World Socialist Web Site www.wsws.org |
US budget deal sets stage for intensified assault on social programs அமெரிக்க வரவு-செலவுத் திட்ட உடன்பாடு சமூகநலத் திட்டங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்த அரங்கமைக்கிறதுBy
Andrei Damon and Barry Grey கூட்டாட்சி அரசாங்கத்தை திறக்கவும், தற்காலிகமாக கடன் வரம்பை உயர்த்தவும் புதன் அன்று காங்கிரஸ் இயற்றிய சட்டவரைவானது, இருகட்சிகளுடைய உடன்பாட்டுடன் சமூகநலச் செலவுகளைக் குறைக்கவும், சமூகநலத் திட்டங்களில், புதிய உன்பாடு மற்றும் பெரும் சமுதாய காலங்களில் இருந்து தொடரும் அடிப்படைச் சமூகநலத் திட்டங்கள் மீது—சமூகப்பாதுகாப்பு மற்றும் மருத்துவப்பாதுகாப்பு-- ஒரு வரலாற்றுத் தன்மை வாய்ந்த தாக்குதலை தொடக்குவதற்கும் செயல்முறையைக் கொடுக்கிறது. 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் முந்தைய செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட மற்றும் கடன் நெருக்கடிகள், 16 நாட்கள் அரசாங்க மூடல் மற்றும் அமெரிக்க செலுத்துமதியின்மை அச்சுறுத்தல் என்பதின் விளைவை முற்றிலும் முன்கணிக்கத்தக்கதாக இருந்தது. மீண்டும் குடியரசுக் கட்சியின் மிகத் தீவிவ வலதுசாரிக் கூறுபாடுகள் முன்முயற்சி எடுத்து முழு அரசியல் நடைமுறையும் இன்னும் வலது நோக்கி நகர்வதற்கு வகை செய்தன. ஒருதலைப்பட்ச தேக்கம், பரஸ்பரம் ஒருவரையொருவர் சாடல் என்ற தோற்றத்திற்குப்பின், ஒபாமா நிர்வாகத்திற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் தங்கள் சமூகநலத் திட்டங்களில் மிருகத்தன வெட்டுக்களைக் கொண்டுவரும் செயற்பட்டியலில் முன்னேறும் வழிவகையை இந்த நெருக்கடி கொடுத்துள்ளது; இவற்றைத்தான் பல மில்லியன் உழைக்கும் மக்கள் நம்பியுள்ளனர். மோதல் இருந்த அளவில், அவை வழிவகை மற்றும் தந்திரோபாயங்களை பற்றியே ஒழிய இலக்குகளை பற்றி அல்ல. பிரச்சினையில் இருந்தது எவ்வளவு சிறந்த முறையில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை விரிவாக்கலாம் என்பதுதான். ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செனட் மன்றம், 81 – 18 என்ற கணக்கில் உடன்பாடு ஒன்றை ஏற்றது; இது கடன் உச்சவரம்பை பெப்ருவரி 7, 2014 முடிய உயர்த்துகிறது; ஜனவரி 15 வரை கூட்டாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதியளிக்கிறது. இச்சட்டவரைவு செனட் மற்றும் பிரதிந்திகள் மன்றத்தின் வரவு-செலவுத் திட்ட குழுக்களின் தலைவர்கள், வழிநடத்தும் குழுவின் கீழ் மாநாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் எனக்கூறுகிறது; இது இரு கட்சிகளும் டிசம்பர் நடுவிற்குள் வரவு-செலவுத் திட்டம் பற்றிய உடன்பாட்டைக் காணும்; இது பற்றாக்குறை, தேசியக் கடன் ஆகியவற்றைக் குறைக்கும். இது நீண்டகால “சீர்திருத்தங்களை” அடிப்படை உரிமைத் திட்டங்களான சமூகப்பாதுகாப்பு, மருத்துவப்பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றில் கொண்டுவருவதின் மூலம் செயல்படுத்தப்படும். இதைத்தவிர “விருப்ப உரிமை” வெட்டுக்கள் சமூகநலத் திட்டங்களான கல்வி, வீட்டுவசதி, ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, உள்கட்டுமானப் பராமரிப்பு ஆகிய துறைகளில் விரிவாக்கமும் செய்யப்படும். அதே நேரத்தில் வெள்ளை மாளிகையினரும் காங்கிரசின் குடியரசுக் கட்சியினரும் எந்த வரவு-செலவுத் திட்ட