்டன் டோன் தனது கூலிப் படையினருக்குக் கொடுக்கும் பணம் முக்கியமாக வணிக, அரசியல் உயர்மட்டத்தினரிடமிருந்து வருகிறது. மார்ச் மாதம் கன்சர்வேடிவ் நாளேடான Kathimerini கோல்டன் டோனுக்கு நிதி அளித்தல் குறித்துத் தகவல் கொடுத்தது. அறிக்கையில் ஆசிரியர், “கோல்டன் டோன் நிதிய அளவில் ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. அவை முந்தைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரச்சார பிரசுரங்களை அச்சிட உதவினர்; மற்றொரு அதிவலதுசாரிக் கட்சி எழுச்சி பெறுவதைத் தடுக்க இவ்வாறு செய்தனர் அதாவது LAOS … “ஆனால் 2012ல் இந்த நிதிகள் போதவில்லை. கோல்டன் டோன் கடந்த ஆண்டு மே மாதம் தேர்தலுக்கு முன் கப்பல் அதிபர்கள், ஒப்பந்தக்காரர்கள், வக்கீல்கள் மற்றும் ஒரு வங்கியிடமிருந்துகூட பணம் பெற்றது என்பதற்கு என்னிடம் தகவல் உள்ளது.” கிரேக்கத்தின் செல்வம் படைத்த வணிகர்கள், நாட்டின் கப்பல் உரிமையாளர்கள் குறிப்பாக கோல்டன் டோனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளனர். கன்சர்வேட்டிவ் ஆளும் கட்சியான புதிய ஜனநாயகம் (FD) மற்றும் பாசிஸ்ட்டுக்களுக்கு இடையே நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் கிட்டத்தட்ட 80 ND பிரதிநிதிகள் இனவெறிச் சட்டம் ஒன்றை கோல்டன் டோன் பாராளுமன்றக் குழுவுடன் அரசாங்கப் பெரும்பான்மைக்கு எதிராக இயற்ற முயன்றனர். ND க்குள்ளேயே நவ-நாஜிக்களுடன் சேர்ந்து ஒரு புதிய கூட்டணி அரசாங்கம் தேவை என்னும் கோரிக்கைகளும் உள்ளன. தற்பொழுது நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் இந்த பிணைப்புக்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றன. அரசாங்கம் இப்பொழுது நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர கோல்டன் டவுனுக்கும் பொலிஸ் படையில் அதனுடைய ஆதரவாளர்களுக்கும் எதிராக சில நடவடிக்கைகளை எடுக்கிறது. செவ்வாயன்று தெற்கு கிரேக்கத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் யானிஸ் டிகோபோலோஸ் மற்றும் மத்திய கிரேக்கத்தின் பிராந்திய இயக்குனர் அபோஸ்டோலோஸ் காஸ்கானிஸ் இருவரும் “தனிப்பட்ட காரணங்கள்” எனக்கூறி இராஜிநாமா செய்தனர். பாதுகாப்பு மந்திரி நிகோஸ் டென்டியஸ் மற்றும் ஒரு ஏழு மூத்த பொலிஸ் அதிகாரிகளை உள்விசாரணைகள் முடியும் வரை தற்காலிக வேலைநீக்கம் செய்துள்ளார் அல்லது மாற்றியுள்ளார். தலைமை நீதிமன்றத்திற்கு வார இறுதியில் கோல்டன் டோன் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களின் பட்டியலையும் டென்டியஸ் கொடுத்துள்ளார். இந்த அமைப்பு அல்லது அதனுடைய ஒரு பகுதி குற்றம் சார்ந்தது என வகைப்படுத்த முடியுமா என நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர். சனிக்கிழமை வீடுகளில் சோதனை கோல்டன் டோன் உறுப்பினர்களுக்க எதிராக நடத்தப்பட்டன; சிலர் ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்கு கைது செய்யப்பட்டனர். அரசாங்கம் கோல்டன் டோனுக்கு அரச நிதி மறுக்கப்பட வேண்டுமா என்பது பற்றியும் விவாதிக்கிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முக்கியமாக பொலிஸ், இராணுவம் மற்றும் கோல்டன் டோனுக்கு இடையே இருக்கும் நெருக்கமான பிணைப்புக்களை மறைக்கும் நோக்கத்தை உடையவை. அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பாசிசப் பயங்கரவாதத்தை நிறுத்தாது, ஆனால் இதே அரச கருவி பாசிஸ்ட்டுக்களுடன் கொண்டுள்ள நெருக்க உறவுகளை வலுப்படுத்தும். அதனுடைய தந்திர உத்திகளில் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புக்களான தீவிர இடது கூட்டணி (சிரிசா) மற்றும் KKE எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சி இவைகளின் ஆதரவை அரசாங்கம் வென்றெடுத்துள்ளது. தொழிற்சங்கங்கள் தங்களால் இயன்றதை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதை வரம்பிற்குள் வைத்து அவற்றைத் திறனற்றதாக ஆக்குவதற்கு தேவையானதை செய்கின்றனர். ஆசிரியர்கள் சங்கம் (OLME) அதனுடைய வேலைநிறுத்தத்தை 3 நாட்கள் என வரம்பு கட்டிவிட முடிவெடுத்துள்ளது; ஆசிரியர்களோ பெரும்பாலான வாக்களிப்பில் ஐந்து நாள் வேலைநிறுத்தம் மற்றும் விரிவாக்க விருப்பம் இவற்றிற்காக வாக்களித்தனர். KKE மற்றும் SYRIZA இரண்டும் தொழிலாளர்கள் ஆயுதபாணியாதலை களையவும், அவர்களுடைய போராட்டங்களை அரசாங்கத்திற்கு கீழ்ப்படுத்திவைக்கவும் முயல்கின்றன. சிரிசா, அரசின் போலித் தோற்றங்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது; அதுதான் பாசிஸ்ட்டுக்களுக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கமுடியும் என அறிவிக்கிறது; அதே நேரத்தில் KKE ஆனது நவ-பாஸிஸ்ட்டுக்களை எதிர்க்க முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும் “மக்கள் முன்னணியில்” ஈடுபட வேண்டும் எனக் கூறுகிறது. சனிக்கிழமையன்று சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் தன்னுடைய அமைப்பின் வளங்களை பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரசிடம் (ND) நவ-நாசிக்களுக்கு எதிரான பொதுப் போராட்டத்திற்கு அளிக்க முன்வந்தள்ளார்; இது ND உடைய சொந்த தந்திர உத்திகளை மூடி மறைக்கும், கோல்டன் டவுனுடனான ஒத்தழைப்பையும் மூடிமறைக்கும் அப்பட்டமான முயற்சியாகும். Eleftherotypia செய்தித்தாள் கூற்றுப்படி, வெள்ளியன்று வியன்னாவில் ஒரு நிகழ்ச்சியில் சிப்ரஸ் “ஆயுதப்படைகளும் பொலிசும் ஜனநாயகப்படுத்தப்பட்டவை, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை” என்பதில் தனக்கு நம்பிக்கை உண்டு என்று கூறினார். |
|
|