தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French students protest deportation of immigrants புலம் பெயர்ந்தோரை வெளியேற்றியதற்கு எதிராக பிரெஞ்சு மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்
By Antoine Lerougetel and Alex Lantier Use this version to print| Send feedback ஆயிரக்கணக்கான உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பாரிசிலும் பல பிரெஞ்சு நகரங்களிலும் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் புலம்பெயர்ந்த உயர்பள்ளி மாணவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்மையில் 15 வயது ரோமா மாணவியான லியோனார்டா டிப்ரானி, ஒரு பள்ளி பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டு அக்டோபர் 9ம் திகதி கோசோவோவிற்கும், அக்டோபர் 12 அன்று ஆர்மினிய மாணவனான காச்சிக் காசட்ரயன் என்னும்18 வயது மாணவன் அனுப்பப்பட்டதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காசட்ரயன் உடைய பாரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பல எதிர்ப்புக்கள் நடைபெற்று வருகின்றன, பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவர் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து பாரிஸ் கல்வி அதிகார அலுவலகத்தின் (rectorat ) முன் புதனன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். PS உடன்பிணைந்துள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் சுதந்திர மற்றும் ஜனநாயக கூட்டமைப்பு (FDIL) அழைப்பு விடுத்த இந்த எதிர்ப்புக்கள், PS இன் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸின் இனவெறிக் கொள்கைகளுக்கு எதிரான பெருகும் மக்கள் விரோதப் போக்கை அடுத்து வந்துள்ளன. அவர் PS இன் சரியும் ஒப்புதல் கருத்துக்கணிப்பு சதவிகிதத்திற்கு ஏற்றம்கொடுக்கும் வகையில் நவ பாசிச தேசிய முன்னணியின் (National Front - FN) வாக்குகளை நாடுகிறார். தவிரவும், பிற்போக்குத்தன பர்க்கா அணிவதற்கு தடையையும் செயற்படுத்துவதுடன், அனைத்து ரோமாக்களும் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். (See: French Interior Minister Manuel Valls proposes mass deportation of Roma ). பாரிசில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கையால் எழுதப்பட்ட கோஷ அட்டைகளை ஏந்தி அணிவகுத்தனர்; அவைகள் வால்ஸைக் கண்டித்ததுடன் புலம்பெயர்ந்த பள்ளிச் சிறுவர்களை நாடு கடத்துவதையும் எதிர்த்தனர். நிருபர்களிடம் மாணவர்கள் தாங்கள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் PS நிர்வாகத்தினால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினர். ஹாலண்டின் குடியேற்ற விரோதக் கொள்கைகள், “சொல்லப் போனால்” முந்தைய ஜனாதிபதி வலதுசாரி கோலிசக் கட்சியின் நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கக் கொள்கைகளைவிட மோசமாக இருந்தன. மாணவர்கள் குறுகிய நேரம் ஒரு சிறிய பொலிஸ் குழுவுடன் மோதினர்; பொலிசார் கண்ணீர்ப்புகையை அவர்களுக்கு எதிராக பிரயோகித்தனர், இறுதியில் மாணவர்கள் குழுவை தள்ளி எல்லையை கடக்கவைத்தனர். பதின்நான்கு உயர்நிலைப் பள்ளிகள் “இடையுறுகளை” ஏற்படுத்தியதாக அறிவிக்கப்பட்டது; நான்கு —Maurice Ravel, Hélène Boucher, Charlemagne, and Sophie Germain— உயர்நிலைப் பள்ளிகள் நேற்று காலை தடுப்பிற்கு உட்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கிரெநோபிள், அவினியோன், லா ரோஷேல் நகரங்களில் உட்பட, எதிர்ப்புத் தெரிவித்தனர், அத்தோடு Dautet, Turgot