உடன்பாடும், பெருநிறுவன வரிவிகிதங்களில் பெரும் வெட்டுக்களை அடக்கியிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். பின்னர் புதன் மாலை, குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் மன்றம் சட்டவரைவை 285 -144 என்ற கணக்கில் இயற்றியது; 87 குடியரசுக் கட்சியினர் அனைத்து 198 ஜனநாயகக் கட்சியினருடன் ஒப்புதல் வாக்கெடுப்பில் சேர்ந்து கொண்டனர். ஜனாதிபதி ஒபாமா சட்டவரைவை வியாழன் அதிகாலை கையெழுத்திட்டார். இச்சட்டவரைவு, கடந்த மார்ச் மாதம் தொடங்கிய “சொத்தை கைப்பற்றும் வெட்டுக்கள்” புதிய ஆண்டிலும் அப்படியே இயல்பாகத் தொடர அனுமதிக்கிறது. இதன் பொருள் 85 பில்லியன் டாலர் வெட்டுக்கள் 2013ல் செயல்படுத்தப்பட்டவை மீட்கப்படாது, வரவிருக்கும் வாரங்களில் வரவு-செலவுத் திட்ட பேச்சுக்கள் இவற்றின் ஆரம்பக் கட்டமாக, அடுத்த எட்டு ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்கள் வெட்டுக்கள் வேண்டும் என “கைப்பற்றும்” வழிவகை கட்டாயப்படுத்தியுள்ள வழிவகைகளை மேற்கோள்ளும். ஜனநாயகக் கட்சியினர், கைப்பற்றும் வழிவகையை “முடித்தல்”, அல்லது “சீர்திருத்தம் செய்தல்” என்ற பெயரில் சமூகநல வெட்டுக்களை தொடரக்கூடும், அதே நேரத்தில் இராணுவம், உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் உள்நாட்டுப பாதுகாப்புத் துறைக்கு நிதியை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா ஏற்கனவே, முன்னோடியில்லாத வகையில் மருத்துவப் பாதுகாப்பு மற்றும் சமூகப்பாதுகாப்பு வெட்டுக்களுக்கு தான் ஆதரவு தருவதாக தெளிவாக்கிவிட்டார்; இதில் மருத்துவப் பாதுகாப்பிற்கான தகுதி வயதை உயர்த்துதல், வழிவகைச் சோதனை, சமூகப்பாதுகாப்பு நலன் பெறுவோருக்கு செலவு அதிகரிப்புக்களை குறைத்தல் ஆகியவை அடங்கும். “தேனீர் விருந்து” குடியரசுக் கட்சியினர் (“Tea Party” Republicans) என அழைக்கப்படுவோர், புதிய ஆண்டிற்கு அரசாங்க செயற்பாடுகள் மற்றும் கடன் வரம்பு உயர்த்துதல் இறுக்கப்பட வேண்டும் என்பவை நிர்வாகத்தின் பொதுச் சுகதாரத்தை கருத்திற்கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மூடலைத் தூண்டியவர்கள், அக்கோரிக்கையை மருத்துவப்பாதுகாப்பு மற்றும் பிறநலன்கள் அகற்றப்பட்டதை அடுத்து கைவிட்டனர். இது ஒபாமாகேர்ருக்கு பெருநிறுவன உயரடுக்கிற்குள் பரந்த ஆதரவு இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அது திட்டத்தை நிறுவனங்கள் பெருநிறுவன சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்க உதவும், தொழிலாளர்களை ஒபாமாவின் சுகாதாரப்பாதுகாப்பு மாற்றங்களில் தள்ளிவிடும், அவற்றின் இலாபங்களை அதிகரிக்க உதவும். வோல் ஸ்ட்ரீட் கடன் வரம்பு உயர்த்தப்படுவதற்கான அக்டோபர் 17 கெடுவிற்குள் நெருக்கடி தீர்க்கும் தீர்மானம் தேவை என வலியுறுத்தியவுடன்—செவ்வாயன்று பங்குச் சந்தைகளில் விலைகள் தீவிரமாக குறைந்தன, Fitch தரம் பிரிக்கும் நிறுவனத்தில் இருந்து அமெரிக்க கடன் மதிப்பு கீழே குறைக்கப்படும் என்ற அச்சறுத்தல் வந்தபின், இரு கட்சிகளும் தேனீர் விருந்துப் பிரிவுத் தலைவர்கள் உட்பட விரைவில் உடன்பாட்டிற்கு ஏற்பாடு செய்தன. உடன்பாடு தயாராகிறது என்னும் தகவல் புதன் அன்று பங்குச் சந்தைக்கு புத்துணர்ச்சி அளித்தது, Dow Jones Industrial Average 200 புள்ளிகள் உயர்ந்து அதை செப்டம்பர் 30ல் இருந்து, அதாவது அரசாங்க