தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Refugees in Berlin call off hunger strike பேர்லினில் புலம்பெயர்ந்தோர் உண்ணாவிரதத்தை கைவிடுகின்றனர்
By our correspondents Use this version to print| Send feedback கிட்டத்தட்ட இரண்டு டஜன் புலம் பெயர்ந்தோர் மனிதத் தன்மையற்ற வாழ்நிலைமைகளுக்கு எதிராக பேர்லினின் மத்திய பிரண்டன்பேரக் நுழைவாயிலின் அருகே 11 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக அவர்கள் நீரும் குடிப்பதில்லை. பின் சனிக்கிழமை மாலை அவர்கள் மத்திய அரசாங்கத்திடமோ அல்லது பேர்லின் மாநில செனட் இடமோ இருந்து எந்தச் சலுகைகளையும் பெறாமல் தற்காலிகமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அகதிகள் நிறுத்தி வைத்துள்ளனர். முன்னதாக அவர்கள பேர்லின் செனட்டில் ஒன்றிணைப்பிற்கான செனட்டர் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் (SPD) உறுப்பினருமான டீலெட் கோலாட் உடனும், மத்திய பாராளுமன்றத்தில் ஒன்றிணைப்பிற்கான சமூக ஜனநாயக கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மத்திய அரசின் குடியேற்ற, அகதிகள் குழுவின் பேச்சாளருமான றூடிகர் வெட் உடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். அரசியல்வாதிகள் அகதிகளுடன் பேசுவதற்கு கடைசிநேரம் வரை காத்திருந்தனர். உண்ணாவிரத போராட்டக்காரர்களில் பலர் நினைவிழந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அங்கும் அவர்கள் எதையும் திரவ ஆகாரங்களை குடிக்கவோ அல்லது உணவு உட்கொள்ளவோ மறுத்துள்ளனர். பொலிசார் அவர்களை கூடாரம், தார்ப்பாய் மற்றும் பாய்களைப் பயன்படுத்துவதை தடைக்குட்படுத்தியுள்ளதால், அகதிகள் சிறிய பொலிஸ்தரீன் மட்டைகளால் மூடியிருந்ததுடன், குடைகளை மட்டுமே பெரும் மழையிலிருந்து பாதுகாக பயன்படுத்தினர். சில நேரத்திற்குப் பின்னர்தான் போர்வைகளும் படுக்கைப்பைகளும் அனுமதிக்கப்பட்டன. பேர்லின் செனட் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அகதிகளுக்கு எந்தவிதச் சலுகைகளும் கொடுக்க மறுத்துவிட்டனர். அவர்களின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படும் என்று மட்டும் கூறினர். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடனான ஒரு புதிய அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தைகளில் அகதிகள் பிரச்சினை எழுப்படும் என்று SPD உறுதியளித்தது. அனைவரும் காலவரையற்று ஜேர்மனியில் இருப்பதற்கு உரிமை வேண்டும் என்று அகதிகள் குரல் கொடுத்தனர். அதேபோல் தஞ்சம் நாடுவோருக்கான இருப்பிட கட்டுப்பாடு அகற்றப்பட வேண்டும் என்றனர். இது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே அவர்கள் செல்வதையும் அவர்களின் வாழ்க்கை நிலைமையில் முன்னேற்றத்தையும் மறுக்கிறது. உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு சில மணி நேரம் முன்பு WSWS நிருபர்கள் அவர்களுடன் உரையாடினர். “நாங்களும் மனிதர்கள்தான், ஆனால் மனிதர்கள்போல் வாழ அனுமதிக்கப்படவில்லை” என்றார் ஈரானைச் சேர்ந்த ஜாலிலியன் முகம்மது,“நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்னும் அச்சத்தில் நாங்கள் உள்ளோம், வேலை செய்ய, வசிக்க உரிமை இல்லை. உணவுப் பொட்டலங்களை உட்கொள்கிறோம், வீடுகளுக்கு உள்ளேயே இருக்கின்றோம். வீடுகளில் இருப்பது சித்திரவதைதான். தெருக்களில் உண்ணாவிரதமிருப்பதற்கான காரணம் நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்.” என்றார். 34 வயதுக்காரரான இவர் இரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் தன் எதிர்ப்பைத் தொடர்ந்தார். “என் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவேன். எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று அஞ்சுகிறேன். நான்கு மாதக்காலத்திற்கு ஜேர்மனிய மொழி படித்தேன். அடிப்படைத் தேர்வில் தேறிவிட்டேன், ஆனால் அடுத்த ஒரு வகுப்பில் படிக்க முடியவில்லை, ஏனெனில் இங்கு தற்காலிகமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளேன்.” என்றார் அவர். “இதே கதைதான் எங்கள் அனைவருடையதும்” என்றார் 28 வயது எல்சா. இவர் அரசியல் துன்புறுத்தலால் இளம் வயதில் எதியோப்பியாவை விட்டு வெளியேறினார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிக்கு வந்தேன். முதலில் பாசோ நகருக்கு அருகே ஒரு அகதி முகாமில் இருந்தேன். அது கொடூரமானது. ஓர் அறையில் குறைந்தப்பட்சம் நான்கு பேர் தூங்க வேண்டும். வேலைசெய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தோம். தஞ்சம் கோரும் எனது மனுவிற்கு பதில் ஏதும் நான் பெறவில்லை.”