உயர்நிலைப்பள்ளிகளை முற்றுகையிட்டனர். டிப்ரானியின் விவகாரம் பிரெஞ்சுச் செய்தி ஊடகத்தில் பரந்த முறையில் தகவல் அளிக்கப்பட்டு, தேசிய சீற்றத்தை ஏற்படுத்தியது. அவர் நாடு கடத்தப்பட்டது சட்டவிரோதம், ஏனெனில் ஒரு பள்ளி வளாகத்திற்கு முன்னால் கைது செய்யப்பட்டார் என்பதும் குற்றச்சாட்டுக்கள் ஆகும். France Inter Radio விற்கு கொசோவோவிலிருந்து பேசிய டிப்ரானி, அவர்கள் ரோமாக்கள் என்பதால் அவருடைய குடும்பம் மிட்ரோவிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். “என்னுடைய நண்பர்கள், பள்ளி, அனைவரையும் கைவிட்ட நிலையில் நான் மோசமாக உணர்கிறேன். அங்கும் பொலிசாரும் மற்றும் என் நண்பர்களும் நான் என்ன செய்தேன், எதையேனும் திருடினேனா என்று கேட்டதால் வெட்கமும் அடைந்தேன்” என்றார். ஆன்லைன் முறையீடு விண்ணப்பம் ஒன்று டிப்ரானி பிரான்சிற்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக 11,700 கையெழுத்துக்களைப் பெற்றது. PS அரசாங்கமும் கட்சிகளும், அதன் செல்வாக்கிற்கு உட்பட்ட தொழிற்சங்கங்களும் மாணவர்களிடையே எழுச்சி பெற்றுள்ள எதிர்ப்பிற்கு விடையிறுக்க வேண்டுமா என்பது குறித்து கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளன. எதிர்ப்புக்கள் எப்படியும் உத்தியோகபூர்வ “இடது” சக்திகளிடமிருந்து சுயாதீனமாக வளர்ந்துவிடுமோ என்னும் அச்சத்தால் FIDL ஆனது எதிர்ப்புக்கள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னரே எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தது. பல தொழிற்சங்கங்கள் மாணவர்கள் எதிர்ப்புக்களைக் கண்டித்தன. பள்ளி முதல்வர்கள் சங்கத்தின் தலைவரான பிலிப் டூர்னியருடன் ஒரு பேட்டியை Le Monde வெளியிட்டது; அவர் மாணவர்களை கண்டித்திருந்தார். உயர்நிலைப்பள்ளிகள் முற்றுகையிடப்படுவது “உண்மையான அறநெறிப் பிரச்சினை” என்றார் அவர். “பள்ளிகள் முற்றுகையிடப்படுவது நம் நாட்டில் இழிந்த வழக்கமாகும்... உண்மையில் மிக குறைந்த மட்டத்திலான அரசியல் நனவைப் பிரதிபலித்தாலும், மிகச் செல்வாக்கு பெற்ற அரசியல் நடவடிக்கையாக அவை தொடர்ந்து வருகின்றன.” பல PS மற்றும் பசுமைக் கட்சி அதிகாரிகள் வால்ஸின் நிலைப்பாடுகளைக் குறைகூறினர். பசுமைக் கட்சி செனட்டர் எஸ்தர் பென்பசா அறிவித்தார்: “ஆம், இது சுற்றி வளைத்ததால்தான்” என்றார்: அச்சொல் இரண்டாம் உலகப் போரின்போது விஷி அரசாங்கம் யூதர்களை நாஜி ஜேர்மனிக்கு கடத்தி அனுப்புவதற்கு சுற்றி வளைத்ததைக் குறிப்பிடுகிறது. டிப்ரானியை நாடு கடத்தியதற்கு ஆதரவு கொடுத்த வால்ஸ், அவர் பயணித்துக் கொண்டிருந்த மார்ட்டினிக்கிலிருந்து சுருக்கமாகப் பேசினார். தான் ஓர் “இடது” என்று உறுதிபடுத்திய அவர், விளக்கினார்: “நான் இடது ஏனெனில் மனிதகுலம், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியவை எனக்கு முன்னுரிமையாகும்.” உண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மாணவர்கள் மற்றும் மக்களின் பரந்த தட்டுக்களிடையே PS அரசாங்கமானது அதனுடைய சமூகநலச் சிக்கனம், போர், புலம்பெயர்வோர் எதிர்ப்பு சோவனிசக் கொள்கைகளாலும் எவ்வகையிலும் அச்சொல்லின் பொருளுக்கேற்ற ஒரு இடதுசாரி அரசாங்கம் இல்லை என்னும் எழுச்சி பெற்றுள்ள உணர்வைத்தான் பிரதிபலிக்கிறது. அதனுடைய போலி இடது நிலைப்பாட்டுடன் PS ஆனது வங்கிகள், நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்காகப் பேசுகிறது. இக்கொள்கைகளை வால்ஸ் ஊக்குவிப்பது FN க்கு உடன்பாடுதான்; ஏனெனில் இது PS மற்றும் அதன் அரசியல் நட்பு அமைப்புக்களின் வலதுசாரிக் குணம் பற்றிய