மூடலுக்கு முந்தைய நாளில் இருந்து 1.6% அதிகமாகியது. அரசாங்க மூடல் —நூறாயிரக்கணக்கான கூட்டாட்சித் தொழிலாளர்கள் ஊதியமின்றி நிற்கும் நிலையில், ஏழைகள், குழந்தைகள் மற்றும் மூத்தோர்களுக்கு சமூகநலத் திட்டங்கள் தடைப்பட்ட நிலையில்— முழு அரசியல் நடைமுறையும் அமெரிக்க மக்களுக்குக் காட்டும் இழிவுணர்வு மற்றும் அரசியல் அமைப்பு முறையின் ஜனநாயக விரோதப் போக்கு ஆகியவற்றை நிரூபித்துள்ளது. செய்தி ஊடகம் அதற்கிடப்பட்ட பங்கை செய்து, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இரு கட்சிகளும் மகத்தான சமூக வெட்டுக்களை சுமத்த உடன்பாடு காணும் திறன் இல்லாததால் திகைப்பு அடைந்தனர் என்ற கருத்தைத் தோற்றுவித்தது. இது உண்மைக்கு முற்றிலும் மாறானது என்பது தெரிந்தும். புதன் அன்று நிறைவேற்றப்பட்ட தற்காலிக வரவு-செலவுத் திட்ட வழிமுறை முற்றிலும் ஜனநாயக விரோதமானது ஆகும். இரு பெரு வணிக கட்சிகளுடைய வலதுசாரி அரசியல் வாதிகள், ஜனநாயகக் கட்சி செனட்டர் பாட்டி முர்ரே மற்றும் குடியரசு பிரதிநிதி பால் ரியன் தலைமையில் மூடிய கதவிற்குப்பின் கூடி, பொதுமக்களிடம் இருந்து கருத்து ஏதும் பெறாமல் மிருகத்தன வெட்டுக்களை கொண்டுவருவர்; பொதுமக்கள் கூட்டம் இராது, தொழிலாள வர்க்கத்திற்கு இத்திட்டங்கள் என்ன கொடுக்கும் என்பது பற்றி நேர்மையான கருத்துக்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. செனட்டின் பெரும்பான்மை கட்சித் தலைவர், ஹாரி ரீட், ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர், குழுவின் தொழிலாள வர்க்க விரோத நிலைப்பாடு, வரவு-செலவுத் திட்ட உடன்பாட்டை சரிசெய்யும் என்றும் அக்குழு உறுப்பினர்கள் “திறந்த மனங்களைக்கொண்டிருக்க வேண்டும்”, “தங்கள் அரசியல் கருத்துக்களுக்கும் தங்கள் சொந்த அரசியல் கட்சிகளுக்கும் எவ்வளவு வேதனை கொடுத்தாலும் ஒவ்வொரு விருப்பத் தேர்வையும் பரிசீலிக்க தயாராக இருக்க வேண்டும்” என்றும் கூறினார். மூடல் மற்றும் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்னும் முயற்சிக்கு பொதுமக்களிடையே பரந்த சீற்றம் மற்றும் இகழ்வுணர்வு இருந்தன என்பதை கருத்துக் கணிப்புக்கள் தெளிவாகக் காட்டின. ஆயினும்கூட, முழு நிகழ்வுப்போக்கின் மிக முக்கிய அம்சம், எத்தகைய பரந்த மற்றும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு வெளிப்படுத்தப்படாததும், “விவாதம்” எனப்பட்டதில் இருந்து தொழிலாள வர்க்கம் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டதும்தான். ஒரு வெகுஜன அமைப்புக்கூட மூடலைக் கண்டிக்கவும் இல்லை, அதை எதிர்க்கவும் இல்லை. தொழிற்சங்கங்கள் முற்றிலும் ஒபாமா நிர்வாகத்துடன் இணைந்து, அதன் சிக்கனக் கொள்கை மற்றும் போர்க் கொள்கைக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. அவையோ அல்லது மற்ற குடியுரிமை அமைப்புக்களோ அமெரிக்க பிரபுத்துவம் மற்றும் அதன் இரு கட்சிகளுடைய கொள்கைகளுக்கு எதிராக எந்த வகையிலும் சுயாதீனமான கருத்துக்களை வெளியிடும் நிலையில் இல்லை. வரவு-செலவுத் திட்ட நெருக்கடியின் விளைவு, தொழிலாள வர்க்கம் இருபதாம் நூற்றாண்டின் போக்கில் பெற்ற சமூகநல வெற்றிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதில் இக்கட்சிகளுக்கு இடையே அடிப்படை ஒருமித்த உணர்வு உள்ளது என்பதைத்தான் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |
|