எல்சா உண்ணாவிரத்ததில் தான் பங்கேற்பதற்குக் காரணம், ஒரு மனிதப்பிறவி என்று தான் ஏற்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்றார். “நாங்கள் மொழியைக்கற்று வேலை செய்ய விரும்புகிறோம். மரணம் என்னும் ஆபத்தில் எங்களை நிறுத்தியுள்ளோம், ஏனெனில் அகதிகள் முகாமிலும் மனதளவில் இறக்கின்றோம், ஏனெனில் எங்களால் எதுவும் செய்யமுடியாது.” கிரேக்கத்தில் எல்சா ஆறு ஆண்டுகள் உணவு விடுதியில் பரிமாறுபவராகவும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளுபவருமாக வேலை பார்த்தார். ஆனால் பொருளாதார நெருக்கடி தொடங்கியவுடன் வேலைக்கான வாய்ப்புக்கள் மறைந்துவிட்டன. எனவே அவர் ஜேர்மனிக்கு பயணித்தார், இப்பொழுது நாடு கடத்தலை எதிர்கொள்கிறார்.
பாக்கிஸ்தானை சேர்ந்த 35 வயதான ஹுசைன், முதலில் கிரேக்கத்தில் அகதியாக இருந்தார். அவர் அரசியல் துன்புறுத்தல் காரணமாக பாக்கிஸ்தானில் இருந்து தப்பி, தெற்கு ஐரோப்பாவில் 10 ஆண்டுகள் வசித்தார் அவர் கிரேக்க மொழியை நன்றாகப் பேசுகிறார். அங்கு மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கினார். ஆனால் பொலிஸ் மற்றும் தீவிர வலதுசாரிகள் குடியேறுவோரை தாக்குவது அதிகரித்துவிட்டது. “நான் கிரேக்கத்தை விட்டு நீங்கியதற்குக் காரணம் பொலிஸ் மற்றும் கோல்டன் டோனின் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மூன்று முறை நான் தாக்கப்பட்டேன். இல்லத்தை விட்டு நகரவே நாங்கள் பயந்தோம், கடைக்குக்கூட பாதுகாப்புடன் சென்றுவர முடியவில்லை” என்றார் ஹுசைன். ஐரோப்பிய ஒன்றியம், கிரேக்கத்திற்கு அது குடியேறுவோரை வேட்டையாடுவதில் ஆதரவைக் கொடுக்கிறது. “சட்டவிரோத” அகதிகள் மீது இன்னும் வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கூறுகிறது. ஜினியோஸ் ஜீயோஸ் நடவடிக்கையின் கட்டமைப்பிற்குள் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் போல் தெரிந்த மக்கள் கிரேக்க தெருக்களில் கைது செய்யப்பட்டு, சோதனையிடப்பட்டு பின்னர் நாடுகடத்தும் முகாம்களில் பூட்டி வைக்கப்பட்டனர். இச்செயற்பாடுகளுக்கு பாசிச அதிர்ச்சித் துருப்புக்களுடைய ஆதரவும் கிடைத்தது. ஜேர்மனியில் பல புலம் பெயர்ந்தோர்களை போல் ஹுசைன் இதே அனுபவங்களைத்தான் கண்டார். “செல்வம் படைத்தோர் எப்பிரச்சினையும் இல்லாமல் பயணிக்கலாம், எல்லா இடங்களிலும் நட்பான முறையில் வரவேற்கப்படுகின்றனர்.” என்றார். “ஆனால் நீங்கள் ஏழையென்றால், நீங்கள் ஒரு மனிதனைப்போல் நடத்தப்படுவதில்லை”. நேட்டோப் போரினால் லிபிய நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படல். பிரண்டென்பேர்க் நுழைவாயிலில் போராட்டம் முடிந்து விட்டபோதிலும்கூட, இன்னும் டஜன் கணக்கான அகதிகள் பேர்லின் நகரின் Oranienplatz தற்காலிக முகாம்களில் உள்ளனர். முகாம்களில் ஓராண்டிற்கும் மேல் இருந்தபின், இந்த அகதிகள் இப்பொழுது இருப்பிடம் கொடுக்கப்படுகின்றனர்; இது CDU, SPD உள்ள மாநில நிர்வாகத்தினதும் அதேபோல் உள்ளூர் நகரசபை தலைவரான பசுமைக் கட்சியின் மொனிக்கா ஹேர்மானின் அறிவிப்பிலும் உள்ளது. எவ்வாறாயினும் தக்க இருப்பிடங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்பட வேண்டும். WSWS நிருபர்கள் நைஜீரியாவில் இருந்து வந்துள்ள ஒரு இளம் மின்சார தொழிலாளி அஹ்மத் சலிக்கு உடன் பேசினர். இவர் கூடார முகாமில் வசிக்கிறார். இவர் தன் தாய்நாட்டை விட்டு 2009ல் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை அடுத்து வெளியேறினார். அந்த மோதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து போயினர்.