தெளிவான அடையாளமாகும். PS உடைய குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் FN ஆனது பிரெஞ்சு அரசியலில் பெற்றுள்ள எழுச்சிக்கு மாணவர்களுக்கு இருக்கும் ஒரே முன்னேற்றப்பாதை, தொழிலாள வர்க்கத்தை அரசியலில் சுயாதீன இயக்கமாக PS க்கும் முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிராக சோசலிச முன்னோக்கில் அணிதிரட்டும் போராட்டம்தான். அத்தகைய போராட்டத்தில் முக்கிய தடைகள் போலி இடது சக்திகளாகும்; இவைகள் மாணவர்களிடையேயுள்ள எதிர்ப்பை PS க்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு முன்னோக்கில் திசைதிருப்பி, ஹாலண்ட் அரசாங்கம் வால்ஸை இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தலாம் என நினைக்கின்றன. வால்ஸின் இராஜிநாமா ஒன்றும் ஹாலண்ட் அரசாங்கத்தின் அடிப்படைத் தன்மையை மாற்றப் போவதில்லை. அவருடைய பசுமைக் கட்சியிலிருக்கும் பிரிவுகளின் எதிர்ப்பாளர்கள், PS மற்றும் இடது முன்னணியில் (Left Front-PG) இருப்பவர்கள், வால்ஸ் போலவே நிதிய மூலதனத்திற்காகத்தான் பேசுகின்றனர். ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தலைவர் பியர் லோரோன்ட், இடது கட்சி தேசியச் செயலர் எரிக் காக்ரல் உட்பட இடது முன்னணி (PG) அதிகாரிகள் மாணவர் எதிர்ப்புக்களில் கலந்து கொண்டர். லோரோன்ட் கூறினார்: “டிப்ரானி வெளியேற்றப்பட்டது இந்த செயலின் இழிவுத்தன்மையை அதிகரித்துள்ளது; இது மானுவல் வால்ஸின் கொள்கைகளை அவமதிக்கிறது.... நாம், நாடு முழுவதும் முயற்சிகள் எடுத்து மனு கொடுக்க வேண்டும், ஒன்றாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்; இதில் அரசாங்கம் சாரா அமைப்புக்களும் இருக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வேண்டும்.” சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் மந்திரியும் இடது முன்னணியின் தலைவருமான Jean-Luc Mélenchon, ட்வீட்டில் கூறினார்: “அடுத்த சுற்றுவரை இதற்குப் பொறுப்பானவரை அகற்ற காத்திராதீர்கள்! வால்ஸ், இராஜிநாமா செய்!” இது இடது முன்னணி போன்ற பிற்போக்கு சக்திகள் PS க்கு ஆதரவு கொடுத்ததையும் அவையே முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்தின் வலதுசாரி மாற்றத்திற்கு FN உடைய நிலைப்பாட்டிற்குச் செல்வதற்குப் பொறுப்பு என்பதை மறைக்கும் முயற்சியாகும். ரோமா மீது வால்ஸின் தாக்குதல்கள் ஒராண்டிற்கும் மேலாக முழு ஹாலண்ட் நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்டுள்ளன; இது இப்பொழுது மக்கள் எதிர்ப்பை ஒட்டி, எந்த அளவுக்கு ஆக்கிரோஷத் தன்மையுடன் அதனுடைய குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை தொடரலாம் என்பதில் பிளவுற்றுள்ளது. PS ஆனது FN உடைய கொள்கைகளுக்கு திரும்பியிருப்பதில் போலி இடது சக்திகள் ஆழ்ந்த முறையில் தொடர்புடையவையாகும். இடது முன்னணி, போலி இடதான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவை ஹாலண்டிற்கு ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது சுற்றில் நிபந்தனையற்ற ஆதரவிற்கு அழைப்புவிடுத்தது. அது முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்புப் பிரச்சாரங்களில் நேரடிப் பங்கு கொண்டது, அதையொட்டி FN உடைய இனவெறி அரசியல் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலின் முக்கிய போக்குடன் ஒருங்கிணைந்துவிட்டது. PCF நேரடியாக 2009ல் சார்க்கோசியுடன் இணைந்து, பர்க்கா தடையை தொடக்கியது; அது இறுதியில் NPA உட்பட அனைத்து போலி இடது அமைப்புக்களினது ஆதரவையும் பெற்றது. |
|
|