லிபியாவிற்குச் சென்றிருந்த அஹ்மத் பல முக்கிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்திய காமாவில் (ஒரு பெரும் துருக்கியக் கட்டிட நிறுவனம்) வேலையைப் பெற்றார். அங்கு அவர் தேர்ந்தெடுத்த வேலையில் 2010ல் எட்டு மாத காலம் இருந்தார். லிபியா இவருக்கு இரண்டாம் வீடு போல் ஆயிற்று. ஆனால் உள்நாட்டுப்போர் ஆரம்பித்து, அதன்பின் 2011 முன்பகுதியில் நேட்டோ தாக்குதலும் வந்தபின் இது முடிந்துவிட்டது. “வெளிட்டினரைப் பொறுத்தவரை, நாங்கள் கிளர்ச்சியாளர்களால் அச்சறுத்தப்பட்டோம், ஆபத்தில் இருந்தோம்” என்றார் அஹ்மத். “கிளர்ச்சியாளர்கள் கைகளில் சிக்கிய எவரும் அவரது உயிருக்குப் பயப்பட வேண்டியதாயிற்று. இராணுவம் ஒரு இராணுவ முகாமிற்கு எங்களை இட்டுச் சென்றது. நான் அங்கு ஒரு வாரம் இருந்தேன். லிபிய இராணுவத்துடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட வேண்டும் இல்லாவிடின் நாட்டை விட்டு நீங்க வேண்டும் என்று கூறப்பட்டோம்.” அஹ்மத் நாட்டை விட்டு நீங்க முடிவெடுத்து 800 அகதிகள் நிறைந்த நெரிசல் மிகுந்த கப்பல் ஒன்றில் ஏறியிருந்தார். அது மத்தியதரைக் கடலில் இரு நாட்கள் பயணித்தபின் இத்தாலியத் தீவான லம்பேடுசாவிற்கு வந்தது. லம்பேடுசா மக்கள் அவர்களுக்கு பெரும் உதவி செய்ய முயன்றனர், ஆனால் உணவு அளித்ததைவிட வேறு எந்த வாய்ப்புக்களும் இல்லை. ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின்படி அந்நாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டாலும், வேலை செய்வதற்கு சட்டரீதியான வாய்ப்புக்கள் இல்லை. அஹ்மத் கருத்துப்படி பெர்லுஸ்கோனி அரசாங்கம் அவருக்கும் சில மற்றவர்களுக்கும் 500 யூரோக்களைக் கொடுத்தது, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற கூறப்பட்டனர். அவர் எங்களுக்கு பணம் வாங்கியதற்கு எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டினார். “இங்கு உள்ள அனைவருமே இதைப் போன்ற காகிதத்தை வைத்துள்ளனர்.” என்றார் அவர். அகதிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளை வந்து சேர்ந்தனர், ஆனால் இப்பொழுது அவர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. அந்த நேரத்தில் பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி மற்றும் பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் வலியுறுத்தலின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவில் பல தலைமுறையினரின் வேலையை அழித்துவிட்டது என்றார் அஹ்மத். அது லிபியாவை மட்டும் பாதிக்காமல், அங்கு உழைத்து வந்த ஆயிரக்கணக்கான ஆபிரிக்கர்களையும் பாதித்தது. “ஐரோப்பாதான் இந்த நிலைமைக்கு பொறுப்பு. அவர்கள் போரைத் தொடங்கி எங்கள் வீடுகளை அழித்தனர். இப்பொழுது மாற்றீடு எதையும் கொடுக்கவில்லை. ஆபிரிக்க மக்கள் பலருக்கு லிபியா புகலிடமாக இருந்தது” என்றார் அவர். லிபியாவில் இருந்து வந்த ஆபிரிக்க புலம்பெயர்ந்தோரின் தலைவிதி அனைத்து ஜேர்மனிய அரசியல் கட்சிகள் மீதும் பேரழிவுதரும் குற்றச்சாட்டு ஆகும். ஜேர்மனி தந்திரோபாயக் காரணங்களுக்காக லிபியப் போரில் பங்கு பெறவில்லை என்றாலும், CDU வில் இருந்து SPD வரை, பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சியும் விதிவிலக்கு இல்லாமல் அனைத்துக் கட்சிகளும், ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு மேலதிகமான ஆக்கிரோஷப் போக்கிற்கு ஆதரவு கொடுக்கின்றன. அவை புதிய காலனித்துவப் போர்களில் இருந்து வரும் ஆதாயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்போது தனிமைப்பட்டு நிற்கவிரும்பவில்லை. |
|
|